இருப்பு......
இருப்பவர்க்கல்ல
அது இல்லாதவர்க்கே
அந்த இருப்பின் வலி தெரியும்.
இருப்பை மாற்றினால்தான்
வாழ்வென்றால்
அதை எதிர்ப்பது
புரட்சியென்றால்
செய்திடலாம்
அதைப் பலமுறை
மகிழ்ச்சியோடு.
ஈழம்....
என் தாயின் பிரசவம்
நமக்கான வலி
தலை சிதறிப் போனாலும்
எம் தலைமுறைகள்
மறவாது
பிணங்கள் தாண்டிய
இரத்தம் தோய்ந்த
எம் கால்களும் கூட.
எம் கால் பட்ட புழுதிகள்
காத்திருக்கும்
எமக்கான தேசத்தில்
இன்றும்....
இன்னும்....
வித்தாகிப் போனவர்கள்
வீரத்தைத் தந்தே போனார்கள்
இப்போதெல்லாம்
மரணங்கள் பயமில்லை
சலிப்புத்தான்.
குண்டுகள் விழுந்த தேசம்
குயில் கூவும் தேசமாகும்
சாவுகள் கண்ட பூமியில்
புதுப் பனைமரங்கள்கூட
சாமரம் வீசும்
என் தாய்க்கு
நித்தவிடியலில் விலாசமெழுதும்
நம் ஒற்றுமை.
கை கோர்ப்போம்
கனவுகளுக்கு உயிரூட்டுவோம்
ஈழம் மலரும்
தமிழனின் தலை நிமிரும்
நம்புவோம்
வாழ்க தமிழ்
வாழ்க மாவீரர்களின் தாகம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தனித்தமிழ் தாயகம் !!!
ஹேமா(சுவிஸ்)
konthalippaana varikal...!
ReplyDeleteசாவுகள் கண்ட பூமியில்
ReplyDeleteபுதுப் பனைமரங்கள்கூட
சாமரம் வீசும்
என் தாய்க்கு
நித்தவிடியலில் விலாசமெழுதும்
நம் ஒற்றுமை//
ரத்த பூமியின்
ReplyDeleteதுக்கம் குறையட்டும்.
புழுதிகள்
அகன்று
புன்னகை மலரட்டும்.
கனவுகளுக்கு உயிரூட்வோம், தமிழனின் தலை நிமிரும்- நம்புவோம். அந்த நம்பிக்கைதான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. சோகங்கள் மறைந்து புன்னகை மலரும் அந்த தினத்தை எதிர்பார்க்கலாம் ஹேமா!
ReplyDeleteவெற்றி பெறவும் வேண்டுவோம்...
ReplyDeleteஇல்லாதவர்க்குத்தெரியும் அந்த இருப்பின் வலி///
ReplyDeleteவித்தாகிப் போனவர்கள்
ReplyDeleteவீரத்தைத் தந்தே போனார்கள்
கை கோர்ப்போம்
ReplyDeleteகனவுகளுக்கு உயிரூட்டுவோம்
ஈழம் மலரும்
தமிழனின் தலை நிமிரும்
நம்புவோம்
வாழ்க தமிழ்
வாழ்க மாவீரர்களின் தாகம்
கை கோர்ப்போம்
ReplyDeleteகனவுகளுக்கு உயிரூட்டுவோம்
ஈழம் மலரும்
தமிழனின் தலை நிமிரும்
நம்புவோம்
வாழ்க தமிழ்
எள்ளவும் ஐயமில்லை! ஈழம் மலரும்!
கை கோர்ப்போம்!!!!!!
ReplyDeleteநிழல் போல் நாங்களும்..
ReplyDeleteதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
ReplyDeleteதனித்தமிழ் தாயகம் !!!
தாரகம் மந்திரம் எந்தன் உணர்விலும்....
வாங்க..ஹேமா..உங்களின் ஆதரவு ...ஒன்று திரண்ட ஆதரவை தருவோம்.
ReplyDeleteபோராட்டம், கண்டிப்பாக வெற்றி பெரும் ஹேமா... நம்புவோம்.
ReplyDeleteகை கோர்ப்போம்
ReplyDeleteகனவுகளுக்கு உயிரூட்டுவோம்.!!!
கை கோர்ப்போம்
ReplyDeleteகனவுகளுக்கு உயிரூட்டுவோம்
ஈழம் மலரும்
தமிழனின் தலை நிமிரும்
நம்புவோம்
வாழ்க தமிழ்
வாழ்க மாவீரர்களின் தாகம்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தனித்தமிழ் தாயகம் !!!
///கை கோர்ப்போம்
ReplyDeleteகனவுகளுக்கு உயிரூட்டுவோம்/// நிச்சயமாக தோழி..
உணர்வுகள், வீராவேசம் எல்லாத்தையும் விட ஒற்றுமையும், விவேகமும் முக்கியம் விடுதலைக்கு ..
ReplyDelete///குண்டுகள் விழுந்த தேசம்
ReplyDeleteகுயில் கூவும் தேசமாகும்
சாவுகள் கண்ட பூமியில்
புதுப் பனைமரங்கள்கூட
சாமரம் வீசும்/// அருமை அக்கா.