Thursday, April 12, 2012

தொட்டித் தாவரங்கள்...

சுவாரஸ்யமான வாசிப்பின் நடுவில்
தொலைந்திருந்தாள் நாயகி
பாதி கிழிந்து கருகியுமிருந்தாள்
சுடுகாட்டில் கிடந்தது பக்கம்!

புலம்புகிறாள்
எரியும் சிதைவிட்டெழும்பி
நொந்த பெண்மை பற்றி.

தனக்குள் ஏவிவிட்ட சீதனப் பேயால்
சொற்களைப் பறித்தெறிந்து
பேசவிட்டவனின்
ஆடைகளைக் களைந்துவிட்டு
மானம் பற்றி
பேசிக்கொண்டிருந்தவனின்...

சாட்சியாய் குமுறுகிறாள்!

இரத்தம் பீச்ச என் முன்
பச்சைக் காயங்களுடன்
ஊனமாய் நின்றவன்
ஏன் இங்கு
சங்கு சேகண்டியோடு!

அதோ அடுப்பில்
ஏதோ மணக்கிறதென்கிறான்
எரிந்து முடிந்திருக்கிறது
அதே வசனத்தோடு
அந்தப் பக்கமும்!!!

ஹேமா(சுவிஸ்)

54 comments:

  1. எரியும் சிதைவிட்டெழும்பி | நொந்த பெண்மை பற்றி | தனக்குள் ஏவிவிட்ட சீதனப் பேயால் | சொற்களைப் பறித்தெறிந்து | பேசவிட்டவனின்
    ஆடைகளைக் களைந்துவிட்டு | மானம் பற்றி | பேசிக்கொண்டிருந்தவனின் |சாட்சியாய் குமுறுகிறாள்!

    -அழுத்தமான வரிகள். எனக்குள்ளும் ஏதோ எரிந்து முடிந்ததாய் உணர்ந்தேன். நன்று.

    ReplyDelete
  2. அற்புதமான கவிதை ஹேமா..

    ஏதோ ரசவாதம் செய்கின்றன உங்க எழுத்துகள்..

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு ஹேமா...

    ReplyDelete
  4. உணர முடிந்தது
    அற்புதமான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. குட்டி ரேவதி ,மாலதி மைத்த்ரி, தமிழச்சி,லீனா மணிமேகலை , பஹிம்ஜான் தமிழில் எமக்கு பிடித்த கவிதாயினிகள் வரிசைகளில் நீங்கள் ஆழமான வார்த்தைகளால் அழுத்தமாக உணர்த்தும் கவிதை படைகிறீர்கள்

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு

    ReplyDelete
  7. வாசித்தவுடன் புரியல ஹேமா...மனதில் கொள்ள கொஞ்ச நேரம் ஆச்சு...நல்லா வந்திருக்கு...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. எரியும் சிதை விட்டெழும்பும் நொந்த பெண்மையின் வீச்சு கவிதை எங்கும் வியாபிக்க, எளிதில் மனம் விட்டகல மறுதலித்துக் குடியிருக்கிறது கணநேரமாய்க் கவிதை.

    ReplyDelete
  9. எரிந்து முடிந்திருக்கிறது
    அதே வசனத்தோடு
    அந்தப் பக்கமும்!!!

    எரியும் நெருப்பாய்
    சுடரும் தீக்கனலாய்
    சுட்டுவிடுகிறது கவிதை!!

    ReplyDelete
  10. அர்த்தம் நிறைந்த சிந்திக்கத்தூண்டும் கவிதைகள் படைப்பதில் கைதேர்ந்தவர் ஹேமா என்பதற்கு மற்றுமொரு சான்றாக இந்தக்கவிதை

    ReplyDelete
  11. ஹேமா உங்கள் சிறந்த கவிதைகளை மேலும் பலரிடம் சேர்க்க பதிவுகளில் முகப்புத்தக இணைப்பிற்கான சுட்டிகள் வையுங்கோ

    ReplyDelete
  12. அன்பின் ஹேமா,

    சக்தி வாய்ந்த எழுத்துகள். வாழ்த்துகள் தோழி. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு தங்கள் மனக்காயங்களை ஆற்றக்ககூடிய மருந்தாக இருக்க வேண்டும் என்று மனமார பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன்

    பவள சங்கரி.

    ReplyDelete
  13. உணர்சிகரமான வரிகள்!

    ReplyDelete
  14. வலிகள் வரிகளில்..

    நல்ல கவிதை ஹேமா.

    ReplyDelete
  15. புத்தகமாகப் புரட்டப்படுபவளின்...
    பக்கங்கள்.
    பக்கங்களின் “அச்சில்” அவள்
    தீய்வதுகூடத் தெரியாமல்....
    தீய்ந்துகொண்டிருக்கும் ..
    சிந்தனையும்..நூலும்..மெய்யிலும்!கையிலும்!!


    சிந்தனை சிப்பி, கவி அருமை
    என் மனமார்ந்த
    புத்தாண்டு வாழ்த்துகள் ஹேமா.

    ReplyDelete
  16. வலி சுமக்கும் வரிகள்! வடித்தமுறை நன்று! சா இராமாநுசம்

    ReplyDelete
  17. நன்று,இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. சீதனப்பேய்  என்பது தொட்டித் தாவரம் என்பதா? இல்லை சமுக மானம் ஆகிப்போனதா? வலிமிகுந்த கோபத்தைப் பதிவு செய்யும் கவிதை.

    ReplyDelete
  19. இரவு வணக்கம் மகளே!உங்கள் கவிதகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை பேசுகின்றது.பெருமையாக இருக்கிறது,இது போதும் எனக்கு!(நாளை புது வருடம் பிற்பகலில் பிறக்கிறதாம்)

    ReplyDelete
  20. இந்த சீதனப் பேயால் வரும் பிரச்சினைகள் பெரிதுதான். கலக்கல் கவிதை.

    ReplyDelete
  21. அண்ணனுக்கு புது வருட வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  22. சீதனத்தை பற்றி இப்படி ஒரு அழுத்தமான கவிதையை நான் இதுவரை வாசித்ததில்லை.. அருமையான படைப்பு ஹேமா.!!

    ReplyDelete
  23. வேதனை!
    தலைப்பு மிகவும் பிடித்தது.
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஹேமா!

    ReplyDelete
  24. காலை வணக்கம் ஹேமா!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!சந்தோஷமாக உணர்கிறேன்!!

    ReplyDelete
  25. காலை வணக்கம்,கலை!உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.சந்தோஷமாக உணர்கிறேன்!

    ReplyDelete
  26. வலிகளைப் புதைத்து எழுதுவதில் வல்லமை கொண்டு விட்டாய் ஹேமா.

    ReplyDelete
  27. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  28. இன்றைய பெண்மை இப்படித்தான் எரிகிறது.பாதி வெந்தும்,வேகாமலும்/

    ReplyDelete
  29. காலை வணக்கம் ஹேமா!இனிய நந்தன வருட
    வாழ்த்துக்கள்!சந்தோஷமாக உணர்கிறேன்!!\\\\\\\

    காலை வணக்கம்,கலை!உங்களுக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    .சந்தோஷமாக உணர்கிறேன்!\\\\\\\\\

    ஏன்ஹேமா! உங்கப்பா எனக்குச்
    சொல்லமாட்டாங்களா?
    இருந்தாலும் நான் கேட்கிறேன்கிறேன்....
    யோகாய்யா! உங்கள் மனமார்ந்த ஆசியுடன்..
    வாழ்த்துகளும் வேண்டி.....

    மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும்,
    பிறக்கும் புதுவருடம் இன்பமாய் அமைய..
    பிராத்திக்கின்றேன்

    ReplyDelete
  30. பாலமுரளி13 April, 2012 15:26

    ஹேமா மனம் நிறைந்த சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள்.

    தொடர்ந்த உங்கள் கவிதைக்களில் உங்களின் ஆழுமை அறிவு இன்னும் இன்னும் அழகாகிக்கொண்டு வரக்கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.தமிழ் வாழும் உங்களவர்களைப் போலுள்ளவர்கள் கையில்.

    ReplyDelete
  31. வார்த்தைகளை புரிந்து கொள்வதற்காக பல முறை படிக்கிறேன்...அக்கா நான் ரசிக்கும் கவிதைகளில் அதிக தடவை வாசிப்பது உங்களுடையதைத்தான்

    ReplyDelete
  32. வாழ்த்துகிறேன் புத்தாண்டுக்கும் சேர்த்து....

    ReplyDelete
  33. ம்ம்ம்.... எல்லாரும் பாராட்டுறதைப் பார்த்து சந்தோசத்தோடு, வந்து போனதுக்கு அடையாளமாய் இதை எழுதிவிட்டுப் போகிறேன் :)

    ReplyDelete
  34. வணக்கம் மகளே!இனிய நந்தன வருட
    வாழ்த்துக்கள்!உங்களுக்கு ஆண்டவன் இந்த நந்தன வருடத்திலும்,இன்னுமின்னும் பிறக்கப்போகும் புதிய,புதிய வருடங்களிலும் எல்லா நலனும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வழி சமைக்க வேண்டுமென வேண்டுகிறேன்!

    ReplyDelete
  35. கலா said...

    இனிய நந்தன வருட
    வாழ்த்துக்கள்!
    யோகாய்யா! உங்கள் மனமார்ந்த ஆசியுடன்..
    வாழ்த்துகளும் வேண்டி.////இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்,உங்களுக்கும் கலா!இந்த "நந்தன" வருடத்தில் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது மகிழ்ச்சி.உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் சகல நலன்களும் அளித்து,சீரும் சிறப்புமாக வாழ வகை செய்ய வேண்டுமென இந்நன்னாளில் வேண்டுகிறேன்!வாழ்த்துக்கள் கலா!

    ReplyDelete
  36. மிக்க,மிக்க நன்றி ஜயா,
    உண்மையாகட்டும்! உங்கள உளளத்தில் இருந்து வந்து விழுந்த உணர்ச்சி மிகு வார்த்தைகளால்.... உளளம் பூரித்துக்,கண்கள பனிக்கின்றன.
    ஹேமா,என் போன்றவர்களுக்கு கிடைக்காத உறவுகளின் ஆசி
    உங்களால்...கிடைத்ததில் பெருமைகொளகிறேன் உங்கள ஆசியால் நிட்சயம் நான் சிறப்பேன் .உங்கள நலத்துக்காகவும்,வளத்துக்காகவும் நான் வணங்கும் தெய்வங்களிடம் எப்போதும் வேண்டிநிற்பேன் நன்றி ஜயா.

    ReplyDelete
  37. வலிக்கும் கவிதை.


    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.

    ReplyDelete
  38. காலை வணக்கம் ஹேமா!

    ReplyDelete
  39. உணர்வுக் குவியலாய்..
    கவி வரிகள் நெஞ்சில்
    தஞ்சம் புகுந்துவிட்டது சகோதரி...

    ReplyDelete
  40. ஹேமா said...

    நேசன் நேற்றையான் பொங்கல்,வடை,வெண்பொங்கல் கறி எல்லாம் இருக்கோ.செல்லம்மா மாமியைக் கூப்பிடுங்கோ.ஆராவது பெரிய ஆக்கள் குழைச்சு உருண்டைச்சோறுத்தர சுத்தியிருந்து சாப்பிட ஆசையாயிருக்கு !////இரவு வணக்கம்,மகளே!மனது கனக்கிறது.உருண்டைச் சோறு..................ஹும்!§§§§நான் உப்புமடச் சந்தியில பதிவு போடலாம் எண்டு நினைக்கிறன்.ஆனால் எல்லாரும் சந்தோஷமா இருப்பீங்களோ தெரியேல்ல.§§§§§ஏன் பதிவு போடவில்லை?யாரோ ஏதோ சொன்னார்களென்று நாம் வாளாவிருக்க முடியுமா?"அந்த"விடயம் மறந்தாயிற்று.தொடருங்கள்,தொடர்வோம்!

    ReplyDelete
  41. காலை வணக்கம்,ஹேமா,கலை,அம்பலத்தார்,கலா!

    ReplyDelete
  42. இரவு வணக்கம்,மகளே!காலையில் பத்திரிகை பார்த்து மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.சகோதரிகள்...............................ஹும்!

    ReplyDelete
  43. இனிய காலை வணக்கம்,ஹேமா!

    ReplyDelete
  44. இரத்தம் பீச்ச என் முன்
    பச்சைக் காயங்களுடன்
    ஊனமாய் நின்றவன்
    ஏன் இங்கு
    சங்கு சேகண்டியோடு// நல்ல கவியாக்கம்

    ReplyDelete
  45. உங்கள் கவிதையின் உட்கருத்தை புரிந்து கொள்ள பல முறை வாசிக்கனும்.ஹேமா.

    ReplyDelete
  46. அவசியமான கருவில் அழகான கவிதை தொடருங்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
  47. காலை வணக்கம்,ஹேமா!அது ஒன்றுமில்லை.இரவு பேசலாம்!

    ReplyDelete
  48. தனக்குள் ஏவிவிட்ட சீதனப் பேயால்
    சொற்களைப் பறித்தெறிந்து
    பேசவிட்டவனின்
    ஆடைகளைக் களைந்துவிட்டு
    மானம் பற்றி
    பேசிக்கொண்டிருந்தவனின்...// மிக சிறந்த கவி ஆக்கம் பெண்மை நலம் இனிதே சுவைக்க இயலுகிறது பாராட்டுகள்

    ReplyDelete
  49. சுக்கு நூறாய் அடித்துப் போட்டுவிட்டது கவிதை.
    இன்னும் எரிந்து கொண்டுதான் இருக்கின்றது வரதட்சணைத் தீயில் பெண்மை.

    ReplyDelete
  50. அருமை என்பதற்கு முழு அர்த்தம் பொதிந்த கவிதை.. பெண்மை வ(லி)ரிகள்..

    ReplyDelete
  51. பெண்மை வலிகள் ஹேமா...
    எரிந்து கொண்டிருக்கிறாள்.............

    ReplyDelete