Sunday, June 16, 2013

அப்பா...


சிற்பியென
பாறை செதுக்கி
மொழியறிவித்து
வலிதாங்கும் வேராய்
இன்றும் அப்பா.

இளைத்தவிரல்
ஆதுரமாய் பற்றி
இறைந்துகொண்டிருக்கும்
என் இருப்புக்களை
எப்போதும்
'அம்மாக்குட்டி'யென.

தன்வழி
உதிர்த்துப் போகுமென்
குஞ்சுக்கால சிறகுகளை சேமித்து
தன் நிழலில் இளைப்பாற்றி....

பெருவெளியோடு
அடர்ந்த நீல
விளிம்புகளை
நான் வரைய அனுமதி தந்து....

ஒப்பீடென விரல் நீட்டி
சொல்லமுடியா
இரையும் அக்கடல்
அகதிதேசம்வரை
சரியாய் செதுக்கும்
தச்சனென இப்போதும்
என்னை.

தூரதேசதிலிருந்தபடி
உப்புக் கண்ணீர் வரைகிறது
ஒரு வரி அப்பா!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

  1. தந்தையை நினைவு கொள்ள வைக்கும் நல்ல பதிவு.

    எல்லா தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. தந்தைக்கு ஒரு அற்புதமான கவிதை!

    ReplyDelete
  3. அருமை... தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நெஞ்சைத் தொடும் நினைவு.

    ReplyDelete
  5. கவிதை அருமை தோழி !!!தங்களுக்கு எனது இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  6. வணக்கம் ஹேமா.. நலமா?

    ReplyDelete
  7. அழகு, தந்தையர் தின வாழ்த்துகள்...

    ReplyDelete