Friday, September 20, 2013

ராம் ராம்....மழை...


ஒரே இரவில் கொண்டும்
அதே.....
ஒற்றை இரவில் கொன்றும்
கழி(ளி)க்குமிந்தப் பெருமழை !

மழை முத்தமிட்ட
பூமியில்
இருள் கவிய
என் படலை ஒதுங்கும்
உன் நினைவுகள்
என்னை
பிறாண்டுதலிலேயே
குறியாயிருக்கிறது !

மழைக்கவிதை கேட்டவன்
ப்ரிய மண்வாசனை காட்டி
மௌனமாய்
தானே....
தமிழ்ச்சாரலான
விந்தையிங்கு !

சாரல்...
துளி...
பெருமழை...

இதில்
எது நீ ?

அடித்துப் பொழி
உனக்காய் மட்டும்
முளைக்கும்
குடைக்காளானாய் நான் !

மழையாய்
நனைத்தவன் அங்கிருக்க
நடுங்குபவள் நான்
வைத்தியர் விசாரிப்பில்
ஊசி எனக்குத்தானாம் !

மழை கேட்டவன் மழையாகி...
பின் மழையாக்கி....

ஒத்தி வைக்கப்படுகிறது
இப்போதைக்கு
சில மழைக்கவிதைகள்!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

  1. அடித்துப் பொழிந்து விட்டது வரிகள்...

    ReplyDelete
  2. கவி மழை!

    அனைத்தும் அருமை.

    ReplyDelete
  3. கவிதை மழை பொழிகிறது.
    ஒவ்வொரு எழுத்தும்
    ஒவ்வொரு வரியும்
    உள்ளத்தை நனைக்கிறது. .

    இடி இல்லை மின்னல் இல்லை
    இனிய நீரில் நனைய வாரீர்.



    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  4. அடித்து பெய்த மழை சற்றே ஓய்ந்து ஓய்வெடுக்கிறதோ! இடி மின்னலுடன் மீண்டும் பொழிவதற்கு...

    ReplyDelete