அன்பு....
தூரத்தே தொங்கும்
திராட்சைப்பழமாகிவிட்டது
சிலசமயம்.....
அடிநாதம் வாய்விட்டலறும்
ஆனாலும் கேட்பாரில்லை
சிலர் அதை......
அழகான இசையெனவும்
வர்ணிக்கிறார்கள்
வாய்விட்டுச் சிரித்து
நாளாயிற்று
என்னைப் புறக்கணித்தோர்
நான் சிரித்த இடங்களிலேயே
ஒப்பாரி வைக்கிறார்கள்
சில நேரம்.....
நான் அழுத
மலைப்பாறைகளின் கீழே
சில்லறையாய்க்
கொட்டி வைக்கிறார்கள்
சிரிப்புக்களை
என்னை......
அவன் ரசித்த கணங்கள்
கானகக் கிளைகளில்
தொங்கும் வௌவால்களாய்
ஏன்...
என்மீது இன்னும்
இடிவிழாமல்
அப்படியாவது
எட்டிப் பார்க்காமலா
போவார்கள்
அவனும்
கூட வரலாமென்ற
நப்பாசை எனக்கும்
வந்தால்.....
இருளில் ஒளி கிடைத்த
அதிசயத்தோடு வியக்கும்
என் விழிகள்
கோபமாய் வந்த வார்த்தைகளை
அளக்கத் தெரிந்த அவனுக்கு
என் அடிமன அன்பின்
அளவு தெரியாமல் போனதெப்படி
காற்றில்லா பூமியில்
வண்ணத்துப்பூச்சி இறகசைக்கும்
காற்றுப் போதும்
நாம் சுவாசிக்க
வா..............
நீயும் நானும் வாழ!!!
ஹேமா(சுவிஸ்)
அன்புத் தோழியே நலமா?
ReplyDeleteஅருமையான கவிதை...
//காற்றில்லா பூமியில்
வண்ணத்துப்பூச்சி இறகசைக்கும்
காற்றுப் போதும்
நாம் சுவாசிக்க//
உண்மை... பலருக்கு இன்றைய நிலை இதுதான்.
வாழ்த்துக்கள் தோழி!
unarthiyathu .....!
ReplyDeletenantru!
சொல்லரசி எனில் நீங்கள் தான்.
ReplyDeleteஇறைஞ்சி இறைஞ்சி அழைக்கும் வரிகளில் இரங்காத மனமும் உண்டோ? மனதின் ஏக்கத்தை வடிக்கும் வரிகளிலும் தெறிக்கிறது உங்கள் கவிவன்மை. அருமை ஹேமா.
ReplyDeleteநல்ல சொல்லாடல்... உண்மை வரிகள்...
ReplyDeleteஎன் அடிமன அன்பின்
ReplyDeleteஅளவு தெரியாமல் போனதெப்படி///அருமை ஹேமா.
இந்தக் கவிதைகளைக் கேட்கவாவது வந்து விடு தோழா என்று உங்கள் தோழனிடம் சொல்ல ஆசை! தோழன் திரும்பி வந்து விட்டால் எங்களுக்கு இப்படிக் கவிதைகள் கிடைக்குமா என்று மனம் சந்தேகம் கேட்கிறது!:))
ReplyDeleteஅருமையான கவிதை...
ReplyDeleteஇனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...
ஆம் சகோதரி. அன்பு தொலைந்து பலகாலங்கள் ஆகிவிட்டன. அருமையான கவிதை. வாழ்த்துகள் !!!
ReplyDelete