Wednesday, February 06, 2013

பனி தேசத்துக் குரல்...


நீண்ட.......
கண் சிவந்த இரவுகளை
தாலாட்டிக்கொண்டிருக்கிறேன்
பகலில்
பனி மேடுகளில்
பெய்யும் மழைத்துளிகளை
வேண்டிக்கொள்கிறேன் கரையாதிருக்க
இரவுப் பாடல்களை
பகலிலும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
பனிக்கரடிகள் நான் ரசிக்க
தேடிக்கொண்டிருக்கின்றன
அவைகள்
வான் ஊதும் வெப்பக்குழலை
எனக்குமாய்
இடைவெளி விட்டு விட்டு
எழுதிப்போகிறது
பனிக்குருவி
கவிதையொன்றை....

நடுங்கும் கைகள்
வெப்ப வார்த்தைகளைத்
தேடிக்கொண்டிருக்க
இங்கு யாருமில்லையென
எல்லா இரவுகளிலும்
எழுதி வைப்பதே
பாதுகாப்பாயிருக்கிறது எனக்கு.

திசைகள் அசைந்தபின்னும்
இருண்டே கிடக்கும்
பகலிலும்
நாட்குறிப்புகள் தொடரும்
நீ.........
தனித்தவள் என்றபடியே!!!

ஹேமா(சுவிஸ்)

16 comments:

  1. திசைகள் அசைந்தபின்னும்
    இருண்டே கிடக்கும்
    பகலிலும்
    நாட்குறிப்புகள் தொடரும்
    நீ.........
    தனித்தவள் என்றபடியே!!! ///

    தனித்தவள்தான்! தனித்துவம் தான்!! சிக்கல் ஏதுமே இல்லை - தனித்திருக்காதவரை!!

    அருமையான சொல்லாழம் மிக்க கவிதை!!

    ReplyDelete
  2. நடுங்கும் கைகள்
    வெப்ப வார்த்தைகளைத்
    தேடிக்கொண்டிருக்க
    இங்கு யாருமில்லையென
    எல்லா இரவுகளிலும்
    எழுதி வைப்பதே
    பாதுகாப்பாயிருக்கிறது எனக்கு.

    தனிமையின் உச்சக்கட்ட உணர்வு
    இது மனதை வாட்டிச் செல்கிறது
    கவிதை வரி(வலி )களாக !.........
    பகிர்வுக்கு நன்றி தோழி .

    ReplyDelete
  3. கடைசி நான்கு வரிகள் திசைகள் அடைத்தபின் பகலிலும் என் நாட்குறிப்புகள் தொடரும்! அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இங்கு யாருமில்லையென
    எல்லா இரவுகளிலும்
    எழுதி வைப்பதே
    பாதுகாப்பாயிருக்கிறது எனக்கு. ?
    நான் யோசனை சொல்லட்டுமா?

    ReplyDelete
  5. //நீ.........
    தனித்தவள் என்றபடியே!!!//


    :)))

    ReplyDelete
  6. அன்புத்தோழி ஹேமா...

    அனைத்தும் வெறுமை!
    உணர்வது கொடுமை!
    பார்ப்பதெல்லாம் கருமை! ஏனெனில்
    நீ இருப்பது தனிமை!
    கூறுவது உண்மை!
    உன் கவியோ அருமை!!!

    ReplyDelete
  7. திசைகள் அசைந்த பின்னும்...

    சிறப்பான வரிகள் கவிதாயினி

    ReplyDelete
  8. தனிமை சொன்ன கவிதை அருமை! பிரமாதம் ஃப்ரெண்ட்!

    ReplyDelete
  9. ஹேமா...நீங்கள்
    “தனித்துவமானவள்“ தான்.

    ReplyDelete
  10. மனச்சோர்வு உண்டாக்கவல்லவை தனிமையும் குளிரும்! கவிதாயினிக்கோ வெப்பக்கவிதை எழுத துணைபுரிகின்றன அவை.... பனிக்குருவியின் கீச்சிடல்களுக்கிடையிலும் தன் கவிதைக்கான இடத்தைக் கண்டுகொள்கின்றவள் அவள்!வாழ்த்துக்கள் ஹேமா.

    ReplyDelete
  11. தனிமை கொடுமை என்றாலும் தனித்துவம் மிக்கது கவிதாயினி! அருமையான கவிதை இப்ப எல்லாம் பனிக்கரடி ஞாபகம் மறந்து போச்சு:))))

    ReplyDelete
  12. பனிக் குருவியின் தனிமை கவிதையாக ஒலிக்கின்றது.

    ReplyDelete
  13. தனித்துவம் தனிமை என்ன ஹேமா நலமா !!!

    ReplyDelete