அதிராமல் தூறும் மழைத்தூறல்
^
பௌர்ணமிப் பின்னிரவு
^
தனித்த வேம்பின் நிழல்
^
பெயர் பாடும் கொலுசு
^
சத்தமில்லாக் குச்சொழுங்கை
^
ஈரிதழ் நந்தியாவட்டை
^
இருபது விரல் பதித்த
மணல் குவியல்
^
மரவட்டை வரையும் தெரு
^
தோய்த்துலர்ந்த
ஆடையின் வாசனை
^
தலையணையோடு
வாடிய மல்லிகை
^
தோளணைத்து இறுக்கி்த்
தளர்த்தும் தனிமை
^
இதழ் நெருங்கிப்
பின்
கடித்துத் திருப்பும் காது
^
இன்னும் ஏதோ
^
இதில்
^
அதில்
^
வசித்து
வரப்போகிறேன்
இத்தனைக்குள்ளும்
இன்னுமொருமுறை
^
கள்வன்
காற்றாய்
அவன்தானோ
^
ஏதேனும்
கிட்டுமெனக்கு!!!
ஹேமா(சுவிஸ்)
^
பௌர்ணமிப் பின்னிரவு
^
தனித்த வேம்பின் நிழல்
^
பெயர் பாடும் கொலுசு
^
சத்தமில்லாக் குச்சொழுங்கை
^
ஈரிதழ் நந்தியாவட்டை
^
இருபது விரல் பதித்த
மணல் குவியல்
^
மரவட்டை வரையும் தெரு
^
தோய்த்துலர்ந்த
ஆடையின் வாசனை
^
தலையணையோடு
வாடிய மல்லிகை
^
தோளணைத்து இறுக்கி்த்
தளர்த்தும் தனிமை
^
இதழ் நெருங்கிப்
பின்
கடித்துத் திருப்பும் காது
^
இன்னும் ஏதோ
^
இதில்
^
அதில்
^
வசித்து
வரப்போகிறேன்
இத்தனைக்குள்ளும்
இன்னுமொருமுறை
^
கள்வன்
காற்றாய்
அவன்தானோ
^
ஏதேனும்
கிட்டுமெனக்கு!!!
ஹேமா(சுவிஸ்)
அனுபவித்த ஒவ்வொரு நிமிடங்களையும்
ReplyDeleteமீண்டும் நினைக்க வைக்கிறது
ஒவ்வொரு வரிகளும்.
அருமை. பாராட்டுக்கள்.
சொல்லிச்சென்ற வரிகளில்
ReplyDeleteஉவமைகள் வில்லினின்று அம்புகளாய் சீறிப் பாய்கின்றன
சகோதரி...
இருபது விரல் பதித்த
ReplyDeleteமணல் குவியல்
அழ்காய் இருக்கிறது..
C L A S S
ReplyDeleteஅடுக்கப்பட்ட ஒவ்வொன்றும் காட்சியாய் விரிந்து உங்களின் மன உருவத்தை அழகாய் வரைந்துவிடுகிறது ஹேமா.அற்புதம்.
ReplyDeleteAvanin ninaippil
ReplyDeleteநீங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் நினைத்துப்பார்க்கிறேன். கற்பனைக்குள் அடங்கவில்லை.
ReplyDeleteபிரமிக்க வைத்தது கவிதையும் உவமைகளும். ‘குச்சொழுங்கை’ என்றால் என்ன ஹேமா? அது மட்டும் எனக்குப் புரியவில்லை.
ReplyDeleteஅடடா, ஒவ்வொரு உருவகமும் அழகா இருக்கே! தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் செதுக்கியிருக்கிறீர்கள்! எப்பவுமே உங்கள் கவிதைகளில் உவமைகள் போதாது என்று நினைப்பேன்! அந்தக் குறையை இன்று மொத்தமாகப் போகிவிட்டீர்கள்!
ReplyDeleteஇதில் முக்கிய விஷயம் என்ன தெரியுமா? இது போன்றவன், அது போன்றவன் என்று உவமை அணியில் கூறும் போது தோன்றும் நெருக்கத்தை விட, இதுவானவன், அதுவானவன் என்று உருவக அணியில் கூறும் போது, கவிதையும் அழகு! உணர்வுகளும் அழகு!! - இது பாசத்தின் நெருக்கத்தை மேலும் காட்டுமாம்!!
ஒவ்வொரு வரிக்கும் தனித்தனியே பொருள் கூற முடியும் ஹேமா!!
சரி, அவன் எவனோ?
//வசித்து
ReplyDeleteவரப்போகிறேன்
இத்தனைக்குள்ளும்
இன்னுமொருமுறை//
ம்ம்ம்......
ஒவ்வொரு வரிகளும்.
ReplyDeleteஅருமை.
mmm.....!
ReplyDeleteche!
eppudi!
payanikka vaiththideenga!
kavithaiyoda!
என்ன கிட்டியது என்று அடுத்த கவிதையில் படிக்கிறேன்! இணைத்திருக்கும் படம் ஒரு கணம் கண்களை நிறுத்தியது.
ReplyDeleteகணேஷின் கேள்வி எனக்கும்!
வணக்கம் அக்கா,
ReplyDeleteஅவன் பற்றி அழகிய சொல்லாடல்களை உள்ளடக்கிய கவிதையினைக் கொடுத்து மனதை புல்லரிக்க வைத்திருக்கிறீங்க.
வசனக் கோர்ப்பு விதம் சூப்பர்.
வசித்து
ReplyDeleteவரப்போகிறேன்
இத்தனைக்குள்ளும்
இன்னுமொருமுறை\\\\\\\\
ம்ம்ம்ம்...... முடியவே முடியாது கண்ணே!
என் பெண்ணே!
உசிரேபோகுது..உசிரேபோகுது{ஐஸ்வரியா}
கவிதையின்படமே சொல்கிறது”அவனை”
அவளின் வேதனையை.....
ஹேமா,இக்கவிதையை கீழிருந்து...மேலே படித்துப் {போ} போய்ப்பார்
ReplyDeleteமிகவும் அருமையாக ..இன்னும் நெருக்கமாக இருக்கிறது
நானும் கீழிருந்து மேலே ஒரு முறைப் படித்து விட்டேன்... முத்தாய்ப்பாய்த் தலைப்பு!
ReplyDeleteஹேமாவின் கை பதித்த இக்கவியும் அழகு
ReplyDeleteஅதிராமல் தூறும் மழைத்தூரல் போன்று இனிய உணர்வுகளை மெல்லத்தூவும் கவி வரிகள்.
ReplyDeleteநல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteமிக மிக அருமை
ReplyDeleteபகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஸ்ரீராம்! என் கண்டுபிடிப்புக்கு ...ஒரு பரிசாக சாக்லட் கூடக் கிடையாதா?
ReplyDeleteமிக்க நன்றி படித்துப் பார்ததற்கு.
வெறும் சாக்லேட் மட்டுமா....எவ்வளவு ஸ்வீட் வேணுமோ அவ்வளவு ஸ்வீட் வாங்கிச் சாப்பிடுங்க....ஹி...ஹி...உங்க காசுதானே!
ReplyDeleteவாவ்.... கவிதையுடன் வாழ்ந்திருக்கிறீகள்... தேனின் சுவை. வாழ்த்துகள் தோழி.
ReplyDeleteஅன்புடன்
பவள சங்கரி.
அடசாமி,,,,
ReplyDeleteஇவ்வளவு கச்சத்தனமா?
மாகாஐனங்களே!நான் ஒருபரிசுஒருசாக்லட்தானே கேட்டேன்
இவர் எவ்வளவு இனிப்புத்தேவையோ
அவ்வளவும் சாப்பிடுங்கள என்று இந்தக் குழந்தையிடம் {அதுவும் என்பணத்தில்}
ஆசை காட்டிய குற்றத்துகாகவும்..,இனிப்புநீர் நோயை
என்னுடன் சேர்த்து வைக்க முற்பட்டதற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம்?
தண்டனை தாயார்.. மன்னிக்கவும், தயார்.. எவ்வளவு மதிப்புக்கு ஸ்வீட் வாங்கினீர்களோ அவ்வளவு பணத்தை அவருக்கு அனுப்பி ஸ்வீட் வாங்கிச் சாப்பிடச் சொல்லி அவருக்கும் அந்த நோயை வர வைக்கவும்...! :))))..
ReplyDeleteஉவமையெனும் ஊர் சுற்றும்
ReplyDeleteகற்பனை அருமை!
சா இராமாநுசம்
எனக்கும் எட்டியது கிட்டியது நன்றி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாலை வணக்கம் ஹேமா!கவி வரிகள் அழகு!///மரவட்டை வரையும் தெரு.///மர----அட்டை?
ReplyDeleteகலா said...
ReplyDelete"இனிப்புநீர் நோய்"///ஆஹா,இது நல்ல தமிழாக இருக்கிறதே?கலா(எங்கிருந்தாலும்)வாழ்க!!!
கணேஷ் said...
ReplyDeleteபிரமிக்க வைத்தது கவிதையும் உவமைகளும். ‘குச்சொழுங்கை’ என்றால் என்ன ஹேமா? அது மட்டும் எனக்குப் புரியவில்லை.////அது யாழ்ப்பாணத்து பேச்சு மொழி,கணேஷ் சார்!மிகவும் குறுகிய வீதி என்று பொருள்படும்."சந்து" என்று தமிழ்நாட்டில் சொல்வார்களே?அதுபோன்றது,அம்புட்டுத்தேன்!
அந்தக் குறியீடு கீழிருந்து மேலே தானே சுட்டுகிறது?ஹ!ஹ!ஹா!!!!!!
ReplyDeleteஎத்தனை யதார்த்தம்?
ReplyDeleteஅத்தனையும் சிரார்த்தம்!
விசும்பல்கள் இவ்விடம்.
பாடத்தான் தெரியாதே தவிர பாடலில் குற்றம் கண்டுபிடிப்பதில் நக்கீரன் பரம்பரையாக்கும்!
ReplyDeleteஎல்லாம் சரி!ஆனால் அதிராத மழைத்தூறலில் பொருட்குற்றம் இருக்கிறது புலவரே!
நந்தியாவட்டை, மரவட்டை. கொலுசு மணல்குவியல் !!ம்ம்ம்ம் கவிதை மனசை அந்த ஒருவன் யார் என்று குறீயீடு தேட்லில் காற்று! ம்ம்ம்
ReplyDeleteஅழகான காட்சிப்படம் ரசித்தேன்!
தீபிகா...வாங்கோ.முதல் வருகைக்கும் சந்தோஷமான கருத்துக்கும் நன்றி தோழி !
ReplyDeleteமகி...உங்கள் உற்சாகமான பின்னூட்டம் மிகவும் சந்தோஷம் !
இராஜராஜேஸ்வரி...நன்றி ஆன்மீகத்தோழி !
விஜய்...சுகம்தானே.எவ்வளவு நாளாச்சு.வேலைப்பளுவோ.எங்குமே உங்களைக் காணமுடிவதில்லையே !
சுந்தர்ஜி...உங்களைப்போல எழுத வரமாட்டுதாம் என்று எனக்குப் பெரிய கவலை ஆசானே !
யாதவன்...இந்தக் கவிதை அதுவும் காதல் கவிதை நல்லா விளங்கிட்டுதாக்கும்.எப்பவும் காதல் கவிதையே எழுதினா சலிச்செல்லோ போகும் !
விச்சு...வாழ்வே கற்பனையில் மட்டும்தான் இனிக்கிறது.காதலும் அப்பிடித்தான்போல !
கணேஸ்...ஃப்ரெண்ட் நான் எழுதிவிட்டு சில கவிதைகளை நானே ரசிப்பேன்.தமிழின் அழகுக்காய் சில கவிதைகளுக்கு மனதுக்குள் தட்டிக்கொடுப்பேன்.அதுபோல அழகான காதல் கவிதை இது. "குச்சொழுங்கை" யோகா அப்பா சொல்லியிருக்கிறார்.அடர்ந்த வேலிகள் இருகரையும் போடப்பட்டிருக்கும் நடைபாதையில் இருவர் மட்டும் உந்துருளியோடு யாருக்கும் தெரியாமல் கதை பேசிக்கொண்டு நடக்கலாம்.
சுகமான அனுபவம் !
மணி...காதல் கவிதையெண்டா விடியக்காத்தால ஓடி வந்தாச்சாக்கும்.அவன் எவன் எண்டெல்லாம் கேக்கக்கூடாது.அதுவும் எல்லாருக்கும் முன்னால.வெக்கமாக் கிடக்கெல்லோ.எல்லாரும் இவ்வளவு நாளுக் கேட்டு அலுத்துப்போய் விட்டாச்சு.இப்ப நீங்களோ.அவன் அவன்தான் !
செய்தாலி...உங்களின் வருகை மூன்றாவது கவிதையில் கண்டு மிகவும் சந்தோஷம் தோழரே.இன்னும் தொடர்வோம் !
காஞ்சனா ராதா...அன்புக்கு நன்றி அன்ரி !
சீனி...எல்லோருக்குள்ளும் இந்தக் காதல் இருக்கத்தான் செய்கிறது.
வெளிக்காட்டமுடிவதில்லை!
ஆஹா...என்ன தவம் செய்தது இந்தக் கவிதை?
ReplyDeleteவிஐய்ஐயா வந்திரிகிறாக.....
அடடா..நம்ம ஜெகன்ஐயா வந்திரிக்கிறாக...
நலமா ஜெகன்?
வாம்மா ஹேமா! வா! வெடிசுடு..வெடிசுடு வரவேற்க.
இனிப்புநீர் நோய்"///ஆஹா,இது நல்ல தமிழாக இருக்கிறதே?கலா(எங்கிருந்தாலும்)வாழ்க!!!\\\\\\\\\
சுவாமி..அதாகப்பட்டது..வந்து,என்
எண்ணத்தில்விழுந்து,எழுந்து பின் ..சென்றது
வலைத்தளத்துக்கு.
===================
தமிழை நேசிப்போம்
தமிழில் பேசுவோம்
தமிழோடு இணைவோம்... தமிழா!
யோகாஐய்யா,இரசனைக்கு நன்றி
உங்கள் வாழ்த்துக்கும் என் சிரம்தாழ்தல்
இதற்காக நான் பரிசெல்லாம் கேட்கமாட்டேன்
ஸ்ரீராம்போல நீங்களுமிருந்தால்...?..!மூஊஊச்சேவிடமாட்டேன்
ஸ்ரீராம் ஹேமா முறைக்கிறார் இதுக்குமேல வேண்டாம்
நான் அப்புறமா..அப்புறமா...ஒருகை பாத்துகிறன்
{ஹேமா நான் தற்காப்புக்கலையில்கறுப்புப்பட்டி
வாங்கிய விடயத்தைமட்டும் உஷ்ஷஷ்ஷஷ்ஷஷ்ஷ
சொல்லாதே ஸ்ரீராமிடம்}
நல்ல தொடக்கம் நல்ல முடிவு
ReplyDeleteமுதல் முறை வாசிதேன்...
ReplyDeleteபுரியவில்லை எனக்கு
மறுபடியும் வாசித்தேன்
மீண்டும் வாசிக்கச் சொன்னது
என் மனது... வாசித்தேன்
புரிந்து கொண்டேன்...
இது கவிதை இல்லை...
காவியம் என்பதனை...
அருமையான கவிதை அக்கா...
// வசித்து
ReplyDeleteவரப்போகிறேன்
இத்தனைக்குள்ளும்
இன்னுமொருமுறை// அத்தனைக்கு இன்னும் ஒரு முறை போதுமா?
ராட்சசின்னு சொல்லிக்கிட்டேன் மனசுகுள்ள..
Yoga.S.FR said...
ReplyDeleteஅது யாழ்ப்பாணத்து பேச்சு மொழி,கணேஷ் சார்!மிகவும் குறுகிய வீதி என்று பொருள்படும்."சந்து" என்று தமிழ்நாட்டில் சொல்வார்களே?அதுபோன்றது,அம்புட்டுத்தே.
-புதிய விஷயம் ஒன்றைத் தெரிந்து கொண்டேன் யோகா ஸார். தங்களுக்கு என் இதய நன்றி நண்பரே...
//இருபது விரல் பதித்த
ReplyDeleteமணல் குவியல்//
ஹேமா,
இருவர் கூடியெழுப்பும் மணல் வீடு மனதில் உயருகிறது.
ததும்பும் உவமைகளில் வாசகர்களுக்குள்ளும் கிளர்ந்து தளிர்கிறது, தத்தமது காதல் கணங்கள்.
இனி வாரம் ஒருமுறை கிட்டும் மயக்கம் தரும் காதல் கவிதைகள்.
எல்லோருக்கும் காலை வணக்கம்!என்னைப் பெரிய மனிதன் ஆக்கிய "கலா"வுக்கு நன்றிகள்!என் வாழ்வில் பல கலாக்கள்!முதற்கண் எனக்கு முன் பிறந்த கலா!(கலாநிதி)அப்புறம் என் ஒன்றுவிட்ட சகோதரி மகள் கலா!இப்படிப் பல!இப்போது இன்னுமொன்று!!!!!!!
ReplyDeleteகலா said...ஹேமா நான் தற்காப்புக்கலையில் கறுப்புப்பட்டி
ReplyDeleteவாங்கிய விடயத்தைமட்டும் உஷ்ஷஷ்ஷஷ்ஷஷ்...////நானும் (கறுப்புப்பட்டி)"கருப்பு பெல்ட்"தான் கட்டுவேன்,காற்சட்டைக்கு!Ha!Ha!Haa!!!
ஹேமா
ReplyDeleteஈழத்து தமிழச்சிகள் வீரத்தில் மட்டுமல்ல காதலிலும் சிறப்பானவர்கள் என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள்
நான் கவிதையில் ரசித்தது
//தனித்த வேம்பின் நிழல்
ஈரிதழ் நந்தியாவட்டை
இருபது விரல் பதித்த
மணல் குவியல்
மரவட்டை வரையும் தெரு
தோய்த்துலர்ந்த
ஆடையின் வாசனை//
எங்களுக்கெல்லாம் போகிறபோக்கில் கடந்து போகும், இந்த நிகழ்வுகளை உங்கள் கவிதையில் பார்க்கும் போது, அதனுள் இருக்கும் அழகியல் தெரிகிறது...
வாழ்த்துகள்,
நன்றி
உங்கள் கவிதையில் நானும் வாழ்ந்தேன். :)
ReplyDeleteதீண்டும் இதம் வரிகளில்.
ReplyDeleteஎல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!
ReplyDeleteநானும் (கருப்புப்பட்டி)"கருப்பு பெல்ட்"தான்
ReplyDeleteகட்டுவேன்,காற்சட்டைக்கு!Ha!Ha!Haa!!!\\\\\\\\
“காற்சட்டைக்கு” பெல்ட் கட்டிப் பார்த்த முதல்ஆள்
நீங்களாத்தான் இருப்பீர்கள் போலும்....
மற்றவர்களெல்லாம்..காற்சட்டையில் போட்டு
இடுப்பில்தான்{இறுக்கத்துக்காக..,அழகுக்காக}
கட்டுவார்கள்.
ஏங்க....அவ்வளவு “லூஸா”அதுதாங்க....உங்க இடை?
=================
{ஈழத்து தமிழச்சிகள்} வீரத்தில்
மட்டுமல்ல காதலிலும் சிறப்பானவர்கள்\\\\\
மிக்க நன்றி நண்பரே!ஹேமாவுக்குக் கிடைத்த பாராட்டில்
நானும் பெருமிதம் அடைகிறேன்
ஏனென்றால்..! அடைப்புக் குறிக்குள் நானும் அடக்கம்
காதலின் ஒவ்வொரு நிமிடமுமே சூடானதும் சுவையானதுமாகவுமாகவே இருக்கிறது என்பதற்கு இக்கவிதையும் ஓர் சாட்சி.
ReplyDeleteபிரமிக்க வைத்த வரிகள்.. அசத்துறீங்க ஹேமா.
ReplyDeleteகாதல் மனத்துக்குள் வந்துவிட்டால் காண்பதெல்லாம் காவியம்தானே... அழகான வசீகரிக்கும் அம்சங்களில் அடங்கியும் ஆர்ப்பரித்தும் அலையும் காற்றும் காதலும் ஒன்றுதானோ? அழகுக் கவிதை ஹேமா.
ReplyDelete//மிக்க நன்றி நண்பரே!ஹேமாவுக்குக் கிடைத்த பாராட்டில்
ReplyDeleteநானும் பெருமிதம் அடைகிறேன்
ஏனென்றால்..! அடைப்புக் குறிக்குள் நானும் அடக்கம்//
அப்படியா ...!!
மிக்க மகிழ்ச்சி :)
நன்றி
யாரந்த இனியவனோ...கொடுத்து வைத்தவன் தான் ஹேமா...ம் ம் ம்...
ReplyDelete^ க்கு அர்த்தம் தேடி ஓய்ந்து போனேன்...
ஆனால் ஒரு எழுத்து விடாமல் ரசித்தேன்...ரசித்து எழுதியதற்கு நன்றி சகோதரி...
நீங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் எங்களையும் அழைத்துச் சென்று விட்டீர்கள்.
ReplyDeleteஇன்னுமொருமுறை என்னவளோடு செல்ல வேண்டும்
அபாரம் ஹேமா .
கற்பனை என்னை கைப் பிடித்து அழைத்து சென்றது
ReplyDeleteஉண்மை .வரிகள் அருமை
நினைவுகளைத் திருப்பதிந்தந்த வரிகள் அருமை அக்கா வாழ்த்துகள்
ReplyDeleteஒவ்வொரு வரியும் ஓராயிரம் கற்பனைகளுக்குள் இழுத்துச் செல்கிறது .
ReplyDeleteஸ்ரீராம்...அடுத்த காதல் கவிதைக்கு இப்பிடிச் சூசகமா சொல்லியிருக்கீங்கபோல.அடுத்ததா இல்லனாலும் வரும் விரைவில்.படம் இந்தக் கவிதைக்கு மிக மிகப் பொருந்தம்.இதுவே ஒரு நடிகையின் படத்தை இணைத்த கவிதை.எனக்குப் பிடிப்பதில்லை ஒருவரின் தனிப்பட்ட நிழற்படங்கள் !
ReplyDeleteநிரூ...கனகாலமாச்சு.முந்திப்போல கருத்துச் சொல்றதில்லை இப்பல்லாம்.பிஸியோ !
கலா...என் சிங்கத் தோழியே வருக வருக.வந்து கிண்டிக் கிளறி இல்லாத கற்பனைகளையெல்லாம் எடுத்து....விட்டு....உண்மைதான் கலா என்னிடம் கீழிருந்து வாசிக்கும் சிந்தனை இருந்து.அதை வெளிப்படுத்தியதற்கு நன்றி.கலா கவனிச்சீங்களே ஸ்ரீராம் காதல் கவிதைகள்ன்னா கொஞ்சம் கூடுதலா அக்கறை எடுத்துக்கிறார்.சொக்லேட் வாங்கினீங்களா குடுத்தீங்களா.இனிப்புநீர் நோய்..ஆகா என்ன ஒரு தமிழ்ப்பற்று.வார்த்தையே இனிக்கிறது கலா.ஆனால் எனக்குப் பெரிய சிரிப்பு யோகா அப்பா பட்டபாடுதான்.பாவம் அப்பா அப்பாவி.உங்களிட்ட ஆப்பிட்ட ஆக்கள் அவ்வளவும்தான்.ஏனெண்டா கருப்பு பெல்ட் எடுத்த (றோட்டில கிடந்ததோ)வீரத் தமிழச்சியெல்லோ !
அம்பலம் ஐயா...உங்கள் பின்னூட்டமும் மென்மையாய் மழைத்தூறல்போல மனதிற்கு இதம்.யோகா அப்பா கலாட்ட படுற பாட்டைக் கவனிச்சீங்களோ !
விமலன்...மிக்க நன்றி வரவுக்கு !
சே.குமார்...வாங்கோ அவன் வரவழைத்துவிட்டான் உங்களை.சந்தோஷம் !
ரமணி...ஐயா வாங்கோ.அன்புக்கு நன்றி !
நித்திலம் சிப்பி...பவள சங்கரி.எத்தனை அழகான தமிழ்ச்சுவைகொண்ட பெயர்.காதல் என்றாலே இனிக்கும் உணர்வுதானே.நன்றி !
புலவர் சா இராமாநுசம்...வாங்கோ ஐயா.காதல் கவிதைக்குள்ளும் உங்கள் வரவு சந்தோஷம் !
மணிச்சுடர்...வாங்கோ.மகிழச்சி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் !
யோகா அப்பா...மர அட்டை சரிதான்.ஆனால் அந்த வரிக்கு மரவட்டை சொல்லும்போது அழகு.நீங்கள் சொன்னபிறகும் பிரிக்கவில்லை.ம்ம்...அம்புக்குறியை நீங்கள் கவனத்தில் எடுத்திருக்கிறீர்கள்.கணேஸ் மகிழ்ந்திருப்பார் உங்கள் குச்சொழுங்கைக்குக் கருத்துச் சொன்னதிற்கு.கலாவுக்குத்தான் அதைவிட சந்தோஷம்.கலாகிட்ட வாய் குடுத்து மாட்டினதுதான் சிரிப்போ சிரிப்பு.அவள் எங்கள் மட்டுநகர் சிங்கத் தமிழிச்சி !
ஹாய் ஜேஜே...ஜெகா எப்பிடி இருக்கீங்க.சந்தோஷமா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.உண்மையின் கன காலத்திற்குப்பிறகு உங்களைக் கண்டு மனம் நெகிழ்ந்தது.அன்புக்கு நன்றி ஜெகா.விசும்பல்கள்
இவ்விடமும்தான் !
நடா...வாங்கோ நக்கீரரே.நீங்க எவ்விடத்து நக்கீரர்.தற்சமயம் அரபு நாட்டு நக்கீரர்தானே.எழுத்துப்பிழை உடனேயே திருத்திட்டன்.இல்லாட்டி துறலுக்கு அதிர்வு இல்லை என்பதையா சொன்னீங்க.கவிதைக்குப் பொய்யழகு நக்கீரரே.பொருத்தளுள்க !(கலா கவனிக்கேல்லப்போல)
தனிமரம்...நேசன் உள்ளதை மனதில் இருக்கிறதைச் சொல்லும்போது ஒவ்வொரு சொல்லுமே அழகாக்கிறது.நான் உணர்ந்த உண்மையது !
T.N.முரளிதரன்...நன்றி உங்கள் ரசிப்புக்கு.காதலின் சக்தி இதுதான் !
ReplyDeleteதமிழரசி...ஒரு ராட்சசி இன்னொரு ராட்சசியை ரசிக்கிறதோ....கலா பாருங்கோ தமிழ் என்னை ராட்சசியாம் !
சத்ரியன்...வாங்கோ காதல் ராட்சசரே.கிழமைக்கொரு காதல் கவிதையோ...பிறகு என்னை காதல் பிசாசு.உதுக்கு வேற ஏதும் உணர்வில்லையெண்டு சொல்றது விருப்பமோ உங்களுக்கு....கலா கவனிக்க இந்த இரண்டு காதல் கவிகளை !
வேர்கள்...வாங்கோ உங்களை என் பக்கங்களில் காண்பது சந்தோஷம்.ரதிதான் பிஸி.வரமாட்டா.நீங்கள் ரசித்த வரிகள் எம்மைச்சுற்றி எப்போதும் மறக்கமுடியாதவைகள்.மர அட்டையைக் கண்டே கனகாலம்.வீரம் இருக்கும் இடத்தில் அதேயளவு காதலும் குறையாமல் இருக்குமாமே.கலாவுக்கும் மிகுந்த சந்தோஷம்.அவள் என் சிநேகிதி.சிங்கையில் அகதியாய் வாழும் மட்டுநகர் ஈழத் தமிழச்சி !
மீனும்மா...நான் வாழ்ந்த இடத்தை உங்கள் எல்லோருக்கும் சுற்றிக்காட்டிய சந்தோஷம் எனக்கு !
அப்பாஜி...காதல் கிட்டப்போனாலும் சரி தள்ளி நின்றாலும் சரி இதமாகச் சுடுகிறதே.”தீண்டலின் சுகம்” எப்போதாவது ஒரு கவிதைக்குத் தலைப்பாக்குகிறேன் !
யோகா அப்பா...நான் சொல்லாவிட்டாலும் என் சார்பில் ஈஸ்டர் வாழ்த்துச் சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி அப்பா !
துரைடேனியல்...காதலின் நிமிடங்கள் அல்ல ஒவ்வொரு கணமுமே அதைவிடக் குறைந்த சணமுமே அற்புதம்தான்.நிச்சயம் அனுபவித்திருப்பீர்கள் !
அமைதிச்சாரல்...காதல்ன்னா அசத்துவோம்ல...கில்லாடியாக்கும் !
கீதமஞ்சரி...காதல் மனத்துக்குள் வந்துவிட்டால் காண்பதெல்லாம் காவியம்தானே... ம்க்கும் தெரியாதாக்கும்.ஆளைப்பாருங்கோ !
ரெவரி...கொடுத்துவைத்தவள் நான்தான் ரெவரி.நிதானமாய் வந்து அவனை ரசித்தீர்களே !
சிவகுமாரன்...உங்கள் நினைவுகளைக் கொண்டு வந்தானா அவன்.நல்லதுதானே.ஒரு வாரம் விடுமுறை எடுங்கள் உங்களவளோடு ஊர்சுற்ற !
வஜீர் அலி...அவன் கூட்டி வந்துவிட்டான்.இனி அடிக்கடி சந்திக்கலாம் கவிஞரே !
ஹசீம்...வாங்கோ தம்பி.நினைவுகளை அடிக்கடி தூசு தட்டுவோம்.சந்தோஷமாக இருக்கலாம் !
சசி...சமூகச் சிந்தனைக்குள் வாழும் உங்களை ஒரு கணம் இழுத்து வந்தானோ அவன்.வாழ்க காதல் !
ஸ்ரீராமுக்கு...மீண்டும் ஒரு நன்றி.படம் வரிகளோடு “அவன்”என்கிற தலைப்பையும் ரசித்துச் சொன்னதுக்கு !
ReplyDeleteகலா கவனிச்சீங்களே ஸ்ரீராம் காதல் கவிதைகள்ன்னா
ReplyDeleteகொஞ்சம் கூடுதலா அக்கறை எடுத்துக்கிறார்.
சொக்லேட் வாங்கினீங்களா குடுத்தீங்களா\\\\\\\\
{ம்க்கும்....சொக்லேட்டாவது வாங்கிக்கொடுப்பதாவது
உங்க சிநேகிதர் கஞ்சருக்குமேல்லல்லல்லல்லல்லல்லல்லல்லல்ல...
கஞ்சர்போலும்....
கவிதைமேல காதலா?இல்லை கவிதை எழுதியவர்மேல் காதலா?
இல்லை என்மேலா..? ஐய்யய்யோ...எனக்கு வேண்டாமப்பா
ஒரு சொக்லேட்டே வாங்கிக்கொடுக்க முடியல்ல???????
பாவம்!மாட்டினவங்களோ!மாட்டிக்கப்போறவங்களோ கதி....???}
யோகா அப்பா கலாட்ட படுற பாட்டைக்
கவனிச்சீங்களோ !\\\\\\\
{விளையாட்டென்றால் வெற்றியும்,தோல்வியும் வீரனுக்கழகப்பா...
இதெல்லாம் கண்டுகொள்ளக்கூடாதப்பா...
.ஹேமா அப்பா{யோகன்ஜயா} கோபமா?
அடுத்த மோதலுக்கு ரெடியா? அதோ..அதோ..சிரிக்கிறாங்க..
ரெடியாம்!!}
கவிதைக்குப் பொய்யழகு நக்கீரரே.
பொருத்தளுள்க !(கலா கவனிக்கேல்லப்போல)\\\\\\
{அப்பவே கவனித்தேன் எழுதத் தோன்றியது
அப்புறம் கொஞ்சம் வேலையால்....கவனிக்க மறந்துவிட்டேன்
அதுதான் அவர் அதிஷ்ரம்!தப்பித்தார் இன்னொன்று வராமலா போகும்?}
கலா பாருங்கோ தமிழ் என்னை ராட்சசியாம் !\\\\\\
{ஜய்யோ ஹேமா, தமிழ் அப்படிச் செல்லமாய்,அன்பாய்
குழந்தை கடிப்பதுபோல் ஒரு “கடி”தான் மற்றப்படி அதில்
வலியில்லை.என்ன தமிழ்..?}
ஹேமா ரொம்பப் புகழ்மாலை எனக்கு உன்னிடமிருந்து
மிக்க,மிக்க நன்றிடா.......
அழகான,அமுதான,தேனான,சுவையான,கண்ணான நம் “தாய்”{யுடன்}
மொழியுடன் விளையாடல்தான்! அதில் அனைவரும் துன்பங்கள்,சோகங்கள்
தனிமைகள்,கவலைகள் மறந்து ஒருநிமிடம் சிரித்தாலும் அதில் மகிழ்பவள் நான்.
ஏன்!நீகூட..அதில் அடக்கம்தான்.மீண்டும் நன்றிஹேமா.
அதென்ன விஷேசநன்றி? ஸ்ரீராமுக்கு?
அப்புறம் நாங்க வெளிநடப்பு செய்துவிடுவோம் கவனம்!
வார்த்தைகளின் கோர்வை மிக அழகு. ஒரு இழந்துவிட்ட சொர்க்கம் அதனை நினைத்து கொள்ளும் பெண்ணின் மனநிலையை படம் பிடித்து காட்டுகிறது. பாராட்டுகள்..
ReplyDeleteஇந்த கவிதையாக்கத்திற்கு பரிசாய் வாழ்த்துகளும், வாக்குகளும்..
ReplyDeleteவாசிக்கும் போதே தென்றல் ஒன்று வருடுவது போல உள்ளது..
ReplyDeleteவரிகள் அருமைமிகசிறந்த கவியாக்கம் பாராட்டுகள்
ReplyDeleteகாலை வணக்கம்,ஹேமா!புது வருடத்துக்கு முந்தைய நாள் வாழ்த்துக்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!(ஒருத்தரும் இப்பிடி இதுவரைக்கும் சொன்னதில்ல)
ReplyDeleteநீங்க மேல சொன்னதுல்லாம், நான் இன்னும் ரசிக்கல, சீக்கிரமே வசிக்கணும்....
ReplyDeleteசீக்கரம் அதுக்கு வேண்டிய வேலையைப் பார்க்கணும்...