Monday, September 24, 2012

காதல் துளிகள் (3)...

என் மார்புக்குள்ளிருந்து வரும்
மூச்சுக்காற்றை
இசைக்குறிப்பாக்கியிருந்தான்
அவன்...
தன் ஸ்வரங்களில்
அற்புதமான பொழுது அது
இப்போதைக்கு
எதுவும் பேசவேண்டாம்.
அவனும் நானும்
ஒருவரையொருவர்
பார்த்தபடி இருக்கிறோம்!!!
நிறைகுடமென்பாள்
என் தோழி என்னை
தளம்பச் செய்தவன் அவன்...

என்னைக் கொஞ்சம் அசைத்த
அவன் குரலை
அவன் ஒற்றை எழுத்தை
அவன் மௌனத்தை
அவன் பெயரை
என் இதயக்கோப்பை
நிரப்பிக்கொண்டே இருக்கிறது.

பிடிக்காத விஷயங்களைக்கூட
மிக மிகப் பிடித்ததாய்
இன்றைய நிகழ்வுகள்
நாளைய கதைகள்
அதுபோலத்தான்
எனக்கு அவன் .....!!!
நான் தள்ளப்படுகிறேன்
உன்னால்....
காற்றில் மிதக்கும்
ஒரு சடப்பொருளாய்
ஒரு நேரம் ஆக்ரோஷமாய்
பின் ஒருமுறை
மிக மிக அமைதியாய்
இருந்தும்....

அலையால் தள்ளப்படும்
சிறு வள்ளம் போல் நானும்
நீராய் நீயும்
உன் கட்டுக்குள்தான்
நான்....
இப்போதாவது சொல்
என்னை நீ....
நேசித்தாயா உண்மையாகவே ?!

ஹேமா(சுவிஸ்)

24 comments:

  1. ம்ம்ம் ..
    காதல் துளிகள்
    உணர்வுக் குவியல்கள் கவிதாயினி

    ReplyDelete
  2. சிறப்பான காதல் கவிதை வாழ்த்துக்கள் தோழி !......

    ReplyDelete
  3. நிரப்பிக்கொண்டே இருக்கிறது
    பிடிக்காத விஷயங்களைக்கூட
    மிக மிகப் பிடித்ததாய்
    இன்றைய நிகழ்வுகள்
    நாளைய கதைகள்
    அதுபோலத்தான்
    எனக்கு அவன் .....!!!

    எனக்கு பிடித்த வரிகள்.

    கவிதையில் ச்சும்மா விளையாடுறீங்க... என் இனிய தோழி ஹேமா.

    ReplyDelete
  4. உன்னத காதல் பேசும் வரிகள்...

    அற்புதம்...

    ReplyDelete
  5. ayyayo ayyo ayyyayaiyo.......


    ennai kalangida seythathu-
    variyil ulla kaathal....
    vaazhthukkal!

    ReplyDelete
  6. ஒரு கவிதையாவது இப்படி
    மனதின் ஆழத்தைத் தொடும்படியாக எழுத வேண்டும்
    என்கிற ஆசை பெறுகுகிறது
    எப்படியெனத்தான் தெரியவில்லை
    மனம்தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இதுவே காதல்.அருமை.த.ம.5

    ReplyDelete
  8. அருமை ஹேமா. காதலின் பொன்வரிகளில் இன்னுமொரு அருமையான கவிதை!

    ReplyDelete
  9. நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  10. கவிதைகள் அருமை,ஹேமா!

    ReplyDelete
  11. அனைத்தும் அருமை சகோதரி! குறிப்பாக முதல் கவிதை வெகு நேர்த்தி & அழகு!

    ReplyDelete
  12. மிக அழகான கவிதை......உங்கள் பகிர்வுக்கு நன்றி......

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  13. கவிதைகள் அனைத்தும் மிக அழகாக உள்ளது...பகிர்வுக்கு மிக நன்றி....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  14. அனைத்தும் அருமை சகோதரி...

    ReplyDelete
  15. சொல்ல வார்த்தைகள் இல்லை ஹேமா அற்புதம்.

    ReplyDelete
  16. Beautiful ஹேமா! மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  17. ம்ம்ம்

    காதல் உணர்வுகள்
    குவியல்களாய் குவிந்துள்ளதே அக்கா...........

    அருமையான கவிதை..........

    ReplyDelete
  18. இப்போதாவது சொல்
    என்னை நீ....
    நேசித்தாயா உண்மையாகவே ?!
    இதையே தான் நானும் கேக்கிறேன் சகோ. அற்புதம் வரிகளில் ஆழ்ந்துவிட்டேன்.

    ReplyDelete
  19. நன்று !

    Can you please let me know your emial address please rjaramanan@gmail.com

    Ramanan

    ReplyDelete
  20. உணர்ச்சிமிகு எழுத்துக் கோர்வைகள்..
    அழகான காதல் துளிகள்

    ReplyDelete
  21. காதல் துளிகள், உணர்ச்சிக் குவியல்கள்...

    நிறைகுடமென்பாள்
    என் தோழி என்னை
    தளம்பச் செய்தவன் அவன்...

    இந்த வரிகள் ரொம்ப புடிச்சிருக்கு...
    கவிச் சக்கரவர்த்தினி ஹேமாவிற்கு வாழ்த்துகள்...

    ReplyDelete