Monday, May 16, 2011

தலைமுறை விளையாட்டு...

இரத்த வாடை குறைந்திருந்தாலும்
ஈழமுகாம்களின் வாசல்கள்
மூடப்படவில்லை.
நிலத்தின் மீதான
பெருங்கனவு கலைக்கப்பட
காலைகள் விடியாமலே.

"ஆமி சுடுறான் ஓடு ஓடு ஒளி்
குண்டு விழுந்திட்டுது
அப்பாவைக் காணேல்ல
குழறி அழுகிறா அம்மா
பதுங்கு குழி்க்குள்ளும்
படமெடுக்குது பாம்பு
முள்வேலியும் அகதிமுகாமுமாய்"
முகாம்களில் விளையாடும் குழந்தைகள்.

சப்பித்துப்பிய எலும்புகள் ஏந்திய
பேய்களும் பிசாசுகளும்
புரியாத மொழி பறைய
சொல்லாமலே புரிகிறது
நம்மைப் பிடித்த நோய்கள்
இவர்களென.

விளையாட விடுங்கள்
எங்கள் குழந்தைகளின்
கண்களைக் கட்டாமலே
தோழனின்
கண்ணைத் தோண்டியவனை
தாயின் மார்பறுத்தவனை
அடையாளம் காணட்டும்.

பேசவிடுங்கள்
மண்டையோடுகளோடும்
மூடிய மண் கிளப்பும்
பெருமூச்சுக்களோடும்!!!

ஹேமா(சுவிஸ்)

32 comments:

  1. ....... என் மெளனங்களிலே அத்தனை தணல்களையும் தாண்டும்..

    ReplyDelete
  2. வலி மிகுந்த கவிதை என்றும் அந்த நாட்க்களை மறக்க முடியாது (

    ReplyDelete
  3. வலி தான் வாழ்க்கையானது...
    வலியே கவிதையானது... அந்த வலி வாசிப்பாளனையும் தொற்றிக் கொள்ள - அவனுக்கும் வலிக்கிறது.

    ReplyDelete
  4. வலிகள் நிறைந்த கவிதை..

    ReplyDelete
  5. வலி மிகுந்த வரிகள் :(

    ReplyDelete
  6. இன்னும் தீர்ந்துபோகாத வடுவாக நீள்கிறது வலிகள் கவிதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் .

    ReplyDelete
  7. //
    எங்கள் குழந்தைகளின்
    கண்களைக் கட்டாமலே
    விளையாட விடுங்கள்.

    அடையாளம் காணட்டும்
    தோழனின்
    கண்ணைத் தோண்டியவனை
    தாயின் மார்பறுத்தவனை.//


    அடுத்த தலைமுறைக்கும் அவசியம் சொல்லித்தான் வளர்க்க வேண்டும், சுதந்திரத்தின் தேவையை...!

    ReplyDelete
  8. வலிகளும் வேதனைகளும் தாங்கி வந்துள்ள கவிதை.

    ReplyDelete
  9. தேசத்தை இழந்த சோகம் அனுபவிக்காமல் புரியாது ஹேமா.

    ஆனால் உங்கள் வார்த்தைகள் அந்த அனுபவத்தை இம்மியும் பிசகாமல் தந்துவிடுகின்றன மனதை அறுத்தெறியும் மொழியின் இறுக்கத்தில்.

    ReplyDelete
  10. மனதைப் பிசையும் வார்த்தைகள்

    ReplyDelete
  11. அவ்வளவும் வலி......

    ReplyDelete
  12. தமிழ் உக்கிரம்!

    எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை சொன்னார்...கவிதைகள் ஈழக்கவிஞர்களிடம் குடியேறி விட்டதென!

    நாடியிலிருந்து சுவாசக் காற்றோடு பீறிடும் வார்த்தைகளே கவிதை.

    ReplyDelete
  13. வேதனைகளை வலிகளைத் தாங்கி வந்திருக்கும் வரிகள்.

    ReplyDelete
  14. இதயத்தின் வலிகள் இரத்த வரிகளாக. எம் வலிகள் மறக்கவும் கூடாது எம் வருங்கால சந்ததியினர் அனுபவிக்கவும் கூடாது. எம் வலிகளை சொல்லி சந்ததியை உரமேற்றுவோம். ஒவ்வொரு வரிகளும் நெருப்பு வரிகள்.

    ReplyDelete
  15. இந்த கொடூரங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்று ஏங்க வைக்கும் கவிதை.

    ReplyDelete
  16. ஒவ்வொரு வரியும், வலியையும் வேதனையையும் பிரதிபலிக்கிறது .

    ReplyDelete
  17. சொல்லாமலே புரிகிறது
    நம்மைப் பிடித்த நோய்கள்
    இவர்களென.


    உண்மை..

    ReplyDelete
  18. I don't think there is seperate day for Ezham people, every day is a sorrow until they get IT

    ReplyDelete
  19. ஆமி சுடுறான் ஓடு ஓடு ஒளி்
    குண்டு விழுந்திட்டுது
    அப்பாவைக் காணேல்ல
    குழறி அழுகிறா அம்மா
    பதுங்கு குழி்க்குள்ளும்
    படமெடுக்குது பாம்பு
    முள்வேலியும் அகதிமுகாமுமாய்"
    முகாம்களில் விளையாடும் குழந்தைகள்.//

    இன்றைய எம் ஊரின் யதார்த்தத்தை, அடக்கப்பட்ட உணர்வுகளை உங்களின் கவிதையில் தரிசிக்க முடிகிறது..

    வலிகளை வார்த்தைகளாக்கியுள்ளீர்கள் என்று சொல்வதை விட, அனுபவித்து, எங்கள் துயரங்களுக்கு நிஜ வடிவம் கொடுத்து எழுதியவர் எழுதியது போல அப்பளுக்கற்ற உண்மைகளைக் கவிதையில் படைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  20. விளையாட விடுங்கள்
    எங்கள் குழந்தைகளின்
    கண்களைக் கட்டாமலே//

    இவ் வரிகள் பல ஆயிரம் சேதிகளைச் சொல்லுகின்றன, இடம் பொருள் ஏவல் கருதி, என் பின்னூட்டங்களைச் சுருக்கிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  21. அடையாளம் காண கண்கள் திறந்திருந்தால்
    மட்டும் போதாது
    நெஞ்சின் கனல் அணையாதிருக்க
    இதுபோன்ற கவிதைகளும் அவசியம் வேண்டும்
    நீறு பூக்க விடாதிருக்க இதுபோன்ற
    கவிஞ்ர்களும் கவிதைகளும்
    அதிகம் இப்போது நமக்குத் தேவை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. முருக்கேறுது கவிதையை வாசிக்க வாசிக்க

    ReplyDelete
  23. பிணமாக விழுந்தாலும்
    இனமாக விழுவோம் என்று கடைசிமட்டும் இலட்சியத்துடன் இருந்தவர்களுக்கு அஞ்சலிகள்

    ReplyDelete
  24. வலிகள் நிறைந்த கவிதை..

    ReplyDelete
  25. வலிகளும் வேதனைகளும் விரைவில் இனியாவது நீஙகட்டும்.

    ReplyDelete
  26. முடிவே இல்லையா இந்த அவலத்துக்கு ஹேமா

    ReplyDelete
  27. நொந்த மனதின் வேதனை,

    அரத்த உறவின் துடிப்பு,

    கறுமப் படும் சனங்களின் துன்பம்,

    உங்கள் வரிகள் எடுத்துக் காட்டும்.

    துன்பத்தில் உழலும் சனங்களின்

    வேதனைகளை உணரும் தன்மை

    (empaty) இல்லாத மனத்தை

    மனிதம் என்ற கணக்கில் எடுக்கேலாது.

    ReplyDelete
  28. இலங்கை என்றாலே சோகம் தானா? வலிக்கிறது.

    ReplyDelete
  29. ஹேமா! உன் கவிதையில் தெரித்திருக்கும் ரத்தத்தை எம் கண்ணீர் கழுவிடுமா..

    மனம் வெதும்புகிறது

    ReplyDelete
  30. அக்கா உங்களின் வலி மிகுந்த வரிகள் என் கண்களில் ஊற்றெடுக்க வைத்தன நாளைய நம் கனவு மலரும் உலகின் எந்த விடுதலை போராட்டமும் தோற்றது இல்லை என்பர் என் மதிப்பிற்குரிய நண்பர் . எல்லாவற்றிக்கும் விடைகிடைக்கும் தமிழீழம் மலரும்.

    ReplyDelete
  31. //சொல்லாமலே புரிகிறது
    நம்மைப் பிடித்த நோய்கள்
    இவர்களென.//
    அடுத்த தலைமுறைக்கும் அவசியம் சொல்லித்தான் வளர்க்க வேண்டும், சுதந்திரத்தின் தேவையை...!இந்த கொடூரங்கள் எப்போது முடிவுக்கு வரும்?

    ReplyDelete