Saturday, November 13, 2010

தடுமாற்றம்...

கடமைகள்
என்னை வழி நடத்தினாலும்
எச்சரிப்பு மணியடிக்க
இதயம் துடித்து
விழித்துக்கொள்ளும்.

உன் நினைவுடனேயே
பொழுது
விடிந்து இருண்டாலும்
உன்னிடம் என் மனதை
காட்ட விரும்பாமல் மறுத்தவளாய்
ஒளிந்து கொள்கிறேன்.

முகம் மாத்திரம்
உன்னை
வெறுத்து ஒதுக்குவதாய் நடிப்போடு
வெறுப்பை உமிழ்ந்தாலும்...
மறு பக்கமாய்
உன்னை
முழுதும் நிறைவாய்
மனதுக்குள் நிறைத்தபடி.

மனதுக்குள் உண்மையா என்று
என்னை
நானே கேட்டபடி
என் திசையோடு
என் இயல்பின் வேகத்தோடு
உன்னையும்
சேர்த்துக்கொண்டுதான்
அலைகிறேன்.

சொல்லிக் கொள்ளாமலேயே
மெளனமாய்
தூரம்...மிகமிக தூரமாய்
உன்னைச் சுமந்த படி
வந்துவிட்டேன்.

உன் பேச்சுத்துணையோடு
காலம் கடந்த போதும்
முடியாமைகளுக்குள்
முண்டியடித்துக்கொண்டு
அன்பையும் ஆசையையும்
அடக்கிக்கொண்டு
சிலசமயங்களில்...

*எப்படி இருக்கிறாய்*
என்று கேட்க வர
உன் சிறு புன்னகையே
என்னைக் கிண்டல் செய்து
உன் முன்னால்
மண்டியிட வைக்கிறது!!!

ஹேமா(சுவிஸ்)

70 comments:

  1. தெளிவுக்குப் பெயர் போன ஹேமாவுக்கு இப்படி ஒரு தடுமாற்றமா? ஆனாலும் சுவாரஸ்யமான தடுமாற்றம்தான்.நளினம் ஹேமா.

    ReplyDelete
  2. யாரிந்த கள்வன்?

    ReplyDelete
  3. //என் திசையோடு என் இயல்பின்
    என் வேகத்தோடு
    உன்னையும்
    சேர்த்துக்கொண்டுதான்
    அலைகிறேன்.//

    என் திசையோடு என் இயல்பின்
    வேகத்தோடு
    உன்னையும்
    சேர்த்துக்கொண்டுதான்
    அலைகிறேன்.

    இப்படி வந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ

    ReplyDelete
  4. உள்ளம் சொல்லும் ...கவிதை.!

    (யாருப்பா அந்த புண்ணியவான்! பச்சப்புள்ளைய ரொம்ப படுத்தாம உன் காதலையும் சொல்லிடு.)

    ReplyDelete
  5. //"தடுமாற்றம்..."//

    வெளித்த வானத்துக்கே தடுமாற்றமா?

    ஹேமா, எதுக்கும் உன்னையே கேட்டுப்பாரு. ஒருவேளை காதல் வசப்பட்டிருப்பே..!

    ReplyDelete
  6. தேடலில் வரும் மாற்றம் ரசிக்கும்படியாக இருக்கும். கவிதையில் காதலின் தேடலில் காதலியின் உணர்வுகள் பேசுகின்றன. கவிதை ரொம்ப அருமை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  7. ஏன் சொன்னா தான் என்னவாம்..? அவராச்சும் சந்தோஷப்படுவாரு இல்ல.. எல்லாம் வில்லத்தனம் :)

    ReplyDelete
  8. \\உன் சிறு புன்னகையே
    என்னைக் கிண்டல் செய்து
    உன் முன்னால்
    மண்டியிட வைக்கிறது!!!\\
    அட!! அசத்துறீங்க ஹேமா.

    ReplyDelete
  9. அனுபவித்து எழுதப்பட்ட கவிதை போலுள்ளது.

    ReplyDelete
  10. //உன் நினைவுடனேயே
    பொழுது
    விடிந்து இருண்டாலும்
    உன்னிடம் என் மனதை
    காட்ட விரும்பாமல் மறுத்தவளாய்
    ஒளிந்து கொள்கிறேன்.//

    ஏன் தோழி இப்படி...?? நல்லா இருக்குபா உணர்வுகள்....! படித்ததும் எனக்கு ஒரு உற்சாகம் வருது எதுக்குன்னு தெரியல ஹேமா...?!!! :))

    ReplyDelete
  11. ஹேமா...

    ஃபிளாக் பேக்ரவுண்ட் அண்ட் புளூ கலர் லெட்டர்ஸ் கொஞ்சம் கஷ்டமா இருக்குங்க...வாசிக்க...வொயிட் ஆக இருந்தா தேவலாம். (என்னுடைய கருத்துங்க...தப்பா எடுத்துக்காதீங்க)

    உள்ளுக்குள்ளேயே வைத்திருக்கும் ஒரு காதல்...வெளிப்படுத்துவதில் தயக்கஙக்ள் கொண்டு... என்று வரிகளில் காதல் வழிந்தோடுகிறது.

    பெரும்பாலும் அர்த்தஙகளைக் கவிதையில் தேடக்கூடாது ஆனால் உணர்வுகளை எளிதாக மனதால் படம் பிடித்துக் கொள்ளலாம்.....

    சிறுபுன்னகைக்கு மண்டியிட்டு காதலை சமர்ப்பிப்பதாக சொல்லும் வரிகளில் அத்துமீறி வெளிப்பட்டிருக்கிறது காதலின் ஆளுமை.!

    வாழ்துக்கள்ங்க...!

    ReplyDelete
  12. //உன் நினைவுடனேயே
    பொழுது
    விடிந்து இருண்டாலும்
    உன்னிடம் என் மனதை
    காட்ட விரும்பாமல் மறுத்தவளாய்
    ஒளிந்து கொள்கிறேன்.//

    ம்ம்ம்ம்ம்ம்ம் இப்படித்தான் பலகாலம் பிறகு கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் ஆன கதையாகிய அனுபவம் உண்டு

    ReplyDelete
  13. //
    சொல்லிக் கொள்ளாமலேயே
    மெளனமாய்
    தூரம்...மிகமிக தூரமாய்
    உன்னைச் சுமந்த படி
    வந்துவிட்டேன்.//

    இது தான் காதல் என்பதா?

    ReplyDelete
  14. உன் பேச்சுத்துணையோடு
    காலம் கடந்த போதும்
    முடியாமைகளுக்குள்
    முண்டியடித்துக்கொண்டு
    அன்பையும் ஆசையையும்
    அடக்கிக்கொண்டு
    சிலசமயங்களில்...

    பெரும்பாலும் தவித்த நிலையிலேயே..இயலாமையா என்ன என அறியமுடிவதில்லை சில தவிப்புகள்

    ReplyDelete
  15. *எப்படி இருக்கிறாய்*
    என்று கேட்க வர
    உன் சிறு புன்னகையே
    என்னைக் கிண்டல் செய்து
    உன் முன்னால்
    மண்டியிட வைக்கிறது!!!

    இது தான் நம் பலவீனம்
    இதுவே காதலின் பலம்....இந்த பத்தி மொத்தமும் புரியவைக்கிறது ஹேமா

    ReplyDelete
  16. ஆஹா கவிதை அருமை...


    இதையும் கொஞ்சம் பாருங்க,,

    http://riyasdreams.blogspot.com/2010/11/blog-post.html

    ReplyDelete
  17. உணர்வுப்பூர்வமான கவிதை ஹேமா........வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. காதலும் கற்று மற! இது எதிர்வினை, ஹேமா. :)

    ReplyDelete
  19. அருமையா இருக்குங்க.

    ReplyDelete
  20. ய் தேடலுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. நல்லா இருக்கு ஹேமா

    நெகடிவ் போட்டோ அருமை

    விஜய்

    ReplyDelete
  22. நல்லா இருக்கு ஹேமா.. ;-)

    ReplyDelete
  23. //உன் சிறு புன்னகையே என்னை கிண்டல் செய்து உன் முன்னால் மண்டியிட வைக்கிறது//
    ம்ம்ம்ம்....சரிதான் ஹேமா ;) மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  24. புதுசா என்னத்த சொல்றது வழக்கம் போல் அருமை.

    ReplyDelete
  25. மிகவும் நளினமான தடுமாற்றம்,

    அழகா இருக்கு.

    ReplyDelete
  26. புன்னகையில் மண்டியிடும் அந்த மென்மையான உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. கவிதை விடு தூது ஹேமாவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. மணவறையில் அவள் அருகே இருக்கவேண்டும் எனத் துடித்திடும் ஆண்மனதுக்கு அவள் மனவறைகளுக்குள் என்னவிருக்கும் என்பது விளங்குவதில்லை அக்கா.... பெண்மனது இப்படித்தான் தடுமாறுமோ!! என்று படம் வரைந்து பாகம் குறிக்கிறது இந்தப் பெண்மனக்கவிதை... நாலு தடவை வாசிச்சேன்... :)

    ReplyDelete
  29. சொற்களின் பின்னோடும் கவிதைகளிடையே பெண்மை மிளிரும் மெய்ப்பாடு உன் கவிதைகள்

    வசீகர நாணம் .வந்தனைக்குரிய காதல்.

    ம்ம் எழுதத்தான் தீர்கிறதா எல்லாமும் எல்லாருக்கும்

    ReplyDelete
  30. ஹேமா கவிதை மிக அருமை..

    ReplyDelete
  31. யாரந்த கள்வன்?

    கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  32. இதில் கொஞ்சம் உரைநடைத்தன்மை இருக்கிறது, அடுத்த முறை எழுதும்போது கவனத்தில் இருத்திக்கொள்ளுங்கள்..

    கவிதையின் பொருள் அருமை...

    ReplyDelete
  33. //ம்ம்ம்ம்ம்ம்ம் இப்படித்தான் பலகாலம் பிறகு கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் ஆன கதையாகிய அனுபவம் உண்டு..//

    ஹேமா,
    இந்த பின்னூட்டத்தை ... கவனிக்கவும்!

    ReplyDelete
  34. தடுமாற்றம் அருமை ஹேமா.

    ReplyDelete
  35. உங்கள் தடுமாற்றம்...
    எங்களுடைய தோல்வி...
    நீங்கள் தெளிவதற்க்குள்...
    உங்களுக்கு திருமணம் நடக்கிறது.
    எங்களுக்கு பைத்தியம் பிடிக்கிறது.

    மன்னிக்கவும். சும்ம தான்..

    உங்கள் கவிதை மிகவும் அருமையன கவிதை...

    ReplyDelete
  36. நீங்கள் யார் என்று முறையில்லாமல் கேட்க வைக்கிறது கவிதை.

    ReplyDelete
  37. //உன் பேச்சுத்துணையோடு
    காலம் கடந்த போதும்
    முடியாமைகளுக்குள்
    முண்டியடித்துக்கொண்டு
    அன்பையும் ஆசையையும்
    அடக்கிக்கொண்டு
    சிலசமயங்களில்...//

    ரசித்த வரிகள்...மண்டியிட்டாலும் தடுமாற்றம் நல்லதுதான்... மயங்காத வண்டோடு மலருக்கென்ன தடுமாற்றம்!!!????

    ReplyDelete
  38. very good one ...

    ReplyDelete
  39. மனதுக்குள் அன்பு இருந்தாலும் காட்ட மறுக்கும் ஈகோவைக் காட்டும் நெகடிவ் புகைப் படமா?
    பல வரிகளில் மனத்தின் உணர்வுகள் சொல்லும் கவிதை.

    ReplyDelete
  40. இது பின்னூட்டமல்ல ஹேமா. என் ”கவிதைப்பட்டம்” கவிதைக்கு உங்களின் பின்னூட்டத்துக்கான என் தளத்தில் இட்ட என் மறுமொழி.அன்பினால் திக்குமுக்காட்டிய உங்கள் பார்வைக்குத் தப்பி விடக் கூடாதே என இங்கும்.

    //ஓ ஹேமா!அன்பைச் சொறிந்த இந்தப் பின்னூட்டத்தைப் படிக்கும்போதே நெகிழ்ந்தேன்.ரொம்பவும் தாமதித்துப் பதிலெழுத நேர்ந்தமைக்கு மன்னியுங்கள் ஹேமா.என் எழுத்துக்களுக்கு நீங்கள் தந்திருக்கும் இடம் என் தகுதிக்கு மீறியது.அன்புக்கு என் தலை சாய்கிறது.கைகள் நீள்கிறது கோர்த்துக்கொள்ள.//

    ReplyDelete
  41. //உன் பேச்சுத்துணையோடு
    காலம் கடந்த போதும்
    முடியாமைகளுக்குள்
    முண்டியடித்துக்கொண்டு
    அன்பையும் ஆசையையும்
    அடக்கிக்கொண்டு
    சிலசமயங்களில்...//

    யதார்த்தமான தடுமாற்றம்.
    அருமையான வரிகள்.

    ReplyDelete
  42. கவிதைதான்.... சண்டித்தனம் செய்யும்...
    இப்ப காதலுக் சண்டித்தனம் செய்யுதா?

    நான் சிங்கை வந்துவிட்டேன்..... 'கலா'க்கா ஈழம் சென்றுவிட்டார்கள்.
    நீங்க நலமா.....

    ReplyDelete
  43. //கடமைகள்
    என்னை வழி நடத்தினாலும்
    எச்சரிப்பு மணியடிக்க
    இதயம் துடித்து
    விழித்துக்கொள்ளும்.//

    என்ன கடமை .. ஆள் இல்லாத கடையிலே டீ ஆத்துவதா ?

    //
    உன் நினைவுடனேயே
    பொழுது
    விடிந்து இருண்டாலும்
    உன்னிடம் என் மனதை
    காட்ட விரும்பாமல் மறுத்தவளாய்
    ஒளிந்து கொள்கிறேன்.
    //

    நீங்க நினைக்கலைனா பொழுதே விடியாதோ ?


    //முகம் மாத்திரம்
    உன்னை
    வெறுத்து ஒதுக்குவதாய் நடிப்போடு
    வெறுப்பை உமிழ்ந்தாலும்...
    மறு பக்கமாய்
    உன்னை
    முழுதும் நிறைவாய்
    மனதுக்குள் நிறைத்தபடி.
    //

    இதெல்லாம் ஒரு பொழைப்பா ?

    //
    மனதுக்குள் உண்மையா என்று
    என்னை
    நானே கேட்டபடி
    என் திசையோடு
    என் இயல்பின் வேகத்தோடு
    உன்னையும்
    சேர்த்துக்கொண்டுதான்
    அலைகிறேன்.
    //

    எதுக்கு இந்த பாடு .. இதுக்கு பேசமா நீங்க சும்மாவே இருக்கலாம்

    //
    சொல்லிக் கொள்ளாமலேயே
    மெளனமாய்
    தூரம்...மிகமிக தூரமாய்
    உன்னைச் சுமந்த படி
    வந்துவிட்டேன்.
    //

    அதுக்கு என்ன இப்ப ?


    //
    உன் பேச்சுத்துணையோடு
    காலம் கடந்த போதும்
    முடியாமைகளுக்குள்
    முண்டியடித்துக்கொண்டு
    அன்பையும் ஆசையையும்
    அடக்கிக்கொண்டு
    சிலசமயங்களில்...
    //

    கவுஜையா கிறுக்குறீங்க ..

    //
    *எப்படி இருக்கிறாய்*
    என்று கேட்க வர
    உன் சிறு புன்னகையே
    என்னைக் கிண்டல் செய்து
    உன் முன்னால்
    மண்டியிட வைக்கிறது!!!
    //

    எதுக்கு காலை வாரி விடவா ?

    ReplyDelete
  44. கள் இல்லாமல் நான் இல்லை
    ------------------------------------------
    கடமைகள்
    என்னை வழி நடத்தினாலும்
    எச்சரிப்பு மணியடிக்க
    கள் குடிக்க இதயம் துடித்து
    விழித்துக்கொள்ளும்.

    உன் நினைவுடனேயே
    பொழுது
    விடிந்து இருண்டாலும்
    உன்னிடம் என் முகத்தை
    காட்ட விரும்பாமல் மறுத்தவளாய்
    கண் மூடி குடித்துக் கொள்கிறேன்.

    முகம் மாத்திரம்
    உன்னை
    வெறுத்து ஒதுக்குவதாய் நடிப்போடு
    வெறுப்பை உமிழ்ந்தாலும்...
    மறு பக்கமாய்
    உன்னை
    முழுதும் நிறைவாய்
    மனதுக்குள் நிறைத்தபடி.

    மனதுக்குள் உண்மையா என்று
    என்னை
    நானே கேட்டபடி
    என் திசையோடு
    என் இயல்பின் வேகத்தோடு
    உன்னையும்
    சேர்த்துக்கொண்டுதான்
    அலைகிறேன்.

    சொல்லிக் கொள்ளாமலேயே
    மெளனமாய்
    தூரம்...மிகமிக தூரமாய்
    உன்னைச் சுமந்த படி
    வந்துவிட்டேன்.


    உன் பேச்சுத்துணையோடு
    காலம் கடந்த போதும்
    முடியாமைகளுக்குள்
    முண்டியடித்துக்கொண்டு
    அன்பையும் ஆசையையும்
    அடக்கிக்கொண்டு
    சிலசமயங்களில்...


    *எப்படி இருக்கிறாய்*
    என்று கேட்க வர
    உன் சிறு புன்னகையே
    என்னைக் கிண்டல் செய்து
    உன் முன்னால்
    மண்டியிட வைக்கிறது!!!

    ReplyDelete
  45. valthukkal ,
    thadumarram than kathilin irundavathu padi...
    nalla irukku kavithai...

    ReplyDelete
  46. நெடுந்தூரம் பயணித்த
    தடுமாற்றம்
    சுமந்த மனதும்
    சுமை தாங்காமல்
    தடம்புரளும்
    ரயில் சக்கரங்கள்
    மண்ணை மிதித்த
    தருணம்..........

    ReplyDelete
  47. மௌனத்தின் சாயலில் மௌனமாய் பேசியிருக்கிறீர்கள்... தோழி. இந்த மௌனம் கலைக்க மனம் இல்லை..... என்றாலும் மண்டியிட வைக்க புன்னகைக்க நினைக்கும் மனம் ஏனோ..... மறுபடி... மறுபடி... விழிகளில் வெந்நீர் ஏந்துகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  48. \\உன் பேச்சுத்துணையோடு
    காலம் கடந்த போதும்
    முடியாமைகளுக்குள்
    முண்டியடித்துக்கொண்டு
    அன்பையும் ஆசையையும்
    அடக்கிக்கொண்டு
    சிலசமயங்களில்...\\

    Ukkanthu yosippaingalo?


    very very beauty.

    ReplyDelete
  49. உன் பேச்சுத்துணையோடு
    காலம் கடந்த போதும்
    முடியாமைகளுக்குள்
    முண்டியடித்துக்கொண்டு
    அன்பையும் ஆசையையும்
    அடக்கிக்கொண்டு
    சிலசமயங்களில்...
    //

    அட அருமை ஹேமா..

    ReplyDelete
  50. "...சொல்லிக் கொள்ளாமலேயே மெளனமாய்
    தூரம்...மிகமிக தூரமாய்
    உன்னைச் சுமந்த படி
    வந்துவிட்டேன்..."
    மிக அழகான வரிகள்.

    ReplyDelete
  51. நசர் அண்ணா போதுமா???

    ReplyDelete
  52. உன் நினைவுடனேயே
    பொழுது
    விடிந்து இருண்டாலும்
    உன்னிடம் என் மனதை
    காட்ட விரும்பாமல் மறுத்தவளாய்
    ஒளிந்து கொள்கிறேன்.

    என்ன ஒரு ரொமான்ஸ்

    ReplyDelete
  53. *எப்படி இருக்கிறாய்*
    என்று கேட்க வர
    உன் சிறு புன்னகையே
    என்னைக் கிண்டல் செய்து
    உன் முன்னால்
    மண்டியிட வைக்கிறது!!!

    அட அப்படியா சேதி

    ReplyDelete
  54. சொல்லிக் கொள்ளாமலேயே
    மெளனமாய்
    தூரம்...மிகமிக தூரமாய்
    உன்னைச் சுமந்த படி
    வந்துவிட்டேன்.


    மனதுள் சுமந்து அலைவதே நமக்கு வாடிக்கையாகிவிட்டது ஹேம்ஸ்
    கவிதை முழுவதும் காதல் காதல் காதல்!!

    ReplyDelete
  55. கவிதை அருமை தோழி.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  56. //முகம் மாத்திரம்
    உன்னை
    வெறுத்து ஒதுக்குவதாய் நடிப்போடு
    வெறுப்பை உமிழ்ந்தாலும்...
    மறு பக்கமாய்
    உன்னை
    முழுதும் நிறைவாய்
    மனதுக்குள் நிறைத்தபடி.//

    வார்த்தைகளில் குழைந்து வருகிண்றது மனதின் வலி!

    ReplyDelete
  57. கவிதையுடன் சேர்ந்தே வருகிறது கல்லுரி ஞாபகங்கள் .... வாழ்த்துக்கள் ஹேமா

    ReplyDelete
  58. உன் சிறு புன்னகையே
    என்னைக் கிண்டல் செய்து
    உன் முன்னால்
    மண்டியிட வைக்கிறது!!!

    ம்ம்...எனக்கு புரிகிறது புரிகிறது...

    ReplyDelete
  59. ஃஃஃஃசொல்லிக் கொள்ளாமலேயே
    மெளனமாய்
    தூரம்...மிகமிக தூரமாய்ஃஃஃஃ
    அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    mathisutha.blogspot.com

    ReplyDelete
  60. அருமை...அழகு

    ReplyDelete
  61. ஆகா இது அட்டகாசமான ஒருதலைக் காதல் கவிதை, உங்களைப் போலவே அழகாய் உள்ளது ஹேமு.
    கொஞ்சம் சோகத்தில் இருந்து வெளி வந்துள்ளது கவிதை, பிரமாதம். தூள்

    ReplyDelete
  62. //*எப்படி இருக்கிறாய்*
    என்று கேட்க வர
    உன் சிறு புன்னகையே
    என்னைக் கிண்டல் செய்து
    உன் முன்னால்
    மண்டியிட வைக்கிறது///


    அனுபவித்து ரசித்த வரிகள்...

    உணர்வை கொட்டிய காதல் வெளிப்பாடு சூப்பர் ஹேமா.. !! :-))

    ReplyDelete
  63. :)

    http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_20.html

    ReplyDelete
  64. ரொம்ப நல்லாயிருக்குங்க ஹேமா.. சிறு புன்னகையில் கிண்டல் செய்து மண்டியிடச்செய்யும் வசீகரம் இந்த கவிதையில் காட்சிப்படுகிறது. அழகு..

    ReplyDelete
  65. //உன் நினைவுடனேயே
    பொழுது
    விடிந்து இருண்டாலும்
    உன்னிடம் என் மனதை
    காட்ட விரும்பாமல் மறுத்தவளாய்
    ஒளிந்து கொள்கிறேன்.//
    //சொல்லிக் கொள்ளாமலேயே
    மெளனமாய்
    தூரம்...மிகமிக தூரமாய்
    உன்னைச் சுமந்த படி
    வந்துவிட்டேன்.//
    எந்தக்காலத்திற்கும் பொருந்தும் வரிகள்.. எனக்கும்தான் ....

    ReplyDelete