Thursday, November 11, 2010

பாசத்தின் நிறம்சொல்லும் வறுமை...

பரம்பரைத் தொழில் அல்ல
விரும்பி வேண்டியதுமல்ல.

வறுமை வாசலில் காவலிருக்க
பஞ்சம் கூரைமேல் குந்தியிருக்க
வயிறு காத்திருக்கும்
ஒற்றைப் பருக்கைக்காய்.

கண்களுக்குள் ஏக்கம் நிறைத்து
கையேந்தும்
இளம் தளிரொன்று
ஏதோ ஒரு பாட்டு
பசி கண்ணுக்குள்
சுதியும் விலகியபடி.

பரிதாபம் தாளாமல்
"வருவாயா என்னோடு
பாலும் பட்டும்
காரும் கணணியுமாய்
போகலாம்
பள்ளிக்கூடத்துக்கும்".

"வருகிறேன்...வர விருப்பம்
என்கூட அம்மாவின் சேலை
அப்பா எனக்கடிக்கும் பிரம்பு
அண்ணாவின் ஒரு தலைமுடி
தங்கையின் பிச்சைப் பாத்திரம்
எடுத்து வருவேன்
நினைவாக.

இருக்குமா இடம்
உங்கள் வீட்டில்"!!!

ஹேமா(சுவிஸ்)

37 comments:

  1. நெஞ்சை தொட்ட கவிதை

    ReplyDelete
  2. பாசத்தின் நிறத்தை நெகிழ்வூட்டும்படிச் சொன்ன இந்தக் கவிதை உங்கள் வரவை அறிவிக்கிறது.வாழ்த்துக்கள் ஹேமா கரைய வைத்த கவிதைக்கு.

    ReplyDelete
  3. நெஞ்சை தொட்ட...
    கரைய வைத்த கவிதை

    ReplyDelete
  4. பாசத்தின் குரலும் சேர்த்த கவிதை... நல்லாருக்கு.

    ReplyDelete
  5. \\"வருகிறேன்...வர விருப்பம்
    என்கூட அம்மாவின் சேலை
    அப்பா எனக்கடிக்கும் பிரம்பு
    அண்ணாவின் ஒரு தலைமுடி
    தங்கையின் பிச்சைப் பாத்திரம்
    எடுத்து வருவேன்
    நினைவாக.

    இருக்குமா இடம்
    உங்கள் வீட்டில்"!!!\\

    ennamo irukkunga intha varigalil..

    ReplyDelete
  6. //வறுமை வாசலில் காவலிருக்க
    பஞ்சம் கூரைமேல் குந்தியிருக்க
    வயிறு காத்திருக்கும்
    ஒற்றைப் பருக்கைக்காய்.//

    சூப்பர்.

    ReplyDelete
  7. நெஞ்சம் கணக்கிறது பிஞ்சுகளின்
    சுமையான சோகங்கள் தோழி

    ReplyDelete
  8. //கண்களுக்குள் ஏக்கம் நிறைத்து
    கையேந்தும்
    இளம் தளிரொன்று
    ஏதோ ஒரு பாட்டு
    பசி கண்ணுக்குள்
    சுதியும் விலகியபடி.//

    உண்மையான வரிகள்...

    ReplyDelete
  9. யார் வீட்டிலும் மட்டுமல்ல,யார் மனதிலும் கூட இடம் இல்லை...

    ReplyDelete
  10. "வருகிறேன்...வர விருப்பம்
    என்கூட அம்மாவின் சேலை
    அப்பா எனக்கடிக்கும் பிரம்பு
    அண்ணாவின் ஒரு தலைமுடி
    தங்கையின் பிச்சைப் பாத்திரம்
    எடுத்து வருவேன்
    நினைவாக.

    இருக்குமா இடம்
    உங்கள் வீட்டில்"!!!


    வலியை சொல்லும் வரி

    விகடனில் வெளிவந்த உங்கள் பதிவு சரியா??

    ReplyDelete
  11. வறுமையின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுமா வறுமை பேசும்...?!!

    :((

    ReplyDelete
  12. நல்லதொரு சிந்தனையான கவிதை.

    ReplyDelete
  13. கல்லும் கரையும் கவிதை...

    ReplyDelete
  14. காட்சியை பிரதிபலிக்கிறது வரிக்கு வரி கவிதை வலி கண்கூட நெஞ்சை பிசைகிறது வேதனை...

    //
    "வருகிறேன்...வர விருப்பம்
    என்கூட அம்மாவின் சேலை
    அப்பா எனக்கடிக்கும் பிரம்பு
    அண்ணாவின் ஒரு தலைமுடி
    தங்கையின் பிச்சைப் பாத்திரம்
    எடுத்து வருவேன்
    நினைவாக.

    இருக்குமா இடம்
    உங்கள் வீட்டில்"!!!//

    பிஞ்சின் பாசத்தை என்னவென சொல்ல தெரியவில்லை...

    ReplyDelete
  15. வறுமையுடன் ஆரம்பித்து, ஏக்கத்துடன் முடிந்தது. சிறந்த கவிதை.

    ReplyDelete
  16. வறுமையில்தான் பாசம் வருமோ.. நல்ல கவிதை ஹேமா.

    ReplyDelete
  17. //கண்களுக்குள் ஏக்கம் நிறைத்து
    கையேந்தும்
    இளம் தளிரொன்று
    ஏதோ ஒரு பாட்டு
    பசி கண்ணுக்குள்
    சுதியும் விலகியபடி.//
    நெஞ்சை தொட்ட கவிதை

    ReplyDelete
  18. வறுமை ஏக்கம்... :(

    ReplyDelete
  19. Awesome kavithai..

    Keep posting :)

    ReplyDelete
  20. /////வறுமை வாசலில் காவலிருக்க
    பஞ்சம் கூரைமேல் குந்தியிருக்க////
    அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. //என்கூட அம்மாவின் சேலை
    அப்பா எனக்கடிக்கும் பிரம்பு
    அண்ணாவின் ஒரு தலைமுடி
    தங்கையின் பிச்சைப் பாத்திரம்
    எடுத்து வருவேன்
    நினைவாக.//

    கவிதை உருக்குகிறது.

    ReplyDelete
  22. ம்ம் நல்ல முயற்சி

    ReplyDelete
  23. கொடிது, கொடிது வறுமை கொடிது. அதனிலும் கொடிது இளமையில் வறுமை என்று ஒளவையார் சொன்னது ஞாபகம் வருகிறது.

    ReplyDelete
  24. பிறர் வலியைக் கண்டு பரிதாபப்பட பழகியிருக்கிறோமேத் தவிர, பங்கிட்டுக்கொள்ள பழகிக்கொள்ளவில்லை ஹேமா.

    ReplyDelete
  25. வலித்த வறுமை.. பாசத்தின் கவிதை

    ReplyDelete
  26. நல்லா இருக்கு ஹேமா..
    வறுமை வலி.. :(

    ReplyDelete
  27. மிக ஆழ்ந்த உணர்வுகளை கிளறிய கவிதை. தேசத்தின் அவலம், இயலாமையின் கொடுமை, இன்னும் வாழத் துடிக்கும் நம்பிக்கை என முரண்பட்ட வாழ்க்கைப் பேசுகிறது கவிதை. மிக அழகு. நன்றி. உங்கள் பிளாக் தலைப்பில் "வானம் வெளித்த" என்ற இடத்தில் "வெளுத்த" என்ற சொல் சரியாய் இருக்கும் என்பது என் எண்ணம். கவனியுங்கள். வருகை தாருங்கள்...( ithayasaaral.blogspot.com )

    ReplyDelete
  28. //இருக்குமா இடம்
    உங்கள் வீட்டில்"!!!//

    ம்ம்ம் அருமை....
    வணக்கம் ஹேமா...

    ReplyDelete
  29. உளைச்சலை உண்டாக்கிய வரிகள்

    ReplyDelete
  30. விரும்பி ஏற்றதில்லை... ஆரம்பமே.. அருமை.

    நெஞ்சை தொட்ட கவிதை
    நல்லா இருக்குங்க...!!

    ReplyDelete
  31. இந்தக் கவிதையின் பொருள் சரியென்றே நினைக்கிறேன்.ஆனால் ஏதோ ஒன்று தவறவிடப்பட்ட மாதிரி உணர்கிறேன்.

    என்றாலும் ஊக்கமளித்த...

    கார்த்திக்(LK)...

    யாதவன்...

    வினோ...
    உங்கள் வீட்டில் ஏதாவது விஷேசமா ?

    சுந்தர்ஜி...

    குமார்...

    சாரல்...

    ராதாகிருஷ்ணன் ஐயா...

    லோகு...

    ராஜவம்சம்...

    தினேஸ்...

    பிரபு...

    சங்கவி...ரொம்ப நாளுக்கப்புறம்!

    செந்தில்...நேத்தும் உங்க கவிதை ஒண்ணு கேட்டேன் வானொலியில் !

    சக்தி...

    கௌசி...

    Dr,ராதாகிருஷ்ணன்...

    ஆர்.வி.எஸ்...

    தமிழரசி...

    தமிழ்...

    ஸ்ரீராம்...

    அம்பிகா...

    சௌந்தர்...

    அஷோக்...உங்க பின்னூட்டம் புரியல !

    தங்கிலிஸ் பையன்...

    சுதா...

    அன்பு...

    நேசா...

    ரதி...

    எஸ்.கே...

    சத்ரியா...

    றமேஸ்...

    பாலா...

    தமிழ்க்காதலன்...முதல் வருகைக்கு அன்பு நன்றியும் வணக்கமும் !

    ஞானம்..

    அப்பா...

    ஆனந்தி...எங்கே அடிக்கடி காணமுடியவில்லையே தோழி !

    அத்தனை என் தோழமைக்கும்
    நன்றி நன்றி !

    ReplyDelete
  32. //ஆனந்தி...எங்கே அடிக்கடி காணமுடியவில்லையே தோழி !//

    அடிக்கடி ஆன்லைன் வர முடியவில்லை தோழி.. வர முயற்சி செய்கிறேன்.. :-)

    உங்கள் அன்பிற்கு நன்றி..!

    ReplyDelete
  33. சாப்படாமல் இருந்து அனுபவித்து பார்த்தேன் ..உள்ளம் துளைத்த அனுபவ வரிகள் சகோதரியே

    ReplyDelete