Tuesday, December 28, 2010

நான் கருப்பா...

கருப்பில்லை...கனபேர்
யார் சொன்னது
உண்மை சொன்னா
நானும் வெள்ளையில்லை.

வெள்ளைக்காரன் கருப்பாயில்லை
அவிஞ்ச கண்ணை பாக்க சகிக்கேல்ல‌
ஏனோ எனக்கு அவனை பிடிக்கேல்ல
எங்கட‌ குணங்கள்தான்
அவனுக்குப் பிடிக்கேல்ல.

காக்கையில்லை இங்க
குயிலும் சுத்தக் கருப்பில்ல
கண்ணன் கருப்பென்றால்
நல்லவேளை கண்ணனுக்கு
கருப்பா ஒரு குழந்தையில்ல.

கருப்பைக்குள் கருப்பென்றால்
அம்மா அங்க லைட் போடேல்ல.
உப்பில்லை சப்பில்லை
கவிதையிலயும் கருத்தில்ல.
இருக்கென்று சொன்னாலும்
நம்பப்போறதுமில்ல.

இவ்ளோ கருப்பான்னு கேட்டதால
வஞ்சகம் பண்ணின கடவுளில வெறுப்பில்ல
கருப்பா ஏன் பிறந்தேனோன்னு
கோவமில்ல மனசில அமைதியில்ல
சமாதானமும் தேவையில்ல.

அம்மாவுக்கு விசரில்லை
அவவிலயும் கோவமுமில்ல
கருப்பு அப்பாவைக் காதலிச்சதால
என்னையும் கருப்பில்லையாம்.

மைக்கல் ஜக்சன்போல
விருப்பமுமில்லை கலரை மாத்த
அவஸ்தையில்லை எனக்கு இப்போ
என் பிள்ளை கருப்பில்லை
ம்ம்ம்.......
என் கருப்பியும்தான்!!!

ஹேமா(சுவிஸ்)

52 comments:

  1. Arumai Hema... Vaarthai varavillai..

    Congrats to Win Tamilmanam Contest..

    ReplyDelete
  2. நீங்க கேக்காமலே போட்டுட்டோமில்ல தோழி ஓட்டு .......

    செங்குருதி புறம்
    வந்தால் சாயம்
    வெளுத்து கருப்பாகும்
    கருப்பான பலகையிலே
    பொறுப்பாக கல்வி
    புகட்டிய ஆசானும் கருப்பு...
    கார்மேகம் கருணைகாட்ட
    அதன் நிறமும் கருப்பு
    வெள்ளையனின் உள்ளில்
    உதிக்கும் எண்ணமெல்லாம்
    கருப்பு.....
    கற்புள்ள எம் கன்னியரின்
    நற்குணமே சிறப்பு
    உலகில் எம் கன்னியரின்
    நற்குணமே சிறப்பு.......

    ReplyDelete
  3. ஹேமா, ஏன் விஞ்ஞான ஆராய்ச்சி!

    ReplyDelete
  4. நல்லாருக்கு ஹேமா! கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலர் பாட்டு கீட்டு சமீபத்துல கேட்டீகளோ?

    நானும் கருப்புத்தான் இப்படியே கருப்பா இருக்குறவங்க எல்லாம் வரிசையா வந்து சொல்லுவாங்க பாருங்க....

    ReplyDelete
  5. ஹேமா நானும் தான்.. :)

    ReplyDelete
  6. வேறொன்றுமில்ல ரதி?

    நேற்று குளிர் அதிகமாக இருந்தது. கொஞ்ச நேரம் கருப்பு தான் எனக்கு புடுச்ச கலரு ன்னு மாளாவிகா ஆடுற ஆட்டத்த பார்த்த காரணத்தால் வந்த கவிதை இது.

    சரிதானே ஹேமா?

    ReplyDelete
  7. ஏங்க நானும் தான் கருப்பு.... என்னையும் ஒரு வரி எழுதியுருக்கலாமுள்ள.....?

    கருப்பு..... நெருப்பு

    ReplyDelete
  8. மனசுலதான் கறுப்பு இருக்கக் கூடாது..உடம்புக் கறுப்பு இருநதால் என்ன...மனசுல அமைதி இல்லை, சமாதானமும் தேவை இல்லையா...ஏன்?

    ReplyDelete
  9. புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்ல ஆசை..ஆனால்..மீட்டெடுக்குமா..

    ReplyDelete
  10. ஆ.. கருப்பு
    கரு கரு

    ReplyDelete
  11. இந்தக் கட்டத்தையெல்லாம் என்றோ தாண்டிவிட்டீர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன் ஹேமா?

    முன்னமே என் பதிவிலோ உங்கள் பதிவிலோ நாம் இது பற்றிப் பேசியிருப்பதாகவும் ஓர்மையுண்டு.

    இனி இது வேண்டாமே ஹேமா.

    ReplyDelete
  12. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு..

    //கருப்பா ஏன் பிறந்தேனோன்னு
    கோவமில்ல மனசில அமைதியில்ல
    சமாதானம் தேவையுமில்ல.//

    ஆமாம் நிறத்துக்காக வருந்தி மெனக்கெட வேண்டாம் தான் மிகச் சரியாக சொன்னாய் ஹேமா...

    ReplyDelete
  13. டோட்டைங் டோட்டைங்

    விஜய்

    ReplyDelete
  14. காத்து கருப்புதான்
    கடாய் கருப்புதான்
    கன்னி மனசு நெருப்புதான்

    (எப்டி.. நாங்களும் எழுதுவோம்ல்ல :)

    ReplyDelete
  15. அதுசரி என்ன இப்படியேல்லாம் எழுத ஆரம்பிச்சீட்டீங்க..

    ஒரு changukko?

    ReplyDelete
  16. உண்மையிலேயே கருப்புதாங்க அழகு!!
    கருப்பு என்பது உழைப்புக்கான நிறம்!!
    இலங்கைத் தமிழிலேயே செல்லும் இக்கவிதை அழகாக இருக்கிறது

    ReplyDelete
  17. karuppu...

    amezing color..
    correcta sollirukeenga hema..
    thanx..

    ReplyDelete
  18. கருப்பு அழகுதான்.
    கவிதை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  19. வட்டார வழக்கு சொல்லாடலில் தெரிகிறது.நிறம் வைத்து நிசம் பேசி இருக்கிறீர்கள். வலி வைத்த வார்த்தைகள் தைக்கின்றன. நம்மில் நிறமில்லை குறை. நாம் நம்மை தாழ்வாய் நினைப்பதும்.... அப்படி நம்மை நினைக்கத் தூண்டிய வெள்ளையனின் வியாபார புத்தியும்தான் இந்த சமூகத்தை பாழாய் படுத்தி எடுக்கிறது.

    ReplyDelete
  20. கருப்பாய் இருந்தாலென்ன
    பொறுப்பாய் இருந்தபின்.
    பொல்லாதோர்க்கு நெருப்பாய்
    நல்லோர்க்கு செருப்பாய்
    எல்லோர்க்கும் விருப்பாய்
    இருப்பாய் தோழி
    என்றும் சிறப்பாய்

    ReplyDelete
  21. wow ..very nice hema.
    advance wishes to win the contest.
    wish you a blessed prosperous NEW YEAR.

    ReplyDelete
  22. அழகான கவிவரிகள் .....

    ReplyDelete
  23. வர்ணாசிரமத்தை எதிர்த்து எழிமையான வரிகள்.

    ReplyDelete
  24. கருப்பா இருந்தா என்ன, மனசு வெள்ளையா இருந்தா போதுமே.

    ஹேமா தமிழ்மண வலைப்பதிவில் உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. எனக்கு புடிச்ச கலரும் கருப்பு தான் ஹேமா...நான் உபயோகபடுத்தும் பெரும்பாலான கலர் கருப்பில் இருக்கிற மாதிரி பார்த்துப்பேன்..அந்த அளவுக்கு கருப்பு ரசிகை நான்...உங்கள் கவிதை அழகு ஹேமா...லாவகமான எழுத்து திறன்...புத்தாண்டிலும் தொடரட்டும்...தமிழ்மணத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..:))

    ReplyDelete
  26. கருப்பு கூடுதல் அழகு சேர்க்கும்...

    ReplyDelete
  27. கண்ணன் கருப்பென்றால்
    நல்லவேளை கண்ணனுக்கு
    கருப்பா ஒரு குழந்தையில்ல//////
    கண்ணா! {சத்ரியா…….}
    ஹேமா சொல்ல வருவது புரிகிறதா கண்ணழகரே
    ம்ம்ம்ம்… நடக்கட்டும்…….
    அப்பாடா நான் நாரதரில்ல………ங்கோ….

    ReplyDelete
  28. நானும் கருப்புத்தான் இப்படியே கருப்பா இருக்குறவங்க எல்லாம் வரிசையா வந்து சொல்லுவாங்க பாருங்க....//////
    வசந்,…ம்ம்ம்ம் நான் சொல்லமாட்டேன்
    அவள் அப்படியொன்றும் அழகில்ல……என்ற பாடல்
    எப்போதும் என் காதுகளில் ………….
    வசந் ஹேமா கருப்பா? அணிலுக்கல்லவா கவி

    //

    ReplyDelete
  29. ஃஃஃஃகருப்பைக்குள் கருப்பென்றால்
    அம்மா அங்க லைட் போடல.ஃஃஃ

    அனுமதி பெறாமல் என்னைப் பற்றி எழுதவது மிகப் பெரிய தப்பு..ஹ..ஹ..ஹ..

    தமிழ்மண வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

    ReplyDelete
  30. வெள்ளைக்காரன் கருப்பாயில்லை
    அவிஞ்ச கண்ணை பாக்க சகிக்கலை
    ஏனோ எனக்கு அவனை பிடிக்கல
    எங்க குணங்கள் தான் அவனுக்குப் பிடிக்கல.

    சரியாச் சொன்னிங்க ஹேமா.......

    ReplyDelete
  31. நம்ம பதிவுப்பக்கம் எட்டிப் பாத்துட்டு போங்க ஹேமா மேடம்

    ReplyDelete
  32. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. யார் சொன்னார்கள் நீ கறுப்பென்று -அந்த
    இறைவன் படைப்பில் எல்லாமே ஒன்றுதான்.
    இறப்பில் அறிவோம் இதன் பதிலை -இருந்தும்
    கறுப்போ,வெள்ளையோ இரத்தம் ஒன்றுதான்.

    ReplyDelete
  34. அருமையா இருக்கு ஹேமா...வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  35. நல்லா எழுதியிருக்கீங்க.. இருந்தாலும் பாவங்க, வெள்ளைக்குஞ்சும் வேண்டிக்கிட்டா பொறந்துச்சு?

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. வாங்க இர்ஷாத்...நன்றி அன்பு வாழ்த்துக்கு !


    தினேஸ்...நன்றி நன்றி.
    பின்னூட்டம்கூட அழகான கவிவடிவில்.ஆதரவுக்கு மிக்க நன்றி !


    ரதி...ஒரு ஆராய்ச்சியும் இல்லப்பா.கருப்பாயிருக்கிற ஒருத்தரைப் பார்த்து "நீங்க இவ்ளோ கருப்பா"ன்னு கேட்டு வச்சிட்டேன்.
    அவர் மனசை நோகடிச்சிட்டேனோன்னு நினைச்சிட்டேன்.அவருக்காகத்தான்.
    இதில என்னா ஆராய்ச்சி வேண்டிக்கிடக்குது !


    நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா.
    அன்புக்கு நன்றி !


    வசந்த்...வாங்க.கவிதைன்னா ஏதோ ஒரு கரு வேணும்தானே.இது கருப்பு !


    நேசன்...என்ன பயந்திட்டீங்களா !


    சண்முககுமார்...வாங்க.நான் உங்க பதிவு நேரம் கிடைக்கிறப்போ பாக்கிறேன்.நம்பமுடியாத விஷயங்களானாலும் சுவாரஸ்யமா வாசிக்கவும் புது விஷயங்கள் அறிஞ்சிட்டும் இருக்கேன் !


    நசர்...என்ன கும்மி மறந்துபோயாச்சோ.
    திருந்திட்டீங்கபோல.நன்றி நன்றி !


    வினோ...நான் கருப்பில்லையே !


    ஜோதி...கவிதை முழுசா புரிஞ்சுபோச்சு.அதான் கிண்டலு...!


    அரசு...வாங்க யார் சொன்னா நீங்க கருப்புன்னு.உங்க வீட்ல கேட்ட எனக்குத்தான் உதை விழும் !


    ஸ்ரீராம்...கருப்புன்னு சொன்னதால கடவுள் மேல இல்லாட்டி அம்மா மேலதானே கோவம் வரும்.அதான் சமாதானம் வேணாம் !


    தாரபுரத்தான்...ஐயா உங்கள் ஆசீர்வாதம் எப்பவும் எனக்கு வேணும்.எந்தக் கருப்பும் தடையில்லயே !


    றமேஸ்...றமேஸ்...என்ன நடந்தது...!


    நண்டண்ணா...உங்களுக்கு என்ன சொல்ல நான் !


    சுந்தர்ஜி...நல்ல ஞாபக சக்திதான் உங்களுக்கு.நான் கருப்பில்ல.இது ஒரு சம்பவத்துக்காக எழுதினது.
    நான் கருப்பைக் கடந்து நிறைய
    நாள் ஆச்சே !

    தமிழரசி...நீங்கதான் என்னைப் புரிஞ்சு வச்சிருக்கீங்க.
    கை தாங்க தோழி !


    கமலேஸ்...என்ன...நீங்களும் கருப்போ.கருப்பும் ஒரு அழகுதானே !


    விஜய்...ஸ்டார்ட் மியூசிக்கோ...!


    அஷோக்...அதானே ஒரு
    லயத்தோட எழுதிட்டாப் போச்சு.
    சும்மா சும்மா...ஒரு கவிதை !

    ReplyDelete
  38. ஆதவா...வாங்க.எங்க வீட்லயும் ஒரு ஆள் இருக்காங்க கருப்பா.பெரிய கவலை கருப்புன்னு.அம்மா சொல்லுவா"இங்க பாரு உனக்கு நகை போட்டாத்தான் அழகு"ன்னு.
    சமாதானமாயிடுவா !


    லோகு...கருப்பு ஆளுங்கதான் ரொம்ப அழகானவங்க.ஆனா அவங்களுக்குள்ள ஏனோ கருப்புன்னு மனக்குறை !


    குமார்...இங்கு வைத்தியசாலையில் பார்த்தால் மேலைநாட்டுக் குழந்தைகளும் ஆசிய நாட்டுக் குழந்தைகளையும் வரிசையாகத் தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள்.உண்மையில் எங்கள் குழந்தைகளின் கண்ணும் தலைமுடியும் ரொம்ப அழகாயிருக்கும் !


    தமிழ்க்காதலன்...நீங்கள் நினைத்த கருத்தும் உண்மைதான்.
    அது பெருத்த வலி !


    சிவகுமாரன்...அழகான மனம் நிறைந்த வாழ்த்து.நன்றி !


    ஏஞ்சலின்...புதுவருகை.கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி !


    அரசன்...உங்க கவிதகள் எல்லாமே கருப்பழகிகள்தானே !


    சாய்...நன்றி நன்றி !


    குட்டி...என்னோட கவிதைகளுக்குள்ள ஒரு வித்தியாசமான கவிதைதானே இது !


    ராஜவம்சம்...ம்ம் சரியாச் சொன்னீங்க !


    மீனு...மனசை யார் பாக்கிறாங்க.முகத்தைப் பார்த்தெல்லோ முகம் சுழிக்கிறாங்க.
    தமிழ்மண ஆதரவுக்கு மிக்க நன்றி தோழி !


    ஆனந்தி...என்னைப்போல நீங்க.எனக்கும் எந்த ஒரு நிறத்துக்குள்ளும் கருப்புக் கலந்திருந்தால் உடனே பிடித்துவிடும்.வாழ்த்துக்கு நன்றி !


    சாரல்...அசத்திட்டேன்னு
    நீங்கதான் சொல்றீங்க.யார் யார் திட்டுவாங்களோ !


    சௌந்தர்...கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரும் !


    கலா...பாருடா...ஊருக்கு லீவில போயிருந்தாலும் சிந்தனையெல்லாம் இங்கதான்.நாரதர் தன்னை எப்பாச்சும் நாரதர்ன்னு சொல்லியிருப்பாரோ
    ....அதுமாதிரித்தான் !


    சிபி...வாங்க.நன்றி ரசிப்புக்கு !


    சுதா...முதலே நீங்கள் கருப்பெண்டு சொல்லியிருக்கக்கூடாதோ....
    கேட்டிருப்பேனெல்லோ !


    ஜெயா...என்னப்போலவே பிடிப்பில்லாம வெள்ளைக்காரனை நீங்களும் ரசிச்சிருக்கிறீங்கள்.
    ஜெயா...ஏன் அழுகிறபோல ஒரு போட்டோ !


    இனியவன்...முன்னமே சொன்ன புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.உங்களுக்கும் கூட நண்பரே !


    உருத்திரா...முதல் வருகைக்கு நன்றி.அழகான கவிவரிகள்.கருப்போ வெள்ளையோ இரத்தம் ஒன்றுதான்.உணர்ந்தால் எந்தக் குழப்பமுமில்லை உலகில் !


    ராஜா...நன்றி.பதிவுகள் போட்டீர்களா.
    வரணும் உங்கள் பக்கம் !


    அப்பாஜி...வேண்டிக்கிட்டா வெள்ளையாயிடலாமா !


    தூயவன்...நன்றி நன்றி அன்பு வாழ்த்துக்கு !

    ReplyDelete
  39. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  40. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா..

    ReplyDelete
  41. //கண்ணா! {சத்ரியா…….}
    ஹேமா சொல்ல வருவது புரிகிறதா கண்ணழகரே
    ம்ம்ம்ம்… நடக்கட்டும்…….
    அப்பாடா நான் நாரதரில்ல………ங்கோ….//

    கலா அக்கா,

    இங்கயுமா ’கலா’ய்க்கனும்...?

    பாவம் அந்த ’பச்சை’ பொண்ணு பயந்திடப் போகுது. அப்புறம் நம்ம ப்ளாக் பக்கம் வராம போயிடும்.

    ReplyDelete
  42. அருமையான கவிதை ஹேமா!

    ReplyDelete
  43. அதுக்காக உங்க ப்ளாக் தீம் கூட கருப்பா...ஹா..ஹா..அருமை

    ReplyDelete
  44. கருப்பைக்குள் கருப்பென்றால்
    அம்மா அங்க லைட் போடேல்ல.//
    கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..

    ReplyDelete