Wednesday, May 18, 2011

மே பதினெட்டோடு போகட்டும்...

புதைத்துவிட்டால் உயிர்க்காது
என்றுதான் நினைக்கிறீர்கள்
உயிர்மூச்சில்
சிலுவை அறையப்பட்டதை
அறியாத நீங்கள்.

மழையிலும் வெயிலிலும்
குளிக்கும் மலரென
வாழ இசைத்தீர்கள்
பழக்கப்பட்டுவிட்டோம்
முட்களையும் பூக்களாக்க
பயமில்லை இப்போ
வாசனையாகிறது இரத்தவாடைகூட.

சுவைக்கும் உணவுக்குமான தூரமாய்
எங்கள் தேவைகளை
உங்கள் இடைவெளிகளே நிதானித்து
கடத்தி இருத்தி தீர்மானிக்கிறது.

மாற்றிய சரித்திரமும் மகாவம்சமும்
கருவுரும் தலைமுறை தலைசுமக்க
காலகாலமாய் விலகாத வெறுப்போடு.

எனவே......
வேண்டாம் இனியும்
ஒரு நாள் மலரும்
நம் வீட்டு முற்றத்தில்
கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!

ஹேமா(சுவிஸ்)

42 comments:

  1. தமிழீழம் மலரும் மலர்ந்தே தீரும் என்பது காலத்தின் கட்டாயம் அது அறிவியல் விதி அது உலக நியதியும் கூட வலி நிறைந்த வார்த்தை வார்த்தைகளுக்கு உயிர்ப்பு உள்ளது என்பது இந்த மானிட சமூகம் நண்டகவேயரியும் .வெல்லும் வெல்லட்டும் தமிழீழம் .

    ReplyDelete
  2. மாறி விட்டேனா!கவிதை தன்னை மாற்றிக்கொண்டதா!

    புரிகிறது!புரிகிறது!கவிதை புரிகிறது.

    ReplyDelete
  3. உங்கள் வலி புரிகிறது சகோ..

    ReplyDelete
  4. இன்னும் மாரிப்போகாத வடுவாகவே நீள்கிறது வலி . கவிதை சிறப்பு

    ReplyDelete
  5. >>மாற்றிய சரித்திரமும் மகாவம்சமும்
    கருவுரும் தலைமுறை தலைசுமக்க
    காலகாலமாய் விலகாத வெறுப்போடு.

    வாட் எ பவர்ஃபுல் லைன்ஸ் ஹேமா.. குட்

    ReplyDelete
  6. //புதைத்துவிட்டால் உயிர்க்காது
    என்றுதான் நினைக்கிறீர்கள்
    உயிர்மூச்சில்
    சிலுவை அறையப்பட்டதை
    அறியாத நீங்கள்.//

    வரலாறு அறியாத மூடர்கள் ஆளும் உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

    ஒருநாள் அறிவார்கள்.

    ReplyDelete
  7. காத்திருக்கிறோம். சோகம் சுமக்கும் நினைவுகளையும், நெஞ்சம் காணும் ஈழக்கனவையும் துணைக்கு வைத்து கொண்டு.

    ReplyDelete
  8. தொடரும் துயரம் தீரும் வரும்நாள். காலத்தின் முன் நியாயம் வெல்லும். கனத்த மனதுடன்தான் விலகமுடிகிறது ஹேமா வரும் ஒவ்வொரு முறையும்.

    ReplyDelete
  9. காத்திருப்போம் ஹேமா...

    ReplyDelete
  10. //சி.பி.செந்தில்குமார் said...

    >>மாற்றிய சரித்திரமும் மகாவம்சமும்
    கருவுரும் தலைமுறை தலைசுமக்க
    காலகாலமாய் விலகாத வெறுப்போடு.

    வாட் எ பவர்ஃபுல் லைன்ஸ் ஹேமா.. குட்//

    Me too...

    ReplyDelete
  11. துயரங்கள் சுமந்து திரிகிறோம் ஏதிலியாக நம்பிக்கை இழக்காமல்! உங்கள் வரிகள் மனதை குடைகிறது !

    ReplyDelete
  12. ஹூம்... என்றொரு பெருமூச்சோடு தான் வ(லி)ரிகளைக் கடக்க முடிகிறது... கடைசி வரிகளில் நம்பிக்கையையும் மீட்டெடுக்க முடிகிறது.

    ReplyDelete
  13. வேண்டாம் இனியும்
    ஒரு நாள் மலரும்
    நம் வீட்டு முற்றத்தில்
    கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!



    ..... விடிவு காலம் விரைவில் வர வேண்டும். கண்ணீர் துடைக்கப் பட வேண்டும்.

    ReplyDelete
  14. மலரட்டும்!!!!

    ReplyDelete
  15. ஃஃஃஃஃபழக்கப்பட்டுவிட்டோம்
    முட்களையும் பூக்களாக்க
    பயமில்லை இப்போ
    வாசனையாகிறது இரத்தவாடைகூட.ஃஃஃஃ

    உண்மை தான் அக்கா தங்கத்தை கூட தீயில் தானே புடம் போடுவர்கள்..

    ReplyDelete
  16. ////எனவே......
    வேண்டாம் இனியும்
    ஒரு நாள் மலரும்
    நம் வீட்டு முற்றத்தில்
    கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!
    /// சோகங்களை தவிர சொல்வதற்கு வேறு வார்த்தைகள் ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  17. துன்புறும் மக்களுக்கு சீக்கிரமே ஒரு விடிவுகாலம் பிறக்கட்டும். நல்ல நாள் சீக்கிரம் மலரட்டும்.

    ReplyDelete
  18. ரொம்ப நாட்களுக்கு பிறகு வருகிறேன்.!! இம்முறை உங்கள் கவிதையை விமர்சிப்பதாக இல்லை.. ஏனென்றால் என்றும் வலிகள் நிறைந்ததாகவே இருப்பதால் நெஞ்சம் அடைக்கிறது. கொஞ்சம் மாற்று பாதையில் பயனிக்கலாமே!

    ReplyDelete
  19. கொடிய நாளின் கோர நினைவுகளை சுமப்பது மட்டுமில்லாமல் நடந்த நிகழ்வுகளுக்கு தண்டனை வாங்கி தர ஓர் அணியில் திரள்வோம்.

    ReplyDelete
  20. Hemaa, AMAZING, AMAZING!

    We will have more and more Glorisoa Lily, Karththikaip poo, in our yards.

    Let us not give up the HOPE!

    ReplyDelete
  21. எனவே......
    வேண்டாம் இனியும்
    ஒரு நாள் மலரும்
    நம் வீட்டு முற்றத்தில்
    கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!//

    உறுதியான நம்பிக்கையில் நிச்சயம் மலரும் கார்த்திகைப் பூக்கள்.

    ReplyDelete
  22. மன உறுதியென்னும் உரமிட்டு வளர்ப்போம் ஈழத்தமிழ்ப்பயிரை! விலகாத வேதனையை வரிகளுக்குள் கடத்திய திறம் கண்டு நெகிழ்ந்து நிற்கிறேன்.

    ReplyDelete
  23. கவிஞரின் வலிகள், கவிதையின் வரிகளில்.

    இருந்தாலும், முதல் வரிகளும் கடைசி வரிகளும் முரணாகத் தோன்றுகிறதே?

    ReplyDelete
  24. தமிழீழம் வந்தால் தான் விடிவா? ஈழத்தில் தமிழுக்கு விடிவு தேடக் கூடாதா?

    வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் எனக்குத் தோன்றிய கேள்வியென்றாலும், வெளியிலிருந்து சோகங்களை வேடிக்கை பார்க்க முடியாதே?

    வெறி இரண்டு பக்கமும் உண்டு என்பதை ஏதோ ஒரு குரல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

    ரத்தம் சிந்தியதற்கு நீங்கள் விரும்பும் படி பூ மலரட்டும்.
    ரத்தம் சிந்தக்கூடாது என்பதற்காகவும் பூ மலரக் குரல் கொடுங்களேன்?

    ReplyDelete
  25. உயிர்மூச்சில்
    சிலுவை அறையப்பட்டதை
    அறியாத நீங்கள்.//

    இவ் வரிகளில் பல ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்துள்ளன. வெட்ட வெட்டத் தளைக்கும்...என்பது அவர்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  26. ஒரு நாள் மலரும்
    நம் வீட்டு முற்றத்தில்
    கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!//

    அந்த ஒரு நாள் வரும் திரு நாள் எது தான் என தெரியாதவர்களாய் நாமெல்லோரும்.
    நம்பிக்கைகள் வீண் போகாது என எம் மனதைத் தேற்றியபடி நடப்போம் சகோ.

    ReplyDelete
  27. தர்மம் வெல்லும் அதர்மம் அழியும்

    ReplyDelete
  28. உங்களை போன்ற உயிர்ப்புடன் கூடிய இதயங்கள் இருக்கும் வரை தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்.

    ReplyDelete
  29. புதைத்துவிட்டால் உயிர்க்காது
    என்றுதான் நினைக்கிறீர்கள்
    உயிர்மூச்சில்
    சிலுவை அறையப்பட்டதை
    அறியாத நீங்கள்..

    உண்மைதான்..
    கண்டிப்பாய் நல்லதொரு நாள் வரும் விரைவில்..

    ReplyDelete
  30. "ஒரு நாள் மலரும்"
    நிச்சயம் கவியரசி.

    ReplyDelete
  31. விடிவுகாலம் பிறக்கட்டும் ஹேமா.காத்திருப்போம்.

    ReplyDelete
  32. //ஒரு நாள் மலரும்
    நம் வீட்டு முற்றத்தில்
    கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!//

    காத்திருப்போம்:(

    ReplyDelete
  33. //புதைத்துவிட்டால் உயிர்க்காது
    என்றுதான் நினைக்கிறீர்கள்
    உயிர்மூச்சில்
    சிலுவை அறையப்பட்டதை
    அறியாத நீங்கள்.// விடிவு கிடைக்குமா? விடியல்களை தேடி ...
    தமிழன் வேர்களை தேடி ...படங்களை அல்ல பாடங்களை..
    கற்றுக்கொள்ள வேண்டும் . மரமாக நின்று மரித்துய் போவதை காட்டிலும்
    வீரமே வாழ்வது தமிழீழமாய் மலரும் இயன்றதை செய்வோம் .மலரட்டும் தமிழீழம் வெல்லட்டும் மறவர்படை .

    ReplyDelete
  34. //ஒரு நாள் மலரும்
    நம் வீட்டு முற்றத்தில்
    கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!//

    நம்பிக்கை வெல்லும். வலிகளுக்கு ஆறுதலாக அமையும்.

    ReplyDelete
  35. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!

    ReplyDelete
  36. எனவே......
    வேண்டாம் இனியும்
    ஒரு நாள் மலரும்
    நம் வீட்டு முற்றத்தில்
    கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!


    மலரட்டும் ஹேமா

    ReplyDelete
  37. மாறும் தோழி மாறும் பாட்டன் அருள்மொழித்தேவன் போல ஈழத்தில் புலிக்கொடி நாட்டிய இராஜராஜெந்திரர், இலங்கோவேல் போல.. இன்னுமொரு நூறு வீரப்புலிகள் கூடி ஈழத்தில் சிங்களத்தை வென்று தமிழ்க்கொடி நாட்டும் காலம் விரைவில் தோழி....

    ReplyDelete
  38. வலிக்கிறது தோழி வரிகளில் தெறிக்கும் வேதனைகளால். போனது போகட்டும் இனி வருவது வசந்தமாகட்டும்.

    //அன்பாயிருந்தால்கூட....அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் வாங்கவேண்டாம்!//
    உண்மைதான் தோழி அதுகூட சில சமயம் ஆபத்தாகிவிடும்..

    ReplyDelete
  39. சென்னை சென்று விட்டதால்
    தாமதமாய்த்தான் இதைப் படித்தேன்.
    காலம் பதில் சொல்லும்...

    ReplyDelete
  40. இன உணர்வோடு சலிப்பில்லாமல் முழுவாரமும் என்னோடு ஈழநினைவோடு கை கோர்த்திருந்த என் அத்த்னை உறவுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

    நமக்கு ஒரு தீர்வு கிடைக்கும் காலம் வரைக்குமே அவர்களை நினைக்கும் வாரங்களும் நாட்களும்தான்.
    என்றாலும் குறிப்பிட்ட இந்தக் காலங்களில் எங்கள் இழப்புக்களும் வேதனைகளும் அதிகம்.தொடர்ந்தும் முயற்சிப்போம்.நல்லதே நடக்கும் என்றும் நம்புவோம் !

    ReplyDelete
  41. நல்ல கவிதை.
    வேதனையாக இருக்கிறது.

    ReplyDelete