Wednesday, February 27, 2013

வார்த்தை வலி...


சுழலும் நாக்கு வழி
இழுத்துப் பிடுங்கப்பட்ட
சில வார்த்தைகளில்
துடித்துச்சாகும்
சில மனங்கள்.

மனம்தாண்டி
சுண்டவைக்கும்
இரத்த நாளங்களையும்
செரிக்க முடியா
வார்த்தைகளால்
உறவுகளின்
ஒவ்வொரு அணுக்களும்
அறுந்து தொங்கும்.

நாட்காட்டிகள்
நாட்களைப் பிய்த்தெறிந்து
கூடிக் கொண்டாடும்
வார்த்தைகள்
மதுக்குவளைகளோடு !

ஹேமா(சுவிஸ்)

17 comments:

  1. உண்மைதான் ஹேமா மிகவும் அருமையாகச் சொன்னீர்கள் ஆழ்ந்து அனுபவித்து எழுதப்பட்ட வ(லி )ரிகள் இவைகள் !....

    ReplyDelete
  2. சரியான படத்துடன் சரியாக வலியை சொல்லிடிங்க

    ReplyDelete
  3. ஆறாத நா வடு.

    ஹேமா.. நீங்கள் ஊரில் இல்லை என்று நினைக்கிறேன். ஷெடியூல் செட் செய்து பதிவுகள் போட்டு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். விடுமுறையா?

    ReplyDelete
  4. நாவினால சுட்ட புண் ஆறாது என்பதை சிறப்பாக கவிதையாக்கி பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. உலகத்தில் மோசமான ஆயுதம் இந்த நாக்கு...



    கொஞ்சம் பார்த்துதான் பேசவேண்டும்...
    இங்கு பேசும் ஒவ்வொறு வார்த்தைக்கும் நாமே பொருப்பாகிறோம்...

    ReplyDelete
  6. ‘உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?’ன்னு எம்.ஜி.ஆர். கேட்க, என்.எஸ்.கே. என்னென்னமோ பயங்கர ஆயுதங்களையெல்லாம் சொல்லிட்டு கடைசில தோல்விய ஒத்துக்குவாரு. அப்புறம் வாத்யார் சொல்வார்: ‘தறிகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குதான் அது’ன்னு (சக்ரவர்த்தி திருமகள் படத்தல). அந்த நாவினின்று வரும் வார்த்தைகளை மனதில் தைக்கிற வண்ணம் கவிதையாக்கி அசத்திட்டீங்க ஃப்ரெண்ட்! சூப்பர்ப்!

    ReplyDelete
  7. நல்ல வரிகள் அல்ல... உண்மை வலிகள்...

    ReplyDelete
  8. சூழலுக்கு ஏற்றவாறு

    சுழலும் தன்மை கொண்ட

    நாவின் பிறழ்வுகளை

    அருமையான கவியாக்கி இருக்கிறீர்கள் சகோதரி...

    ReplyDelete
  9. வார்த்தை வலி...
    வடுகளாய் பதியும் மனத்தில்!

    அருமை ஹேமா.

    ReplyDelete
  10. இந்தவலி சொல்லிமாளாது.

    ReplyDelete
  11. நா சுழட்டு அறியாமல் பிறப்பிக்கும் வார்த்தைகள் உதிக்கும் வேதனைகள் அறியான் அறியாது அறிந்த மாதவ கூடனும்.........

    ReplyDelete
  12. நாக்கின் வலி அதிகம் தான்!ம்ம்ம் கவிதை அருமை கவிதாயினி!

    ReplyDelete
  13. நரம்பில்லா நாகின் நர்த்தனங்களை சொன்னது அருமை

    ReplyDelete