விழித்தே இருக்கிறேன்
கொடூரமான
கறுப்பு எழுத்துக்கள்
சிலுவைகளாய் கழுத்தை நெரிக்க
அடிமை வாழ்வென கையெழுத்திட
தீராத் தர்க்கம்
கைகள் வலுவற்றதாய் !
ஓ...
இத்தனை கனமாய் இருந்திருக்குமா
இயேசுவின் சிலுவைகூட !
தீர்வாக்கப்பட்ட
ஈழமண்ணில் விழுந்த
தியாகங்களை எண்ண
விரல்கள் போதாமலிருக்கிறது !
கசாப்புக்கடைக்காகவே
பிறப்பெடுக்கும் தமிழன் கையில்
திணிக்கப்பட்ட ஆயுதங்கள்
பயங்கரவாதிகளென பகிரங்கப்படுத்த
இல்லையென்றான் திலீபன்.
மாற்றுவழி அகிம்சைக்கும்
சரியெனச் சரிந்தான் !
ஆனது என்ன ?
பார்வைகளைப் பரீட்சிக்காத உலகம்
எல்லாமே ஒன்றுதானென
உயிரை
தலை மயிராய் ஊதியதே !
இன்று....
தின்ற உயிர்களை
அசைபோட்டு
ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது
சிங்களம்!!!
ஹேமா(சுவிஸ்)
கசாப்புக்கடைக்காகவே
ReplyDeleteபிறப்பெடுக்கும் தமிழன் ...
:(
உருக்கமான கவிதை..
ReplyDeleteரொம்ப தெளிவாயிருக்கு
ReplyDeleteரொம்ப பிடிச்சுருக்கு.
எளிமையாகவும் கூட.
விடிவு ஒன்று வரும் தோழி...தியாகங்களின் பூமியாய் அன்று தமிழீழம் மலரும்....!
ReplyDeleteதிலீபன் ஆத்மாவிற்கு வணக்கம்
ReplyDelete\\இன்று....
ReplyDeleteதின்ற உயிர்களை
அசைபோட்டு
ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது
சிங்களம்!!
யதார்த்தம் வீர வணக்கம்.
நெருப்புக்கங்குகளைக் கக்கும் பெருமூச்சு மட்டுமே!
ReplyDeleteவீர வணக்கம்.
ReplyDeleteஈழம் கனவல்ல நிஜமாகும் ஹேமா...
ReplyDeleteநிகழ்வுகளை வெளிச்சம் போட்டு காமிக்கும் வரிகள்...
ReplyDeleteகவிதைக்கு நன்றி!
//கசாப்புக்கடைக்காகவே
ReplyDeleteபிறப்பெடுக்கும் தமிழன் கையில்
திணிக்கப்பட்ட ஆயுங்கள்
பயங்கரவாதிகளென பகிரங்கப்படுத்த
இல்லையென்றான் திலீபன்.
மாற்றுவழி அகிம்சைக்கும்
சரியெனச் சரிந்தான் !//
திலீபனுக்கு கண்ணீர் வணக்கம்...
கவியரசி,
ReplyDeleteதங்கள் விசாரிப்புக்கு எனது நன்றிகள். நலமே.
தமிழன் என்பவனை தலை நிமிர்த்துக் காட்டிய ஒரு மாமனிதனின் காலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதைத் தவிர இன்று வேறேதும் செய்ய முடியா கையறு நிலை.
புண்ணிய ஆத்மாக்களின் கனவு தேசம் விரைவில் மலரும்.
அது வரை நம் நம்பிக்கையே நமக்குத் துணை.
தங்களின் கவிதை உணர்வுபூர்வமாய் இருக்கிறது.
மீண்டும் நன்றி கவியரசி.
உருக்கமான கவிதை... :((
ReplyDeleteதிலீபனுக்கு கண்ணீர் வணக்கம்
ReplyDeleteதிலீபனுக்கு என் வீரவணக்கம்..
ReplyDelete//தீர்வாக்கப்பட்ட
ReplyDeleteஈழமண்ணில் விழுந்த
தியாகங்களை எண்ண
விரல்கள் போதாமலிருக்கிறது !//
சிந்தனை வரிகள் ஹேமா!
என்னங்க...வெளித்த வானத்தையே இன்னும்முழுசா படிச்சு முடிக்கலே,,,உப்புமட சந்தி இன்னைக்கு தான்பார்க்கிறேன்...அப்போ வீட்டுப்பாடம் நிறைய இருக்கும்போல எனக்கு ...
ReplyDeleteதியாகங்கள் தீர்ந்த பின்னும் தீர்வு கிடைக்காதது இன்னும் கொடுமைதான்... :-(
ReplyDeleteபார்வைகளைப் பரீட்சிக்காத உலகம்
ReplyDeleteஎல்லாமே ஒன்றுதானென
உயிரை
தலை மயிராய் ஊதியதே //
ஐயோ என்ன கொடுமை இது..
//"திணிக்கப்பட்ட ஆயுங்கள்..."//
ReplyDeleteஆயுதங்கள்..?
உருக்கமான கவிதை.
நல்லூர் கோவில் முன்றலிலே
ReplyDeleteதீலீபன் அண்ணா எங்கு சென்றாய் என்று ஒலிக்கும்
அழுகுரல் கவிதைகள் இன்னும் என் மனதில்
வீட்டுக்கு பக்கத்தில் என்றபடியால் ஓவருனாலும் சென்று பார்த்த ஜாபகங்கள்
நினைவு நாள் வந்ததும் வீட்டுக்கு முன்னுக்கு சின்ன கொட்டில் கட்டி
தீலீபன் அண்ணா வின் படம் வைத்து பாட்டு போட்ட ஜாபகங்கள்
வளர்ந்த பின்பு கம்பசில பொய் அவர் உடல் பார்த்த ஜாபகங்கள்
காற்றும் ஒருகணம் வேச மறுத்தது
ReplyDeleteகடலும் ஒரு நொடி அமைதியாய் கிடந்தது
பேசுவார் அற்று தேசம் ......
தீயினில் எரியாத தீபங்களே
எம் தேசத்தின் நிலையான சொத்துக்களே
மண்ணினில் விதையான முத்துக்களே
நாம் மாதவம் செய்து பெற்ற சொத்துக்களே
கசாப்புக்கடைக்காகவே
ReplyDeleteபிறப்பெடுக்கும் தமிழன்.
மாற்றம் எப்போது என்று எதிர்ப்பார்த்தே
எங்கள் காலம் அஸ்தமனமாகிவிடும் போல..
எங்கள் அடுத்த தலைமுறைக்காவது கிட்டுமா சுதந்திரகாற்று?
காந்தி மரித்த கரிநாள்
ReplyDeleteசரியான எதிர்வினை
ReplyDeleteசரியாக பதிந்துள்ளீர்கள்
நெகிழவைக்கும் கவிதை ஹேமா..
ReplyDeleteரொம்ப பிடிச்சுருக்கு.
ReplyDeleteதிலீபனுக்கு வீரவணக்கம்..
ReplyDeleteஇன்னும் சில மணி நேரங்களில் மாறப்போகும் நட்சத்திரமும் உங்கள் தமிழ் மண மணி மகுடமும்.
ReplyDeleteஆகா மிக்க மகிழ்ச்சி.
திலீபனுக்கு வீரவணக்கம்..
ReplyDeleteநல்லுரின் வீதியில் நடந்தது யாகம்
ReplyDeleteநாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
தியாகிகள் கண்ட ஈழக்கனவு நனவாகும். காத்திருப்போம்...
ReplyDeleteதிலீபன். காந்தி தேசம் கொன்ற ஒரு காந்தீயவாதி. மாவீரன் தீலிபனுக்கு கண்ணீர் காணிக்கை.
ReplyDeleteமனதை உறுகச் செய்கிறது.....ஹேமா..........
ReplyDeleteமனதை பிழிகிறது வரிகள் ஒவ்வொன்றும்.....
ReplyDeleteதிலீபனுக்கு கண்ணீர் வணக்கம். உருக்கமான கவிதை..!
ReplyDeleteவரிகள் வலிகள்...
ReplyDeleteதிலீபனை..திலீபனோடு உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களை நினைவு கூர்கிறேன்...வீரவணக்கங்கள்..
ReplyDeleteதீர்வாக்கப்பட்ட
ReplyDeleteஈழமண்ணில் விழுந்த
தியாகங்களை எண்ண
விரல்கள் போதாமலிருக்கிறது !////
விரல்கள் அல்லஅறிந்த/படித்த கணக்கே போதாமலிருக்கிறது.
மிகவும் வேதனையான தருணம்.
கொடுமைங்க... வணக்கங்கள் கண்ணீராகவும்..
ReplyDeleteகொடூரம்
ReplyDeleteஉருக்கமாக இருக்கு ஹேமா...
ReplyDeleteவீர வணக்கம்ங்கள்
Nice tribute to Thileepan Hema. He is a nice personality.
ReplyDeleteஉருக்கமாக இருக்கு ஹேமா...
ReplyDeleteதிலீபன் ஆத்மாவிற்கு வணக்கம்.
நல்லா இருக்குங்க ஹேமா..
ReplyDeleteவணக்கங்கள் உங்கள் கவிக்கும்..
இதைப் படித்ததும் இனம் புரிதல் போலவும் புரியாதது போலவும் நெஞ்ச அரிப்பு. சிப்பாய்த் தியாகங்களுக்கும் தலைவர் தியாகங்களுக்கும் விலைகளும் மதிப்புகளும் வெவ்வேறோ?
ReplyDeleteஇன்றுதான் வீட்டுப் பாடம் முடித்தேன்... மாதக் கணக்கு உங்களுக்கு குறைவுதான்...வருடக் கணக்கிற்கு 365 விருதுகள் தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்... வாழ்த்துக்கள் ஹேமா...
ReplyDeleteதமிழின் உணர்வோடு கை கோர்த்துக்கொண்ட அத்தனை என் உறவுகளுக்கும் எம் இனத்துக்காய் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த அத்தனை உயிர்களில் சார்பின் என் நன்றிகள்.
ReplyDelete//அப்பாதுரை....
இதைப் படித்ததும் இனம் புரிதல் போலவும் புரியாதது போலவும் நெஞ்ச அரிப்பு. சிப்பாய்த் தியாகங்களுக்கும் தலைவர் தியாகங்களுக்கும் விலைகளும் மதிப்புகளும் வெவ்வேறோ?//
அப்பா....அதுவும் இன்றைய எங்கள் அரசியலில் இருக்கிறது என்பது என் கருத்து.வேறுபட்டிருந்தால் சொல்லுங்கள்.புரிந்துகொள்கிறேன்.
கூலிக்கு மாரடிப்பதற்கும் பாசத்தோடு மாரடிப்பதற்கும் உண்டான வித்தியாசமே அது !
//கூலிக்கு மாரடிப்பதற்கும் பாசத்தோடு மாரடிப்பதற்கும் உண்டான வித்தியாசமே அது !
ReplyDeletebeautiful!
(சரியாகத் தான் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.)
நிலைகுளைகிறேன்
ReplyDeleteநிஜத்தில்
யம்மினத்தை
கூறுபோட்ட கரங்களை
சுடலைமாடனாக
சூரையாட
தவிக்கிறது
த்மிழ் ஈழத்தில்
பிறந்திருந்தால்
பல தலை
வீழ்த்திருக்கும்
தமிழகத்தில்
பிறந்துவிட்டோம்
பாவிகளாக...........
//ஓ...
ReplyDeleteஇத்தனை கனமாய் இருந்திருக்குமா
இயேசுவின் சிலுவைகூட !//
மெய் தாம்...
விடிவதற்காகத் தான் இந்த கங்குல்
விடிவொன்று பிறக்கும்!
அதுவரை பொறுத்திருங்கள்
தமிழ்த் தாய் வெகு விரைவில்
ஈழத்தை ஈன்றெடுப்பாள்!
- 8 கோடி தமிழர்களுள் ஒருவன்.
intha inaiyathalam yellorukkum yepoodu chenradaiyum? ..mmm
ReplyDelete