காக்கையாய் மனம் கரைய
காத்திருக்கிறேன்
விருந்தாய் வந்துவிடு சீக்கிரம் நீ !
தினமும்...
பார்த்த உன் புகைப்படம்தான்.
இப்போதெல்லாம் பார்க்கையில்
வெட்கமாயிருக்கிறது !
எது எதுக்கோ
இருக்கும் வரம்புச் சட்டம்போல
மீசைக்கும் வரம்புச்சட்டம் போட்டிருந்தால்...
அந்த இடுக்கில்...பிடித்துக்கொள்வேன்
உன் ஆண்மையின் குரலை !
தூர இருந்தபடி
ஒளிப்பதும் வெளிவருவதுமாய்
கண்ணாமூச்சியா
இரு இரு...
வலையோடுதான்
காத்திருக்கிறேன் கனவுகளில்கூட
சிக்கும்போது பேசிக்கொள்கிறேன் !
ஒரு புழுவாய்...
தனிமைக் கூடு கட்டிக்கொண்டு
இறக்கை முளைத்தபின்னும்
முடங்கிக்கிடந்தவள் நான்.
வலை விரித்தவன் நீ.
இன்று நான் தங்கும் கூடாய் நீ.
நீ வீசிய வலையில்
சிக்கிக்கொண்டவனும் நீயேதான்!
அதிசயக் கடவுளோ நீ
பட்ட மரம்
தளிர்க்க வைத்துப் போகிறாயே
உதிர்க்க மட்டும் வைக்காதே !
கீறு விழுந்த
இசைத்தட்டாய் என் இதயம்
பைத்தியம்...
உன் பெயரையே பாடிக்கொண்டிருக்கிறது !
என் உயிர் நீ
என் உறவுகள் நீ
என் வாழ்க்கை நீ
என் அறிவு நீ
எல்லாம் எல்லாம் எல்லாமே
உலகில் எல்லாமே நீயானால்
உன்னில் அத்தனையும் நானாவேன்!!!
உறவுகள் எல்லோருக்கும் 2011 இனிதாய் மலரட்டும் !
ஹேமா(சுவிஸ்)
புத்தாண்டு வாழ்த்துகள் ஹேமா.
ReplyDeleteகசியக் கசிய காதல் மொழிந்திருக்கும் இந்த வரிகள்... வெட்டுபடும் பாறையில் தெரியும் தங்க ரேகைகளாய் மனசின் முடுக்குகளில் உறைந்திருக்கும் ஈரப் பொதிகளை மேகங்களாக்குகின்றன.கவிதா தேவி காதல் வற்றாது வைத்திருக்கட்டும் கனிமங்கள் நகைகளாக
காதலில் துவங்கியுள்ள இவ்வருடம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஹேமா!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteஇந்த வருடத்தின் நான் நுழைந்துள்ள முதல் தளம் இது தான் ஹேமா.
ReplyDeleteநலம் வாழ எந்நாளும் வாழ்த்துகள்.
ஜோதிஜி
1.1.2011
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.. உங்கள் குடும்பத்து உறவுகர்களுக்கும்.
ReplyDeleteகாதல் கவித்திருக்கு. தொடர்ந்திருங்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.
ReplyDeleteபுத்தாண்டு காதலுடன் பூத்திருக்கிறது...
//"என் உயிர் நீ
என் உறவுகள் நீ
என் வாழ்க்கை நீ
என் அறிவு நீ"//
"என் கவிதை எல்லாமே நீ" என்றும் சேர்த்துக் கொள்ளவும்...!
வருடம் முழுதும் காதல் கவிதைகள் பொங்கி வழிய வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteகவிதை
ReplyDeleteசர்க்கரையாய்
இனிக்கிறது ஹேமா.
ஹேமா,
ReplyDeleteகாதல்..காதல்...காதல்!
‘அது’ எப்போதும் நிரந்தரமானது.
நீ பொழியும் வரிகளுக்காகவே
“காதல்” இனி வரும் முப்போதும் உயிர்த்திருக்கப் போகிறது.
//அதிசயக் கடவுளோ நீ
ReplyDeleteபட்ட மரம்
தளிர்க்க வைத்துப் போகிறாயே
உதிர்க்க மட்டும் வைக்காதே !//
ம். காதல் அதிசயக்கடவுள் தான். அதனால் தான் இதை வணங்கும் எவருக்கும் ’மதம்’ பிடிப்பதில்லை.
‘காதல்’- உலகில், ‘வேனிற்காலம்’ மட்டுமே உண்டு. ’உதிர்க்காலம்’ அனுமதிக்கப்படுவதில்லை.
//இறக்கை முளைத்தபின்னும்
ReplyDeleteமுடங்கிக்கிடந்தவள் நான்.
வலை விரித்தவன் நீ.//
பட்டாம்பூச்சிக்குமா வலை விரிக்கிறார்கள். அடப்பாவிகளா....!
//இன்று நான் தங்கும் கூடாய் நீ.
நீ வீசிய வலையில்
சிக்கிக்கொண்டவனும் நீயேதான்!//
காதல் இப்படித்தான். தான் சிக்கிக்கொண்டதை உணராமல், அவர் சிக்கிக்கொண்டதாய் நினைத்துக்கொள்ளும்.
ஹேமா,
ஒரேயொரு ரகசிய வினா. இந்த கனா வரிகளுக்குரியவர் யார்?
அவருக்கு நன்றி சொல்லனும். அவர் இல்லாமல் போயிருந்தால், இது போன்று காதல் கவிதைகள் எழுதப்படாமலே போயிருக்கும் இல்லையா!
வார்த்தைகளைத் தொட்டால் ஒட்டிக்கொள்ளுமோ என்று பயமாயிருக்கிறது ஹேமா.
ReplyDeleteஎழுத்தில் மனம் கசியும்போது இப்படி நேர்கிறது.
அடிக்கடி இப்படியே ஆகட்டும் ஹேமா.
//அந்த இடுக்கில்...பிடித்துக்கொள்வேன்
ReplyDeleteஉன் ஆண்மையின் குரலை //
இது எப்படி ஹேமா...?! சொல்லி தந்தால் உபயோகமாக இருக்கும்...! :))
பிடித்து வைத்துக்கொள்ள
வழி தெரியாமல்
யோசனையிலேயே
எங்கள் உரையாடல்
முடிந்து விடுகிறதே தோழி!!
ரொம்ப ரசித்தேன் ஹேமா...
என் அன்பான ஆசையான இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ்மணம் விருது பெற வழ்த்துக்கள்
\\என் உயிர் நீ
ReplyDeleteஎன் உறவுகள் நீ
என் வாழ்க்கை நீ
என் அறிவு நீ
எல்லாம் எல்லாம் எல்லாமே
உலகில் எல்லாமே நீயானால்
உன்னில் அத்தனையும் நானாவேன்!!!\\
Ellame sema cute..
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஹேமா...இனிப்பது கவிதையா காதலா? ரெண்டும் சுவை..
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹேமா....
ReplyDeleteஎப்டி இப்டி எல்லாம்?
காதலின் ஆழத்தில் இருந்து ஆழ்ந்தனுபவித்து வந்த வரிகளாக உணர்கிறேன்............
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா!
புத்தாண்டு வாழ்த்துகள் ஹேமா.
ReplyDelete//கீறு விழுந்த
ReplyDeleteஇசைத்தட்டாய் என் இதயம்
பைத்தியம்...
உன் பெயரையே பாடிக்கொண்டிருக்கிறது//
நல்ல வரிகள்.
உங்கள் வரிகளில் காதலின் ஆழம் தெரிகிறது ....
ReplyDeleteஅழகான வரிகளை அன்பான காதலை செதுக்கி உள்ளீர் ...
வாழ்த்துக்கள் ....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!
ReplyDeleteஹேமா,
ReplyDeleteஒரேயொரு ரகசிய வினா. இந்த கனா
வரிகளுக்குரியவர் யார்?
அவருக்கு நன்றி சொல்லனும். அவர்
இல்லாமல் போயிருந்தால், இது போன்று
காதல் கவிதைகள் எழுதப்படாமலே
போயிருக்கும் இல்லையா///////////
என்ன மன்னரே! காதல் கவியென்றால்தான்
ஆஜராகுவீர்களோ!
ஹேமா எனக்கு மட்டும்தான் சொன்னது
அதை நான் உயிர் போனாலும் சொல்லமாட்டேன்,
உசிரே போகுது,உசிரேபோகுது…என்று பாடினாலும்
சொல்லமாட்டேன்
ஆசையைபாரு…….ஆளை அறியும் சாக்கில்
அளவிடுகிறார். அசைய வேண்டாம் ஹேமா!
புரிஞ்சிடுச்சு...நீங்க Nano கார பத்திதானே சொல்லறீங்க ?
ReplyDeleteநீங்க இந்தியா வந்திங்கன்னா.. கண்டிப்பா வாங்கித்தந்துர்றேன்
(அடியே கொல்லுதே.. அந்த பெண்ணை எனக்கு பிடிக்குங்க...ரொம்ப... )
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:)!
ReplyDeleteஇனிதாய் வீசும் காதல்..
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஹேமா...
ReplyDelete/ காத்திருக்கிறேன் கனவுகளில்கூட
சிக்கும்போது பேசிக்கொள்கிறேன் !/
பிடிச்சிருக்கு..
கனவுகள் கலையாமல் காதல் மட்டுமே கொட்டட்டும்....
ரசிக்கத்தெரிந்த மணம் ...
ReplyDeleteகாதல் போதை தலைக்கேறியுள்ளது போல் உள்ளது வாழ்த்துக்கள்.
ReplyDelete//காக்கையாய் மனம் கரைய
ReplyDeleteகாத்திருக்கிறேன்
விருந்தாய் வந்துவிடு சீக்கிரம் நீ !//
காக்கா பிரியாணியா
//
தினமும்...
பார்த்த உன் புகைப்படம்தான்.
இப்போதெல்லாம் பார்க்கையில்
வெட்கமாயிருக்கிறது !
//
என்னைப்பார் யோகம் வரும் படமா ?
//
எது எதுக்கோ
இருக்கும் வரம்புச் சட்டம்போல
மீசைக்கும் வரம்புச்சட்டம் போட்டிருந்தால்...
அந்த இடுக்கில்...பிடித்துக்கொள்வேன்
உன் ஆண்மையின் குரலை !
//
அப்படியே குரல் வளைய பிடிச்சா கொலை சட்டம் பாயும்
//
தூர இருந்தபடி
ஒளிப்பதும் வெளிவருவதுமாய்
கண்ணாமூச்சியா
இரு இரு...
//
வயசாகிப்போச்சினாலே இப்படித்தான் கண் மங்களா தெரியும்
//
வலையோடுதான்
காத்திருக்கிறேன் கனவுகளில்கூட
சிக்கும்போது பேசிக்கொள்கிறேன் !
//
கொசுவலை இருக்கா
//
ஒரு புழுவாய்...
தனிமைக் கூடு கட்டிக்கொண்டு
இறக்கை முளைத்தபின்னும்
முடங்கிக்கிடந்தவள் நான்.
//
ஏன் கோழி பிரியாணி செய்ய ஆள் இல்லையா
//
வலை விரித்தவன் நீ.
இன்று நான் தங்கும் கூடாய் நீ.
நீ வீசிய வலையில்
சிக்கிக்கொண்டவனும் நீயேதான்!
//
கொசுக்கு வலைப்போட்ட அப்படிதான்
//
அதிசயக் கடவுளோ நீ
பட்ட மரம்
தளிர்க்க வைத்துப் போகிறாயே
உதிர்க்க மட்டும் வைக்காதே
//
பட்ட சரக்கு அடிச்சா சரியாப் போகும்
//
கீறு விழுந்த
இசைத்தட்டாய் என் இதயம்
பைத்தியம்...
உன் பெயரையே பாடிக்கொண்டிருக்கிறது !
//
நீங்க பைத்தியமுன்னு இப்பத்தான் தெரியுதோ ???
//
என் உயிர் நீ
என் உறவுகள் நீ
என் வாழ்க்கை நீ
என் அறிவு நீ
எல்லாம் எல்லாம் எல்லாமே
உலகில் எல்லாமே நீயானால்
உன்னில் அத்தனையும் நானாவேன்!!!
//
கீழ்பாக்கம் போகும் முன்னே போச்சு இப்படித்தான் இருக்கும்
இனிமையான கவிதை, புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிமையான கவிதை.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஹேமா!
புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete//கீறு விழுந்த
ReplyDeleteஇசைத்தட்டாய் என் இதயம்
பைத்தியம்...
உன் பெயரையே பாடிக்கொண்டிருக்கிறது !//
அன்பை விவரிக்கும் வரிகள்.
நேசம்மிக்க ஹேமா அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteப்ரியமுடன் வசந்த் said...
ReplyDelete:)//////////
முதல் கவிதைகளுகெல்லாம்
குதித்துக் குதித்து கும்மியடித்து
ஆட்டியவால்………
இக் கவிதைக்கு மட்டும்
வாலைச் சுருட்டியதேனப்பு?
வயசாகிப்போச்சினாலே இப்படித்தான்
ReplyDeleteகண் மங்களா தெரியும்//
ஹேமா, அனுபவம் பேசுது…….
பட்ட சரக்கு அடிச்சா சரியாப் போகும் ////////
எத்தனை போத்தல் சேர்த்து வைத்திருபார்
என்று கேளு ஹேமா ,போத்தல்காரனிடம்
கொடுத்து பணம் வாங்கி நாம் இருவரும்
பகிர்ந்து கொள்ளலாம்
{பட்டுச் சருகாகாமல் இருந்தால் சரிதான் கடவுளே…!!!!}
ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் தேன் துளிகளையாய் சொட்டுக்கின்றன அக்கா :)
ReplyDeleteமீசை வரம்புச் சட்டம்.... காதல் வலை... அதிசியக் கடவுள்.... பின்னிட்டீங்க :)
புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா :)
கவிதை நல்லா இருக்கு :)
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்..
புத்தாண்டு வாழ்த்துகள் தோழி
ReplyDeleteகாதலில் கசியும்
வார்த்தைகளின் வீரியங்கள்
கனியாய் இனிக்கிறது..
Hema தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்.
ReplyDeletehttp://kousalya2010.blogspot.com/2011/01/2010.html
ஹேமா தொடருவீங்க என்ற நம்பிக்கையில் அழைத்துவிட்டேன்...தொடர்ந்திடுங்க சரியா ??
:)))
கீறு விழுந்தும் கூறு போட
ReplyDeleteமுடியாத காதல் யதார்த்தம்..
நீண்ட இடைவெளிக்கு பிறகு......
....................................................
.....................சந்தான சங்கர்..
செம ஃபார்மா ஹேமா ;)
ReplyDeleteகாதல் சொட்டும் வரிகள்! அருமை!!
மஹா திருமணத்திற்கு பிறகு காதல் கவிதைகள் வாசிக்கையில் கண் தெரியாமல் போகிறது ஹேமா. கண்களுக்கு வெட்கம் வருமா என்ன? :-)
ReplyDeletefine, சகோ!
அழகு - மனதை தொட்ட வரிகள்.
ReplyDeleteகரையும் மனதின்
ReplyDeleteஉருகும் உணர்வுகளால்
தெக்கி வசிய வைக்கும்
இனிய கவிதைகள்.
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்
உருகும் வரிகள் உருக்கவும் செய்கின்றன.. காதலைப் பற்றி எழுதுவதே சுகம் தான். புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteபடத்துக்கு உங்கள் வரிகள் அழகு சேர்கிறது
ReplyDeleteஎத்தனைமுறை சிந்தினாலும் இந்த காதல் தேன்துளிபோலத்தான்... திகட்டாத அமுதம்.. இங்கேயும் கொஞ்சம்...
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஹேமா
ReplyDeleteஹேமா...உருகி..உருகி..வழியுது காதல் இந்த கவிதையில்...அது மாதிரி அழகான படங்களுடன்..நல்லா ப்ரெசென்ட் பண்ணிருக்கிங்க...நானும் லயித்து விட்டேன்
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா. தங்களின் காதல் கவிதையை இரசித்தேன், லயித்தேன். என்ன ஒரு அழகு நடை, சிறு பிள்ளையின் மன உணர்வு போல காதல் வலையின் வீழ்ந்தவர்களின் எண்ணங்களும் தத்ரூபமாக இருக்கும் என்பதை கவிதை அழகாகச் சொல்கிறது.
ReplyDeleteஃஃஃஃஃதினமும்...
ReplyDeleteபார்த்த உன் புகைப்படம்தான்.
இப்போதெல்லாம் பார்க்கையில்
வெட்கமாயிருக்கிறது !ஃஃஃஃ
மனதை தொட்டுட்டீங்க...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel
இனிமையான கவிதை.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா...
அப்பா..ஆணை வர்ணித்து பெண்களும் எழுதுகிறார்கள்...அருமையா வரிகள்..ருசித்தேன்.
ReplyDeleteம்!!! ம்!!!!! ம்!!! அசத்துங்கள் ஹேமா. இனிதே நடக்கட்டும். இம்முறை நீங்கள் மௌனமாக இருந்து தப்பிக்க முடியாது. சத்திரியன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கோ.
ReplyDeleteகாதல் காதல் காதல்.....
ReplyDeleteவேறென்ன சொல்ல தோழி... இந்த கவிதைகள் முற்றும் உரைப்பது முடிவே கிடையாத காதலைப்பற்றி எனும்போது.!!
உங்களுக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...