இறக்கைகளை ஒவ்வொன்றாகப்
பிய்த்து ரசிக்கிறாய்
ஒருமுறை
ஒரே ஒருமுறை
நாம் வைத்த அன்புக்காக்
இரக்கம் காட்டு
களிம்பு தடவு
ஒற்றை முத்தம் தா
சிறகு முளைக்க
பறக்கும் எல்லைக்கல்லாக
உன் வெப்பக் கரம் தா
போகிறேன்
தூர இருந்து ரசிக்கிறேன்
என்னைச் சுற்றி
உன் ஒளிவட்டம்தான்
மீண்டும்....
கண்ணுக்குள் காட்டிய
கடவுளுக்கு நன்றி
என் இறக்கைகளை
பிய்க்கிறாயே
உண்மை சொல்
வலிக்காதா உனக்கு
கையும்....மனமும்? !
ஹேமா(சுவிஸ்)
என்னைச் சுற்றி
ReplyDeleteஉன் ஒளிவட்டம்தான....
அழகான வரிகள்....
என் இறக்கைகளை
ReplyDeleteபிய்க்கிறாயே
உண்மை சொல்
வலிக்காதா உனக்கு
கல்மனதாகி விட்டதால்தான் கழற்றி எறிய முடிகிறது இறக்கைகளை, உணர்வுகளை!
ReplyDeleteஅருமையான வரிகள் வாழ்த்துக்கள்
ReplyDeleteறெக்கை கழட்டி பறக்குதடி ஹேமாவோட பிளாக்கு..
ReplyDelete:}
பிழியும் கவி!
ReplyDeleteநல்ல கவிதை ஹேமா.
ReplyDeleteதைக்கும் கவிதை. ரசிக்கவும் முடிகிறது.
ReplyDelete"உண்மை சொல்
ReplyDeleteவலிக்காதா உனக்கு
கையும்....மனமும்? !"
படிக்கும்போது எமக்கு வலித்தாலும் ரசனை மேலோங்கி மயக்குகின்றது ஹேமா.
வாழ்த்துகள்.
அருமை... ரசித்தேன்...
ReplyDeletetm3
கவிதையில் வலிக்கும் காதல் வலி நிஜத்தில்
ReplyDeleteசுகமானது தான் என்பது புரிகிறது...
உண்மை சொல்
வலிக்கிறதா உனக்கு...
கையும்...மனமும்?
சூப்பர் என் இனிய தோழி ஹேமா.
வலி காதலில் நன்று...
ReplyDeleteகவிதையும் அருமை...
//வலிக்காதா உனக்கு
ReplyDeleteகையும்....மனமும்? !//
மனம் வலித்தால் கையும் வலிக்கும்.
#என் இறக்கைகளை
ReplyDeleteபிய்க்கிறாயே
உண்மை சொல்
வலிக்காதா உனக்கு
கையும்....மனமும்? !#
உண்மையிலேயே உருக்கும் வார்த்தைகள் ...
பல கடுமையான வேளைகளில் நான் உங்களின் பக்கம் வர இயலவில்லை பொறுத்து அருள்வீர் கார்த்திகை 27 மற்றும் எங்காளின் இதயங்கவர்ந்த அண்ணனுக்கு தலைவனுக்கு ஈராயிரம் ஆண்டுகள் தாமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளும் இதை பதிவு செய்த உமக்கும் உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றியும் ...மாறாத தமிழ் பற்றுடன் மாலதி
ReplyDeleteவலிக்கும்தான்,ஆனாலும் இறக்கை பிய்க்கிற அற்பத்தனம் இருக்கிறதே அது ஒரு பெரிய மன முரண்.
ReplyDelete