Tuesday, November 01, 2011

இருக்கை...

இயல்பை விடுத்து
இப்போ...
தனக்குத் தொடர்பில்லாத இடத்தில்
பறந்துகொண்டிருக்கலாம்.

நாளை...
நீந்திக்கொண்டும் இருக்கலாம்.

இன்னொரு நாள்...
இடப்புறச் சங்குக்குள்ளும்
ஒளிந்திருக்கலாம்.

பிறகொருதரம்...
பிணங்கள் புதைக்கும்
இடத்திலும் பார்த்ததாகச்
சிலர் சொல்லலாம்.

காற்றாய் பறந்து
நீராய் தெளிந்து
ஒரு குழந்தை கையில்
புட்டிப் போத்தலுக்குள்
அடைபட்டும் இருக்கலாம்.

இயல்பைக் கடந்து
மாறித் தெறிக்கும் உருவம்
அதுவென மறுகி வியந்தாலும்
முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!

ஹேமா(சுவிஸ்)

45 comments:

  1. yes hema..

    //மறுகி வியந்தாலும்
    முக்கியம்...
    அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!//

    தன்னிலையில் இருத்தல் முக்கியம்..அதனடிப்படையில் அது அதுவாய் இருத்தல் அழகே..

    ReplyDelete
  2. உண்மை ஹேமா. கவிதை இயல்பா மனதை தொட்டுவிட்டது.

    ReplyDelete
  3. யாவரும்.. மற்ற எதுவும் தன்னுடைய சயத்தில் இருந்துவிட்டால் நல்லதுதான்...


    அழகிய கவிதை...

    ReplyDelete
  4. எனக்கு மட்டும் பால்கோப்பி தோழி ஹேமா கையால்  வாங்க முடியாவிட்டாலும் இன்று மூன்றாம் இடம்!

    ReplyDelete
  5. நான் பின்னூட்டம் எழுதும் நேரத்தில் கவிதை வீதி வடையைக் கொண்டு போட்டார் ராமா???

    ReplyDelete
  6. இயல்பில்லாத இடத்தில்
     பறந்துகொண்டிருக்கலாம். உண்மை ஹேமா சிலதை மறந்து நத்தை போல் இருக்கின்றேன் கவிதை மனதைக் கனக்கவைக்கின்றது !
    எப்படி உங்களால் இப்படி வார்த்தைகளை சிறை பிடிக்கமுடியுது தோழியே !!!!

    ReplyDelete
  7. மனசு உங்கள் கவிதையைச் சுற்றிப்பறக்கின்றது நன்றி தோழி ஹேமா! 

    ReplyDelete
  8. படிமக்கவிதை ......

    ReplyDelete
  9. எத்தனை உருவமெடுத்தாலும் - இயல்பை கொல்லாது அதாக வாழ்வதே அது. நல்ல கவிதை.

    ReplyDelete
  10. //
    காற்றாய் பறந்து
    நீராய் தெளிந்து
    ஒரு குழந்தை கையில்
    புட்டிப் போத்தலுக்குள்
    அடைபட்டும் இருக்கலாம்.
    //
    அருமையான வரிகள்

    ReplyDelete
  11. //முக்கியம்...
    அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!//

    ஆம் ஹேமா. கவிதை மிக நன்று.

    ReplyDelete
  12. காற்றாய் பறந்து
    நீராய் தெளிந்து
    ஒரு குழந்தை கையில்
    புட்டிப் போத்தலுக்குள்
    அடைபட்டும் இருக்கலாம்.// அசத்தலான வரிகள் சகோ..

    ReplyDelete
  13. அது அதுவாகவே இருத்தல் மட்டுமே...//

    உங்களுக்கு நிகர் நீங்கள் தான்...மற்றுமொரு தரமான படைப்பு...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. சிறப்பான கவிதை ஹேமா. அருமை.

    ReplyDelete
  15. நான் நானாக இருக்கவேண்டும், நீ நீயாக இருக்கவேண்டும்....சரியாக சொன்னீர்கள் கவிதையாக ரியலி சூப்பர்ப்.....!!!

    ReplyDelete
  16. அது.. அது.. அதுவாகவே இருக்க வேண்டுமென உணர்த்தும் கவிதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. இருத்தலின் நிமித்தம்
    அழகாய் ஒரு கவிதை....
    வார்த்தைகள் சித்திரம் பேசுகின்றன
    சகோதரி

    ReplyDelete
  18. அருமையான கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ .......

    ReplyDelete
  19. //இயல்பைக் கடந்து
    மாறித் தெறிக்கும் உருவம்
    அதுவென மறுகி வியந்தாலும்
    முக்கியம்...
    அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!//


    அருமை ஹேமா .இயல்பு மாறாமல் அது அதுவாக இருப்பது தான் நல்லது

    ReplyDelete
  20. சுயத்தை இழக்காத சூட்சுமம் தொக்கி நிற்கிறது கவிதையின் பிடிக்குள். வசீகரிக்கும் கவிதை ஹேமா.

    ReplyDelete
  21. ஹேமா..உங்களை எப்படி பாராட்ட...??!!

    ReplyDelete
  22. ஹேமா,

    சுயத்துடன் இருத்தல் அத்தனை எளிதானதல்ல.

    இருக்க முயல்வதும் பிழையல்ல.

    சுற்றியிருப்பதில் எல்லாம் லயித்து போவதும் சுகம் தான்.

    ReplyDelete
  23. அருமையான கவிதை ஹேமா. சுயமாக வாழ்வது எளிதல்ல என்பதுபோல் சுயத்தை இழந்து வாழ்வதும் எளிதல்லதான்.

    ReplyDelete
  24. இயல்பைக் கடந்து
    மாறித் தெறிக்கும் உருவம்
    அதுவென மறுகி வியந்தாலும்
    முக்கியம்...
    அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!//

    மிக அழகாக கவிதையில் சொல்லியுள்ளீர்கள்... நீ நீயாக இரு என்பதை நயமாக சொல்லி அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. இயல்பைக் கடந்து
    மாறித் தெறிக்கும் உருவம்
    அதுவென மறுகி வியந்தாலும்
    முக்கியம்...
    அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!//

    உண்மை தான்... இயல்பாக உள்ள திறமைகளையும், லட்சியங்களையும், ஆசைகளையும் அடக்கி சூழ்நிலைகைதிகளாக வாழவேண்டிய நிர்பந்தம் நிறைய பேருக்கு அமைந்துவிட்டது ... மாற்ற முயற்சி செய்யலாம்.. அமைவது ஆண்டவன் மனசு வைக்க வேண்டும்.

    ReplyDelete
  26. கவிதையில் உங்கள் திறமை மிளிர்கிறது... ஒன்றுக்கு மூன்று முறை படித்த பிறகே அதில் நிறைய விசயங்கள் அடங்கி இருப்பது தெரிகிறது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. அது என்னவோ ஹேமா உங்கள் கவிதையை படித்து புரிந்து கொள்ள தனித்திறமை தான் வேண்டும்,
    எப்பவும் நாம் நாமாக இருப்பது நன்று...

    ReplyDelete
  28. வண்க்கம் அக்கா,
    நலமா?

    இருக்கை: நாளாந்தம் மாற்றமுறும் வாழ்வியலை நத்தை எனும் உவமைப் பொருளாக அழகுறச் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  29. உங்களின் பா இது மிகவும் இயல்பாக சிறப்பாக பாராட்டும் படியாக எல்லாவற்றையும் விட எல்லோருக்கும் புரியும் படியாக ஆக சிறந்த ஆக்கமாக விளங்குகிறது பாராட்டுகள்

    ReplyDelete
  30. முக்கியம்...
    அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!


    "இருக்கை..." அழகுபெறும்
    அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!

    பாராட்டுக்கள் அருமையான பகிர்வுக்கு.

    ReplyDelete
  31. இயல்பைக் கடந்து
    மாறித் தெறிக்கும் உருவம்
    அதுவென மறுகி வியந்தாலும்
    முக்கியம்...
    அது அதுவாகவே இருத்தல் மட்டுமே
    >>
    எல்லா உயிரினத்திற்கும் பொருந்தும் நச் வரிகள்

    ReplyDelete
  32. உண்மை. கவிதை நன்று. font color இதம்.
    இயல்பை இயல்பென்று பிடித்துக்கொண்டிருப்பதா விடுவதா என்பதும் பெருஞ்சிக்கலான கேள்வி. வண்ணத்துப்பூச்சி புழுவின் இயல்பைப் பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?

    ReplyDelete
  33. பருக்கை..!

    இயல்பை விடுத்து
    இப்போ...
    தனக்குத் தொடர்பில்லாத இடத்தில்
    வெந்துகொண்டிருக்கலாம்.

    பாத்திரத்தில்...
    நீந்திக்கொண்டும் இருக்கலாம்.

    இன்னொரு நாள்...
    இடப்புறக் கைகளுக்குள்ளும்
    ஒளிந்திருக்கலாம்.

    பிறகொருதரம்...
    குப்பை போடும்
    இடத்திலும் பார்த்ததாகச்
    சிலர் சொல்லலாம்.

    சாப்பாடாய் வெந்து
    நீராகரமாக கரைத்து
    ஒரு குழந்தை கையில்
    புட்டிப் போத்தலுக்குள்
    அடைபட்டும் இருக்கலாம்.

    இயல்பைக் கடந்து
    மாறித் தெறிக்கும் உருவம்
    அதுவென மறுகி வியந்தாலும்
    முக்கியம்...
    அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!

    அம்மா பசிக்குது...!

    ReplyDelete
  34. நல்ல வரிகளால் கவிட்தை அழகுறுகிறது, மனதை பற்றி எழுதியதாகவும் உணரலாம்!

    ReplyDelete
  35. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete
  36. மெல்லிய பிணைப்புகளில் அழகிய கவி மாலை ..
    மிகச்சிறப்பு அக்கா .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. அருமை அருமை
    எதுவாகினும் அதுவாக அங்கு இருத்தலை அடைந்தாலதான்
    முதிர்ச்சி கொண்டவர்கள் ஆகி விடுவோமே
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. சிறப்பான உண்மையில் எளிமையான ஆக்கம் பாட்டுகள் எங்குமே இயல்பை விடுத்து விலகுதல் சிக்கலைத் தரலாம் தனது இயல்பில் விழைவுகளுடன் வெற்றிபெறுவதே மனிதம் பாராட்டுகள் நன்றி

    ReplyDelete
  39. மனதில் ஆழ்ந்து பயணப்படுகின்றன கவிதை வரிகள் தோழி........

    ReplyDelete
  40. இருக்கையை உணர்ந்துகொண்ட,உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அத்தனை பேருக்கும் என் நன்றிகள்.இருந்தாலும் அப்பாஜி கேட்டதும் மனதில் கேள்வியாகிறது.

    //இயல்பை இயல்பென்று பிடித்துக்கொண்டிருப்பதா விடுவதா என்பதும் பெருஞ்சிக்கலான கேள்வி. வண்ணத்துப்பூச்சி புழுவின் இயல்பைப் பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?//

    வண்ணத்துப்பூச்சி புழுவாவது அதுதான் அதன் இயல்பென்றும் சொல்லலாம்தானே அப்பாஜி !

    வசந்து....ம்ம்ம் எதிர்க்கவிதையா !மக்களே பாத்துக்கோங்க.எனக்குக் கோவம் வரல.கரு மாறாமல் வேறு ஒரு ஒரு பொருளை வச்சு கிண்டலா கவிதையை மாத்தி எழுதியிருந்தாலும் கவிதை நல்லாத்தான் இருக்கு.
    பரவால்ல.பொழைச்சுப் போங்க !

    ReplyDelete
  41. காற்றாய் பறந்து
    நீராய் தெளிந்து
    ஒரு குழந்தை கையில்
    புட்டிப் போத்தலுக்குள்
    அடைபட்டும் இருக்கலாம்.

    வார்த்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு கவிதைக்குள் அடைபடும் ஜாலம்.. எப்போதும் போல ஆச்சர்யம்

    ReplyDelete