பிறழ்வுகளைச்
சரிப்படுத்தும் தேவன்
அப்பமும் மீனும்
தந்து தொட்டிலசைக்கிறான்
தூங்கச்சொல்லி.
சிலுவைகளில்
ஏற்றியவர்களையும்
நேசிக்கும் உலகத்தில்
பத்திரமாக்குகிறேன்
அவன் ஆயுள் நீடிக்க.
குரூர விழிப்புடன்
தூங்க மறுக்கிறான்
இருளின் கடைவாயிலில்
உதிரும் உதிரம் பார்த்தவன்!!!
அடிக்கடி சொல்கிறாய்
என்னைத் தெரியுமென்று.
எப்படி என்றால்......
கர்வக்காரி
வாய்க்காரி
கோவக்காரி
கவிதைக்காரி
றாங்கிக்காரி
காளியாச்சி
பேய்,பிசாசு
ஒன்றாய்ச் சேர்ந்த
கல்லுளி மங்கியென்றும் சிரித்து....
இத்தனையும் சேர்ந்தவள்
தோழியாய்
என்னைப் பிடிப்பதாயும்
சொல்கிறாய்.
உண்மையில்
உனக்கு என்னைத் தெரியவில்லை!!!
(எல்லாமாய்ப் புரிந்துகொண்டிருந்திருக்கிறாய்.என்னுள் என்னை ஏன் புரிந்துகொள்ளவில்லை !?)
உன் ஆன்ம
அதிர் நரம்புகளில்
ஏதோவொன்றில்
என் பெயர்
எழுதி வைத்திருப்பாய்
வாழ்த்துகளென்று
ஏதுமில்லை என்னிடம்
மனம்போல்
வாழ்வாயென்கிற
நம்பிக்கையில் நான்
என் கைவிளக்குகள்
உன் திசைநோக்கியபடிதான்
இருள் சூழாதபடிக்கு
என்னிடமும்!!!
நேற்றைய கனவில்
காக்கா கரைய
காதல் காக்கையென
நான் சொல்ல....
சகுனக் காக்கையென
நீ சொல்ல....
அனுமானங்களை சேகரியென
இணக்கமில்லா என்னை
நிராகரித்து மறைகிறாய்
இன்னும் நிப்பாட்டவில்லை
கரைவதைக் காக்கை ...
கரையாக் கல்லொன்று
கதைக்கிறது
என் கதையின்
அத்தியாயத்தில்
அதிசயமென்றேன்
இல்லை இல்லை
உண்மையென்கிறது
காதல் காகம்
சத்தம்போட்டுச் சிரிக்கிறது
சகுனக் காக்கை !
ஹேமா(சுவிஸ்)
கர்வக்காரி
ReplyDeleteவாய்க்காரி
கோவக்காரி
கவிதைக்காரி
றாங்கிக்காரி
காளியாச்சி
பேய்,பிசாசு
கல்லுளி மங்கி...உங்களுக்கு இத்தனை பெயர் இருக்கா!!!
உன் ஆன்ம
ReplyDeleteஅதிர் நரம்புகளில்
ஏதோவொன்றில்
என் பெயர்
எழுதி வைத்திருப்பாய்... ஏதோவொன்றில் மட்டுமல்ல..
உடலின் செல் முழுவதும்கூட இருக்கலாமல்லவா!
கவிதையின் ஒவ்வொரு வரிகளுமே அனுபவித்து எழுதியதுபோல் உள்ளது. அருமை ஹேமா.
ReplyDeleteகவிதை அருமை. ரசித்தேன். எனது தளத்தில் -
ReplyDeleteகாத்திருப்பு - கவிதை http://newsigaram.blogspot.com/2013/09/kaaththiruppu.html#.Uivejz-FHzw
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகவிதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன-
-ரூபன்-
பிடிச்சிருக்கு ...!
ReplyDelete\\வாழ்த்துகளென்று
ReplyDeleteஏதுமில்லை என்னிடம்
மனம்போல்
வாழ்வாயென்கிற
நம்பிக்கையில் நான்
என் கைவிளக்குகள்
உன் திசைநோக்கியபடிதான்
இருள் சூழாதபடிக்கு
என்னிடமும்!!!\\
ஹேமா ஸ்பெஷல்..!
சிலுவைகளில்
ReplyDeleteஏற்றியவர்களையும்
நேசிக்கும் உலகத்தில்
இதனால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது!