Tuesday, June 14, 2011

மினுக்கெட்டிக் காதல்

சில சேமிப்புக்கள் உனக்காக...
சாதகப் பறவையின் இசை
அசையும் மேகத்தின்
அழகு
பலகனியின் பூக்கும்
ஊதாநிற ஓர்குட்
எனக்கு மட்டும் புரிகிறமாதிரி
கிளிஞ்சலால் ஒட்டிய
உன் முகம்
சில பாடல்கள்
கார் கண்ணாடியின் பின்புறத்தில்
உன் போட்டோ
உனக்காக மாற்றிய
சில உணவுகள்
பனிப்புகாரில் எழுதிய
உன் பெயர்
உருட்டிய ஐஸ் மனிதனில்
உன் உருவம்
துயிலெழுப்பும்
சூரியக் கதிர்
அத்தனையிலும் சேமித்த
உன்னை...
எனக்குள் சேமிக்க....!!!

ஹேமா(சுவிஸ்)

45 comments:

  1. பனிப்புகாரில் எழுதிய
    உன் பெயர்
    உருட்டிய ஐஸ் மனிதனில்
    உன் உருவம்
    துயிலெழுப்பும்
    சூரியக் கதிர்
    அத்தனையிலும் சேமித்த
    உன்னை...
    எனக்குள் சேமிக்க....!!!parattukal

    ReplyDelete
  2. ஒவ்வோறு அசைவில் அர்த்தம் தேடி அதை காதலுக்கான கனவுகளாக மாற்றி மனதுக்குள் தேக்கிய விதம் அருமை...

    ReplyDelete
  3. சேமிப்பின் லிஸ்ட் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  4. //கிளிஞ்சலால் ஒட்டிய
    உன் முகம்
    சில பாடல்கள்
    கார் கண்ணாடியின் பின்புறத்தில்
    உன் போட்டோ
    உனக்காக மாற்றிய
    சில உணவுகள்//

    மிக ரசித்தேன் இவ்வரிகளை....

    ReplyDelete
  5. //அத்தனையிலும் சேமித்த
    உன்னை...
    எனக்குள் சேமிக்க....!!!//

    அருமை ஹேமா.

    ReplyDelete
  6. கவிதை அருமை வாழ்த்துக்கள்
    சகோதரி........

    ReplyDelete
  7. காதல், அழகான மாற்றங்களையே தருகிறது. கவிதை அருமை.

    ReplyDelete
  8. காத‌லிக்க‌த் தூண்டும் க‌விதை... சொக்கி நிற்க‌ வைக்கிற‌து வார்த்தைக‌ளின் வ‌ன‌ப்பு.

    ReplyDelete
  9. உருகி உருகி காதலிப்பது என்பார்களே ......நல்ல இருக்கு கவிதை ...

    ReplyDelete
  10. ஹேமா உன் காதல் சேமிப்புகளில் ஒன்றாகவாவது இருக்க தோனுது எத்தனை ரசனை உன்னுடையது...

    ReplyDelete
  11. படித்தவுடன் புரிந்துவிடும் எப்பொழுதும் ஹேமாவின் உணர்வுகள், இந்த முறை ஏனோ விளங்கயில்ல

    சங்கவி இரசித்த வரிகள் என்னையும் இரசிக்க செய்தன ...

    ReplyDelete
  12. பனிப்புகாரில் எழுதிய
    உன் பெயர்//

    இது போன்ற நிறைய சொற்கள் என்னைக் கவர்ந்தவை கவிதை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  13. தலைப்பு விளங்கல தலைவியாரே!!

    ReplyDelete
  14. //கார் கண்ணாடியின் பின்புறத்தில்
    உன் போட்டோ
    உனக்காக மாற்றிய
    சில உணவுகள்
    பனிப்புகாரில் எழுதிய
    உன் பெயர்//
    அழகான காதல் கவிதை !!!!

    ReplyDelete
  15. \\உனக்காக மாற்றிய
    சில உணவுகள்உனக்காக மாற்றிய
    சில உணவுகள் \\

    \\அத்தனையிலும் சேமித்த
    உன்னை...
    எனக்குள் சேமிக்க....!!! \\


    கவியரசியின் சிந்தனைகள் எல்லை கடந்து விரிகின்றன...

    நன்று ....

    ReplyDelete
  16. பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி என்றார் முண்டாசுக் கவிஞர். ஹேமாவுக்கு காணும் பொருளிலெல்லாம் காதல்முகம் புலப்படுகிறது, காதலின் சேமிப்பு ஒவ்வொன்றும் மிக அருமை! இந்தச் சேமிப்பை எவராலும் களவாட இயலாது. மனசோரம் சுகராகம் பாடும் கவிதை.

    ReplyDelete
  17. துயிலெழுப்பும்
    சூரியக் கதிர்\\\\

    ஹேமா,உன் காயத்தில் காயம்
    ஏற்படும்படி சூரியன் சுட்டானா?
    இளங்காலைக் கதிர் உடலுக்கு
    ஆரோக்கியம் என்று நீ
    படிக்கவில்லையா?


    அத்தனையிலும் சேமித்த
    உன்னை...
    எனக்குள் சேமிக்க....!!!\\\\\\\\முடியவில்லையே.....!..\\\\\


    உன்கவிதையை நான் முடித்து வைத்துள்ளேன்
    ஹேமாவுக்குச் சேமிக்கத் தெரியவில்லை
    என நினைக்கிறேன்....

    ஓஓஓ..ஒருதலைக் காதல் என்பார்ளே!
    அது இதுதானா?

    ReplyDelete
  18. {பலகனியின்} பூக்கும்
    ஊதாநிற ஓர்குட்\\\\\

    ஹேமா,

    இது என்ன பொருள்?

    பல்கனியில் பூக்கும்
    ஊதாநிற ஓர்குட்டா..!..?

    ReplyDelete
  19. {பலகனியின்} பூக்கும்
    ஊதாநிற ஓர்குட்\\\\\

    ஹேமா,

    இது என்ன பொருள்?

    பல்கனியில் பூக்கும்
    ஊதாநிற ஓர்குட்டா..!..?

    ReplyDelete
  20. உருட்டிய ஐஸ் மனிதனில்
    உன் உருவம்\\\\\\

    ஐய்யோ..... இந்தப் பொண்ணுக்கு
    ஒன்றுமே புரியாம இருக்கே!

    ஐஸ் உருகுமென்று தெரியாமல்
    உருவம் செய்தால்....!!
    உன்காதல் உயிரைக்
    கல்லில் செதுக்கிருந்தால்
    நிலைத்திருக்கும்
    ஐஸ்ஸில் அல்லவா செதுக்கினாய்
    ஆதலால்...உருகி..........................ஓடிவிட்டது

    ReplyDelete
  21. துயிலெழுப்பும்
    சூரியக் கதிர்
    அத்தனையிலும் சேமித்த
    உன்னை...
    எனக்குள் சேமிக்க...

    very very nice....

    ReplyDelete
  22. அழகான கவிதை ஹேமா. மிகவும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  23. அழகான கவிதை முடிப்பதில் ஆர்வம் இல்லையோ தொடர்கின்ற காதலா சிலருக்காக சிலர் சாப்பாடுகளில் மாற்றம் செய்யும் மடத்தனமா? காதல் மோகமா என நானும் பலதரம் ஜோசிப்பேன் விடையில்லை. சாதகப் பறவை இசைக்குழுமம் ஞாபகம்  உண்மையில் உணர்வுகளை நீங்கள் வடிக்கும் கவிதைகள் பிரமிப்பாக இருக்கிறது!

    ReplyDelete
  24. அழகான வித்தியாசமான கவிதை

    ReplyDelete
  25. ஹேமா,

    சுவிஸ்-ல இப்போ ஐஸ் காலமோ?

    ”ஜில்லுன்னு ஒரு காதல் கவிதை”.

    ReplyDelete
  26. காதல் நினைவுகள் குளுமையானவை. நல்ல வெளிப்பாடு.

    ReplyDelete
  27. ஹேமா சேமிச்சத வெளிகொண்டுவந்துருங்க...இன்னும் கவிதையா...

    ReplyDelete
  28. ஃஃஃஃகார் கண்ணாடியின் பின்புறத்தில்
    உன் போட்டோ
    உனக்காக மாற்றிய
    சில உணவுகள்ஃஃஃஃ

    உணர்வுகள் உறவுகளுடன் பின்னிப் பிணைந்ததே நன்றாக உள்ளது அக்கா..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)

    ReplyDelete
  29. மினுக்கெட்டிக் காதல்//

    தலைப்பே ஒரு புதிய பதத்தில் இருக்கிறது. பதிவினைப் படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  30. அத்தனையிலும் சேமித்த
    உன்னை...
    எனக்குள் சேமிக்க....!!!//

    வித்தியாசமான கவி நடையில் இக் கவிதை அமைந்துள்ளது.

    காதல் நினைவுகளை மீட்டுப் பார்த்து, இறுதியில் சேமித்து வைக்க முடியாத காதலைப் பற்றிய பிரிவினை உங்கள் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது சகோ.

    ReplyDelete
  31. காதல் வந்து விட்டால் சேமிப்புகளின் லிஸ்ட் கூடும்...உங்கள் கவிதைகளில் எனக்கு எப்போதும் பிடித்த 'சேமித்த கணங்களில்' நினைவு வந்து விட்டது!

    ReplyDelete
  32. அசத்துங்க அசத்துங்க ,..
    அருமை.

    ReplyDelete
  33. //கார் கண்ணாடியின் பின்புறத்தில்
    உன் போட்டோ
    உனக்காக மாற்றிய
    சில உணவுகள்
    பனிப்புகாரில் எழுதிய
    உன் பெயர்//

    மிக அழகான கவிதை.. அருமை

    ReplyDelete
  34. அத்தனையிலும் சேமித்த
    உன்னை...
    எனக்குள் சேமிக்க....!!!

    வாவ்.. ஒற்றை வரியில் அர்த்தபுஷ்டி.

    ReplyDelete
  35. படித்தேன்,ரசித்தேன்;அருமை!

    ReplyDelete
  36. ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
    மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

    ReplyDelete
  37. நல்லா இருக்கு ஹேமா

    ReplyDelete
  38. காதல் சேமிக்கும் சின்ன சின்ன உணர்வுகள்... இந்தக் கவிதையை என் நெஞ்சில் சேமித்துக் கொண்டேன் ஹேமா!

    ReplyDelete
  39. geometric romance - புகைப்படத்தை இந்தமுறை தான் கவனித்தேன். பொருத்தமான கவிதை. இன்னும் சோபிக்கிறது. 'மினுக்கெட்டி' விளக்குக்குத் தமிழ்ச்சொல்லா?

    ReplyDelete
  40. மாலதி...முதல் வருகைக்கு நன்றி தோழி !

    சௌந்தர் பாராட்டுக்கு நன்றி !

    சுந்தர்ஜி...லிஸ்ட் இன்னும் இருக்கு.எழுதினா பைத்தியம்ன்னு சொல்லுவீங்கன்னு நிப்பாட்டிட்டேன் !

    சங்கவி...காதல் வரிகள் எப்போதுமே சந்தோஷமானவையே !

    ராமலஷ்மி அக்கா...உங்கள் கவிதைகளுக்கு இதெல்லாம் ஈடில்லையே !

    அம்பாளடியாள்...வாங்கோ வாங்கோ சந்தோஷம் !

    தமிழ்...காதல் வந்தால் எங்கும் எதிலும் அதே உருவம்தான் !

    நிலா...இனித்தானா சொக்கிக் காதலிக்கப்போறீங்க !

    கந்தசாமி...சரியாக் கண்டுபிடிச்சிட்டீங்க.உருகி உருகி தொங்கித் தொங்கிக் காதலிக்கிறேன் !

    அரசி...எல்லாச் சேமிப்புக்களும் என்னவருக்காக மட்டுமே !

    ஜமால்...சும்மாதானே.இடக்கு முடக்கா எல்லார்கிட்டயும் திட்டு வாங்கிற கவிதையெல்லாம் புரிஞ்சுபோச்சு.இதென்ன
    வெங்காயக் கவிதை !

    அரசு...ரொம்பநாளாச்சு என்பக்கம் வந்து.சுகம்.சுகம்தானே.பனிப்புகாரில் எழுதி வைக்கிறேன்.அதுதான் வார்த்தை சுலபமா வந்திடிச்சு !

    சிவா...மின்மினிக் காதல்.மின்னி மறைஞ்ச காதல்.மின்மினிப் பூச்சியை மினுக்கெட்டி என்றும் ஊரில் சொல்வோமே !

    ஏஞ்சல்...காதல் என்கிற சொல்லே அழகுதானே !

    கொல்லான்..உங்க ரசனையே ரசனை !

    கீதா...சுகராகம் பாடும் சூரிய வெப்பம் தரும் கவிதை என்னுடையது மட்டுமே.களவு எடுத்தது நான் மட்டுமே !

    கலா...கவிதை முடித்த தோழியே நன்றி நன்றி.எல்லாவற்றிலும் சேமிக்கத் தெரிந்த எனக்கு எனக்குள் சேமிக்கத் தவறிவிட்டேன்.மின்னி மறைகிறான் சூரியன்.அவன் இதமானவன் !

    அனானி...கலா ஓ(ஆ)ர்குட் பூ...தமிழாக்கம் தெரியவில்லை.என் பல்கனியில் ஊதா நிற ஓ(ஆ)ர்குட் பூக்கள் !

    உலக சினிமா ரசிகர்...நன்றி தோழரே !

    விடிவெள்ளி...எங்கே அடுத்த பதிவு !

    மீனு...எப்போவாவது வரும் உங்களை நான் ரசிக்கிறேனே !

    குமார்...வாங்க வாங்க !

    நேசன்...உணர்வுகள் வார்த்தைகளாகிறது.அவ்வளவுதான் !

    கவி அழகன்...முதல் வருகைக்கு நன்றி நண்பா !

    ReplyDelete
  41. கண்ணழகா...கண் சுகம்தானே.
    ஜில்லுன்னு ஒரு காதல்.மனசுக்கு இதம்.சுகமா தூக்கம் வரும் !

    அப்பாஜி...அன்று ரசித்த்தை மீண்டும் வந்து ரசிச்சு படத்தையும் ரசிச்சிருக்கிறீங்க.படம் மினக்கெட்டுத் தேடி எடுத்துப் போடும்போது யாராவது ரசிச்சுச் சொன்னா சந்தோஷமா இருக்கு.நன்றி அப்பாஜி.மின்மினிப்பூச்சியை மினுக்கெட்டி என்றும் ஊரில் சொல்வோம்.அது கொச்சைத் தமிழுக்குள் மின்னலாம் !

    தவறு...இன்னும் சேமிச்சதைக் கொண்டு வரணுமா.உதைதான் தருவீங்க அப்புறம் !

    சுதா...உணர்வுகளோடு பின்னிய கவிதைதான் இது !

    நிரூ...சேமிக்க முடியாத என் மனசை என்ன செய்யலாம் !

    ஸ்ரீராம்...சேமித்த கணங்களில் இன்னும் மனதில் மின்னும் மினுக்கெட்டி !

    அரசன்...எங்க என்னை மறந்தே போனீங்க !

    ரிஷபன்...நன்றி அன்பான கருத்துக்கு !

    சென்னை பித்தன்...நன்றி ஐயா.வாங்கோ அடிக்கடி ரசிக்கலாம் கவிதைகளை.திட்டணும்ன்னா திட்டலாம் !

    தங்கமணி...நன்றி.உங்க தொடர்கதைதான் இன்னும் முடியாமக் கிடக்கு !

    எல்.கே...இவ்வளவு பிந்தி வந்து ஒரு நல்லாருக்காவா !

    டி.வி.ஆர்...வாங்கோ ஐயா.சதோஷம் !

    மோகண்ணா...சேமிச்சு வைப்போம்.நிறைச்சு வைப்போம் !

    ReplyDelete
  42. ஆமா இவ்வளவு சேமிப்புகள் சேர்த்த நீங்க-முடிவிலே புள்ளி வச்சி
    ஆச்சிரியக்குறி வச்சிட்டீங்க
    அதை படிக்கிறவங்க முடிவு
    பண்ணவா...?

    அருமை அருமை அருமை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete