Sunday, January 27, 2013

காதல் துளிகள்(5)

எத்தனை அலைகள்
வந்தபோதும்
உன் பெயர்கொண்ட
அலை மட்டுமே
உடைக்காமால்
அணைத்துப் போகிறது
என்னை !

வரம் தந்து
தொட்டுத் திரும்பும்
அலையாகவே
இருந்துவிடு
கரையாகவே
இருந்துவிடுகிறேன்
நான் !

நீயில்லா உலகில்
இன்னும்
சூடமுடியா
பூக்கள் பறித்தபடி
நான்....

கொஞ்சம் பொறு
பெருவெளி
கடந்துகொண்டிருக்கிறேன்
ஆனால்
இன்னும்
உன் வாசனை எட்டவில்லை
நியாயத்துக்கு மாறாக
பயணித்த உன்னை
இப்போதும் மன்னிக்கிறேன் !

அன்பென்று
சொல்லிச் சொல்லியே
என் இருப்பைக்
கலைக்கிறாய்
கொஞ்சமாவது
விட்டு வை என்னை
எல்லாமாய் எடுத்துக்கொள்கிறாய்
காற்றுவழி அலைகிறேன்
ஏகாந்தங்களை சரிசெய்தபடி
அங்கும் .....மிதக்கிறேன்
நீ தந்த ஒற்றைச் சிறகோடு !

இன்று...
இப்போ...
இனி...
என்று கடந்துகொண்டே
நிமிர்ந்தும்...
தாழ்ந்தும்...
அகன்றும்...
சுருங்கியும்...
இன்னும்....இன்னுமென
நீண்டுகொண்டே போகிறது
எதிர்பார்ப்பும் ஆவலும்
வாழ்வு நாட்களின்
சேதாரத்தின் இயல்பை
தவிர்ப்பாரின்றி.

வாழ்வின் தத்துவம்
போலானவனே
ஞாலக்கதிரில்
தூங்குகிறாய்
எதுவித பிரக்ஞையுமற்று !

வாசனைத் திரவியங்கள்
ஏதும்
போதுமானதாயில்லை
கனவுகளை
கொன்று புதைக்கிறேன்.

பிணநாற்றம்
என்று முகம் திரும்பி
மூக்குப் பொத்தி
போகிறார்கள்
சிலர்.....
வழியில்
பிணமொன்று
சிதம்பிக்கிடப்பதாய்
எழுதிப் போகிறாய் நீ !

சுவிஸின்
உயர் மலைத்தொடரில்
உன் பெயர்
எழுதி வந்திருக்கிறேன்
உரத்து வாசிக்கக்கூடும்
அவைகள்
தீராப்பிரியங்களின்
சொற்களில்
உறைந்து கிடக்கிறதென் காதல்.

அவனிடமும்
சொல்லாதீர்களென
அதட்டிவிட்டே
தீவனமிட்டு வந்திருக்கிறேன்
வெள்ளை மலைகளின்
குருவிகளுக்கு
சிலுவை ஏந்தியவனின்
நினைவு நாளின்று !

ஹேமா(சுவிஸ்)

14 comments:

  1. கொஞ்சமாவது | விட்டு வை என்னை | எல்லாமாய் எடுத்துக்கொள்கிறாய்
    தீராப்பிரியங்களின் | சொற்களில் | உறைந்து கிடக்கிறதென்|
    காதல்.
    காதலினில் மூழ்கி வந்த வரிகள். மிக மிக ரசித்தேன் ஃப்ரெண்ட. சூப்பர்.

    ReplyDelete
  2. ம்ம்ம்...அருமை
    ஈரப்படுத்துகிறது
    துளிகள்

    ReplyDelete
  3. அவனிடமும்
    சொல்லாதீர்களென
    அதட்டிவிட்டே
    தீவனமிட்டு வந்திருக்கிறேன்

    ReplyDelete
  4. நியாயத்துக்கு மாறாக
    பயணித்த உன்னை
    இப்போதும் மன்னிக்கிறேன் !

    அழகான வரிகள்..

    ReplyDelete
  5. வரம் தந்து
    தொட்டுத் திரும்பும்
    அலையாகவே
    இருந்துவிடு
    கரையாகவே
    இருந்துவிடுகிறேன் நான்

    அருமை ஹேமா.

    ReplyDelete
  6. ம்..அழகிய வரிகள். அருமையான உணர்ச்சிக் காவியம். ரசித்தேன் தோழி!

    ReplyDelete
  7. //நீண்டுகொண்டே போகிறது
    எதிர்பார்ப்பும் ஆவலும்
    வாழ்வு நாட்களின்
    சேதாரத்தின் இயல்பை
    தவிர்ப்பாரின்றி.//

    மிகவும் ரசித்தேன். அருமையான கவிதை.

    ReplyDelete
  8. பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
    தூய தமிழ் நாட்காட்டி வாங்க
    அணுகும் முகவரி :
    சின்னப்ப தமிழர்
    தமிழம்மா பதிப்பகம் ,
    59, முதல் தெரு விநாயகபுரம்,
    அரும்பாக்கம் , சென்னை- 600106 .
    அலைபேசி - 99411 41894.

    ReplyDelete
  9. கலங்க வைக்கும் வரிகள்!ஹூம்!!!!

    ReplyDelete
  10. //எத்தனை அலைகள்
    வந்தபோதும்
    உன் பெயர்கொண்ட
    அலை மட்டுமே
    உடைக்காமால்
    அணைத்துப் போகிறது
    என்னை !// அன்பின் வெளிப்பாடு. எல்லா வரிகளுமே ரசிக்க வைக்கிறது ஹேமா...

    ReplyDelete
  11. //அவனிடமும்
    சொல்லாதீர்களென
    அதட்டிவிட்டே
    தீவனமிட்டு வந்திருக்கிறேன்
    வெள்ளை மலைகளின்
    குருவிகளுக்கு
    சிலுவை ஏந்தியவனின்
    நினைவு நாளின்று !//

    அன்பின் வெளிப்பாடு அழகிய காதலாய்...
    கவிதையில் கசிந்துருகி இருக்கிறது.

    ReplyDelete
  12. வாவ்...அன்பு பொங்கும் காதல் ரசம் கொட்டும் கவிதை, அழகு....!

    ReplyDelete