Monday, May 09, 2011

எம் கையில் எதுவுமில்லை...

காற்றின் தெறிப்பில்
காதில் படும் அவலங்கள்.
கண்ணெதிரே
கடந்து நடக்கும் மனிதர்கள்.
முத்தமென்று நடுத்தெருவில்
எச்சில் அப்பும் அட்டைகள்.
வியர்வை மணத்திற்காய்
முறைக்கும் கண்கள்.

குழந்தைகளின் கூச்சல்கள் அழுகைகள்.
நடுநிலையில்லா ஊடகங்களின் உளறல்கள்.
போகிற போக்கில் கண்டதைக் காணாமல்
கேட்டதைக் கேளாமலேயே
நேரத்தை அளந்து ஓடும் கால்கள்.
இடையே நானும் ...
கடந்து போக வேண்டியதாய் இருக்கிறது.

தவற விட்ட புகையிரதத்திற்காக
புகையிரதத்தைத்
திட்டித் தீர்க்கும் பயணிகள்.
பொது இடங்களில் கைபேசியோடு
பைத்தியமாய் வளவளக்கும் இளசுகள்.
கவர்ச்சியாய் இடையசைக்கும் நாகரீகங்கள்.

பேரூந்துக்குள் பறையடிக்கும்
பக்கத்து வீட்டு அலசல்கள்.
தீமைகளைத் திரையிட்டுத்
துயருக்கு ஆடையிட்டு
பம்மாத்துக் காட்டும் பூதங்கள்.

யார் எப்படித்தான்
எதைப்பற்றிக் கருத்துரைத்தாலும்
அவரவர் திசை
அவரவர் கால்கள் வழியே.
எரிச்சலாய்தான் இருக்கிறது.
என்றாலும்....
எதுவுமே எம் கையில் இல்லை.

திருப்தியாய் இல்லாவிடிலும்
வாழ்வின் சக்கரங்கள் சுழன்று
எங்களை அரைத்தபடிதானே!!!

ஹேமா(சுவிஸ்)

54 comments:

  1. ஒரு சின்ன விடுமுறை எடுத்துவிட்டேன்.எல்லோரும் சுகம்தானே.நானும் சுகம்.இன்னும் தொடர்ந்துகொள்வோம் நண்பர்களே.

    ஜோதிஜி,நடா,தவறு,ரதி....டெம்ளேட் மாத்துவதில் பெரும் சிரமம்.அதாவது என் அத்தனை கவிதைகளின் எழுத்துக்களின் நிறங்கள் படங்களின் நிறங்கள் எல்லாமே மாற்றவேண்டி வரும்.எவ்வளவு பெரிய வேலை.
    அதோடு கருப்பு பிடிக்கும்.அடம் பிடிச்சு வேணும்ன்னு செய்துகொண்ட டெம்ளேட்.என்ன செய்யச் சொல்றீங்க இனியும் என்னை !

    என் கையில் எதுவுமில்லை...

    ReplyDelete
  2. கவிதை நல்லா இருக்கு ஹேமா

    ReplyDelete
  3. அசத்தல் கவிதை...

    இன்றை சமுகத்தில் நடக்கும் சமுக அவலங்கள் அழகான கவிதையில் அரங்கேரியிருக்கிறது..

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்க்கை இயந்திரமா போச்சா
    இயந்திரதுக்குல வாழ்க்கை போச்சா

    இயந்திரதுக்குலதான் வாழ்கை போச்சு
    போயிட்டம் சுற்றி சுழண்டு கடிசியா ஒரு முடிவுப்பொருளா வருவம்

    வங்கவாங்க பழைய களையுடன்

    ReplyDelete
  5. போகின்ற போக்கில் போய்க்கிட்டு இருப்போம். குனிவுகளும் கொடுக்கல்களும் தனிமைகளும் தளர்வுகளும்.. என்று தொடரும் நிலமையுடன் வாழப் பழகிக்கொள்வோம்.
    நல்ல மற்றொரு வலியில் விளைந்த வரிகள்.

    ReplyDelete
  6. விடுப்பெடுத்துட்டு, போகிற போக்கில ஒரு கவிதைய போட்டுட்டு “எம் கையில் எதுவுமில்லை...” எனச் சொல்லி தப்பித்துக் கொள்ளும் வித்தையை நன்றாக கற்றிருக்கிறீர்கள்.

    ’நடப்பு’க் கவிதை !!!

    ReplyDelete
  7. நல்ல கவிதை ஹேமா.

    //யார் எப்படித்தான்
    எதைப்பற்றிக் கருத்துரைத்தாலும்
    அவரவர் திசை
    அவரவர் கால்கள் வழியே.//

    அருமையான வரிகள்.

    ReplyDelete
  8. உண்மை தான். யார் யாரோவால் தீர்மானிக்கப்படும் வாழ்வில் "எம் கையில் எதுவுமில்லை தான்." நல்லதொரு கவிதை.

    ReplyDelete
  9. நல்லாருக்கு ஹேமா

    ReplyDelete
  10. தவற விட்ட புகையிரதத்திற்காக
    புகையிரதத்தைத்
    திட்டித் தீர்க்கும் பயணிகள்.
    பொது இடங்களில் கைபேசியோடு
    பைத்தியமாய் வளவளக்கும் இளசுகள்.
    கவர்ச்சியாய் இடையசைக்கும் நாகரீகங்கள்.


    யதார்தமாயிருக்கு

    ReplyDelete
  11. கொல வெறியோடு தான் உள்ளே வந்தேன். ஆனால் சிரிக்க வச்சுட்டீங்க. சொகமா இருக்கீகளா?

    ReplyDelete
  12. இன்றைய சமூகத்தை தான் கவிதையில் குறிப்பிட்டுள்ளீர்கள். அதிகமாக நம் புலம்பெயர்ந்த நாட்டு சூழலை எனக்கு கண் முன்னே காட்டி நிற்கிறது இந்த கவிதை..

    ReplyDelete
  13. "அவரவர் திசை
    அவரவர் கால்கள் வழியே." நன்றாக இருக்கிறது ஹேமா.

    ReplyDelete
  14. ஒரு வேளை விடுமுறை எடுத்த காரணத்தால் சுற்றியுள்ள வாழ்க்கையை சுகமாய் ரசித்து அதை கவிதையாய் படைக்க முடிந்துள்ளது போலும்.

    ஒரு வகையில் நாம் அணைவருமே சக்கரத்தில் நசுக்கப்பட்ட சாறு போன பழங்கள் தான். கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் உலக அச்சு அதன் போக்கிலேயே தான் போய்க் கொண்டே தான் இருக்கும்.

    உணர்ந்தவர்கள் பாக்கியவான்கள்
    உள்வாங்கியவர்கள் யோக்கியவான்கள்
    இதில் இருந்து பாடம் பெற்றவர்கள் ஹேமா போன்றவர்கள்.

    ReplyDelete
  15. நீங்கெல்லாம் இந்தியாவின் சில நகரங்களில் வாழ்ந்து பார்க்கனும்... முடிய பிச்சுகிட்டு எதாவது ஆஸ்பத்திரில தான் இருப்பீங்க...

    அதனால சலிச்சுக்கறது விட்டுட்டு ஒரு நல்ல காபி போட்டு குடிங்க...

    அப்புறம் கவித நல்லாயிருக்கு இந்த சலிப்பு எல்லார்குள்ளேயும் இருக்கறதுதேன்...

    கையில எழுதுவோ ஹார்ட்டின் மாதிரி தொங்கிட்டுயிருக்கு... ஆனா கையில எதுவுமில்லைங்றீங்க... சோக்கா டபாய்கிறீங்களே

    ReplyDelete
  16. கவிதை அசத்தல்!

    ReplyDelete
  17. வாக்குகள் மட்டுமே இப்போது வழங்க முடியும், பின்னூட்டங்களோடு இன்று இரவு வலைக்கு வருகிறேன்.

    ReplyDelete
  18. என்ன ஹேமா இப்படி கைய விரிச்சிட்டிங்க...பராவாயில்ல...

    நடந்து கொண்டே இருப்போம் வாங்க நம் கையில் எதுவும்மில்லை தான்.

    ReplyDelete
  19. வ‌ரிக‌ள் ந‌ல்லாயிருக்கு ஹேமா..

    ந‌ல‌மா..

    ReplyDelete
  20. //யார் எப்படித்தான்
    எதைப்பற்றிக் கருத்துரைத்தாலும்
    அவரவர் திசை
    அவரவர் கால்கள் வழியே.
    எரிச்சலாய்தான் இருக்கிறது.
    என்றாலும்....
    எதுவுமே எம் கையில் இல்லை.///

    அஹா அருமை அருமை....

    ReplyDelete
  21. எங்கடா ஹேமாவைக் காணோமேன்னு பார்த்தேன்.

    பெண் எழுத்து நிறம் அழகாய் இருக்கிறது.அதனையே தொடரலாமே!

    ReplyDelete
  22. வரிவரியாய்... கவிதையின் யதார்த்த வெளிப்பாடுகளுக்குள் பயணிக்கும் போதே மிக அனாயசமாக வந்து சேர்கிறது இந்த சித்தாந்தம்...

    //அவரவர் திசை
    அவரவர் கால்கள் வழியே.//

    தேர்ந்தெடுத்த வார்த்தைகளோடு ஒரு நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  23. எதுவும் நம் கையில் என்ற வலிமை...அது ஒரு காலம்!

    ஐ.நா அறிக்கை வந்தும் எம் கையில் எதுவுமில்லை என்ற சோகம் நிகழ் காலம்:(

    (இந்த கவிதைக்கு பொழிப்புரை தேவையில்லாமலே பொருள் விளங்குகிறது)

    ReplyDelete
  24. காற்று எப்போதும் ஒரே திசையில் வீசுவதில்லை .மழை ஒரே இடத்தில் பெய்வதில்லை .காலம் ஒருநாள் மாறும் .கருத்து கூறுவதை நாம் நிறுத்தவேண்டாம் ...

    ReplyDelete
  25. இன்னும் கொஞ்சம் செம்மை வேண்டியிருக்கு :)

    ReplyDelete
  26. பிரமாதம்...

    ReplyDelete
  27. //எம் கையில் எதுவுமில்லை...//

    ஒண்ணும் தேறாதா ஹேமா ?

    ReplyDelete
  28. சின்ன விடுமுறைக்கு பின் ..நீங்கள் நலமா ./யார் எப்படித்தான்
    எதைப்பற்றிக் கருத்துரைத்தாலும்
    அவரவர் திசை
    அவரவர் கால்கள் வழியே.//
    இது தான் வெளிநாட்டு வாழ்கையின் யதார்த்தம் .நமக்கு எதெல்லாம் எரிச்சலோ நம்ம அடுத்த சந்ததிக்கு
    அதெல்லாம் take it easy policy .
    கவிதை நல்லா இருக்கு .

    ReplyDelete
  29. //திருப்தியாய் இல்லாவிடிலும்
    வாழ்வின் சக்கரங்கள் சுழன்று
    எங்களை அரைத்தபடிதானே!!!//

    வணக்கம் ஹேமா. நலமா?

    வழக்கம்போல கவிதை அழகு அருமை

    ReplyDelete
  30. இயந்திரமயமான வாழ்வில் நம் கையில் எதுவும் இல்லா செக்கு மாட்டு வாழ்க்கையைச் சொல்ல அழகிய வரிகளுடனான கவிதையுடன் விடுமுறை முடித்து வந்து விட்டீர்களா...!

    ReplyDelete
  31. அருமையாக எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. என்னமா எழுதறீங்க,பாராட்டுக்கள்.மிக அருமை.புகை ரதம் இந்த வார்த்தை இங்கு தான் பார்க்கிறேன்..

    ReplyDelete
  33. யதார்த்தத்தை கூறும் வரிகள் ..
    சொல்லிய விதமும் சிறப்பு ...

    ReplyDelete
  34. அழகான ஆழமான இன்றைய பரபரப்பான வாழ்க்கையை உங்கள் கவிதை வெளிப்படுத்துகிறது தோழி!

    ReplyDelete
  35. ||திருப்தியாய் இல்லாவிடிலும்
    வாழ்வின் சக்கரங்கள் சுழன்று||

    ....ம்ம்ம்ம்ம்ம்!

    ReplyDelete
  36. //திருப்தியாய் இல்லாவிடிலும்
    வாழ்வின் சக்கரங்கள் சுழன்று
    எங்களை அரைத்தபடிதானே!!!//

    இந்த மூன்று வரிகளுக்கு முன்னேயே கவிதை அழகாக முடிந்துவிடும்போது இது அதிகமாக வளவளப்பது போல ஓர் உணர்வு ஹேமா. முடியுமெனில் கத்தரியுங்கள்.


    இடைவேளைக்குப் பிந்தைய முதல் கவிதை முதல்த் தரமாய் இருக்கிறது.

    தொடருங்கள் ஹேமா.

    ReplyDelete
  37. எதார்த்தம் தெறிக்கும் வார்த்தைகள்...

    தமிழில் எழுத வேண்டும் என்ற கொள்கை இருப்பவர் போலும்... புகையிரதங்கள், கைபேசி என்பதெல்லாம் மக்களைப் போய் சேர வேண்டுமென்று அழகாய் கவிதையில் புகுத்தி உள்ளீர்கள்... செல்போன் என்று சொல்லி இருந்தால் இன்னும் பலரை எளிதில் சென்றடைந்திருக்கும்... ஆனால் கவிதையை நூறில் ஒன்றாக ஆக்கி இருக்கும்... தனித்துவமாக தெரியவும் தமிழ் வார்த்தைகள் உதவுகிறது... :)))

    ReplyDelete
  38. ரேகை கூடவா இல்லை??? அய்யோ பாவம்....

    ReplyDelete
  39. போகிற போக்கில் கண்டதைக் காணாமல்
    கேட்டதைக் கேளாமலேயே
    நேரத்தை அளந்து ஓடும் கால்கள்.
    இடையே நானும் ...
    கடந்து போக வேண்டியதாய் இருக்கிறது.


    நானும் அனுபவித்த உண்மை.

    மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  40. அடடா! நானும் கூட விடுமுறை எடுத்திருந்தேன்..

    ஹேமா! எனக்கும் கருப்பு தான் பிடிச்ச கலரு!

    கவிதை அழகு... குறையில்லை..

    எம் கையில் எதுவும் இல்லை என்பதை ஏற்க மனம் ஒப்பவில்லை ஹேமா!

    காலமும் நேரமும் சேரும் போது கைகள் வலுப்பெறும். உலகத்தை உள்ளங்கையில் அடக்கும் ஹேமா!

    ReplyDelete
  41. ஹேமா, டெம்பிளேட் மாற்றமுடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.

    கவிதையும், படமும் அசத்தல்

    ReplyDelete
  42. //அவரவர் திசை
    அவரவர் கால்கள் வழியே

    கடந்து போக வேண்டியதாய் இருக்கிறது.

    எதுவுமே எம் கையில் இல்லை.

    திருப்தியாய் இல்லாவிடிலும்
    வாழ்வின் சக்கரங்கள் சுழன்று
    எங்களை அரைத்தபடிதானே!!!//

    நல்லாயிருக்கு ஹேமா...

    //என்ன செய்யச் சொல்றீங்க இனியும் என்னை !//

    நிறைய எழுதத்தான்...!

    ReplyDelete
  43. காற்றின் தெறிப்பில்
    காதில் படும் அவலங்கள்.
    கண்ணெதிரே
    கடந்து நடக்கும் மனிதர்கள்.
    முத்தமென்று நடுத்தெருவில்
    எச்சில் அப்பும் அட்டைகள்.
    வியர்வை மணத்திற்காய்
    முறைக்கும் கண்கள்.//

    இணையங்களின் ஊடாகவும், காற்றலையின் வாயிலாகவும் எங்கள் ஊர் அவலங்கள் மட்டுமே உங்களுக்கு சேதிகளாய் வருகின்றன எனும் தொனியிலும்,

    புலம் பெயர்ந்து நீங்கள் வாழும் உங்கள் புகுந்த நாட்டின் குளிர் காற்றோடு கலந்து வந்து காதோரம் உரசிச் செல்வதனைச் சகிக்க முடியாதவராய் அவலங்கள் எனும் வகையிலும் நீங்கள் முதல் இரு வரிகளை வர்ணித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  44. கண்ணெதிரே
    கடந்து நடக்கும் மனிதர்கள்.//

    இயந்திர மயமான உலகத்தில் மனிதர்களும் வேகமாகவே இயங்குகிறார்கள் என்பதனை இலாவகமான மொழியினூடாகச் சொல்லுகிறார் கவிதாயினி.


    //முத்தமென்று நடுத்தெருவில்
    எச்சில் அப்பும் அட்டைகள்.
    வியர்வை மணத்திற்காய்
    முறைக்கும் கண்கள்.//

    மேற்கத்தைய நாகரிகம், ஒளிவு மறைவற்றதாக இருந்தாலும், கலாச்சார மரபில் வந்த தமிழ் கவிஞரின் உள்ளத்து உணர்வோ இதனைக் கண்ணுற்று... பார்த்து சகிக்க முடியாத உணர்வினை அடைந்து கோபங் கொள்கிறது. இங்கே குறியீட்டு வடிவில் நடு வீதியில் முத்தமிடு மனிதர்களை அட்டைகளுக்கு அல்லது அஃறிணைப் பொருளுக்கு ஒப்பிட்டு விளித்துள்ளார் கவிஞர்,

    ReplyDelete
  45. குழந்தைகளின் கூச்சல்கள் அழுகைகள்.
    நடுநிலையில்லா ஊடகங்களின் உளறல்கள்.
    போகிற போக்கில் கண்டதைக் காணாமல்
    கேட்டதைக் கேளாமலேயே
    நேரத்தை அளந்து ஓடும் கால்கள்.
    இடையே நானும் ...
    கடந்து போக வேண்டியதாய் இருக்கிறது//

    இங்கே கால்கள்- இடையே நானும் இவ் இடத்தில் கொஞ்சம் திருத்தம் செய்தால், கவிதைக்கு இன்னும் அதிகளவான அர்த்தம் புலப்படும் சகோதரம்.

    இவற்றுக்கிடையே நானும்...

    இடையே என வருகையில் நேரத்தைப் பிடிக்க ஓடும் கால்களுக்கு நடுவில் நீங்கள் இருப்பதாகவோ அல்லது நிற்பதாகவோ பொருள் துலங்கும், ஆனால் இவற்றுக்கு இடையில் என வருகையில்,
    இத்தனை காட்சிகளுக்கும் நடுவில் அல்லது இடை நடுவில் உங்களின் உணர்வுகளும் எனப் பொருள் புலப்படும் சகோதரம்,.

    ReplyDelete
  46. குழந்தைகளின் கூச்சல்கள் அழுகைகள்.
    நடுநிலையில்லா ஊடகங்களின் உளறல்கள்.
    போகிற போக்கில் கண்டதைக் காணாமல்
    கேட்டதைக் கேளாமலேயே
    நேரத்தை அளந்து ஓடும் கால்கள்.
    இடையே நானும் ...
    கடந்து போக வேண்டியதாய் இருக்கிறது.//

    இயந்திரமயமான உலகின் வேகத்திற்கேற்றாற் போல ஈடு கொடுத்து நடக்கும் மனிதர்களின் உணர்வுகளை இவ் வரிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
    ஊடகங்களின் உண்மைத் தன்மையினை அழகாக விளித்திருக்கிறீர்கள்.

    //
    போகிற போக்கில் கண்டதைக் காணாமல்
    கேட்டதைக் கேளாமலேயே//

    இவ் வரிகளில் தமிழனின் சுய நலம் சார்ந்த உணர்வும் வெளிப்பட்டு நிற்கிறது.

    ReplyDelete
  47. தவற விட்ட புகையிரதத்திற்காக
    புகையிரதத்தைத்
    திட்டித் தீர்க்கும் பயணிகள்.
    பொது இடங்களில் கைபேசியோடு
    பைத்தியமாய் வளவளக்கும் இளசுகள்.
    கவர்ச்சியாய் இடையசைக்கும் நாகரீகங்கள்//

    ஒரு வர்ணனை அமைப்பில், காட்சிகளுக்கு உயிர்பூட்டும் வகையில் இவ் வரிகள் இங்கே வந்து விழுந்திருக்கின்றன.

    இடையசைக்கும் நாகரிகங்கள்- பெண்களை நாகரிகத்தின் உச்சாணியாக காட்டுகிறீர்களா இல்லை, பெண்களின் உடையினை வைத்து அவர்களின் இடைகள் வெளித் தெரிகின்றன எனச் சொல்லிக் கவிஞர் நாகரிகத்தை நையாண்டி பண்ணுகிறாரா புரியவில்லை.
    இது கவிஞருக்குத் தான் வெளிச்சம்.

    ReplyDelete
  48. பேரூந்துக்குள் பறையடிக்கும்
    பக்கத்து வீட்டு அலசல்கள்.
    தீமைகளைத் திரையிட்டுத்
    துயருக்கு ஆடையிட்டு
    பம்மாத்துக் காட்டும் பூதங்கள்.//

    நம்ம ஊரில் தான் பேருந்துக்களுகுள் அரட்டை என்றால், புலத்திலுமா,
    தமிழர்கள் திருந்தவே மாடார்கள்.
    ஹி...ஹி...

    துயருக்கு ஆடையிட்டு
    பம்மாத்துக் காட்டும் பூதங்கள்.//

    போராட்டத்தின் மீது வர்ணம் பூசி அதனை ஓவியமாக்கித் தமது இருப்பை நிலை நிறுத்த முயல்வோர் மீது நீங்கள் கொடுக்கும் சாட்டையடி இது.

    ReplyDelete
  49. எதுவுமே எம் கையில் இல்லை//

    வாழ்வின் அர்த்தங்களை உணர்ந்து தெளிந்தவரின் வரிகளாய், காலச் சக்கரத்தின் பிடிமானங்களை உய்தறிந்து கொண்ட உணர்வின் வரிகளாய் கவிதையூடாக கால ஓட்ட மாற்றத்தினூடே கரைந்து போகும் எம் வாழ்க்கையினையும் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  50. காற்றின் தெறிப்பில்
    காதில் படும் அவலங்கள்.
    கண்ணெதிரே
    கடந்து நடக்கும் மனிதர்கள்.
    முத்தமென்று நடுத்தெருவில்
    எச்சில் அப்பும் அட்டைகள்.
    வியர்வை மணத்திற்காய்
    முறைக்கும் கண்கள்.//

    இணையங்களின் ஊடாகவும், காற்றலையின் வாயிலாகவும் எங்கள் ஊர் அவலங்கள் மட்டுமே உங்களுக்கு சேதிகளாய் வருகின்றன எனும் தொனியிலும்,

    புலம் பெயர்ந்து நீங்கள் வாழும் உங்கள் புகுந்த நாட்டின் குளிர் காற்றோடு கலந்து வந்து காதோரம் உரசிச் செல்வதனைச் சகிக்க முடியாதவராய் அவலங்கள் எனும் வகையிலும் நீங்கள் முதல் இரு வரிகளை வர்ணித்துள்ளீர்கள்.

    கண்ணெதிரே
    கடந்து நடக்கும் மனிதர்கள்.//

    இயந்திர மயமான உலகத்தில் மனிதர்களும் வேகமாகவே இயங்குகிறார்கள் என்பதனை இலாவகமான மொழியினூடாகச் சொல்லுகிறார் கவிதாயினி.


    //முத்தமென்று நடுத்தெருவில்
    எச்சில் அப்பும் அட்டைகள்.
    வியர்வை மணத்திற்காய்
    முறைக்கும் கண்கள்.//

    மேற்கத்தைய நாகரிகம், ஒளிவு மறைவற்றதாக இருந்தாலும், கலாச்சார மரபில் வந்த தமிழ் கவிஞரின் உள்ளத்து உணர்வோ இதனைக் கண்ணுற்று... பார்த்து சகிக்க முடியாத உணர்வினை அடைந்து கோபங் கொள்கிறது. இங்கே குறியீட்டு வடிவில் நடு வீதியில் முத்தமிடு மனிதர்களை அட்டைகளுக்கு அல்லது அஃறிணைப் பொருளுக்கு ஒப்பிட்டு விளித்துள்ளார் கவிஞர்,

    குழந்தைகளின் கூச்சல்கள் அழுகைகள்.
    நடுநிலையில்லா ஊடகங்களின் உளறல்கள்.
    போகிற போக்கில் கண்டதைக் காணாமல்
    கேட்டதைக் கேளாமலேயே
    நேரத்தை அளந்து ஓடும் கால்கள்.
    இடையே நானும் ...
    கடந்து போக வேண்டியதாய் இருக்கிறது.//

    இயந்திரமயமான உலகின் வேகத்திற்கேற்றாற் போல ஈடு கொடுத்து நடக்கும் மனிதர்களின் உணர்வுகளை இவ் வரிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
    ஊடகங்களின் உண்மைத் தன்மையினை அழகாக விளித்திருக்கிறீர்கள்.

    //
    போகிற போக்கில் கண்டதைக் காணாமல்
    கேட்டதைக் கேளாமலேயே//

    இவ் வரிகளில் தமிழனின் சுய நலம் சார்ந்த உணர்வும் வெளிப்பட்டு நிற்கிறது.

    தவற விட்ட புகையிரதத்திற்காக
    புகையிரதத்தைத்
    திட்டித் தீர்க்கும் பயணிகள்.
    பொது இடங்களில் கைபேசியோடு
    பைத்தியமாய் வளவளக்கும் இளசுகள்.
    கவர்ச்சியாய் இடையசைக்கும் நாகரீகங்கள்//

    ஒரு வர்ணனை அமைப்பில், காட்சிகளுக்கு உயிர்பூட்டும் வகையில் இவ் வரிகள் இங்கே வந்து விழுந்திருக்கின்றன.

    இடையசைக்கும் நாகரிகங்கள்- பெண்களை நாகரிகத்தின் உச்சாணியாக காட்டுகிறீர்களா இல்லை, பெண்களின் உடையினை வைத்து அவர்களின் இடைகள் வெளித் தெரிகின்றன எனச் சொல்லிக் கவிஞர் நாகரிகத்தை நையாண்டி பண்ணுகிறாரா புரியவில்லை.
    இது கவிஞருக்குத் தான் வெளிச்சம்.


    பேரூந்துக்குள் பறையடிக்கும்
    பக்கத்து வீட்டு அலசல்கள்.
    தீமைகளைத் திரையிட்டுத்
    துயருக்கு ஆடையிட்டு
    பம்மாத்துக் காட்டும் பூதங்கள்.//

    நம்ம ஊரில் தான் பேருந்துக்களுகுள் அரட்டை என்றால், புலத்திலுமா,
    தமிழர்கள் திருந்தவே மாடார்கள்.
    ஹி...ஹி...

    துயருக்கு ஆடையிட்டு
    பம்மாத்துக் காட்டும் பூதங்கள்.//

    போராட்டத்தின் மீது வர்ணம் பூசி அதனை ஓவியமாக்கித் தமது இருப்பை நிலை நிறுத்த முயல்வோர் மீது நீங்கள் கொடுக்கும் சாட்டையடி இது.

    எதுவுமே எம் கையில் இல்லை//

    வாழ்வின் அர்த்தங்களை உணர்ந்து தெளிந்தவரின் வரிகளாய், காலச் சக்கரத்தின் பிடிமானங்களை உய்தறிந்து கொண்ட உணர்வின் வரிகளாய் கவிதையூடாக கால ஓட்ட மாற்றத்தினூடே கரைந்து போகும் எம் வாழ்க்கையினையும் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  51. வாழ்வின் சக்கரங்கள் எங்களை
    சுழன்று அரைத்த படியே.....
    வார்த்தைகள் ஒவ்வொன்றும்
    உணர்வுகளை டன் கணக்காகச்
    சுமந்து வருகின்றன
    சூப்பர் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. நல்ல கருத்து சொல்லியிருக்கீங்க்க...

    ReplyDelete