Wednesday, June 19, 2013

எழுதா வரிகளில்...


உருவம் உலர்ந்து
மரித்துக்கொண்டிருக்கும்
பறக்கவியலா
எண்ணெய் தோய்ந்த சிறகொன்றை
பெயரில்லாப் பூச்சியென
புல்லிடுக்கில்
முண்டி வளரும் புல்லென
கண்டிருந்தேன்
புறநகர் வீதியொன்றில்.

பெரியாரையும்
ஓஷோவையும்
சேகுவராவையும்
தனக்கான அடையாளங்களோடு
தன் அலமாரியின்
இரண்டாவது அடுக்கில்
சேமித்து
வம்சம் வளர்க்க
நானென்ன இயந்திரமாவெனக்
கேட்டவளை....

எழுதப்படா
என் கவிதை வரிகளில்
நீண்ட வகிடெடுத்து
இரட்டைப்பின்னலோடு
சில கம்பீர வரிகளில்
பொருத்தியுமிருந்தேன்.

அலட்சியங்களுக்குள்
அர்த்தமற்ற சுலோகமென
புதைகிறது
சில இலட்சியங்கள்!!!

ஹேமா (சுவிஸ்)

8 comments:

  1. இனிய வரிகள்

    ReplyDelete
  2. நல்ல வரிகள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. லட்சியங்கள் சில தோற்று விடுகின்றன.சில நேரம் ஜெயிக்கின்றன.சூழலைப்பொறுத்தும் அது/

    ReplyDelete
  4. ரொம்ப நாட்களுக்கு பிறகு வாசித்தென் உங்கள் கவிதைகளை.. அதே வாசம்.. கலையாத வாசம்.நன்றி!

    ReplyDelete
  5. அழகு...

    எழுதப்படா
    என் கவிதை வரிகளில்
    நீண்ட வகிடெடுத்து
    இரட்டைப்பின்னலோடு
    சில கம்பீர வரிகளில்
    பொருத்தியுமிருந்தேன்.

    நல்ல வரிகள்...

    ReplyDelete
  6. //பறக்கவியலா
    எண்ணெய் தோய்ந்த சிறகொன்றை//
    அழுத்தமான வரிகள் ஹேமா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பெரியாரையும்
    ஓஷோவையும்
    சேகுவராவையும்
    தனக்கான அடையாளங்களோடு
    தன் அலமாரியின்
    இரண்டாவது அடுக்கில்
    சேமித்து
    வம்சம் வளர்க்க
    நானென்ன இயந்திரமாவெனக்
    கேட்டவளை....

    அலட்சியங்களுக்குள்
    அர்த்தமற்ற சுலோகமென
    புதைகிறது
    சில இலட்சியங்கள்!!!

    இப்படிதான் அறைகிறது அவ்வப்போது வாழ்க்கை.

    ReplyDelete