Thursday, October 21, 2010

இணைய விடுப்பு...


வணக்கம் வணக்கம் என் அன்பு நண்பர்களுக்கு நான் சுகம் சுகம்தானே எல்லோரும்.

வீடு திருத்தப்படுகிறது.இந்தவருடத்தில அடிக்கடி திடீர் விடுமுறை எடுத்துவிடுகிறேன் என்னையறியாமல்.என்ன செய்ய !

தற்சமயம் சிநேகிதியின் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன்.கணணியை என் வீட்டைப்போல அதிக நேரம் அவர்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ பயன்படுத்த முடியாமலிருக்கிறது.
மின்னஞ்சல்களை மட்டும் அவ்வப்போது பார்த்துக்கொள்கிறேன் அலுவலகத்தில்.சிநேகிதி வீட்டில் 3 குழந்தைகள்.நான் கணணியோடு குந்தியிருப்பதை ஏதோ ஒரு புதுப்பிராணியைப்போலப் பார்க்கிறாள் என்னை.

இன்னும்.......ம் 10 - 15 நாள் ஆகும்போல இருக்கு சுதந்திரமாக இணையத்தோடு இணைய.கஸ்டமாகத்தான் இருக்கிறது.என்றாலும் வேலை வேலை.அதோடு வீடு ஒரே தூசும் துடைத்தலுமாக நிறையவே வேலை.அதுவரை...........

அன்போடு ஹேமா.

54 comments:

  1. சீக்கிரம் வாருங்கள்

    ReplyDelete
  2. எங்கள் மனதில் ஒட்டடையும் தூசும் அதிகம் படிவதற்குள் விரைவாய் வந்து விடுங்கள் ஹேமா.உடல்நலனில் அக்கறை கொள்ளுங்கள்.முழுப் புத்துணர்வோடு பழையன கழிந்து புதியன தர விரைந்து வாருங்கள்.அதுவரை உங்களை இழந்திருப்போம்.

    ReplyDelete
  3. ஹேமா.....விரைவில் உங்கள் வேலை முடித்து வாருங்கள்.....என் கவிதைகள், ரசிகையை காணாமல் ஒரே சோகமாய் பாடுகிறது.......!!?

    ReplyDelete
  4. காத்திருக்கிறோம். விடுப்புக்கு நடுவில் நலம் விசாரிக்க வந்தது இதம்.

    ReplyDelete
  5. நல்லா லீவ் கொண்டாடுங்கள் சீக்கிரம் வாங்க

    ReplyDelete
  6. //இன்னும்.......ம் 10 - 15 நாள் ஆகும்போல இருக்கு சுதந்திரமாக இணையத்தோடு இணைய.கஸ்டமாகத்தான் இருக்கிறது.என்றாலும் வேலை வேலை.//

    விரைவில் வாருங்கள்.

    ReplyDelete
  7. நலம் பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. இந்தவருடத்தில அடிக்கடி திடீர் விடுமுறை எடுத்துவிடுகிறேன் என்னையறியாமல்.என்ன செய்ய ///


    காத்திருப்போம். எல்லோருக்கும் ஏற்பட கூடியது தான்

    ReplyDelete
  9. இணைய தொடர்பில்லாத புதிய நாட்களுக்கு வாழ்த்துக்கள் ஹேமா!
    டிசம்பரில் நானும் பரிட்சிக்கப் போகிறேன்.

    ReplyDelete
  10. // ஒரு புதுப்பிராணியைப்போலப்
    பார்க்கிறாள் //

    பேரு ஏதும் இருக்கா அந்த பிராணிக்கு ?

    ReplyDelete
  11. சந்தோசமாய் நலமே வாருங்கள்.

    வீடு திருத்தினால் அது புதுவீடுதானே ஹேமா.
    புகுவிழாவுக்கு நெல்லுப்பெட்டி அனுப்புகிறேன்:)

    ReplyDelete
  12. வேலைகளை நல்லபடியா முடிச்சுட்டு வாங்க.

    நாங்க 'இங்கெ'தான் இருப்போம்:-)

    ReplyDelete
  13. கை கால் உதறும்

    கண்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டு

    என்ன ஆச்சோ என்ற பதைபதைப்பு

    இந்த மூன்றில் ஏதாவது ஒன்று இருக்குதா ஹேமா?

    நிம்மதியா இருங்க.........

    ReplyDelete
  14. சீக்கிரம் வாங்க ஹேமா.. :)

    ReplyDelete
  15. விரைவில் உங்கள் வேலை முடித்து வாருங்கள்... Take Care.

    ReplyDelete
  16. புது பிராணி போல பார்க்கிறாங்களா? என்ன கொடுமை சரவணா? எங்க ஹேமாவையா? ம்ம்ம் இங்க என்னையும் அப்படிதான் பாக்கறாங்க அதான் எஃபெக்ட்...சரிடா வேலை முடிய வா காத்திருக்கோம்

    ReplyDelete
  17. பழைய கவிதையெல்லாம் வாசிக்க வேணாமா

    நிதானித்து வாருங்கள்

    ReplyDelete
  18. இனையத்திர்க்கும்,
    பதிவால் இனைந்தவர்களுக்கும் விடுப்பு.

    ரைட்.

    ReplyDelete
  19. இனையத்திர்க்கும்,
    பதிவால் இனைந்தவர்களுக்கும் விடுப்பு.

    ரைட்.

    ReplyDelete
  20. நிலா(வும்) சுகம் தானே ஹேமா!

    மெல்ல வாருங்கள் ...

    ReplyDelete
  21. விரைவில் வாரும்.. இன்னும் பழைய பதிவுகளையே படிக்கவில்லை :(

    ReplyDelete
  22. ஹேமா, சந்தோசமாக போய்வாருங்கள். ஆனால் சீக்கிரமாவே வாருங்கள். வட்ட நிலா சுகம் தானே:))))
    அன்புடன் மங்கை

    ReplyDelete
  23. காத்திருக்கிறோம் வருக வேலைகளை முடித்துவிட்டு எழுதுக... வெறுமையை உணர்வதாய் இணையத்தில் உலா வருவதாக ஒரு உணர்வு சொல்லிக்கொள்கிறது உங்க இடைவெளி.. வந்து கவி ஈரப்படுத்துக

    ReplyDelete
  24. //கை கால் உதறும்

    கண்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டு

    என்ன ஆச்சோ என்ற பதைபதைப்பு//

    :)))). Blogger withdrawal symptoms???? Tooooooo....bad.

    பேசவேண்டிய ஓர் விடயம் பாக்கியிருக்கிறது. ஆற, அமர வாருங்கள் ஹேமா, பேசுவோம்.

    ReplyDelete
  25. நல்லது ஹேமா நாங்களும் காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  26. களைத்தபின் உறக்கமும், விழித்தவுடன் புத்துணர்வும் பெற இறையருள் நிலைக்கட்டும்! நாட்கள் நொடிபோல் விரைந்து, ஹேமாவின் குதூகல எழுத்துக்களை வாசிக்கும் இனிய நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  27. வாங்க.....வாங்க.......சீக்க்ரமா.

    ReplyDelete
  28. விரைவில் வருக

    ReplyDelete
  29. பதிவுலகம் இப்ப இருக்கிற நிலமையில எழுதணுமான்னு யோசிக்கிறேன். நல்லவேளை சமீப காலமாக நீங்கள் பதிவுலகில் இல்லை ...

    ReplyDelete
  30. எனக்கு கமெண்ட் போடற ஒரே ஆளு நீங்க தான்... அப்புறம் நான் எப்டி எதையாவது கிறுக்குவது...

    நான் கிறுக்கவாவது ஜீக்கரம் வந்துடுங்க ஹேமாஜி ;)

    (அப்பாடி... தப்பிச்சுதுடா பதிவுலம் :)))

    ReplyDelete
  31. அட, இதுதான் நல்ல தருணம் என கணினி உலகத்தை விட்டு நிம்மதியாக பதினைந்து தினம் இருங்கள். :)

    ReplyDelete
  32. ஹேமா விடுப்பெடுக்கிறதுக்கெல்லாம் “இணைய விடுப்பு”-ன்னு தலைப்பு போட்டு பயமுறுத்தறாங்கப்பா.......!

    10/15 நாளென்ன...? அதுக்கு முன்னவே வந்தாலும் வரவேற்போம்!

    ReplyDelete
  33. m ம் நடத்துங்க நடத்துங்க,அடுத்து லீவ் முடிஞ்சுது அப்ப்டின்னு ஒரு பதிவா?ஹேமா பட்டாசை கிளப்புங்க

    ReplyDelete
  34. நல்லபடியா ஓய்வெடுத்துக்கிட்டு புத்துணர்ச்சியோட வாங்க :-))

    ReplyDelete
  35. நன்றி தோழி இப்பவாவது சொன்னிங்களே கொஞ்சம் தவிச்சு தான் போய்ட்டோம்

    ReplyDelete
  36. என்னடா இது.. தங்கச்சிய காணோமேன்னு டென்ஷன் ஆயிடுச்சு ஹேமா!

    ReplyDelete
  37. கவியரசி,
    வாங்க வாங்க...

    ஆனா சீக்கிரம் வந்துடுங்க.

    உங்க எழுத்துக்களைப் படிக்க முடியாமல் என்னவோ போல் இருக்கு,.

    ReplyDelete
  38. நான் கணணியோடு குந்தியிருப்பதை ஏதோ ஒரு புதுப்பிராணியைப்போலப் பார்க்கிறாள் என்னை.//

    ஹாஹாஹா நாம எல்லாம் திருந்திருவோமா ஹேமா..

    திண்ணை கவிதை அருமை..வாழ்த்துக்கள்டா.

    ReplyDelete
  39. நான் கணணியோடு குந்தியிருப்பதை ஏதோ ஒரு புதுப்பிராணியைப்போலப் பார்க்கிறாள் என்னை.//

    ஹாஹாஹா நாம எல்லாம் திருந்திருவோமா ஹேமா..

    திண்ணை கவிதை அருமை..வாழ்த்துக்கள்டா.

    ReplyDelete
  40. நீண்ட நாள் கழித்து உங்கள் பக்கம் வந்திருக்கிறேன், ஆனால் காத்திருக்க வைத்துவிட்டீர்களே!
    பரவாயில்லை, காத்திருக்கிறேன்!!

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. Hello Periyamma,
    How are you?
    from Thulasi

    ReplyDelete
  43. அது தானா சங்கதி......... ரொம்ப நாளாய் பதிவு ஒண்ணும் காணோம் என்று பார்த்தேன்.

    ReplyDelete
  44. ஹேமா, சுகம்தானே!
    உங்களுக்கு என் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  45. கனவுகளுக்குள்
    நித்தம் வரும் கனவு நீதான்
    என்பதைச் சொல்லாமலே
    அகலத் திறந்த கண்களுக்குள்
    உன் கனவுகளை
    இன்னும் சேமிக்கிறேன்.

    .... Very nice.

    Hope to see you soon!

    ReplyDelete