Thursday, March 24, 2011

சொல்லெறி...

இளக்காரம்...
கேலி...
நக்கல்...
சுற்றிலும்
ஏக‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ளால்
நிர‌ம்பி மன‌ம் வழிய
நம்ப மறுக்கும் மனம்
குறுகிச் சுருங்க
ச‌ரியாய் நேர்மையாய்
உண்மையாய் வாழ்வ‌தாய்
நினைத்திருந்த
பூச்சடித்த மாய‌முக‌ம்
குற்ற‌ச்சாட்டுக‌ளால் துளைபட
நொடித்த‌ நொடியில்
நொடித்து
நானாய் இருந்த "நான்"
அத‌லபாதாள‌த்துள் கவிழ்ந்து புரள
கூசி அருவ‌ருக்கும்
காறித் துப்பிய
எச்சில் நாற்ற‌த்தோடு
ஈயம் பூசிய இரும்புத் தகரமாய்
கனமேறிய
கண்ணீர்த் துளிகளோடு
தண்டக்காரனின்
ஆழ்ம‌ன நோண்டலால்
நொடிச்சாவில்
தேக‌ம்
உயிரோடு கையில்
பிடிசாம்பலாய்!!!


ஹேமா(சுவிஸ்

63 comments:

  1. கல்லெரியினும் சொல்லெரி
    ஆழ்ந்த காயம் கொடுக்கும் தான்.
    நாவினால் சுட்ட வடுவல்லவா??
    உள் ஆறாது.

    ReplyDelete
  2. சோக்கா எய்திகினிங்கோ

    சரி யார கொன்னுபுட்டிங்கோ?

    ReplyDelete
  3. சரி சரி இனிமே யார் மனசயும் புண்படுத்தாதிங்கோள் :)

    ReplyDelete
  4. கனமேறிய
    கண்ணீர்த் துளிகளோடு\\\\
    ஹேமா நம்மைப் போல் பெண்களின்
    கண்களில் இது வரவே கூடாது
    எதையும் தாங்கும் இதயத்தை
    உருவாக்கிக் கொள்

    ReplyDelete
  5. வார்த்தைகள் சில நேரங்களில், ஏற்படுத்தும் வலிகளை நன்கு வெளிப்படுத்தியுள்ள கவிதை.

    ReplyDelete
  6. சொல்லெறி எப்படிஎல்லாம் மனத்தைப் பாடுபடுத்துகிறது.

    ReplyDelete
  7. சொல்லெறி..... எனக்கும் விழுந்தன...
    கல்லெறிகளாய்
    அதிகம் பேசினால்_திமிராம்
    பேசவில்லையென்றாலும்_திமிராம்,
    வாயாடினால்{விட்டுக் கொடுக்காமல்}_திமிராம்
    விட்டுக் கொடுக்கவில்லையென்றால்_திமிராம்,
    அதிகதிமிர் அழிவுக்கும் காரணமென்று
    சாபம் கூட இட்டார்கள்
    இவைகளைத் தூசென்று தட்டிச்
    சரிசெய்து விடுவேன்
    திமிர் என்றால் என்னவென்று தெரியாத
    எனக்குக் கிடைத்த பட்டம் இது.
    தனியாய் வாழும் எமக்கு இவை
    கவசமாய் இருக்கட்டும்,காக்கட்டும்
    என்றும் விட்டுக் கொடுக்காதே
    மனத் தயிரியத்தை,வாங்கிக்கட்டாதே
    வாயில்லாப்பூச்சியாய்......
    வளையவா! உலகத்தை
    பாரதியின் புதுமையாய்!
    சில வாலிபர்களின்
    குணமறிந்து!!

    தோழி இனி வேதனை வேண்டாம்
    கவியில்....
    எழுந்து நில் துணிவில்!!
    கவி பிறக்கட்டும் களிப்பில்.

    ReplyDelete
  8. >>>அத‌ழ‌பாதாள‌த்துள் கவிழ்ந்து புரள

    அதலபாதாளத்துள்

    ReplyDelete
  9. படிப்பவர்களையும் காயத்தின் வலியை உணர வைக்கிறது கவிதை...

    ReplyDelete
  10. அருமை
    உங்கள் படைப்பில் மட்டும்
    உணர்ச்சிக் குருதியில்
    சொற்கள் வெற்றுச் சடலங்களாய்
    அர்த்தமற்று மிதக்கின்றன
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. ஹேமா செம கோபத்துல இருக்காங்க போல.. நைஸா எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான்

    ReplyDelete
  12. கோபத்தின் ஊடே வரும் வார்த்தைகள் கொஞ்சம் கடினமானதா தான் வரும் ..

    ReplyDelete
  13. கவிதை நன்று ஹேமா.

    ReplyDelete
  14. ஃஃஃஃஈயம் பூசிய இரும்புத் தகரமாய்
    கனமேறிய
    கண்ணீர்த் துளிகளோடுஃஃஃஃ

    அருமையானதொரு உவமிப்பு வரிகள் அருமை...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

    ReplyDelete
  15. மிக மிக மிக அறபுதமான தலைப்பு.

    ReplyDelete
  16. முதல்ல உங்க படம்.. அருமையான தேர்வு.. எழுத்துகளுக்கு ஏற்ப படம்..

    உள்சொல்லிய கருத்து உருவகம் செய்யபட்டிருந்தால் நல்லது.. உண்மையின் உருவமாயிருப்பின் வருந்துகிறேன்..

    ReplyDelete
  17. நாவினால் சுட்ட வடுக்கள்.இதனால் அதிகமானோர்
    பாதிக்கபட்டிருப்பார்கள்.

    அருமையான கவிதை

    ReplyDelete
  18. அழகான
    புள்ளியிலிருந்து
    சுழல துவங்கும்
    பூமி மற்றும் கவிதை

    ReplyDelete
  19. அருமை ஹேமா. எங்கேயிருந்து எடுக்கறீங்க பொருத்தமாய்ப் படம்?

    ReplyDelete
  20. நல்ல கவிதை.நல்ல பதிவு.

    ReplyDelete
  21. வார்த்தை சடுகுடு ஆடும் இது கவிதை!

    ReplyDelete
  22. கல்லெறி காயம்...

    சொல்லெறி ரணம்...

    கவிதை நன்றாக இருந்தது ஹேமா.

    ReplyDelete
  23. வார்த்தை விளையாட்டு ஹேமா மேடம்

    கவிதையில் திருப்பியடித்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  24. பின்னூட்ட சுனாமி "கலா" அவர்களை வழிமொழிகிறேன்

    விஜய்

    ReplyDelete
  25. உணர்வுகளை அழகா வடிச்செடுத்த கவிதை, அபாரம் ஹேமா..

    ReplyDelete
  26. அருமை ஹேமா...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. சகோதரி, அருமையா சொல்லி உள்ளீர்கள்.

    ReplyDelete
  28. என்ன நடக்கு இங்க ?

    ReplyDelete
  29. //என்ன நடக்கு இங்க ?//

    நசர் நீங்களும் நானும்தான் இங்க இப்போ நடக்கிறோம்ன்னு நினைக்கிறேன்..!

    ReplyDelete
  30. கவிதை நல்லாயிருக்கு, ஹேமா.

    ReplyDelete
  31. வணக்கம் சகோதரி, பந்தி பிரிக்கவில்லை. இதற்காக உங்களின் ரசிக உள்ளங்கள் சார்பில் எனது வன்மையான கண்டனங்கள்!

    ReplyDelete
  32. நானாய் இருந்த "நான்’’//

    இந்த நான் எனும் உருவத்தை ஏகப்பட்ட வார்த்தைகளால் வர்ணித்துள்ளீர்கள். வர்ணணை அழகு வழமை போல கலக்கல்.
    அதுவும் இரண்டு முறை படித்துப் பார்த்தேன், படிக்கும் போதே மூச்சு விட முடியாதளவிற்கு சொற்களை இடை வெளி விடாத வண்ணம் கோர்த்துள்ளீர்கள்.

    ReplyDelete
  33. நொடிச்சாவில்
    தேக‌ம்
    உயிரோடு கையில்
    பிடிசாம்பலாய்!!!//

    அட எதுகை அணி ஒத்து வருவது போல இறுதியில் முடித்துள்ளீர்கள்.

    வாழ்வின் முதற் பாகம் தொடக்கம் இறுதிப் பாகம் வரையான சொல்லெறிகளைச் சுட்டி நிற்கிறது கவிதை.

    ReplyDelete
  34. ம்ம் நாவினாற் சுட்ட வடு ஏதுமா..

    ReplyDelete
  35. ஒரு சொல்
    கோபமாக
    சந்தோசமாக
    துக்கமாக
    கேலியாக
    இரக்கமாக
    வெளிவரும்போது
    சில
    இதயங்கள்
    நெருங்கவோ
    விலகவோ செய்கின்றன....

    ReplyDelete
  36. கவிதை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  37. \\நொடித்த‌ நொடியில்
    நொடித்து
    நானாய் இருந்த "நான்"
    அத‌லபாதாள‌த்துள் கவிழ்ந்து புரள
    கூசி அருவ‌ருக்கும்
    காறித் துப்பிய
    எச்சில் நாற்ற‌த்தோடு
    ஈயம் பூசிய இரும்புத் தகரமாய்
    கனமேறிய
    கண்ணீர்த் துளிகளோடு\\

    கனமான வரிகள்.
    வலிகள் தெரிந்தவர்கள் வார்த்தைகளை அளவாய் பேசுவார்கள்.

    ReplyDelete
  38. கவிதை மிக அருமை!

    ReplyDelete
  39. மீண்டும் வேதாளம்
    முருங்கைமரத்தில் ...
    இந்த
    குமுகம்
    எவரையும் வாழவும்
    விடாது
    சாகவும் விடாது
    எல்லோரையும்
    கேலியும் கிண்டலும்
    பேசசெய்யும்
    உண்மை எப்போதும்
    விழித்து
    தனித்து
    பசித்து
    இந்த குமுகத்திற்கு
    தம்மையே
    அற்ப்பணித்து
    கொள்ளவேண்டியிருக்கிறது
    எதையும்
    சிந்த்திக்காமல்
    நாம் வாழ்வோம்
    என உறுதி
    கொள்ளும் போது
    மட்டுமே வெற்றிநிற்க்கும்

    ReplyDelete
  40. மிக மிக அருமை..

    ReplyDelete
  41. "நொடிச்சாவில்
    தேக‌ம்"

    ஹேமா.....

    ReplyDelete
  42. அனல் தெரிக்கிறது கோவம்...

    ReplyDelete
  43. கையில் பிடிசாம்பலானபின்னும்
    அதினின்று உயிர்ப்பிக்கும் பெண்ணியப் பறவைகள் நாம்!

    அழகிய கவிதை.

    ReplyDelete
  44. //உயிரோடு கையில்
    பிடிசாம்பலாய்!!!//

    சான்சே இல்லை. அருமையாக‌ இருக்கிற‌து க‌விதை

    ReplyDelete
  45. நல்லா இருக்கீயளா..

    கவிதை ஒரு சோக காட்சி போன்று உள்ளது..

    ReplyDelete
  46. நன்றி நன்றி தோழர்களே.நல்லாத் திட்டு வாங்கிட்டு எழுதின வரிகள்தான் இந்தக் கவிதை.திண்ணையிலும் வந்தது.

    ஏதோ ஒரு நியாயம் எல்லாருக்குமே.அவரவர் நியாயம் அவரவர்களுக்குச் சரியே.ஒருவேளை திட்டியவருக்கு இன்னும் சரியேதான் அவர் பக்கம்.திட்டு வாங்கினாலும் நன்றி சொல்றேன் அவருக்கு.ஒரு கவிதைக்குக் கருத் தந்தாரே.ஆனா இனித் திட்டப்படாது.
    சொல்லிப்போட்டன்...ஓம் !

    ReplyDelete
  47. நொடிச்சாவில்
    தேக‌ம்
    உயிரோடு கையில்
    பிடிசாம்பலாய்!!!

    கிரீடம் சூடிக் கொண்ட வரிகள்... !

    கவிதை முழுசுமே வார்த்தைகளில் கனத்துக் கிடக்குது அனுபவ வலி. கருத்துரைகளுக்கான தங்கள் மறுமொழியில் கவிதை தன் முழுமையை மறுபடியும் நிலைப்படுத்திக் கொள்கிறது தோழி...

    ReplyDelete
  48. //ஏதோ ஒரு நியாயம் எல்லாருக்குமே.அவரவர் நியாயம் அவரவர்களுக்குச் சரியே//

    கவிதையும் கவிதைக்குப்பின்னெழுந்த கருத்தும் தெளிவும் பிரமாதம்...

    ReplyDelete
  49. வலிகளை வெளிப்படுத்தியுள்ள கவிதை.

    ReplyDelete
  50. அருமை
    அருமை

    ReplyDelete
  51. மிகவும் அருமை ஹேமா!

    ReplyDelete
  52. நாவினாற் சுட்ட வடு ஆறாமல், சுட்டவர் மனதில் இன்னும் . சூடுபட்டவர் கூட மறந்திருக்கலாம்.
    இது நல்ல மனசுக்காரர்கள் அனுபவிக்கும் வலி
    அருமையான கவிதை ஹேமா .

    ReplyDelete
  53. ஆடம்பரமே இல்லாத ஆழம் தோழா. நெசத்துக்குமே இது கொஞ்சம் புதுசு.

    ReplyDelete
  54. கனமான வரிகள்.
    வலிகள் தெரிந்தவர்கள் வார்த்தைகளை அளவாய் பேசுவார்கள்.

    ReplyDelete
  55. அன்பு ஹேமா! கொஞ்சநாள் நான் காணமல் தான் போயிட்டேன்.அதற்குள் யாரம்மா உன்னை சொல்லெறிந்து
    சோகமாக்கியது?

    ஹேமவனத்தில் கல்லெறிந்தாலும் கவிதை கிடைக்கிறதே என்றோ ஏசினார்கள்..

    போறாங்க விடம்மா..

    ReplyDelete
  56. என்னங்க இது.. மனசு கனமாகிடுச்சு. :(

    ReplyDelete
  57. ஏன் என்று கேட்கத் தோன்றியது - பிறகு தலைப்பைப் பார்த்தேன். :)

    ReplyDelete
  58. //நொடிச்சாவில்
    தேக‌ம்// செம!!

    ReplyDelete
  59. மனதை தொட்ட கவிதை..

    ReplyDelete