Tuesday, November 08, 2011

நான்...இங்கு...ஏன் ?

யார் நீ...
ஏன் இங்கு...
எங்கிருந்து...
என்று தொடங்கி
தொக்கி நிற்கும்
கேள்விகளோடுதான் இன்றும் !

வருடங்கள் கடந்து
நான்காவது தலைமுறை
நடக்கையிலும்
பார்வைகள் பிறத்தியாகவே !

இருப்பிடம் கேட்டால்
தெருப்பெயர் சொல்வேன்
இல்லை...இல்லை
உன் இருப்பிடம் என்பார்கள்
“இங்கு”தான் என்பேன் குனிந்தபடி !

நடுவில் ஒட்டிக்கொண்ட
நான்.....
நிலையானவர்களிடம்
சொல்லும் “இங்கு”
பிறழ்வாய் இருவருக்குமே !

அவர்களுக்கும் புரியவில்லை.
எனக்கும்...
தெரியவில்லை சொல்ல!!!

அடிக்கடி அடிபடுகிறேன்....ஹேமா(சுவிஸ்)

51 comments:

  1. தொக்கி நிற்கும்
    கேள்விகளோடுதான் இன்றும் ! !!

    நம்பிக்கை மீதான நம்பிக்கை வைப்போம்..

    ReplyDelete
  2. இதை ஆராய வேண்டுமெனில் ஞானி ஆகா வேண்டும்..

    இதைப் போலவே 'நான்' யார் என்று கேட்டால் பதில் தெரியாமல்தான் முழிப்போம்..

    ReplyDelete
  3. நடுவில் ஒட்டிக்கொண்ட
    நான்.....//

    சில கவிதைகளுக்கு அதே புரிதல் அவசியம் இல்லை தானே...

    பிடித்தது...

    ReplyDelete
  4. \\அவர்களுக்கும் புரியவில்லை.
    எனக்கும்...
    தெரியவில்லை சொல்ல!!! //

    புரிதலில்தான் எத்தனை விதம்?.

    ReplyDelete
  5. இதை சூழ்நிலை என்று சொல்வதா... இல்லை தலைவிதி என்பதா.. இல்லை மனிதர்களின் சதி என்பதா... உங்களுக்கு சொல்ல தெரியாதது உங்களது பிழையில்லையே...

    ReplyDelete
  6. Aha rom a Maliki appuram aupper kavithai onndu

    ReplyDelete
  7. வருடங்கள் கடந்து
    நான்காவது தலைமுறை
    நடக்கையிலும்
    பார்வைகள் பிறத்தியாகவே !//


    வரிகளும் ,வலிகளும் புரிகிறது தோழி

    ReplyDelete
  8. கேள்வி தேடலாகிறது.
    தேடல் வாழ்க்கையாகிறது.
    அனுபவம் சிறந்த கவிதையாகிறது.

    ReplyDelete
  9. இருப்பிடம் கேட்டால்
    தெருப்பெயர் சொல்வேன்
    இல்லை...இல்லை
    உன் இருப்பிடம் என்பார்கள்
    “இங்கு”தான் என்பேன் குனிந்தபடி !

    கவிதைக்கு அழகு சேர்க்கும் வரிகள்.

    ReplyDelete
  10. வழியில் கண்ட ஏதோ ஒரு முதியவள் அல்லது முதியவர் பற்றிய கவிதையாய் இருக்கலாம் என்ற புரிதலோடு இந்த கவிதையை கும்மியிலிருந்து விடுவிக்கிறேன்..!

    ரொம்ப நல்லா இருக்கு ஹேம்ஸ்

    நிறைய காதுகளில் கேட்டதுதான் பாட்டி பேரென்ன இங்க என்ன பண்ணிட்டு இருக்க எந்தூர் நீ இப்படி இந்த கவிதையின் ஆரம்ப பாராவில் பொருத்திப்பார்க்கிறேன் பொருந்துகிறது

    //பிறத்தியாகவே// பார்வை தெரியவில்லை அல்லது தெரிகிறது புரியல

    ReplyDelete
  11. புகைப்படம் இப்பொழுதுதான் பார்க்கிறேன் :(

    தன் நாட்டை விட்டு வேறு நாட்டில் அகதிகளாய் வாழும் ஈழத்தமிழர்கள் பற்றியதென்பது புரிகிறது

    :(

    ReplyDelete
  12. Intha Kelvi endru thonrukiratho anru Gnanam pirakka arambithu vidum. Thodarnthu thedungal vidai kidakkum. Nichayamaagave!

    ReplyDelete
  13. எனக்காகவே எழுதிய கவிதைபோன்றுள்ளது. எனக்கும் இதே அனுபவங்கள்.எனக்குள்ளும் இதே கேள்விகள் உங்கள் எண்ணஓட்டத்தை அருமையாக கவி வடித்துள்ளீர்கள்!

    ReplyDelete
  14. கேள்விகளோடு பயணிக்கிறது கவிதை... மிக நன்றாக இருக்கு அக்கா

    ReplyDelete
  15. வருடங்கள் கடந்து
    நான்காவது தலைமுறை
    நடக்கையிலும்
    பார்வைகள் பிறத்தியாகவே !///


    சிந்திக்க வைத்த இடம்...
    இக்கவிதை என்னோடு சேர்த்து பலருக்கும் பொருந்தி போகும் என்று நினைக்குறேன்.

    ReplyDelete
  16. பிரமாதம் ஹேமா

    ReplyDelete
  17. விடைதேடும் கேள்விகள் பலருக்குள் இருக்கும் கேள்வி இந்தக்கவிதை தோழி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. பார்வைகள் பிறத்தியாகவே ஆழ்மன உணர்வைத் தூண்டி நிற்கின்ற வரிகள் !

    ReplyDelete
  19. அகதிகள் படும் அவஸ்தை மிகக் கொடுமை.நான் யார் "நடுவில் ஒட்டிக்கொண்ட
    நான்.....
    நிலையானவர்களிடம்
    சொல்லும் “இங்கு”
    பிறழ்வாய் இருவருக்குமே" த.ம 11

    ReplyDelete
  20. அந்நிய இடத்தில் அந்நியமாவதை விட சில சமயம் சொந்த இடத்திலேயே அந்நியமாகிப் போவதும் உண்டு. இரண்டு வகையிலுமே யோசிக்க வைத்த கவிதை.

    உதயம் பின்னூட்டம் ரசிக்க வைக்கிறது. அதைத் தொடர்கையில்,

    பாடமாகும்/பாரமாகும் அனுபவங்கள் கவிதைகளாகி மனதை நிரப்புகிறது. பகிர்தலில் பாரமும் குறைகிறது.

    ReplyDelete
  21. நெஞ்சின் வலியோடு-வரும்
    நினைவின் கேள்விகள்
    மிஞ்சிய துயரின்-எழுந்த
    மெல்லிய வரிகள்
    எஞ்சிட ஏதுமில்லை-என்ற
    ஏக்கமே காணாயெல்லை
    வஞ்சகர் செயலை-இங்கே
    வடித்திட்ட கவிதைநன்கே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. /நடுவில் ஒட்டிக்கொண்ட
    நான்.....
    நிலையானவர்களிடம்
    சொல்லும் “இங்கு”/

    மிக நன்று ஹேமா.

    ReplyDelete
  23. வணக்கம் சகோதரி..
    எல்லோரிடமும் புலத்து தமிழர்களிடம் அதிகமாகவும் நான் யார் என்கின்ற தேடல்...!! அருமை சகோதரி

    ReplyDelete
  24. வரிகளும்... வலிகளும் புரிகிறது.

    ReplyDelete
  25. யார் நீ...
    ஏன் இங்கு...
    எங்கிருந்து...
    என்று தொடங்கி
    தொக்கி நிற்கும்
    கேள்விகளோடுதான் இன்றும் ! //


    வலி தரும் வரிகள், கவிதை அருமையா இருக்கு சூப்பர்...!!!

    ReplyDelete
  26. இனிய காலை வணக்கம் அக்கா,
    நலமா?

    மிக நீண்ட நாளைக்குப் பின்னர் உங்களின் அதே பழைய பாணியிலான சொல்லாடலைத் தரிசித்த உணர்வினை இக் கவிதை தந்திருக்கிறது!

    ReplyDelete
  27. "நான்...இங்கு...ஏன் ?"//

    தம் கூண்டை விட்டுப் புலத்தில் வாழும் உறவுகள் பிறரால் அவர்களின் பூர்வீகம் பற்றிக் கேட்கும் போது,
    அந்த உள்ளங்களின் மனதில் ஏற்படும் வலியினைச் சொல்லி நிற்கிறது!

    ReplyDelete
  28. தலை குனிந்த நிலையை நினைக்கையிலேயே மனம் கனக்கிறது ஹேமா. வாசித்து முடிக்கையில் கண்ணோரம் கசிவு. புலம் பெயர்ந்தவர்களின் கையறு நிலையை இதைவிடவும் அழுத்தமாய் சொல்ல எவராலும் முடியாது ஹேமா.

    ReplyDelete
  29. நடுவில் ஒட்டிக்கொண்ட
    நான்.....
    நிலையானவர்களிடம்
    சொல்லும் “இங்கு”
    பிறழ்வாய் இருவருக்குமே !

    அருமையான உணர்வுபூர்வமான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. அன்பு சகோதரி ஹேமா,
    இருத்தலின் இடம் காலம் புரியாது
    இருத்தலுக்கு மட்டுமே என்னால்
    விளக்கம் சொல்ல முடியுமென்று
    சில பல கேள்விக்கனைகளுடன்..
    புலம்பெயர்ந்து வாழும் நிலையை
    அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்
    சகோதரி.

    ReplyDelete
  31. வேலியில்லா வானம் என் வீடு.. எங்கு சுதந்திரமுண்டோ அது என் தாய்நாடு - ஒரு கவிஞர் சொன்னது

    ReplyDelete
  32. தாய் மண்ணை விட்டு தவிக்கும் ஏக்கம் தவிர்க்க முடியாதுதான்...!

    ஏளன கேள்விகளும் உடலை குருக வைக்கும் பலம் கொண்டவையே. ஆனாலும் நம்பிக்கையில் நாட்களைக் கடத்த...

    எங்கோ படித்த ஞாபகம்:-

    “ இந்த பூமி இறைவனின் சொத்து. இங்கே நாமெல்லாம் இரவலாய் இருந்து விட்டு காணாமல் போகும் பரதேசிகள்.”

    ReplyDelete
  33. இப்பவெல்லாம் கவிதை மெல்ல புரிகிறது.கூடவே படமும் துணையாக்கும்!

    ReplyDelete
  34. நெஞ்சை வருடும் கவிதை வரிகள் வாழ்த்துக்கள் தோழி மிக்க நன்றி பகிர்வுக்கு ........

    ReplyDelete
  35. வார்த்தைகளில் வேதனை

    ReplyDelete
  36. துன்ப‌ங்க‌ள் இன்ப‌ங்க‌ளாய் மாறும் ஹேமா...

    ந‌ல‌மா நீங்க‌ள்?

    ReplyDelete
  37. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  38. //அவர்களுக்கும் புரியவில்லை.
    எனக்கும்...
    தெரியவில்லை சொல்ல!!!// ;))

    ReplyDelete
  39. விடுதலை நாள் ஏக்கங்கள் விடைதெரியா மர்ம முடுச்சுகள் இது இன்று உலகமெல்லாம் விடுதலை வேண்டி நிற்கும் மக்களிடம் மிகுதியாக காண கிடைக்கிறது இப்படி எத்தனையோ மக்கள் மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டு தனக்கான நிலையான அரசுகளை அமைத்துக் கொண்டுள்ளனர் .உலக மெல்லாம் தேடி தேடி கொன்றபோதும் தனக்கான முழுமையான வலைதளத்தை உண்டாக்கி கொண்டு விடுதலையை ஈன்றேடுத்தனர் ஆனால் ஈழத்தமிழர் பிரிந்து உள்ளமை நெஞ்சில் வேலாய்குத்துகிறது விடியும் விரைவில்

    ReplyDelete
  40. வணக்கம்... நலமா?....

    அவர்களுக்கும் புரியவில்லை.
    எனக்கும்...
    தெரியவில்லை சொல்ல!!! // இந்தவரிகளுக்கு என்னாளும் பதில் சொல்லதெரியவில்லை.

    ReplyDelete
  41. இருப்பிடம் கேட்டால்
    தெருப்பெயர் சொல்வேன்
    இல்லை...இல்லை
    உன் இருப்பிடம் என்பார்கள்
    “இங்கு”தான் என்பேன் குனிந்தபடி !

    ReplyDelete
  42. இருப்பிடம் கேட்டால்
    தெருப்பெயர் சொல்வேன்
    இல்லை...இல்லை
    உன் இருப்பிடம் என்பார்கள்
    “இங்கு”தான் என்பேன் குனிந்தபடி !

    தலை நிமிரும் காலம் விரைவில் வரும்.

    ReplyDelete
  43. கேள்விகள் பல்லாயிரம் இருக்கும்போது விடைகள் ஏது ?

    அருமை.

    ReplyDelete
  44. ஐந்தாவது தலைமுறைக்கோ இனி வரும் தலைமுறைக்கோ கண்டிப்பாய் விடை தெரியவரும் ஹேமா..இருப்பினும் இது சற்று அல்ல பெருத்த கொடுமை தான்..இன்னும் இந்த கேள்விகளோடு..

    //ஏன் இங்கு...
    எங்கிருந்து...
    என்று தொடங்கி
    தொக்கி நிற்கும்
    கேள்விகளோடுதான் இன்றும் !

    விடைகிடைக்கும்..
    //

    ReplyDelete
  45. யார் நீ...
    ஏன் இங்கு...
    எங்கிருந்து...
    என்று தொடங்கி
    தொக்கி நிற்கும்
    கேள்விகளோடு தான் இன்றும்!

    விடை தெரியா வினாக்களோடு எம் வாழ்வு.

    ReplyDelete
  46. கவிதை அருமை

    ReplyDelete
  47. நான் இங்கு ஏன் ?பதிலில்லாக் கேளிவிகளோடுதான் அகதிகளாகிய எம் வாழ்வு.எத்தனை தரம் திணறித் தலைகுனியவேண்டியுள்ளது.அதுவும் 25-30 வருடங்களாகின்றன் புலம் பெயர்ந்து.என்றாலும் எங்கிருந்து வருகிறாய் என்கிற கேள்வியின் அழுத்தம் மாறாமல்தான்.அதன் வலி பட்டவர்களுக்கே புரியும்.ஆனாலும் சுவிஸைப் பொறுத்தவரை அன்பான மனிதர்கள்.அவர்கள் அணைப்பு பிறந்த நாட்டைவிட அதிகம் என்றே சொல்வேன்.என் உணர்வுகளைப் புரிந்துகொண்ட அத்தனை உறவுகளுக்கும் நன்றி !

    ReplyDelete
  48. ரொம்ப நல்லா இருக்கு Hema.

    ReplyDelete
  49. வருடங்கள் கடந்து
    நான்காவது தலைமுறை
    நடக்கையிலும்
    பார்வைகள் பிறத்தியாகவே !

    பார்வையும் வலிதரும் கனத்த பகிர்வு!

    ReplyDelete
  50. ஹேமா.. என் அன்புத் தோழியே.. வார்த்தைகள் வரவில்லை. உள்ளத்து உணர்வை இதைவிட உக்கிரமாய் உணர்த்த இயலுமா தெரியவில்லை. பெருமூச்சு மட்டுமே பதிலாய்!

    ReplyDelete