Wednesday, July 25, 2012

இலவச மன்னிப்பு...

ஒவ்வொருமுறையும்
கைபிசைந்து நிற்கிறேன்
செய்த தவறுகளுக்காய்
என்னை முறைத்து
பின் ரசித்து
ரட்சிக்கும் தேவனாய்
உதறி விடுகிறாய்
மன்னிப்புக்களை.

இலவசவமாய்
கிடைக்கும் மன்னிப்பை
அலட்சியமாய்
எடுத்துக்கொண்ட நான்
மீண்டுமொரு
தவறுக்கு ஆயத்தம்
செய்துகொண்டிருக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)

46 comments:

  1. ஆஹா... மனித மனத்தின் இயல்பு படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது கவிதையில். மன்னித்தல் தேவகுணம். தவறிழைத்தல் மனித குணம். சூப்பர் ஃப்ரெண்ட்.

    ReplyDelete
  2. இயற்கை ..! நல்லாருக்கு வாழ்த்துகள்..ஹேமா.

    ReplyDelete
  3. ஆஹா என்னவொரு சுட்டிக்காட்டல்
    எப்படி சொல்வது விழிப்புணர்வா சுட்டிக்காட்டலா கவிதையா ...புரியவில்லை.

    ஆனாலும் இது அம்மாக்களிடம் நிறைய உண்டு

    ReplyDelete
  4. அவன் மன்னிப்புக்கோருதலை ரசிப்பதுமாதிரி
    அவன் பெருந்தன்மையை ரசிக்கவேண்டும் என்கிற
    காரணமாயும் இருக்கலாமோ?
    மன்ம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்ல வரிகள்...
    அருமையா இருக்குங்க...
    நன்றி... (த.ம. 3)
    திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  6. இலவசவமாய்
    கிடைக்கும் மன்னிப்பை
    அலட்சியமாய்
    எடுத்துக்கொண்ட நான்//

    மிகவும் ரசித்த வரிகள் .கவிதை அருமை ஹேமா .

    ReplyDelete
  7. கவிதை அருமை!

    கவனித்தீர்களா 555!

    பின்தொடர்பவர்களை சொன்னேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. மன்னிப்பவர்களின் அன்பைப் பொறுத்து மறுபடி தவறு செய்யத் தொடங்குகிறோம்! சிலசமயம் தண்டிக்கப்பட்டாலும் கோபத்தில் கூட அதே தவறை மறுபடி செய்யத் தோன்றலாம்! மனித மனம்தானே!

    ReplyDelete
  9. தேவனே... என் இனிய தோழி ஹேமா
    இனிமேல் செய்யும் தவறுகளையும்
    இலவசமாக மன்னிப்பாயாக....!!!

    ஆமென்.

    ReplyDelete
  10. இதுதானே உலக இயல்லாக மாறிவிட்டது...

    அழகிய கவிதை...

    ReplyDelete
  11. ஆஹா ,.. அருமையான படைப்பு அக்கா ...
    மன்னிப்பின் மகத்துவம் புரிய வைக்கின்றது வரிகள் ...

    ReplyDelete
  12. உண்மைதான் சகோ..மலிவாக கிடைக்கும் எதற்குமே இப்படி ஒரு முகம் உண்டு

    ReplyDelete
  13. athvum sari!

    mannippu!

    thevaikke payanpadanum!

    nee......nda naal enge poneenga!

    ungal pinnoottathai kaanaamal-
    kavalaiyil naanum-
    en kavithaikalum!

    ReplyDelete
  14. உண்மை தான் அன்பரே மன்னிப்பது தேவ குணம்

    ReplyDelete
  15. இலவசவமாய்
    கிடைக்கும் மன்னிப்பை
    அலட்சியமாய்...
    ”எப்படித்தான் யோசிக்கிறாய்ங்களோ!!!!”
    இலவசமாய் எது கிடைத்தாலும் அலட்சியப்படுத்தும் மனிதர்கள்தாம் நாம்.

    ReplyDelete
  16. மிக அருமை தோழர் ஹேமா

    ReplyDelete
  17. மன்னிப்பைக்கொடுப்பதால் போலும் மனிதர்கள் பாவம் அதிகம் செய்கின்றார்கள் போலும் சிந்திக்கவைக்கும் கவிதை பாவம் எல்லாம் தேவன் மேலே!ம்ம்

    ReplyDelete
  18. இல‌வ‌ச‌மாய்க் கிடைத்தால் உன்ன‌த‌ங்க‌ள் கூட‌ உளுத்துவிடுகின்ற‌ன‌வோ... ச‌ரிதான் தோழி!

    ReplyDelete
  19. மன்னிப்புத்தான் அடிக்கடி தவறுகள் செய்ய காரணமோ.?

    ReplyDelete
  20. ஆஆஆஆஆஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்

    ReplyDelete
  21. அக்கா ஆஆஆஆஆஆ எனக்கும் உங்க கவிதை புரிஞ்சிடுக்கு இன்னைக்கு தான் ,,,,

    பின்னூட்டம் பார்த்த கொஞ்சம் குலம்து ...

    இர்ருந்தால்லும் சுப்பெரா புரிஞ்சி இருக்கு அக்கா ..

    நன்கு கவிதை எழுதும் ஹேமா அக்காளுக்கு இனிய வாழ்த்துக்கள் ...
    கவிதையை நன்கு புரிஞ்சி கொண்ட கலைக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  22. சரியா சொன்னீங்க சகோதரி..
    இலவசமா கிடைக்கும் எதற்கும் மதிப்பும் மரியாதையும் இல்லை..
    திரும்ப அது கிடைக்க வேண்டும் என்று சோம்பேறிகளாகி விடுகிறோம்...

    ReplyDelete
  23. வணக்கம்.முன்பு முகநூலில் பார்த்ததாய் நினைவு.இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி.இந்த மன்னிப்புக்கள் தான் ஒருவேளை தவறுகளுக்கு காரணம் ஆகின்றனவோ???

    சரியாக சுட்டிக்காட்டுதல் அக்கா!வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  24. நல்ல கவிதை ஹேமா!

    ReplyDelete
  25. நல்ல கவிதை ஹேமா!

    ReplyDelete
  26. பிரியமானவர்களிடம் மன்னிப்புக்கு நிற்பதே ஒரு சுகம்தானே! அதற்காகவே சிலர் தவறு செய்கிறார்களோ என்று நான் நினைப்பதுண்டு.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  27. அடிக்கடியும் இலவசாமாகவும் கிடைக்கும் மன்னிப்புக்கு மரியாதை ஏது?

    ReplyDelete
  28. எளிதில் கிடைப்பதை எளிதாய் நிராகரித்து விடுவதையும், அதீத நம்பிக்கைகளை வாய்ப்புகளாக்கி வழுக்குவதையும் மிக எளிமையாக கவிதையாக்கி இருக்கிறாய், ஹேமா.

    ReplyDelete
  29. இலவசமா கிடைக்கும் எதற்கும் மதிப்பும் மரியாதையும் இல்லை..அருமையான வரிகள் தோழி....

    ReplyDelete
  30. ம்ம்ம் .. ம் (:

    இலவச
    மண்ணிப்பின் ஈரத்தில்
    தளிர்க்க முனைவதிண்டு
    தவறு விதை

    ReplyDelete
  31. //மீண்டுமொரு
    தவறுக்கு ஆயத்தம்
    செய்துகொண்டிருக்கிறேன்!!!//

    சில காலமாக யோசித்துக்கொண்ண்டே இருக்கும் ஒன்று..... நான்(நாம்) கொடுக்கும் மன்னிப்பு அப்படிதான் நடக்கின்றதா?

    ReplyDelete
  32. அருமையான வார்த்தைகள், வாழ்த்துக்கள், ஹேமா !!!

    ReplyDelete
  33. இலவசங்களை அலட்சியம் செய்கிற போக்கு விரவிக்கிடக்கிற சமுகத்தில் தவறுகளுக்கு ஆயத்தமாகிற போக்கு நடந்து கோண்டடெ இருக்கும்தான்.

    ReplyDelete
  34. இலவச மன்னிப்பு அடுத்த தவறுக்கான முதல் படின்னு தெரிஞ்சுக்கிட்டேன் சகோ

    ReplyDelete
  35. இப்போது அதிகமாக கிறிஸ்தவ மக்களிடையே
    ஒப்பரவு அருட்சான முறைமை அருகி வருகிறது... இலவசமாய் கிடைப்பதாலோ என்னவோ மன்னிப்பை தவறாக பயன்படுத்துகின்றனர்..

    அருமையாக கவி அக்கா....

    ReplyDelete
  36. நலமா கவிதாயினி?
    பிடித்தது...
    ரசித்தேன்...
    இப்படிக்கு,

    எப்படியும் மன்னிப்பார் என்று தப்பு செய்யும் சாதாரணன்...

    ReplyDelete
  37. தவறுக்கு ஆயத்தம்
    செய்துகொண்டிருக்கிறேன்!!!

    எல்லோரும் இப்படித்தான் போலும் :(

    ReplyDelete
  38. இலவசவமாய்
    கிடைக்கும் மன்னிப்பை
    அலட்சியமாய்
    எடுத்துக்கொண்ட நான்
    மீண்டுமொரு
    தவறுக்கு ஆயத்தம்
    செய்துகொண்டிருக்கிறேன்!!!

    இலவசமாய் கிடைத்தால் ஆயத்தம் தவறுக்கு !!!!

    ReplyDelete
  39. தாமதமான வருகைக்கு மன்னியுங்கோ ஹேமா:)).. பார்த்தீங்களோ இங்கேயும் மன்னிப்புத்தான் தேவையாக்கிடக்கு:).

    இம்முறை தான், முதன் முறையாக ஹேமாவின் கவிதை எனக்குப் புரிஞ்சிருக்கூஊஊஊஊஊஊஉ.. பிபிசிக்கு அறிவியுங்கோ.

    //இலவசவமாய்
    கிடைக்கும் மன்னிப்பை
    அலட்சியமாய்
    எடுத்துக்கொண்ட நான்
    மீண்டுமொரு
    தவறுக்கு ஆயத்தம்
    செய்துகொண்டிருக்கிறேன்!!!//

    அழகான தத்துவ வரிகள். அதுக்காக மன்னிக்காமல் இருக்கப்படாது, கண்டிப்போடு கூடிய மன்னிப்பு உகந்ததுதானே.

    ReplyDelete
  40. கைபிசைந்து நிற்கும் அழகை ரசிப்பதற்காகவே அளிக்கப்படுகின்றனவோ அடுத்தத் தவறுக்கான ஆழ் மன உந்துதல்கள், இலவச மன்னிப்பின் உருவில்? சிந்திக்கவைக்கும் கவி வரிகளுக்குப் பாராட்டுகள் ஹேமா.

    ReplyDelete
  41. நல்ல கவிதை ஹேமா

    ReplyDelete
  42. இலவசமாக கிடைத்தால் அது அலட்சியமாகத்தான் போகின்றது.

    சிந்திக்க வைக்கின்றது ஹேமா.

    ReplyDelete
  43. இலவசம் என்றாலே அலட்சியம் தானே தோழி...
    அருமையான வரிகள். எப்படித்தான் இப்படி கவிதை எழுதுகிறீர்களோ? கம்பன் பேத்தி போலும்...

    ReplyDelete
  44. என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_9.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete