Monday, November 14, 2011

தப்பாகும் தப்புக்கள்...

முறைத்து...முழித்து
செல்லமாய் அடிக்கும்
குழந்தைக்கு திருப்பியடித்து
முரடனாக்கும் அம்மா.

மழலை மொழியில்
சொல்வதெல்லாம் இனிக்குமென்று
தப்பான சொற்களையும்
மழலையாக்கும் அப்பா.

செல்லமாய் தொடங்கி
மெல்லமாய் மெல்லமாய்
முரட்டு குணமும்
எதிர்க்கும் சக்தியும்
கொடுக்கும் உங்களையே
ஒரு நாள் வீழ்த்தும்
மழலை தாண்டிய
அதே குழந்தை!!!

ஹேமா(சுவிஸ்)

48 comments:

  1. இந்தக் குழந்தைக்கும் ஒரு பால் கோப்பி கிடைக்குமா தோழி?

    ReplyDelete
  2. சிறு குழந்தைக்கு செய்யும் நாடகப்பாணி செயலைக்கூட இன்னொரு கருத்தோடு வளர்ந்த பின் அவர்கள் விடும் செயலில் தந்தையின் உணர்வைச்  சிறப்பாக சொல்லியிருக்கும் கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //மழலை மொழியில்
    சொல்வதெல்லாம் இனிக்குமென்று
    தப்பான சொற்களையும்
    மழலையாக்கும் அப்பா.//

    அழகிய வரிகள்....

    ReplyDelete
  4. தப்பாகும் தப்புகளை சரியாக சொல்லி இருக்கிறிர்கள் ஹேமா.

    ReplyDelete
  5. yes well said hema...

    ReplyDelete
  6. எனக்கு தெரிந்த சிலர் தங்களுடைய குழந்தைகளை ஒரு வயதிற்க்கு முன்னதாகவே அவன் கோவக்காரன் என்று சொல்லி வளக்கிறார்கள்...

    அந்தக்குழந்தை பின்னாளில் எப்படி வளரும்..

    தன்னம்பிக்கை சொல்லி குழந்தை வளருங்கள் அதுதான் உண்மையான வளர்ச்சி...

    ReplyDelete
  7. நிதர்சனம் கூறும் வரிகள் ..
    அதே நேரத்தில் அனைவரும் தங்களின் பிள்ளைகளை வளர்ப்பதில் கொஞ்சம் அதிக சிரத்தை எடுதுக்கொள்வதின் அவசியம் புரிகிறது ,,, வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  8. செல்லமாய் தொடங்கி
    மெல்லமாய் மெல்லமாய்
    முரட்டு குணமும்
    எதிர்க்கும் சக்தியும்
    கொடுக்கும் உங்களையே
    ஒரு நாள் வீழ்த்தும்
    மழலை தாண்டிய
    அதே குழந்தை!!!

    விதைத்தது அறுவடையாகியது..

    ReplyDelete
  9. இனிய மழலையர் தின வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. ஹேமா...!!!!

    எப்படி இருக்கீங்க....

    குழந்தைய எப்படிவளர்க்க கூடாதுன்னு சரியாதான் சொல்லிறீங்க..

    ReplyDelete
  11. ரொம்ப நல்லாருக்கு ஹேமா..

    ReplyDelete
  12. உண்மையா சொல்லும் சொல்லும் கவிதை, ஆம் குழந்தைகள் நம்மிடமிருந்தே எல்லாவற்றையும் கற்றுகொள்கிறது...!!!

    ReplyDelete
  13. // உங்களையே
    ஒரு நாள் வீழ்த்தும்
    மழலை தாண்டிய
    அதே குழந்தை!!! //

    மெய்தான் தோழி .குழந்தை வளர்ப்பில் அதீத கவனம் வேண்டும் .
    அருமையான கருத்துள்ள கவிதை

    ReplyDelete
  14. சுருக்கமாக, ஆனால் நறுக்கென்று இருக்கிறது. நிச்சயமாக இப்போதைய காலகட்டத்தில் தவிர்க்க வேண்டிய வழிமுறைகளில் சில. முன்னொரு காலத்தில் பெரிய தவறாக ஆகாத இதே வளர்ப்பு முறைகள் இப்போது மட்டும் தவறாவதற்கு வளர்ப்பு மட்டும்தான் காரணமாக முடியுமா?

    ReplyDelete
  15. // முரட்டு குணமும்
    எதிர்க்கும் சக்தியும்
    கொடுக்கும் உங்களையே
    ஒரு நாள் வீழ்த்தும்
    மழலை தாண்டிய
    அதே குழந்தை!!!//


    தங்கள் கூற்று நூறு சதவிகிதம்
    உண்மை
    குழந்தை வளர்வது பெற்றோரே
    காட்டும் பாதையே ஆகும்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. நிதர்சன உண்மைகளை தோலுரித்து காட்டியிருக்கீங்க.

    ReplyDelete
  17. //ஒருநாள் உங்களை வீழ்த்தும்//

    பெரிய விஷயத்தை மிக அருமையாக கவி வடிவில் சொல்லிடீங்க ஹேமா...

    ReplyDelete
  18. யதார்த்தம்...பிடித்தது...

    என்ன... அந்த குஞ்சுகள் மிதித்து இந்த கோழிக்கு வலிக்கவா போகிறது...

    குழந்தைகள் தின வாழ்த்துகள் ஹேமா...

    ReplyDelete
  19. உண்மை வலிக்கத்தான் செய்யும் ஹேமா

    நன்று

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  20. ஆமாம் சிறு வயது பழக்கம் தான் இறுதியிலும் ,
    விளையாட்டு வினை ஆகக்கூடாது என்பதை அழகாகக் சொல்லி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  21. மிக நல்ல கருத்தை கவிதையாக்கி இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  22. ரொம்ப நாள் கழிச்சு வரேன்.... என்னை மாதிரியான குழந்தபுள்ளகளுக்கு கவித போட்டிருக்கீங்க. பேஷ் செமைய தானிருக்கு ஹேமா. பிறவு சாட்ல வாங்கோ. பேசணும்

    ReplyDelete
  23. சுலபமாகச் சொல்லிவிட்டுப் போனாலும் செய்தி வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  24. //முரட்டு குணமும்
    எதிர்க்கும் சக்தியும்
    கொடுக்கும் உங்களையே
    ஒரு நாள் வீழ்த்தும்//

    ஹேமா,

    கவிஞர் வைரமுத்து அவர்களின் தலைமையில் நிகழ்ந்த ஒரு கவியரங்கத்தில், அவரது மகன் கபிலன் அவர்களைக் கவி பாட அழைக்கையில்,

    “ உன்னிடம் மட்டுமே தோற்க நினைக்கிறேன்” - எனச் சொல்லி மேடைக்கு அழைப்பார்.

    மழலை தாண்டிய ”தன் குழந்தை”களிடம் தோற்பது பெற்றோருக்கு ஆனந்தம் தான்.

    உங்கள் வரிகள் அதை நினைவூட்டியது.

    ***

    நடைமுறை கசப்பை தேன் தடவி சொல்லியிருக்கும் விதம் அருமை.

    வேற எப்படி தான் வளர்க்கிறது குழந்தைகளை!

    ReplyDelete
  25. சபாஷ் அருமை

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  26. ஹேமா, அருமை உன் கவிதை

    ReplyDelete
  27. என்ன ஒரு சிந்தனை..
    விதைக்கையில் எப்படி விதைக்கிறோமோ அதுதான்
    விருட்சமாகும் என்பதை
    எவ்வளவு அழகாக
    சொல்லிவிட்டீர்கள்.
    நன்று சகோதரி...

    ReplyDelete
  28. வணக்கம் அக்கா, நலமாக இருக்கிறீங்களா?

    ReplyDelete
  29. தப்பாகும் தப்புக்கள்...:

    மழலையின் உணர்வுகள் வலுப் பெறும் காலத்தில் நிகழும் மாற்றங்களை அழகுறச் சொல்லி நிற்கிறது இக் கவிதை!

    ReplyDelete
  30. நிதர்சனமிக்க வரிகள். அத்தனையும் அருமை ஹேமா.

    ReplyDelete
  31. எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவானதும் அன்னை வளர்ப்பினிலே என்பதுபோல குழந்தையின் வளர்ப்பு தொடக்கம் எப்படி ஒரு குழந்தையை எதிர்காலத்தில் வளர்க்கப் படுகிறான் என்பதை சிறப்பாக பதிவு செய்துள்ளீர் உளபூர்வ பாராட்டுகளும் நன்ற்களும்

    ReplyDelete
  32. வணக்கம் சகோதரி!
    திண்னையில் வைத்து தன் தாய்க்கு சாப்பாடு போட்ட தந்தையை பார்த்து மகன் கூறினானாம் அப்பா அந்த சட்டியை பத்திரமா வைச்சிருங்கோ அது எனக்கு உதவும் என்றான்... அப்படித்தான் நமது பிள்ளைகள் எங்களிடம் இருந்துதான் எல்லாவற்றையும் எடுக்கிறார்கள்.. அருமையா சொல்லி இருக்கீங்க..

    வாழ்த்துக்கள் சகோதரி..

    ReplyDelete
  33. உண்மையான, யதார்த்தமான வரிகள் சகோ..

    ReplyDelete
  34. அருமையான வரிகள்.. யோசிக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. அதீத பாசத்தினால் தப்பாகும் தப்புக்கள்.
    யதார்த்தத்தை அழகாக சொல்லும் கவிதை.....

    ReplyDelete
  36. // முரட்டு குணமும்
    எதிர்க்கும் சக்தியும்
    கொடுக்கும் உங்களையே
    ஒரு நாள் வீழ்த்தும்
    மழலை தாண்டிய
    அதே குழந்தை!!!//

    super..

    ReplyDelete
  37. /மழலை தாண்டிய
    அதே குழந்தை/

    அழகான கவிதை. யதார்த்தம் சொல்லி முடித்துள்ளீர்கள்!

    ReplyDelete
  38. பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம் நடத்தும் இலக்கிய போட்டிக்கும் உங்களது பதிவுகளை அனுப்பி வைக்கலாமே

    http://www.tamilthottam.in/t20084-2011

    ReplyDelete
  39. ஃஃஃதப்பான சொற்களையும்
    மழலையாக்கும் அப்பாஃஃஃஃஃ

    அடடா இது பெண்பிள்ளைக்கல்லவா ஆண்பிள்ளைக்கு அம்மா தானே...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    ReplyDelete
  40. குழந்தை வளர்ப்பில் அளவான கண்டிப்பு வசியம் என்பதை சுருக்கமான அழகிய வரிகளில் கவிதையாக சொல்லிவிட்டீர்கள்!

    ReplyDelete
  41. இதுதான் தப்புத் தாளங்களோ!

    ReplyDelete
  42. அருமையான வரிகள்...

    ReplyDelete