Monday, July 23, 2012

கறுப்பு ஆடி 2012...

காலக்கொடுமைகள்
நிரம்பி வழிய வழிய
எல்லாவற்றையும்
ஏந்திக்கொண்டிருக்கிறது
அகதித் தேசம்
கரையாப் பனிமலைக்குள்
போர்வையோடு புதைந்தவள்
திட்டித் தீர்க்கிறாள்
தன்னையும்
தன் மண்ணுக்கான போரையும்
அகதி தேசத்தையும்.

எங்கேயோ பார்த்த ஒரு முகம்....
சிங்களச் சிப்பாய் ஒருவன்
என்னைச் சிதைத்துத்
கழிவறைக்குள் தள்ளுகையில்
அங்கு.....
பெண்சதை தின்று
புணரத் தாவும்
இன்னொரு மிருகத்தோடு
போராடிக்கொண்டிருந்த
அதே அம்மா.

தொடையிலும் மாரிலும்
வேறு வேறு இடங்களிலும்
இரும்பு ஒட்டும் இயந்திரத்தால்
சுட்டுச் சிதைத்த வடுக்கள்
இன்னும்....இன்றும்!!!

ஹேமா(சுவிஸ்)

31 comments:

  1. வணக்கம் ஹேமா கருப்பு ஆடியா? கறுப்பு ஆடியா பொருட்சுவை மாறுபடுகின்றதே???

    ReplyDelete
  2. தமிழர் வாழ்வுதனில் மறக்கமுடியாத வரலாற்று கறை அந்த யூலை நிகழ்வுகள் ஆட்சியின் சதியில் அடிபட்டுப்போனது மனிதத்துவம் !ம்ம்

    ReplyDelete
  3. இயந்திரத்தால் அடக்கிவிடத்துடிக்கும் இனவாதம் இனியும் தொடர்ந்து செல்வதுதான் தமிழர் விதியா ? என என்னவைக்கும் கவிதை!

    ReplyDelete
  4. சிங்கள இனவெறி சாய்த்த அகதிகள் துயரம் இன்னும் ஆண்டாடுகள் வரலாற்று வடிவில் வடுவாக பதிவு செய்யும் பல அகதிதேசத்தில்!

    ReplyDelete
  5. விழிகளில் உதிரம் வரவைத்த கவிதை ஹேமா .பள்ளிபருவத்தில் பத்திரிகைகளில் படித்த சம்பவங்கள் என் மனதிலும் ஆழபதிந்த வடுக்களாய் (

    ReplyDelete
  6. வாசிக்கும்போதே மனசைப்பிசைகிறது.

    ReplyDelete
  7. வேதனை தரும் வரிகள்...
    எப்போது இந்நிலை மாறுமோ...?
    நன்றி... (த.ம. 1)
    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete
  8. இதயம் வலிக்கிறது

    ReplyDelete
  9. நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது.
    காலம்தான் பதில் சொல்லவேண்டும்

    ReplyDelete
  10. வேதனை நினைவுகள் வெந்த வரிகளாய்...

    என்ன நீண்ட இடைவெளி ஹேமா?

    ReplyDelete
  11. வெகு நாளைக்குப்பின் ஒரு நல்ல கவிதையோடு!

    ReplyDelete
  12. படித்து முடித்து சில நிமிடங்கள்
    மௌனமாகிப் போனேன்
    மனம் கனத்துப் போய்விட்டது சகோதரி...

    ReplyDelete
  13. நானும் கவிதையை வாசித்தேன் என்பதை தவிர சொல்ல வார்த்தையில்லை ஹேமா :(
    ஸ்ரீராம் கேட்ட அதே கேள்வி
    என் இந்த நீண்ட இடைவேளை ?

    ReplyDelete
  14. நீண்ட நாளைக்குப் பிறகு பதிவிட்டுள்ளிர்கள் என வந்தேன்....இட்டது பதிவல்ல என் நெஞ்சத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது பதிவு..........

    போரின் வலிகள் கூற தோற்றுப் போயிடும் உங்கள் கவி வரிகளில்... :(

    ReplyDelete
  15. ஒண்ணும் சொல்லத் தோணலை ஃப்ரெண்ட். கண்ணில் நீர் முட்டுகிறது.

    ReplyDelete
  16. நெஞ்சம்
    கனக்க செய்கிறது
    வரியின் வலி

    வேற என்ன சொல்ல

    ஈழம்
    ஓர்நாள் வெல்லும்

    ReplyDelete
  17. எங்கேயோ பார்த்த ஒரு முகம்....
    சிங்களச் சிப்பாய் ஒருவன்
    என்னைச் சிதைத்துத்
    கழிவறைக்குள் தள்ளுகையில்
    அங்கு.....
    பெண்சதை தின்று
    புணரத் தாவும்
    இன்னொரு மிருகத்தோடு
    போராடிக்கொண்டிருந்த
    அதே அம்மா.

    தொடையிலும் மாரிலும்
    வேறு வேறு இடங்களிலும்
    இரும்பு ஒட்டும் இயந்திரத்தால்
    சுட்டுச் சிதைத்த வடுக்கள்
    இன்னும்....இன்றும்!!!


    அருமை இந்த சிங்கள வெறியர்களால் எத்தனை துன்பம் அனுபவித்தோம் எல்லாவற்றையும் சொல்லிடவா முடியும்......அக்கா.....

    ReplyDelete
  18. இதயம் கனத்துப்போனது உங்கள் கவிதையை படித்து. இன்னும் எவ்வளவு காலம் இந்த வலியோடு வாழபோகிறோம்?

    ReplyDelete
  19. உணர்ச்சிகரமான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. என் இனிய தோழி ஹேமா...

    காயம் ஆறினாலும்
    அதனால் ஏற்பட்ட வடுவை
    காணும் போதெல்லாம்
    அப்பொழுது பட்ட வலியின்
    வேதனையைச் சொல்லிக்
    கொண்டே தான் இருக்கும்.

    இதெல்லாம் உடலில் பட்ட வலியல்ல தோழி...
    இதயத்தில் பட்டது...!
    எண்ணும் போதெல்லாம் எரியும்.
    வெந்த மனத்திற்கு
    வார்த்தையை மருந்தாகவா
    போட முடியும்.....!!

    வலியில் கத்தலாம். அவ்வளவு தான் இப்பொழுது முடியும் தோழி.

    ReplyDelete
  21. துயரந்தான்!துயரமான கவிதையும்தான்!!

    ReplyDelete
  22. ரணம் கிளறி....

    ReplyDelete
  23. ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒரு தீர்க்கதரிசி வருவான்.நீண்டு செல்லும் துயரங்கள் அவனால் ஒரு முடிவுக்கு வரும்.

    இருளுக்குப் பின் ஒளி நிச்சயம் உண்டு ஹேமா.

    ReplyDelete
  24. சொல்ல ஏதுமில்லை.

    ReplyDelete
  25. மனம் கனத்துப் போய்விட்டது

    ReplyDelete
  26. அருமையான கவிதை ... உணர்ச்சி பொங்கும் வரிகள்... என்றோ ஒரு நாள் வெல்லும் ஈழம் .... சூப்பர்....

    ReplyDelete
  27. படிக்கும் போதே மனதில் கனம் அதிகமாகிறது... அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு, அது போலவே தங்கள் துன்பத்திற்கும்...

    ReplyDelete
  28. அக்கா ஆஆஆஆ ....


    என்ன சொல்ல தெரியல ...

    ReplyDelete
  29. என்னை மறக்காமல் வந்து அன்போடு விசாரித்த அன்புள்ளங்கள் அத்தனை பேருக்கும் என் அன்பைச் சொல்லிக்கொள்றேன்.நான் சுகம் எல்லாரும் சுகம்தானே.என்னமோ...எப்பவும்போல குழப்பம்.விடுமுறை நிறைய எடுத்திட்டேன்.எனக்கே மனச்சங்கடம் வலை மூடிக்கிடந்தது.இனியும் ஒக்டோபரில் மீண்டும் ஒரு தடங்கல் வரலாம்.வீடு மாறுகிறேன்.இணையத் தொடுப்பு எப்படி என்று இன்னும் ஒன்றும் முடிவில்லாமலிருக்கிறது.முடிந்தவரை...தொடர்பில் இருப்பேன்.எல்லாரோடும் மீண்டும் சந்தோஷமாக இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கும் !

    கருப்பு ஆடியில் என்னோடு உணர்வோடு கைகோர்த்துக்கொண்ட எல்லாருக்கும் நன்றி !

    ReplyDelete