Friday, April 22, 2011

வீட்டு ஞாபகம்...

அடிக்கடி
காற்றில் கலந்து வருகிறது
அம்மாவின்...அடியேய்
அப்பாவின்...ஆச்சியா
தங்கையின்...அக்காச்சி

துளையிட்ட இரும்புக் குழாயில்
பாசத்தின் பாவம் குறைந்திருந்தாலும்
தொட்டுவிடலாமென
எட்டும் கைகளில்
மின்சாரத் தொடுப்பு மட்டுமே.

குறுகிக் கசியும்
கனத்த மனதோடு
சமசதுரமாய் நாங்கள்!!!




சொல்ல நினைத்து
தவறிய வார்த்தைகளுக்குள்
அம்மா.

எப்போதும் நினைக்கிறேன்
சொல்லி முடிக்கவென்று
மனதிற்குள் உச்சரித்து
உன்னி வாய்க்குள்
கொண்டுவருமுன்
முத்தமிட்டு தலை தடவி
தன் அலுவல்களோடு.

அம்மா....
நாளையாவது
விடியும் பொழுதில்
பக்கத்தில் நீ!!!


ஹேமா(சுவிஸ்)

66 comments:

  1. ஏக்கம் தளும்பும் யதார்த்த கவிதை...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. வழக்கமான அசத்தல் கவிதை சூப்பர்....

    ReplyDelete
  3. அய்யய்யோ வடையை புடுங்கிட்டானே....

    ReplyDelete
  4. தயை கூர்ந்து இந்த கருப்பு பின் புலத்தை மாற்ற வழியுண்டா? உள்ளே வர சாவடிக்குது. கவிதையை பாராட்டக்கூட எழுதமுடியல?

    ReplyDelete
  5. வீட்டு ஞாபகம்...
    மனதை தீண்டும் தலைப்பு...

    கவிதை... நினைவுகளை தூண்டும் அழகிய ஞாபகங்கள்...

    ReplyDelete
  6. கனமாய்...
    அதே சமயம் அசத்தலாய்!

    ReplyDelete
  7. அடிக்கடி
    காற்றில் கலந்து வருகிறது
    அம்மாவின்...அடியேய்
    அப்பாவின்...ஆச்சியா
    தங்கையின்...அக்காச்சி//

    ஊர் நினைவும், எங்கள் வட்டார மொழிகள் மீதான பிடிப்பும் வந்து விட்டது போல இருக்கே....

    ReplyDelete
  8. துளையிட்ட இரும்புக் குழாயில்
    பாசத்தின் பாவம் குறைந்திருந்தாலும்
    தொட்டுவிடலாமென
    எட்டும் கைகளில்
    மின்சாரத் தொடுப்பு மட்டுமே.
    குறுகிக் கசியும்
    கனத்த மனதோடு
    சமசதுரமாய் நாங்கள்!!//

    சுத்தி வளைச்சு, நம்ம சகோ என்ன சொல்ல வாறா என்றால்,
    குறியீடுகளை அதிகமாக இவ் இடத்தில் கையாண்டிருக்கிறா நம்ம கவிதாயினி.

    தூர தேசத்தில் இருக்கும் தன்னைத் தன் பெற்றோருடன் ஒன்று சேர்க்கும் ஒரு கருவியாக தொலை பேசி இருந்தாலும், அதனூடகா உரையாடும் வேளைகளில் பாசத்தினை நிஜமான உணர்வின் வெளிப்பாடாய் வெளிப்படுத்த முடியாதாம்.

    ஒரு டிக்கற்றை புக் பண்ணி, ஊருக்கு வந்திட்டுப் போறது;-))

    அவ்.........

    ReplyDelete
  9. சொல்ல நினைத்து
    தவறிய வார்த்தைகளுக்குள்
    அம்மா//

    நெஞ்சைக் கனக்கச் செய்து, உணர்வின் வெளிப்பாடாய் உருவகித்திருக்கும் வரிகள் இவை.

    ReplyDelete
  10. அம்மா....
    நாளையாவது
    விடியும் பொழுதில்
    பக்கத்தில் நீ!!//

    நாளை உன் பக்கத்தில் வாழ்வேன் எனும் எதிர்பார்ப்புக்களோடு கவிதாயினி கவிதையினை முடித்திருக்கிறா.

    ReplyDelete
  11. வீட்டு ஞாபகம்...
    இறக்கைகளை விரித்து தூர தேசம் பறந்து சென்றாலும், மீண்டும் தன் கூட்டிற்கு வந்து தாய்ப் பறவையுடன் கொஞ்சி மகிழ வேண்டும் எனும் எண்ணத்தோடும், ஊர்க் காற்றைச் சுவாசிக்க வேண்டும் எனும் நினைவுகளோடும் நகர்ந்து செல்லும் ஒரு ஜீவனின் உள்ளத்து உணர்வலைகளாய் இங்கே பிரவாகித்திருக்கிறது.

    ReplyDelete
  12. என்ன ஹேமா வீட்டு ஞாபகம் வந்திட்டுது போல!!

    ReplyDelete
  13. அம்மா....
    நாளையாவது
    விடியும் பொழுதில்
    பக்கத்தில் நீ!!!//////////

    உங்கள் கனவு நனவாகட்டும்! ஸ்பொன்சர் பண்ணி கூப்பிடுங்கோ

    ReplyDelete
  14. அருமையான கவிதை ஹேமா! ஏக்கத்துடன்! :)

    ReplyDelete
  15. அருமை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அது வீட்டு ஞாபகம் மட்டுமல்ல ஹேமா. நாட்டின் ஞாபகமும் கூட.

    நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் நாட்களல்லவா அவை?

    ReplyDelete
  17. அடிக்கடி
    காற்றில் கலந்து வருகிறது
    அம்மாவின்...அடியேய்
    அப்பாவின்...ஆச்சியா
    தங்கையின்...அக்காச்சி//

    இவங்க எல்லாம் வேற எப்படியும் கூப்பிடமாட்டாங்களா.?ஹிஹி

    ReplyDelete
  18. துளையிட்ட இரும்புக் குழாயில்
    பாசத்தின் பாவம் குறைந்திருந்தாலும்
    தொட்டுவிடலாமென
    எட்டும் கைகளில்
    மின்சாரத் தொடுப்பு மட்டுமே.//

    முதல்ல ஒண்ணும் புரியல.. அப்பரம் போனா இருக்கலாமோனு தோணுச்சு.. ஆனா மின்சார தொடுப்பு.?? இப்ப நிரூபன் கொடுத்த விளக்கம் போன் தான் போல என உறுதியாக்கிடுச்சு..

    ReplyDelete
  19. சொல்ல நினைத்து
    தவறிய வார்த்தைகளுக்குள்
    அம்மா.//

    அட அப்படியெல்லாம் சொல்லகூடாது.. சிஸ்டம் முன்னாடி இருந்துகிட்டே சொல்லுங்க.. அம்மா.. அம்மா.. அம்மா.. உரக்க கத்துங்க அம்ம்ம்மா...

    ReplyDelete
  20. அம்மா....
    நாளையாவது
    விடியும் பொழுதில்
    பக்கத்தில் நீ!!!//

    அட இதுக்கெல்லாம் கவலைபட்டுகிட்டு.. ஒரு டிக்கெட்ட போட்டு கிளம்பிடவேண்டியது தானே.!!

    ReplyDelete
  21. புலம் பெயர்ந்த பெண்களின் தவிப்பை உணர்த்துகிறது உங்கள் கவிதை !
    அம்மா அருகில் இருக்கும் போது புரியாத பாசம் புலம் பெயர்ந்தபின் அதிகம் நேசிப்புக்கு ஆளாகும் ஜீவன் காலம் எத்தனைபேரை கடல் கடத்திவிட்டது.! --


    @நிரூபன் உடனே டிக்கட் போட்டுவர  இது என்ன கொழும்பு -யாழ் பஸ்பயணமா!வலிகளும் வேதனையும் தரும் பயணங்கள் புலம்பெயர் ஜீவன்கள் தாய்வீடு போவது!

    ReplyDelete
  22. தொட்டுவிடலாமென
    எட்டும் கைகளில்
    மின்சாரத் தொடுப்பு மட்டுமே.//
    வீட்டு ஞாபகம்..அருமை."

    ReplyDelete
  23. //அம்மா....
    நாளையாவது
    விடியும் பொழுதில்
    பக்கத்தில் நீ!!!//

    அம்மா சொல்லுறதை கேளுங்க முதல்ல

    ReplyDelete
  24. ஏக்கம் அப்படியே கண்முன்னே

    ReplyDelete
  25. பிகாசோவைக் காணோமேன்னு நினைச்சேன்.ரொம்ப நல்லாவே புரியுது ஹேமா!நான் ஒன்னும் அவ்வளவு மாங்கா மடையன் இல்ல:)

    நடாவுக்கு புரியணுமின்னே இந்த நடையா?

    நீங்க வழக்கமா சொல்லும் முறையிலே கவியுங்க.விடுகதைக்கு விடை கண்டுபிடிப்பதும் சுவராசியமானதுதானே!

    ReplyDelete
  26. வீட்டு ஞாபகம் கவிதையில் மனதில் இருத்திட்டு.
    இயல்பான எழுத்துநடையில் என்வீட்டு முற்றத்து மல்லிகையின் வாசனை நுகர்ந்தேன்.
    ஏக்கம் உணர்வு
    எட்ட நிற்கும் அந்த
    தூரம் தெரியுது
    பாசத்தின் தேவையும்

    ReplyDelete
  27. அடிக்கடி
    சரக்கில் கலந்து விடுகிறது
    மிக்ஸிங்காக...வாட்டர்
    சிலசமயம்...பீர்
    கூடவே...சோகம்

    வைக்கப்பட்ட கண்ணாடி டம்ளரில்
    சரக்கின் அளவு அதிகமாகஇருந்தாலும்
    குடித்துவிடலாமென
    எட்டும் வாய்க்கு
    கிட்டியது கட்டிங் மட்டுமே.

    வெடித்து கசியும்
    கனத்த போதையோடு
    நிதானமற்று நாங்கள்!!!

    ReplyDelete
  28. ஆத்தா நீங்க கவிப்பேரரசியாவே இருங்க

    இப்டிலாம் சோகாச்சி எழுதுனா இனி நான் வரமாட்டேன் ஓடிடுவேன்

    கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை டங்கு டங்குன்னு ஆடுச்சாம்

    ReplyDelete
  29. "அம்மா....
    நாளையாவது
    விடியும் பொழுதில்
    பக்கத்தில் நீ!!"
    அம்மா .......எனக்கும் ஊர் நினைவு வந்து விட்டது ........

    ReplyDelete
  30. அம்ம்மா....காந்தமாக

    ReplyDelete
  31. வீட்டை பிரிந்தத சோகம் யாரைத்தான் விட்டுவைத்தது
    கவிதையால் கண் கலங்கி விட்டேன்

    ReplyDelete
  32. கவிதையின் ஊற்று அம்மா

    எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம் அம்மா என்ற கவிதைக்காக

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  33. நல்ல எழுத்து....

    ReplyDelete
  34. வீட்டு ஞாபகம் நெகிழ்ச்சியூட்டுகிறது.
    தமிழ் உதயம் கதை படித்த பாதிப்பால் வந்த கவிதையோ? அங்கே உங்கள் பின்னூட்டம் அப்படித்தான் சொல்லியது!
    அம்மா உங்கள் ஊர் வருகிறார்களா என்ன?
    வசந்தின் எதிர்க் கவிதை ரசிக்கக் கூடியதாய் இருந்தது.

    ReplyDelete
  35. ஞாபகம் வருதே ..... ஞாபகம் வருதே.. பொக்கிஷமாக சேர்த்து வைத்த அம்மா நினைவு ஞாபகம் வருதே,,.

    ReplyDelete
  36. எளியநடையில் நினைவுகளின் வெளிப்பாடு ஹேமா.

    அன்பின் ஜோதிஜி கோரிக்கைக்கு செவிசாய்த்தால் என்ன ஹேமா ?!?!

    ReplyDelete
  37. ஹா, ஹா, ஹா,..... ஜோதிஜியை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  38. //அம்மா....
    நாளையாவது
    விடியும் பொழுதில்
    பக்கத்தில் நீ!!///

    வணக்கம் ஹேமா

    அருமையாய் வரிகள்

    ReplyDelete
  39. அசத்தல் கவிதை ஹேமா.கனமாய் ஞாபகங்கள்.

    ReplyDelete
  40. ஹேமா... அப்படியே என் உணர்வுகளை உங்கள் கவிவாயிலாய்க் காண்கிறேன். அழைப்புகளில் மட்டுமே சிறு வித்தியாசம். அந்தப் பக்கம் முந்தானையெடுத்து கண்ணீர் துடைக்கும் அம்மாவை இந்தப்பக்கம் கைக்குட்டையெடுத்துக் கண்ணீர் துடைக்கும் தருணத்தில் அறிகிறேன். பரஸ்பரம் சந்தோஷக் குசல விசாரிப்புகளுடன் போலியாக நகர்கிறது இன்றையப் பொழுதுகள்.

    உணர்வெழுதிய கவிதைக்கு நன்றி ஹேமா.

    ReplyDelete
  41. ”...உச்சரித்து
    உன்னி வாய்க்குள்
    கொண்டுவருமுன்
    முத்தமிட்டு தலை தடவி..”
    அதுதான் அம்மா. நெகிழ வைத்த வரிகள்.

    ReplyDelete
  42. அக்கா உங்களைபோன்ற வெளியில் இருப்பவர்கள் இப்படித்தான் ஏங்குவார்கள்தங்களின் ஊருக்கு போக தாயின் ஸ்பரிசத்தை நுகர தனி சுகம்தானே ?

    ReplyDelete
  43. அருமை அருமை
    சம சதுரமாய் நாங்கள்..
    ஆழமான வரிகள்
    சம தூரங்கள் மாறுமாயின்
    அது சதுரமாக இல்லாமல் போகுமே
    அந்த தவிர்க்க இயலாத தூரங்கள்தான்
    எத்தனை கொடுமையானது
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. அம்மா ஞாபகம் வந்துருச்சு..:)

    ReplyDelete
  45. நன்று!! நன்று!!!
    ஞாபகக்கிடங்கு சிலசமயம் புன்ன்கையும் கண்ணீரும் கலந்தவை!!! பார்த்து திறவுவது அவரவர் திறம்!!
    குறுகிய வரிகளுள் முடித்திருப்பது தனிச்சிறப்பு!

    ReplyDelete
  46. //துளையிட்ட இரும்புக் குழாயில்
    பாசத்தின் பாவம் குறைந்திருந்தாலும்
    தொட்டுவிடலாமென
    எட்டும் கைகளில்
    மின்சாரத் தொடுப்பு மட்டுமே.//

    இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படிக்கிறேன்... புரியாமல் அல்ல..:)
    தொலைபேசி உரையாடலை இப்படியும் வருணிக்க முடியுமா என்ற வியப்பில்...!!!

    கவிதை மிக அருமை...

    ReplyDelete
  47. கீதாவின் பின்னூட்டம் பாச உணர்வுகளைப் பதிவு செய்யும் இன்னொரு கவிதை.

    ReplyDelete
  48. நல்ல உணர்வுகளை வெளிப்படுத்திய கவிதை..எங்களையும் ஏங்க வைத்து விட்டீர்கள்...

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. ஏக்கம் ஏக்கம் ஏக்கம் மட்டுமே!

    ஹேமா,

    நீ ஏங்கும் ‘ஈழத்தாய்’ நாளைய விடியலில் உன் பக்கத்தில் இருக்கத்தான் போகிறாள்.

    ReplyDelete
  51. Nalla Kavithai Hema,Veetu memories

    ReplyDelete
  52. பாசத்தின் ஏக்கம்.

    ReplyDelete
  53. நலம் தானே தோழர்!

    மின்சார தொடுப்பும் சம சதுரமும் உன்னி வாயும் ...
    சென்று காணும் எண்ணம் உண்டா தோழர் ...
    காணும் தொலைவில் தான் உள்ளனரா அவர்கள் ...
    தொலைவு கடந்துவிட கூடாதா வார்த்தைகளில் ...

    ReplyDelete
  54. 'வீட்டுக்கு'ப் போய்த் திரும்பி வந்து இதைப் படிக்கிறேன்.. மறுபடியும் வீட்டு நினைவு வந்து விட்டதே?

    ReplyDelete
  55. hai dear heama , how are you and kutti nila and family . sorry for late entry ..... pl's ask to kala . i will return as soon as ...

    ReplyDelete
  56. //துளையிட்ட இரும்புக் குழாயில்
    பாசத்தின் பாவம் குறைந்திருந்தாலும்
    தொட்டுவிடலாமென
    எட்டும் கைகளில்
    மின்சாரத் தொடுப்பு மட்டுமே.//

    மனதைத் தொட்ட வரிகள்

    ReplyDelete
  57. தொலைவில் இருந்தாலும், மிகவும் தொலைவில் இருந்தாலும் வீட்டு ஞாபகங்கள் என்றும் நம்மை விட்டு விலகுவதில்லை..

    ReplyDelete
  58. குறியீடான ஆக்கம் . எல்லோருக்கும் விளங்குவதில்லை அவற்றோடு இங்கு முப்பரி மானங்களை கொண்டுள்ளதாக அறிகிறேன் . எப்படி இருந்தாலும் இங்கு விடுதலையும் அவற்றிக்காக ஈகங்களும் பட்டவர்த்தனமாக அறியலாகிறது .தமிழீழம் அல்லது தன்னுணர்வு" பா " எதுவாக இருந்தாலும் வென்றெடுக்க படவேண்டியவைகள் தாம் தமிழீழ மானாலும் உங்களின் தன்னுணர்வு ஆனாலும் வெல்லும் உங்களின் எதிர்காலாம் உங்கள் எண்ணப்படி அமையும்.... அது சரி இந்த இடைவெளி ஏன்?

    ReplyDelete
  59. ஃஃஃஃஃதுளையிட்ட இரும்புக் குழாயில்
    பாசத்தின் பாவம் குறைந்திருந்தாலும்
    தொட்டுவிடலாமென
    எட்டும் கைகளில்
    மின்சாரத் தொடுப்பு மட்டுமேஃஃஃஃஃ

    மிக மிக அர்த்தம் பொதிந்த வரிகள் அக்கா...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

    ReplyDelete
  60. ஹலோ....டொக்...டொக்...எங்கே ஆளைக் காணோம்...? நலம்தானே...

    ReplyDelete
  61. "அடிக்கடி
    காற்றில் கலந்து வருகிறது
    அம்மாவின்...அடியேய்
    அப்பாவின்...ஆச்சியா
    தங்கையின்...அக்காச்சி"

    அருமை அக்கா.

    ReplyDelete
  62. ஏக்கமும் உண்மையும் கலந்த வரிகள்
    உயிரோட்டமாய்...

    ReplyDelete
  63. ஏக்கம்.... சீக்கிரம் அம்மா உங்களோடு வந்துடுவாங்க,,,

    ReplyDelete