Wednesday, December 05, 2012

மழை நனைக்கும் ஒரு சொல்...

என்...
இரவுகளைக் காவலிருக்கிறது
உன் பூனை
முடியும்
இதோடு முடியுமென
முடியாமல் நீளும்
மாடிப்படிகளில்.

நீ...
சொன்னதால்
கதவுகள் திறந்து கிடக்க
பூனையின் அலறல்
காது சிதம்புகிறது.

உன்...
ஒற்றைச் சொல்
அகப்படுமென
உலகத்து ஓசைகளைத்
தன்னோடு இசைக்கிறதென்
வளையல்கள்.

மண்ணும்
காகிதக் கப்பல் சிறுமியும்
பிசிநாறி மழைக்காக
காத்திருக்க
அதே மழையை சபிக்கிறாள்
தெருக் கிழவி.

சொல்...
உன் பூனை என்பதால்
நனையாமல் காவலிருக்கிறேன்
இன்னும்
விட்டு வைக்கிறேன்
ஒரு மழை
காப்பாற்றட்டும் இரு உயிரை!!!

ஹேமா(சுவிஸ்)

26 comments:

  1. ஆரம்பிச்சிட்டீங்களா மறுபடியும் புரியாத வார்த்தைகளை.. :)))

    பிசிநாறி
    ////////////

    புரியவேயில்லை..
    ஆனாலும் ரசித்தேன் ...
    வாக்கியங்களின் கோர்ப்பு அழகு

    ReplyDelete
  2. மண்ணும்
    காகிதக் கப்பல் சிறுமியும்
    பிசிநாறி மழைக்காக
    காத்திருக்க
    அதே மழையை சபிக்கிறாள்
    தெருக் கிழவி.

    ...........எதார்த்தமான வரிகள்...

    இன்னும் ஒரு மழை மட்டும் அல்ல. நித்தமும் இனி மழைதான்... அழகு.

    ReplyDelete
  3. அருமை ஹேமா. காதல் கவிதை எழுதவே பிறந்திருப்பீங்களோ?
    என் தளத்தில்:
    நீ - நான் - காதல்
    இரண்டு குட்டிக் காதல் கவிதைகள்

    http://newsigaram.blogspot.com/2012/12/nee-naan-kaadhal-03.html#.UL9fqGddlkg

    ReplyDelete
  4. /மண்ணும்
    காகிதக் கப்பல் சிறுமியும்
    பிசிநாறி மழைக்காக
    காத்திருக்க
    அதே மழையை சபிக்கிறாள்
    தெருக் கிழவி./

    அருமை ஹேமா!

    ReplyDelete
  5. சிதம்புகிறது? தலைப்பு மனதை நனைக்கிறது.

    ReplyDelete
  6. ethaiyo unarthukirathu.....

    ReplyDelete
  7. உலகத்து ஓசைகளை இசைக்கும் வளையல்கள்.. காத்திருத்தலின் நயம் வித்தியாசமாக வெளிப்படுகிறது.

    ReplyDelete
  8. ஆழமாக சிந்திக்க வைத்தது கவிதை. நன்று.

    ReplyDelete
  9. மிகவும் அருமையான வரிகள்....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  10. நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நல்லதொரு கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. எனக்கும் புரியவேஉஇல்லைக் ஹேமா.. ஆனா பூனை என்பதால் ரசித்துப் படிக்கிறேன்:))

    ReplyDelete
  13. என் இனிய தோழி ஹேமா யோசித்துக் கொண்டே இருக்கிறேன்......

    ReplyDelete

  14. வணக்கம்!

    மழைகொடுக்கும் நற்குளிரை உன்றன் சொற்கள்
    மனத்துக்குள் கொடுத்தனவே! மின்னும் பொன்னின்
    இழைகொடுக்கும் வண்ணத்தில் இயற்றும் பாக்கள்
    இதயத்துள் பதியுமெனில் புலமை ஓங்கும்!
    பிழைகொடுக்கும் துயரின்றிக் கற்றோர் நெஞ்சுள்
    பிணிகொடுக்கும் வலியின்றிக் கவி பிறந்தால்
    தழைகொடுக்கும் சத்துணவாய்த் தமிழ் செழிக்கும்!
    தண்கவிதை தரும்ஏமா வளா்க நன்றே!

    ReplyDelete
  15. நான் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ”பிசிநாறி” வார்த்தை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  16. மழை நனைக்கும் ஒரு சொல் தேடவைக்கிறது மழையை!!

    ReplyDelete
  17. மழை நனைக்கும் ஒரு சொல் என்னையும் நனைத்தது!!

    ReplyDelete
  18. கவிதை மழை சிலிர்க்கின்றது ஹேமா.

    மழைக்காகக் காத்திருப்பதும் சபிப்பதும் தொடர்கதைதான்...

    ReplyDelete
  19. தோழி...கொஞ்சு தமிழ் அழகில் அற்புதமாக நடனமாடிய கவிதை வரிகள்.

    சொல்லோடு மனதையும் நனைத்துவிட்டது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. உன் பூனை என்பதால்
    நனையாமல் காவலிருக்கிறேன்

    ReplyDelete
  21. உள்ளம் கவரும் நல்ல கவிதை பாராட்டுகள்

    ReplyDelete
  22. இந்தக் கவிதை யாருக்காக எழுதப்பட்டதோ அவருக்காக நானும் காவலிருக்கிறேன்...வளையல்களோடு அல்ல..விலங்குகளோடு

    நன்றி
    ஹேமா

    ReplyDelete
  23. வரிகளை சொற்பஞ்சமின்றித் தொடுத்திருக்கும் அழகோ தனி.. இரசித்தேன்..
    ///முடியும்
    இதோடு முடியுமென
    முடியாமல் நீளும்
    மாடிப்படிகளில்...//// ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் மனதைத் தொட்டுச் செல்லும் வரிகள்...
    பாராட்டுகிறேன் தோழி

    ReplyDelete
  24. மழை ஒரு சொலருக்கு வரம், சிலருக்கு சாபம்.
    குழந்தைக்கு மழை கொண்டாட்டம், தெருவில் இருக்கும் முதியவளுக்கு சபிக்கத்தான் தோன்றும்.
    மழைக் கவிதை அருமை.

    ReplyDelete
  25. ஒரு சிலருக்கு வரம் என்பது சொலருக்கு என்று எழுத்து பிழையாகி விட்டது. மன்னிக்கவும்.

    ReplyDelete