Friday, October 05, 2012

நான்...



பெண்ணடிமை
பெண் நவீனத்துவம்
கவிதைகள் கதைகள்
புலம் பெயர்வு
அந்நிய மனிதரின் நெருக்கம்
தனித்த துணிந்த
நம்பிக்கை வாழ்வு
மாறித்தானிருக்கிறேன் நான்.

"அடங்கியிரு
ஒடுங்கியிரு
பொம்பிளப்பிள்ளையாயிரு
வாய் காட்டாதே"
அம்மாவின் வாதம் மறுத்த
விதண்டாவாதம்.

பெண்ணென்றால்
வெட்கம் வேணுமாம்
வைத்துக்கொண்டா
வஞ்சகம் செய்கிறேன்.

"காலம் மாறியிருக்கம்மா
உங்கட காலம் வேற
எங்கட காலம் இதம்மா"
என்றால்...

உன்னைத் தனிய விட்டதே
பிழையாப்போச்சு
உழைக்கிற திமிர்
போரோ புயலோ
அவலமோ அவதியோ
கஞ்சியோ கூழோ
உன்னை
வெளில அனுப்பினது
என்ர பிழைதான்
அடங்காப்பிடாரி....

அம்மாவுக்குத் தெரியவில்லை
இப்போவெல்லாம்
நான் நிறையவே
வெட்கப்படுகிறேனென்று
நீயே சொல்லிவிடேன்!!!

ஹேமா(சுவிஸ்)

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.2-3 மாதமாகவே வேலை அதிகம்.வீடு மாற்றமென ஒரே பதட்டம்.அதோடு இந்த வருடத்தின் பெரும் சுற்றுலா விடுமுறை.மீண்டும் 30-40ன் பின் பதிவுகளோடு சந்திக்கிறேன்.எல்லாரும் சுகாமா இருந்துகொள்ளுங்கோ.......சந்திப்போம் !

47 comments:

  1. உங்கள் வேலைகளையெல்லாம் முடித்து வாங்க ஹேமா
    நீங்களும் சுகமா சுற்றுலாவை சந்தோஷமாக என்ஜாய் செய்யுங்க தோழி ..

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா சூப்பர் கவிதை! கடைசி வரி கலக்கல்! இன்னும் நல்லா வெட்கப்படுங்கோ ;-))

    ReplyDelete
  3. பெண்ணென்றால்
    வெட்கம் வேணுமாம்
    வைத்துக்கொண்டா
    வஞ்சகம் செய்கிறேன்.
    //////////////////////////

    அப்ப இல்லவே இல்லையா.....

    சென்று வாருங்கள் அதுவரைக்கும் பழைய பதிவுகளோடு உரையாடிக் கொள்கிறோம்

    ReplyDelete
  4. என்னது சுற்றுலா போறீங்களோ? பரிஸுக்கு வாறீங்களோ?

    வந்தால் என்க்கு,

    01 சுவிஸ் கேக்
    02.சுவிஸ் சொக்கலேட்
    03. ஐ பொட்
    04. ஐ பாட்
    05. லப் டப்

    எல்லாம் கொண்டு வந்து தருவீங்களோ? :))

    ReplyDelete
  5. ஏஞ்சல்....அன்புக்கு மிக்க நன்றி !

    சிட்டு....வருவேன் வருவேன் !

    மணி...சந்தோஷம்.வெட்கம் முதல் அன்புவரை என்னிடம் குறைவாம்.கொஞ்சம் வாங்கி அனுப்பிவிடுறீங்களோ முதல்ல.பிறகு நீங்கள் கேட்கிறதெல்லாம் வாங்கித் தாறன்.....சரியோ !

    ReplyDelete
  6. பகல் வணக்கம்,ஹேமா!சென்று வாருங்கள்.எப்போதும் வேலை வீடு,பதிவு,கவிதை என்று...........................கொஞ்சம் மனதுக்கும்,உடலுக்கும் ஓய்வு தேவை தான்!பின்னர்,எல்லாம் வரும்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

    ReplyDelete
  7. வெட்கப்பட வேண்டுமெனின் காதலிக்க வேண்டியிருக்கிறதே!

    /வைத்துக்கொண்டா
    வஞ்சகம் செய்கிறேன்/

    சரிதான்..

    ReplyDelete
  8. 'வைத்துக் கொண்டா
    வஞ்சகம் செய்தேன்'

    என்பதே..சரி...\இப்போது வெட்கம் வந்துவிட்டதே!!!

    ReplyDelete
  9. அருமையான கவிதை ஹேமா.

    இனிதாக அமையட்டும் சுற்றுலா.

    ReplyDelete
  10. அழகான கவிதை. கடைசி பத்தி கிளாஸ். மிகவும் ரசிச்சேன்.
    'அடங்காபிடாரி' 'வாயை காட்டாதே' எங்க அம்மாவும் என்னை இப்படிதான் திட்டுவார்கள். :)
    கவிதைக்கு படம் மிகவும் பொருத்தம். கலர் கலர் வளையல்களை பாக்கவே ஆசையா இருக்கு.

    நீங்களும் சுகமாய் இருங்க. உங்கள் விடுமுறையை சந்தோஷமா களியுங்க.

    ReplyDelete
  11. //வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறேன்
    ரசித்தேன்.
    பிரிவோம் சந்திப்போம்.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. படம் க்ளாஸ்.அப்ப கவிதையில்லையா என்று கேட்காதீங்க!

    சுகமா சுற்றுலா கிளம்பிட்டீங்களா!அதுக்காகத்தான் இந்த டீஸர்.

    நல்ல ஓய்வுக்குப் பின்னால் எழுதவிருக்கிற நல்ல கவிதைகளோடு சந்திப்போம் ஹேமா.

    ReplyDelete
  14. அருமையான கவிதை, அழகான படம்.

    விடுமுறை முடித்து புத்துணர்வோடும் நிறையக்கவிதைகளோடும் வாங்க :-)

    ReplyDelete
  15. கலக்கல் கவிதை...

    என் இனிய தோழி ஹேமா... சுற்றுலா முடித்து விட்டு சுகமுடன் சுறுசுறுப்பாக வந்து வெட்கத்துடன் ஒரு கவிதை இடுங்கள்.
    காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  16. வெட்கம் எல்லோருக்கும் வருவதுதானே.இதில் நவீனம் என்ன பழமை என்ன?

    ReplyDelete
  17. வெட்கத்தின் வரிகள் எனையும் வெட்க வைத்தன சகோ இன்பச் சுற்றாலாக்கு தயாராகுங்கள்.

    ReplyDelete
  18. ஆஹா ஹேமாவுக்கு வெட்கம் வந்திட்டுதாம்ம்ம்ம்.. அப்போ ஹெமா வயதுக்கு வந்திட்டா.. ஓடிவாங்கோ அஞ்சூஊஊஊஉ பிடிங்கோ வெப்பெண்ணை பருக்குவம்:))..

    சூப்பர் அண்ட் கலக்கல் கவிதை ஹேமா:)).. ஓவரா வெட்கப் படாதீங்கோ?:))

    ஹேமா மணியம் கஃபே ஓனரிடம் இருக்கிறதைக் கேட்டால் டக்கெனத் தருவார்:), இது இல்லாததை அனுப்புங்கோ எண்டால் பாவம் அவர் எங்கின போவார்:))நீங்கள் கேட்ட மூண்டில முதலாவது மட்டும்தான் இருக்காக்கும் அவரிடம்:). ஹையோ மீ எஸ்கேப்ப்ப்:).

    ReplyDelete
  19. நல்ல கவிதை...

    சுற்றுலா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. என்னது சுற்றுலா போறீங்களோ? பரிஸுக்கு வாறீங்களோ?

    வந்தால்......

    01 கேக்
    02. சொக்கலேட்
    03. ஐ பொட்
    04. ஐ பாட்
    05. லப் டப்\\\\\
    ஹேமா கட்டாயம் உங்க சிநேகிதரை போய் சந்தியுங்கள ஏனென்றால் !இவ்வளவும் உங்களுக்காக வாங்கிக் கொடுக்கப் போகிறார்போலும்....அதில் எனக்கும் கொஞ்சம் பங்கு கொடேன்.........

    ReplyDelete
  21. நான் நிறையவே
    வெட்கப்படுகிறேனென்று
    நீயே சொல்லிவிடேன்\\\\\\

    என்னையா!கேட்டீங்க?
    ம்ம்ம்ம....தூதூதானே போனாப்போச்சு!!
    இதுக்குப்போய்...காலால கோலம் போட்டுப்போட்டு நிற்காமல் சட்டுப்புட்டெனக் கிளம்புங்கோ

    ReplyDelete
  22. ஹேமா நான் வந்ததில் இருந்து உன்னுடன் பேசமுடியவில்லை{நேரம்தான்} உன்னுடன் தொலைபேசியில் பேசமுயற்சிக்கிறேன்.

    மகிழ்வுடன் விடுமுறையை கொண்டாடி வரவேண்டும்
    நிலாகுட்டியை நான நலம்விசாரித்ததாகக் கூறவும்.


    யோகத்தான் நலமா?இருக்கிறீர்களா!

    ReplyDelete
  23. இணைத்திருக்கும் படம் அருமை. ரசிக்க வைத்தது. கவிதையோ சூப்பர்! "வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன்?" ஹா..ஹா.. யோசிக்கவும் வைத்தது இந்த வரிகள். கடைசி வரிகள் அழகு. விடுமுறையை ஜாலியாக் கொண்டாடுங்க.

    ReplyDelete

  24. பெண்ணென்றால்
    வெட்கம் வேணுமாம்
    வைத்துக்கொண்டா
    வஞ்சகம் செய்கிறேன்.//

    நயம் பட உரைத்தீர் ! நல்லது சகோதரி! சுற்றுலா சுகமுடன் அமைய வாழ்த்துத்துக்கள்!

    ReplyDelete
  25. அழகு கவிதை. ஓய்வெடுத்து வேலை முடித்து திரும்புங்கள். நிச்சயம் இப்படி ஓய்வு தேவைதான். நானும் இதே போல ஓய்வெடுத்தே திரும்பியிருக்கிறேன். உங்களை மிஸ் பண்ணுவது வருத்தம்தான் சகோ. மீண்டும் வருக!

    ReplyDelete
  26. கவிதை அழகு வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கின்றேன் அன்பையும் தான் ஹேமா .சந்தோஸமாக விடுமுறையைக் கழித்துவிட்டு வாங்கோ எப்போதும் போல கலகலப்பாக கலக்கல் கவிதையுடன்.

    ReplyDelete
  27. நான் நிறையவே
    வெட்கப்படுகிறேனென்று
    நீயே சொல்லிவிடேன்\\\\\\

    என்னையா!கேட்டீங்க? 
    ம்ம்ம்ம....தூதூதானே போனாப்போச்சு!!
    இதுக்குப்போய்...காலால கோலம் போட்டுப்போட்டு நிற்காமல் சட்டுப்புட்டெனக் கிளம்புங்கோ
    //பிறகு என்ன நாத்தனார் கலாப்பாட்டி சொல்லியாச்சு ஹேமா !:))) பாட்டி நலம் தானே?? 

    ReplyDelete
  28. Kala said...
    யோகத்தான் நலமா?இருக்கிறீர்களா?////ஆஆஆஆ,மச்சினி!!!!!!!!!!!!!!!!!!கெள ஆர் யூ?????????நான் ரொம்ப,ரொம்ப நல்லாயிருக்கிறேன்.ரிலாக்ஸ் ஆகிட்டீங்க போல தெரியுது,ஆக வேணும்.விசாரிப்புக்கு நன்றி.பின்னர் பேசலாம்.

    ReplyDelete
  29. நேசன்,அத்தான் நன்றி

    ReplyDelete
  30. நேசன்,அத்தான் நன்றி

    ReplyDelete
  31. அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே

    ReplyDelete
  32. உன்னைத் தனிய விட்டதே
    பிழையாப்போச்சு
    உழைக்கிற திமிர்
    போரோ புயலோ
    அவலமோ அவதியோ
    கஞ்சியோ கூழோ
    உன்னை
    வெளில அனுப்பினது
    என்ர பிழைதான்
    அடங்காப்பிடாரி....

    அனல் தெறிக்கிறது அம்மாவின் பேச்சில்
    அடங்கித்தான் போவாள் பெண் .!!!!!........

    அம்மாவுக்குத் தெரியவில்லை
    இப்போவெல்லாம்
    நான் நிறையவே
    வெட்கப்படுகிறேனென்று
    நீயே சொல்லிவிடேன்!!!....

    ம்ம்ம்ம் இதற்காகத் தானே ஒவ்வொரு தாயும்
    பாடுபடுகின்றார்கள் .அழகிய வெக்கம் தொடரட்டும் தோழி .

    ReplyDelete
  33. நாங்களும் சொல்லிடறோம்... கனடா சுற்றுலா மகிழ்ச்சிகரமாக அமையட்டும். குழந்தை நிலாவை கேட்டதாக சொல்லுங்கள்...

    ReplyDelete
  34. அழகிய கவிதை.
    இனிய பொழுதுகளாக மகிழ்ந்திருங்கள்.

    ReplyDelete
  35. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கவிதாயினி...

    ReplyDelete
  36. கவிதையும் அழகு.... வெட்கமும் அழகு

    ReplyDelete
  37. பெண்ணுரிமை கவிதை என்று ஆர்வமாய் தொடர்ந்தேன், வெட்கத்தில் முடிந்திருக்கிறது கவிதை :)

    ReplyDelete
  38. நீயே சொல்லிவிடேன்!!! - டச்சிங்

    ReplyDelete
  39. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_20.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  40. வணக்கம் ஹேமா....பெண் வெட்கபட வேண்டிய இடத்தில் வெட்கபடுபவள்.

    எப்படி இருக்கீங்க...

    ReplyDelete

  41. "காலம் மாறியிருக்கம்மா
    உங்கட காலம் வேற
    எங்கட காலம் இதம்மா"

    அழகான கவிதை !

    ReplyDelete
  42. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2012/11/4.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  43. நல்ல கவிதை

    ReplyDelete
  44. ஹேமா! அழகான கவிதை.. வெட்கப்படும் உன் முகத்தைப் பார்க்கவேண்டும் போல் அல்லவா ஆவலாய் இருக்கிறது.. விடுமுறை இனிதாய் தொடர்கிறதல்லவா?
    புதுப்பித்துக் கொண்டு வந்து பூக்கவிதைகள் சொல்லு ஹேமா!

    ReplyDelete
  45. ரசிக்க வைத்த அழகிய கவிதை.

    ReplyDelete
  46. வணக்கம் சகோதரி அருமையான கவிதை வாழ்த்துக்கள் உங்கள் வரவைக் காண ஆவலுடன் உள்ளேன் .ஒரு சிறப்பான நிகழ்வு ஒன்றிற்கு அழைப்பு விட எண்ணுகின்றேன் .முடிந்தால் இந்த தொலைபேசியினூடாக என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் .மிக்க நன்றி 0764105257

    ReplyDelete
  47. haaaa......


    arumai!

    arumai....

    ReplyDelete