Friday, September 06, 2013

ஒரு யுகத்தின் நிழல்...


யாரோ....
என் மூதாதையரின்
ஒரு முகமாய்
மனதில் நிழலொன்று
அப்பப்போ.

கடந்து மறைகையில்
இறக்கைகளால் தலைதடவி
தேவர்களின் சாயலில்.

தேவதைகளுக்கு மட்டும்தானா
இறக்கைகள்
என் நிழல் தேவனுக்கும்தான்.

கரைந்த காலங்களை
மனதில் ஊட்டி
கண்ணிலும் காதலிலும்
உருப்பெற்றுவிடுகிறது
நினைவூட்டலின்
அந்த நிழல்.

வனமொன்றில் தொலைத்ததை
ஒருவழிப்பாதையில்
கடக்கையில்
வயதும் கீழிறங்கி
தும்பி பிடிக்கிறது
மீண்டும்.

புரிபடாத மொழியில்
வாயசைக்கும் நிழல்
நிசப்தமாய் கலக்கிறது
வண்ண
வெளிச்சக்கீற்றுகளின் ஊடே
ஒருதுளிக் கண்ணீர்
வெளியேறிய இந்நாளில்
என்னோடு!!!

ஹேமா)சுவிஸ்)

6 comments:

  1. வணக்கம்
    சகோதரி

    கவிதையின் வரிகள் மனதை அள்ளிச் சென்றது அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஹேமாவின் மனதில் இருந்து தோன்றும் அத்தனையும் முத்துக்கள். சூப்பர்ப் ஹேமா...

    ReplyDelete
  3. வார்த்தைகளை மீறிய உணர்வுகளை
    தங்கள் கவிதைகளில் மட்டுமே
    உணர்கிறேன்.
    நிச்சயம் இதற்கு பாண்டித்தியம்
    மட்டும் காரணாமாயிருக்க வாய்ப்பில்லை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அருமை...

    அன்புடன் அழைக்கிறேன் :

    ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html


    ReplyDelete
  5. srk.bms@gmail.com

    ram dresden

    ReplyDelete