Friday, September 21, 2012

படுபள்ளம்...

சிலர்.... நேற்றைய இரவில்
விழுந்திருக்கலாமென்றும்
சிலர்....
கால் தடுக்கி
காலையில்
விழுந்திருக்கலாமென்றும்
சிலர்....
தற்கொலையாக
இருக்கலாமென்றும்...

சந்தேகப் பெயர்களை
சிலரும்...
ஏனையோர்
என் குடும்பம் குறித்தும்
பரிதாபப்படுகிறார்கள் !

ஹேமா(சுவிஸ்)

(படம் கவிஞர் மகுடேஸ்வரன் தந்தது)

27 comments:

  1. பகல் வணக்கம் ஹேமா!கவிதை அருமை.அதுவாக இருக்குமோ,இதுவாக இருக்குமோ என்று.............ஹும்!

    ReplyDelete
  2. ம்ம்ம்... பலரும் பலவிதமாகப் பேசத்தான் செய்வார்கள். அனைத்து மனிதர்களும் ஒரேவிதமாக இருப்பதில்லையே ஃப்ரெணட். நல்ல கவிதை.

    ReplyDelete
  3. வணக்கம் ஹேமா அக்கா!

    அழகான கவிதை ஒன்றைத் தந்திருக்கிறீங்க! வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
  4. சிறப்பான கவிதை ஹேமா.

    ReplyDelete
  5. அப்போ நடந்தது என்ன ஹேமா?

    மாத்தி ஓசிக்கிறாக்களைக் கொண்டு கண்டுபிடிப்பமோ?:))....

    முளையிலயே கிள்ளிடுங்க ஹேமா:)).. விட்டால் “ஆன்ரி” என்றும் சொல்லிப்போடுவினம்:).. கர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  6. புதுவிதமான ஒரு உணர்வை இந்த கவிதை தருகிறது.

    ReplyDelete

  7. வித்தியாசமான கவிதை!

    ReplyDelete
  8. goodness.. ரொம்ப பாதிக்கிறது கடைசி வரிகள்.

    ReplyDelete
  9. புதுமையான கவிதை அக்கா.....

    ReplyDelete
  10. ஆம்
    விமர்சனங்கள்
    விதவிதமாய்

    ReplyDelete
  11. மிக வித்தியாசமான கவிதை பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. பற்பல கதைகள்...

    இதைத்தான் "உலைவாயை மூடலாம் ஊர்வாயை மூடமுடியுமா" எனச்சொல்கின்றார்கள் போலும்.

    ReplyDelete
  13. ம்ம்ம் எத்தனை யூகங்கள் !! அனுமானங்கள்
    உங்க கவிதை இதயத்துள் ஈட்டியாய் நுழைந்து கண்களில் குபுக்னு கண்ணீர் வர வைக்குது

    ReplyDelete
  14. படுபள்ளமானது மனம்!
    அதனுள் இருப்பது
    அதற்கு மட்டுமே...

    ஆழ்ந்த கருத்து.. என் இனிய தோழி ஹேமா.

    ReplyDelete
  15. அவல் மெல்லும் வாய்கள்!

    ReplyDelete
  16. இந்தப் படு பாதாள, பள்ளமான மனத்தில் என்னென்ன உள்ளது...

    அருமை...

    உயர்ந்த சிந்தனை....

    ReplyDelete
  17. பாழ் கிணறு!ம்ம் பலரை திருத்தி உயிர் வாங்கி!ம்ம் அருமை கவிதை!

    ReplyDelete
  18. கவிதை நல்லா இருக்கு..இன்னும் நிறைய எழுதுங்கள்...வாழ்த்துக்கள்....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  19. மிக அருமையான கவிதை......பகிர்வுக்கு நன்றி....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  20. வெட்டிப் பேச்சு
    வேலையற்றவர்களின்
    சிறப்புரிமை.
    ஹா ஹா

    ReplyDelete
  21. உண்மையில் இந்த சமூகம் உண்மையான விமர்சன பார்வையை கொண்டிருப்பதில்லை ஆளாலுக்கு ஒருவிதமான காரண காரியங்களை முன்வைப்பார்கள் அதற்க்கு சான்று கட்டுவார்கள் உண்மையோ வேராக இருக்கும் ...

    ReplyDelete

  22. நான் விழுந்தேன்
    இறந்தேனா ! தெரியவில்லை. .
    இறந்தேன் என‌
    எண்ணி

    அஞ்சலி சொல்ல
    ஆயிரம் பேர் இன்று .

    கண்ணீர் விடுவோரே !
    கதறி அழுவோரே !

    பதறி நிற்கும் சோதரரே ! நீர் என்னை
    உதறி நின்ற காலத்தை மறந்தீரோ !!

    சிதறிக்கிடக்கும் என் பிள்ளைகள் !
    உதவி செய்ய யார் வருவார் ?

    ( இது மாதிரியும் யோசிக்கலாமோ ! )

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  23. படத்திலிருப்பதல்ல படுபள்ளம் என்னைப் பொருத்தவரையில் சிலரது உள்ளத்தில் இருக்கிறது படு பள்ளம்...

    கவிதை அழகு

    ReplyDelete