Thursday, March 17, 2011

விளையாட்டு...

நினையா நிமிடத்தில்
தாட்சண்யம் இல்லா
விதியாய்
துதிக்கையும் சிங்க உடலும்
கொண்ட யாளியாய் உருமாறி
புயலாய் நெருப்பாய்
ஆழிப்பேரலையாய் மரணம்.

கருணை மரணம் கேட்டு
போராடும் குற்றுயிரோடு
கிள்ளுப்பிறாண்டு விளையாட
சாமரப்பூக்களோடு தேவதைகள்!!!

ஹேமா(சுவிஸ்)

44 comments:

  1. ஃஃஃஃகருணை மரணம் கேட்டு
    போராடும் குற்றுயிரோடுஃஃஃஃ

    நிஜ உணர்வு போல பகிர்த்திருக்கிறிர்கள் அருமை...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

    ReplyDelete
  2. முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...

    ReplyDelete
  3. >>கருணை மரணம் கேட்டு
    போராடும் குற்றுயிரோடு
    கிள்ளுப்பிறாண்டு விளையாட
    சாமரப்பூக்களோடு தேவதைகள்!!!

    அழகிய வரிகள் ஹேமா..

    ReplyDelete
  4. //நினையா நிமிடத்தில்
    தாட்சண்யம் இல்லா
    விதியாய்//

    ஆம் ஹேமா:(!

    ReplyDelete
  5. தங்கள் உணர்வுகளை வெநிப்படுத்தியதற்கு நன்றிகள்..

    ReplyDelete
  6. //நினையா நிமிடத்தில்
    தாட்சண்யம் இல்லா
    விதியாய்//
    :-((

    ReplyDelete
  7. வலியுடன் துவங்கி வலியுடன் முடிந்த கவிதை.

    ReplyDelete
  8. மாவீரன் போர்வாள்போல்
    நீங்கள் கையாளும் சொற்கள் பெறும்
    அசுர பலம் குறித்து வியந்து போகிறேன்
    மிகச் சிறந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஹேமா..உங்கள் திறமை வியக்க வைக்கிறது..
    வரிகள் வலியை தெரிவித்தாலும்..அதைக் கையாளும் திறமை மகிழவைக்கிறது.
    வாழ்த்துகள் ஹேமா

    ReplyDelete
  10. மிக அருமையான வரிகள்

    ReplyDelete
  11. மிக மிக அருமை.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அருமையான சொல்லாடல்கள் தோழி

    பெண்ணெழுத்தைபற்றிய ஒரு தொடர் எழுதியுள்ளேன் படித்துவிட்டு கருத்தினை பகிருங்கள்..http://niroodai.blogspot.com/2011/03/blog-post_17.html

    ReplyDelete
  13. நான் ரசித்த வரிகள் மேடம் ...

    ReplyDelete
  14. அழகிய வரிகள்...
    அருமை...

    ReplyDelete
  15. \\ஆழிப்பேரலையாய் மரணம்.\\

    இது மட்டும் புரியுது.
    கஷ்டம்தான்.

    ReplyDelete
  16. மரணம் எப்போதும் விரும்புகிற மாதிரி அமைவதில்லை...

    ReplyDelete
  17. முதலில் தலைப்பும், படமும் வெளிபடுத்தி விட்டன கவிதை எதை பற்றி என்பதை...! (படம் எங்க ஹேமா எடுத்தீங்க மிக அருமை)

    நிலையற்ற வாழ்க்கையில் நினையா நிமிடத்தில் வரும் மரணம்...??!

    தெறிக்கும் வரிகள் எப்போதும் போல் !

    ReplyDelete
  18. ..கருணை மரணம் கேட்டு
    போராடும் குற்றுயிரோடு
    கிள்ளுப்பிறாண்டு விளையாட
    சாமரப்பூக்களோடு தேவதைகள்!!..

    அருமையான வரிகள்...

    ReplyDelete
  19. எவ்வளவு நறுக்கொன்று இருக்கிறது கவிதை...
    இதுதான் உலகம் தோழி...

    எப்போதும் பசித்தவனுக்கு உணவுகிடைக்காது..
    உணவு இருப்பவனுக்கு பசியிருக்காது..

    ReplyDelete
  20. ஆழிப் பேரலைக்கு நினையா நிமிடம் சரி...பின் விளைவாய் வரும் அணுக கதிர் வீச்சுப் பிரச்னையை எல்லா நாடுகளும் பாடமாய் எடுத்துக் கொள்ள வேண்டும். கருணை மரணம் கேட்பாரோடு கிள்ளுப்றாண்டு விளையாடும் தேவதைகள்... ம்....ஹூம்..(பெருமூச்சு)

    ReplyDelete
  21. கவிதை அருணாவை நினைவு படுத்தியது ஹேமா..

    ReplyDelete
  22. அருமையான வரிகள்
    என்னை அறியாமல்ஒரு நொடியில் வந்து விழுந்த கண்ணீர் முத்துக்கள் .

    "கருணை மரணம் கேட்டு
    போராடும் குற்றுயிரோடு
    கிள்ளுப்பிறாண்டு விளையாட
    சாமரப்பூக்களோடு தேவதைகள்!!!"

    மனதை பிசைந்த வரிகள்

    ReplyDelete
  23. Blogger சி.பி.செந்தில்குமார் said...

    முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...

    வந்ததே லேட்டு - இதுல

    இவருக்கொரு பாட்டு!

    ReplyDelete
  24. நான் முன்னமே சொல்லியிருக்கிறேன் ஹேமா, அடர்த்தியான வார்த்தைகள் கொண்டு அழகான கவிதைகள் வடிக்கிறதில நீங்கள் கெட்டிக்காரி! இப்பவும் அதைத்தான் சொல்கிறேன்!

    ReplyDelete
  25. ஒரு பெண் பதிவராக இருந்தும் கமென்ட் மாடரேசன் வைத்திருக்காத உங்கள் துணிச்சலைப் பாராட்டுகிறேன்!

    ReplyDelete
  26. அருமையான வரிகள் ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. வலியை உணர்த்தும் வரிகள்
    அருமை

    ReplyDelete
  28. அருமையான வரிகள்

    ReplyDelete
  29. கருணை மரணம் கேட்டு
    போராடும் குற்றுயிரோடு
    கிள்ளுப்பிறாண்டு விளையாட
    சாமரப்பூக்களோடு தேவதைகள்!!!//

    வணக்கம் சகோதரி, எலி இளைச்சால் பூனைக்கு விளையாட்டுத் தானே. கவிதையில் நடை முறை உலகின் நிகழ்வுகளோடு பஞ்ச பூதங்களையும் நினைக்க வைத்திருக்கிறீர்கள்.
    குற்றுயிரோடு கிள்ளுப் பிறாண்டு விளையாட..

    இந்த வரிகள் என் முன்னே பல நினைவுகளைக் கொண்டு வருகிறது. துடிக்கத் துடிக்க, ரசித்து- ரசித்துக் கொலை செய்வார்களே, அதனை இவ் இடத்தில் நினைவுபடுத்தியுள்ளீர்கள். அத்தோடு, எங்களின் கடந்த கால வாழ்வினையும் கண் முன்னே கொண்டு வந்துள்ளீர்கள்.

    கவிதை ஏதோ அவசரத்தில் அரக்கப் பறக்க எழுதியது போன்ற உணர்வினைப் படிக்கும் போது தருகிறது.
    வழமையான் ஹேமாவின் கவிதைகளில் உள்ள விடயங்களையெல்லாம் விட்டு விட்டு, அவசரத்தில் இக் கவியைப் படைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
  30. வலி
    வார்த்தைகளில்...

    ReplyDelete
  31. சிலவரிகளில் உன்னதம் ஹேமா..வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. உணர்வுகளின் வலி கண்ணீர் மையால் கவிதையாய்

    மன்னிக்க ஹேமா

    அலுவல் காரணமாக வர இயலவில்லை

    விஜய்

    ReplyDelete
  33. உங்கள் சைட்டீல் ரைட் கிளிக் பண்ணமுடிவதில்லை... மாதங்களாய் I suffer


    விளையாட்டு short & sweet

    நல்லாவந்திருக்கு... திருக்கை வாளைபோல

    ReplyDelete
  34. இயற்கையை கரையவைக்கும் மனிதனிடம்
    இயற்கையே சீறி கரைதாண்டிக்
    கரைய வைக்கிறது மனிதர்களை



    மனிதர்கள் விடும் அசுத்தக் கணைகளை
    உள்வாங்கி ஆவேசக் கணைகளால்...
    தன் பங்குக்கு தொடுக்கிறது இயற்கை!!
    நல்ல வரிகள் ஹேமா.....

    ReplyDelete
  35. அருமையானக் கவிதை....

    ReplyDelete
  36. சுதா...உங்கள் முதல் வருகைக்கு நன்றி.உண்மைதான் நிஜ உணர்வே வார்த்தைகளாயின !

    சிபி...ஒரு விநாடி பிந்திட்டீங்க.
    ஆனாலும் உங்க வருகையும் கருத்தும் சந்தோஷம்.யப்பான் சுனாமியும், அருணாவின் கருணைக்கொலை மறுப்புமே இந்தக் கவிதைக்குக் கரு !

    கருன்...நன்றி வருகைக்கு !

    அம்பிகா...உண்மைதானே !

    தமிழ்...என்ன செய்ய எப்போதும் நிகழ்வுகள் வலித்தபடி.அதையே சொல்ல நினைக்கிறேன் !

    ரமணி...உங்கள் வார்த்தைகள்
    மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது.நன்றி !

    ராதாகிருஷ்ணன் ஐயா...உங்கள் மனம்நிறைந்த பாராட்டை நீண்ட காலத்தின்பின் பார்க்கிறேன் சந்தோஷமாயிருக்கு.நன்றி !

    வேலு...நன்றி அன்புக்கும் நன்றி !

    கொச்சின் ரவி...வார்த்தைகள் புரிகிறதா.புரியாவிட்டால் சொல்லுங்கள்.அன்புக்கு நன்றி !

    மல்லிக்கா...நன்றி தோழி வந்தேன் !

    அரசன்...என்ன என்னை மேடமாக்கிட்டீங்க.சகோதரியாக அக்காவாகவே இருந்துக்கிறேன் உங்களுக்கு !

    குமார்...நன்றி நன்றி !

    செந்தில்...நிறைய நாள் ஆச்சு உங்க பின்னூட்டம் வந்து.அப்ப...இந்தக் கவிதை பிடிச்சிருக்குன்னு அர்த்தம் !

    கௌசி...நன்றி சகோதரி.
    எப்பவும்போல கூகிள் ஆண்டவரின் அருள்தான்படம்.
    மரணம்...நினைத்தாலே அதிசயம்தான் !

    சங்கவி...உண்மை நிகழ்வின் வரிகள்தான் இவைகள்.
    புரிந்தமைக்கு நன்றி !

    சௌந்தர்...சரியாகப் புரிந்து கருத்துச் சொன்னீர்கள்.நன்றி நண்பரே !

    ஸ்ரீராம்...ஆழிப்பேரலை சொல்லாமலே எத்தனை உயிர்களை எடுக்கிறது.இது விதியா.இல்லை கருணை மரணம் கேட்கும் அருணாவின் விதி விளையாட்டா !

    ReplyDelete
  37. தேனக்கா...இதுதான் மனசை மனசு புரிஞ்சுக்கிறது.சரியாகச் சொன்னீங்க.
    அருணாவைப்பற்றின நிகழ்வு பார்த்தேன்.யப்பானின் அழிவும் மனசைப் படுத்தினதாலேயே இந்தப் பதிவின் வரிகள் !

    ஏஞ்சல்...நன்றி தோழி !

    வடையண்ணா..நன்றி நன்றி உங்கட பாராட்டுக்கு.சிபியைத் திட்டாதேங்கோ.பதிவில வந்து திட்டுவார்.கவனம்.

    ஏன் நான் பயப்படவேணும் பின்னூட்டங்களை வரயறைப்படுத்த.
    என்னை ஊக்குவிப்பவர்கள் எல்லாமே நம்மவர்கள்.என்னை அசிங்கப்படுத்த ஏன் அவர்கள் நினைக்கவேணும்.
    அப்படிச் செய்தால் எம் முகத்தில் நாமே எச்சில் துப்பிக்கொள்வது போலத்தானே.என் உறவுகள் என்னையும் என் தளத்தையும் புரிந்தே வைத்திருக்கிறார்கள்.ஒரு உதாரணம் பாருங்கோ.எப்பவும் சுதா சுடுசோறு கேட்டே வருவார்.அவருக்கே தெரிகிறது இந்தத் தளத்தில் சுடுசோறு வேண்டாம்.கேட்டாலும் கிடைக்காது.
    அது அழகில்லையென்று.

    அதோட நான் எழுதும் பதிவெல்லாம் சரியென்று இல்லை.
    எதிர்க்கருத்துகளைச் சொன்னால் வரவேற்கிறேன்.நானும் என்னைத் திருத்திக்கொள்ளவும் இது உதவும் !

    சரவணன்...உங்களை அடிக்கடி காண்கிறேன்.நன்றி !

    சிவகுமாரன்...நன்றி சகோதரம்.
    வலிகள் எப்போதுமே தொடர்கிறது.என்ன செய்ய !

    நாழிகை...நன்றி நன்றி !

    நிரூபன்...இதுதான் கவிதையின் தன்மை.நான் நினைத்து எழுதினது வேற.நீங்க நினைச்சது வேற.ஆனால் நீங்க சொன்ன கருத்துக்களோடும் ஒத்துப்போகிறது வரிகள்.
    சந்தோஷம் நிரூபன் !

    தம்பி...எங்கள் வலிகளைத் தாண்டியது இந்த வலிகள்.ஆனாலும் யப்பானியரின் மனம் உடையா நம்பிக்கை எங்களுக்கு முன்னால் ஒரு தூசு.பாருங்களேன் இன்னொரு புது யப்பானே உருவாகும் !

    தவறு...நன்றி உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு !

    விஜய்...என்னமோ நிறைய நாளா நீங்க சரில்ல.அலுவல்ன்னு சாட்டுச் சொல்றீங்களோ !

    அஷோக்...சுகமா.ஒரு வேளை புதுக்கணணி உங்களுக்கு வேலை காட்டுதோ.திருக்கை வாலா இல்லை வாளா !

    கலா...இந்த ஹேம்ஸ் இன்னும் உங்க ஞாபகத்தில மட்டும்.சந்தோஷம் சகோதரி.சரியாகச் சொன்னீர்கள் நாங்கள் நோண்டினோம்.இயற்கையும் துள்ளுகிறது !

    படைப்பாளி...நீண்ட நாடகளின் பின் உங்க வருகை.நிறைவான பின்னூட்டம்.மிக்க மிக்க மகிழ்ச்சி !

    ReplyDelete
  38. கவிதை வரிகள் தாக்கின என்றால் - பின்னூட்டத்தில் 'ஆழிப்பேரலை' - இன்னும் தாக்குகிறது.

    ReplyDelete
  39. விதியின் விளையாட்டை என்னன்னு சொல்றது :-((

    ReplyDelete
  40. வலிக்கும் பேரலைகள்.

    ReplyDelete
  41. எளிமையான அதேசமயம் ரொம்ப அழுத்தமான கவிதைங்க.. தாட்சண்யம் இல்லாத விதி...

    ReplyDelete
  42. நினையா நிமிடத்தில் சில மரணம்,
    மரணத்தை வேண்டி வேண்டியே சிலர் வாழ்வு...இது தான் விதியின் விளையாட்டு.

    ReplyDelete
  43. ”..கருணை மரணம் கேட்டு
    போராடும் குற்றுயிரோடு
    கிள்ளுப்பிறாண்டு ..”
    உயிரோட்டமான வரிகள். நன்றாக இருக்கிறது

    ReplyDelete