Friday, September 28, 2012

நிலாவின் கடவுள்...


வண்ணத் திரவங்களை
குழைத்து வீடெங்கும்
வீசிக்கொண்டிருந்தாள் நிலா.

பூனைக்கு இறகு
வண்ணத்துப்பூச்சிகள்
தமிழில் பேசி
தன்னோடு விளையாடுகிறதாம்
மனிதன் மிருகம் போல
நாலு காலில்
கடல் அலையின் நுனியில்
சூரியன் உதிக்கிறானாம்.

அப்பா நாலு காலோடு
பறக்கிறாரென வரைந்தவள்
என்னை
சாமியறையில் படங்களுக்கு
நடுவில் வரைந்துவிட்டு
"யார் சமைக்கிறது" என்றும்
கேட்டுக்கொண்டாள்.

கடவுள் கீறி
வாகனாமாய்க் குந்தியிருந்த
மிருகங்களை
"ஓடு காட்டுக்கு" கலைத்தாள்
வேல்,வில்,கத்தி,கடாயுதம்
மாலை மகுடங்களைக் களைந்து...

ஒவ்வொரு சாமிக்கும்
நான்கு நான்காகக் கைகள் கீறி
ஒவ்வொரு கையிலும்
பொட்டல உணவு
பால்புட்டி சூப்பி
புத்தகம்,பென்சில்
பூ,குடை
இனிப்புப் பொட்டலம்
போர்வை,தலையணையென
வரையத் தொடங்கினாள்!!!

ஹேமா(சுவிஸ்)

33 comments:

  1. முடிவில் நன்றாக வரைந்துள்ளார்கள்...

    ReplyDelete
  2. ஒவ்வொரு சாமிக்கும்
    நான்கு நான்காகக் கைகள் கீறி.
    அற்புதமான வார்த்தை கோர்வைகள் ஹேமா.

    ReplyDelete
  3. ரசித்து படிக்க வேண்டிய வரிகள்...

    ReplyDelete
  4. ஆஹா... நிலாவுடன் நானும் சேர்ந்து குழந்தையாகி விட்ட உணர்வு ஃபரெண்ட். ரசித்துப் படித்தேன் வரிகள் ஒவ்வொன்றையும்.

    ReplyDelete
  5. என்னை
    சாமியறையில் படங்களுக்கு
    நடுவில் வரைந்துவிட்டு
    "யார் சமைக்கிறது" என்றும்
    கேட்டுக்கொண்டாள்.
    ////////////////////////////////////////

    அற்புதம் அழகு வரிகள்

    ReplyDelete
  6. அப்பா நாலு காலோடு
    பறக்கிறாரென வரைந்தவள்
    என்னை
    சாமியறையில் படங்களுக்கு
    நடுவில் வரைந்துவிட்டு
    "யார் சமைக்கிறது" என்றும்
    கேட்டுக்கொண்டாள்.

    நம்ம நிலா செஞ்ச செட்டைதானா!!! இது.

    ReplyDelete
  7. வெண்ணிலாவின் முகத்தினிலே
    வண்ணத்துப்பூச்சி அழகென்ன அழகோ!...
    அவள் கண்ணிரண்டை மூட வைத்து
    கால் கடுக்க வைத்தது யார் சொல்லடி பெண்ணே !..
    என்று கவிதையை ரசிக்கும் முன்னர்
    இங்கு பொறுமையாய் அமர்ந்திருக்கும் நிலாக்
    குட்டியைக் கண்டு மகிழ்ந்தது என் கண்கள் தோழி!...

    ReplyDelete
  8. ஒவ்வொரு சாமிக்கும்//பொட்டல உணவு
    பால்புட்டி சூப்பி
    புத்தகம்,பென்சில்
    பூ,குடை
    இனிப்புப் பொட்டலம்//

    சாமிக்கு என்ன தேவைன்னு நிலாகுட்டி தேவதைக்கு தெரிந்திருக்கு ..

    யார் சமைப்பார் :)))
    என் பொண்ணு அடிக்கடி கேட்ட்கும் கேள்விதான்
    என்ன ஒரு வித்யாசம் யார் சப்பாத்தி சுடுவான்னு கேப்பா :))

    ReplyDelete
  9. நிலாவின் கைவண்ணங்களை உங்கள் வரிகளில் ரசித்தேன் ஹேமா:)!

    ReplyDelete
  10. நிலாக் குட்டி மிகவும் சுட்டியோ!

    ReplyDelete
  11. அருமை,ஹேமா!!!!நிலாவுக்கு இன்று என்ன?

    ReplyDelete
  12. நல்ல கற்பனை இது போன்ற கற்பனைகளே குழந்தைகளை படைப்பாக்க முயற்சிகளில் தள்ளி விடுவதாய் இருக்கிறது.

    ReplyDelete
  13. வண்ணத்துப்பூச்சியின் அழகைவிட நிலா அழகுதான். நல்லா வரையச்சொல்லுங்க. உங்க கவிதைகளுக்கு ஓவியம் வரைய ஆள் கிடைச்சாச்சு.

    ReplyDelete
  14. கடவுள் கீறி
    வாகனாமாய்க் குந்தியிருந்த
    மிருகங்களை
    "ஓடு காட்டுக்கு" கலைத்தாள்
    வேல்,வில்,கத்தி,கடாயுதம்
    மாலை மகுடங்களைக் களைந்து...

    அப்பாடா... நிலாவாவது அந்த மிருகங்களை ஓட்டினாளே... எனக்கும் பாவமாக இருக்கும்.

    என் இனிய தோழி ஹேமா... அனேகமாக நிலா வரைந்த ஓவியம் தான் உண்மையான கடவுளாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

    ReplyDelete
  15. நிலாக்குட்டியா இது...
    பிரமாதம்

    ReplyDelete
  16. நல்ல மழலை விழையாட்டு.. அதைக் கோஒர்த்து அழகிய கவிதை. பூனைக்கு சிறகு வைக்கிறாவோ அவ்வ்வ்வ்வ்வ் கெட்டிக்காரக் குட்டி நிலா.

    ReplyDelete
  17. அடேங்கப்பா, அம்மா கவிதாயினி போல் மகளும் ஓவியக்கவிதாயினி :)

    ReplyDelete
  18. காலத்தை நிற்கச்சொல்லும் தருணங்கள் இவை
    கண்டு களித்தக் கவிதைச் சுவை.

    ReplyDelete
  19. சாமியறையில் படங்களுக்கு
    நடுவில் வரைந்துவிட்டு
    "யார் சமைக்கிறது" என்றும்
    கேட்டுக்கொண்டாள்.

    கடவுள் கீறி
    வாகனாமாய்க் குந்தியிருந்த
    மிருகங்களை
    "ஓடு காட்டுக்கு" கலைத்தாள்//

    கை வ‌ண்ண‌ம் இங்கே க‌ண்டேன்... நிலாவுடைய‌தும், நிலா அம்மாவுடைய‌தும்! இந்த‌க் க‌ட‌வுள்க‌ளெல்லாம் நிலா கொடுத்த‌ பொருட்க‌ளோடு க‌ற்ப‌னித்தால் வெகு அழ‌காக‌வும் ந‌ல்ல‌தொரு விளையாட்டுத் தோழ‌ர்க‌ளாக‌வும்.

    ReplyDelete
  20. அருமையான வார்த்தை பயன்பாடு!

    ReplyDelete
  21. பூந்து வெளயாடிட்டீங்க!

    ReplyDelete
  22. பொட்டல உணவு
    பால்புட்டி சூப்பி
    புத்தகம்,பென்சில்
    பூ,குடை
    இனிப்புப் பொட்டலம்
    போர்வை,தலையணையென
    வரையத் தொடங்கினாள்!!!//ம்ம் நிலாவின் உலகம் அவசர் உலகம் இல்லையா !ம்ம் பாசத்தில் ஏழையாகிய தலைமுறை மாற்றம் அருமை கவிதை கவிதாயினி!

    ReplyDelete
  23. குழந்தைகள் உலகம் எத்தனை விசித்திரமானது?நிலாவின் உலகுக்கு அழைத்துச் சென்ற கவிதைக்கு நன்றி ஹேமா...

    ReplyDelete
  24. கவிதை மிக அருமை...பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  25. ஹேமா, நலமா? ரொம்பத்தான் புத்திசாலி நிலாக்குட்டி வண்ணத்துப்பூச்சியில் ஒரு வண்ணாத்திப்பூச்சியா!

    ReplyDelete
  26. அழகு நிலாவுக்கு அழகான கவிதை

    ReplyDelete
  27. நல்ல வரிகள்,,, அருமை,,

    ReplyDelete
  28. குழந்தைகளின் உலகில் நாமும் பிரவேசித்தால் அழகு நிலாவின் கடவுளை நாமும் தரிசிக்கமுடியும். பொறுமையும் நேரமும் கிடைத்தால் தானே !

    ReplyDelete
  29. ஆஹா அழகு..அழகு... கவிதை அழகு. நிலாவின் கற்பனை அழகு ...அதை வடித்த வரிகள் அழகு... வாழ்த்துக்கள் ஹேமா

    ReplyDelete