ஊற்ற ஊற்ற
உள்வாங்கியபடியே
நிரம்ப விரும்பாத
மதுக்கோப்பை.
எனை மீட்டும் அன்பும்
அது மீட்கும் உன் நினைவும்
மதுவை விடவும்
மயக்கமாய்.
எப்போ தொடங்கினாய்
என்னென்ன பேசினாய்
என்ன சொல்லி முடித்தாய்
எந்த பிரக்ஞையுமின்றி.
மூச்சுத்திணறுகிறது
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்
உன் அன்பிற்குள்.
நீந்திக்கரை சேரும்
நிலையில் நானில்லை.
நினைவும் எனதாயில்லை.
கரம் நீட்டிக் கேட்கிறேன்
கரையேற்றி விடும்படி.
*நீயாய் நீந்தி வா*
எனச்சொல்லி
புள்ளியாய்
போய்க்கொண்டிருக்கிறாய்.
*அன்பும் விஷம்தானடி*
அசரீரி காதில் விழ
அண்ணாந்து பார்க்கிறேன்.
விடியும் வானில் சிரித்தபடி
விடிவெள்ளிகள்!!!
ஹேமா(சுவிஸ்
மூச்சுத்திணறுகிறது
ReplyDeleteமூழ்கிக்கொண்டிருக்கிறேன்
உன் அன்பிற்குள்.///
முடியல....
நல்லாயிருக்கு ஹேமா...
*அன்பும் விஷம்தானடி*\\\\\
ReplyDeleteஹேமா நூறுவீதம் இந்த வாக்கியம்
உண்மை அன்பு வைத்துப் பிரிதல்
அப்பப்பா... அழகாய் சொல்லியிருக்காறாய்
அசரீரி காதில் விழ
அண்ணாந்து பார்க்கிறேன்.\\\\\\
விடியும் வானில் சிரித்தபடி
விடிவெள்ளிகள்\\\\\
விடியவிடியத் தூங்காம...தூங்கவிடாம
மிகவும் துன்பப்படுத்தும்
அந்த உத்தம ராசா யாரடி?
“அன்பு” மயக்கத்தில்
ReplyDeleteதள்ள முடியாத
தள்ளி வைக்க இயலாத
நினைவுகளால்
தாங்கித்
தள்ளாடும்
உன் கவியின்
மயக்கத்தில்..
எல்லோரும்!!
ஆமா..இவ்வளவு மயக்கம்
கொடுத்த அந்த மன்னவரு
யாரோ..!!??
ம்ம் //ஊற்ற ஊற்ற
ReplyDeleteஉள்வாங்கியபடியே
நிரம்ப விரும்பாத
மதுக்கோப்பை//
நல்லா இருக்கு !
காதல் ஸ்பெஷல் கவிதாயினி நீங்க தான் :)
///நிரம்ப விரும்பாத
ReplyDeleteமதுக்கோப்பை///
நம்ம மனசும் ஒரு நிரம்ப விரும்பாத மது கோப்பைதான்...!
அதனாலதான் கனவு வந்து படுத்துது...!
நல்லா இருக்குங்க.
ReplyDeleteஊற்ற ஊற்ற
ReplyDeleteஉள்வாங்கியபடியே
நிரம்ப விரும்பாத
மதுக்கோப்பை.
arumaiyaa arambam..izhukirathu apadiye..
கவிதையும் கோப்பை நிரம்பிப் பிரக்ஞையற்று வழியும் காதலும் கண்ணை விட்டகலா படத்தின் வண்ணமும் மனதைக் கொள்ளயடித்துப் போய்விட்டது ஹேமா.
ReplyDeleteநீந்திக்கரை சேரும்
ReplyDeleteநிலையில் நானில்லை.
நினைவும் எனதாயில்லை.
கரம் நீட்டிக் கேட்கிறேன்
கரையேற்றி விடும்படி.
*நீயாய் நீந்தி வா*
எனச்சொல்லி
புள்ளியாய்
போய்க்கொண்டிருக்கிறாய்.
மயங்க வைக்கும் ஒவ்வொரு வரியும் அழகு தான் ஹேமா. வாழ்த்துக்களுடன்......
//
ReplyDelete*அன்பும் விஷம்தானடி*
அசரீரி காதில் விழ
அண்ணாந்து பார்க்கிறேன்.//
உண்மைதான் ஹேமா
தெளிஞ்சதா இல்லையா!
ReplyDelete//*அன்பும் விஷம்தானடி*//
ReplyDeleteஅதுசரி... சிலநேரத்துல உடனே உயிர்போயிடும், சிலநேரம் இழுத்துகிட்டு கிடக்கவிட்டுடும்... விஷமாயிருந்தாலும் விரும்பி குடிப்பதுதானே அது...
பொங்கி வளியுது காதல் வரிகள்.
ReplyDeleteஹேமா!
ReplyDeleteமயக்கமா வருதோ!
நல்லாயிருக்கு ஹேமா
ReplyDeleteகீற்றில் வந்தமைக்கு வாழ்த்துகள் ஹேமா
ReplyDeleteகீற்றில் சில நாட்களுக்கு முன்பே படித்தேன் அருமை தொடருங்கள் சகோதரி
ReplyDeleteநீந்திக்கரை சேரும்
ReplyDeleteநிலையில் நானில்லை.
நினைவும் எனதாயில்லை.
கரம் நீட்டிக் கேட்கிறேன்
கரையேற்றி விடும்படி.
ஹ ஹ ஹ
அழகு வரிகள் ரசித்தேன்!!
ஒவ்வொரு வரியும் ரசிக்க வைக்கிறது. மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்கிறேன் ஹேமா. கவிதை வரிகளிலேயே மூழ்கி விட்டது மனம்.
ReplyDelete*அன்பும் விஷம்தானடி*
ReplyDeleteஅசரீரி காதில் விழ
அண்ணாந்து பார்க்கிறேன்.
எத்தனை அர்த்தம் பொதிந்த வரிகள்
கவிதை நல்லா இருக்கு
//ஊற்ற ஊற்ற
ReplyDeleteஉள்வாங்கியபடியே
நிரம்ப விரும்பாத
மதுக்கோப்பை.//
ஹேமா நீங்க எங்கேயோ போயிட்டீங்க...
நீந்திக்கரை சேரும்
ReplyDeleteநிலையில் நானில்லை.
நினைவும் எனதாயில்லை.
கரம் நீட்டிக் கேட்கிறேன்
கரையேற்றி விடும்படி.
*நீயாய் நீந்தி வா*
எனச்சொல்லி
புள்ளியாய்
போய்க்கொண்டிருக்கிறாய்.
சொல்லத்துடிக்குது மனசு...
*நீயாய் நீந்தி வா*
ReplyDeleteஎனச்சொல்லி
புள்ளியாய்
போய்க்கொண்டிருக்கிறாய்.//
ம்.. ரொம்ப நல்லா இருக்குங்க.
//*அன்பும் விஷம்தானடி*
ReplyDeleteஅசரீரி காதில் விழ
அண்ணாந்து பார்க்கிறேன்
//
ஆமாங்க 100% உண்மைதாங்க
கவிதைஅன்பால் தினறடிக்கிறீங்க
மிக அருமை ஹேமா.
ReplyDeleteபூங்கொத்து!
ReplyDeleteஎனை மீட்டும் அன்பும்
ReplyDeleteஅது மீட்கும் உன் நினைவும்
மதுவை விடவும்
மயக்கமாய்//
கற்பனையின் உச்சமென்பது இது தானோ?
ஹேமா இப்போது உங்கள் கவிதைகள் ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றன. தொடருங்கோ.
மயக்கத்தைப் படித்து நானே கவிதையில் மயங்கி விட்டேன். தொடருங்கோ.
மயங்க வைக்கிறீர்கள்
ReplyDelete//ஊற்ற ஊற்ற
ReplyDeleteஉள்வாங்கியபடியே
நிரம்ப விரும்பாத
மதுக்கோப்பை.//
எந்த ஊரிலே இருக்கு
//எப்போ தொடங்கினாய்
என்னென்ன பேசினாய்
என்ன சொல்லி முடித்தாய்
எந்த பிரக்ஞையுமின்றி.//
சரக்கு அதிகமானா அப்படித்தான் இருக்கும்
//
மூச்சுத்திணறுகிறது
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்
உன் அன்பிற்குள்.
//
நீச்சல் தெரியாதா ?
//
நீந்திக்கரை சேரும்
நிலையில் நானில்லை.
நினைவும் எனதாயில்லை.
கரம் நீட்டிக் கேட்கிறேன்
கரையேற்றி விடும்படி
//
நீச்சல் தெரியாதவன் எப்படி கை நீட்டுவான் ஹேமா
//
*நீயாய் நீந்தி வா*
எனச்சொல்லி
புள்ளியாய்
போய்க்கொண்டிருக்கிறாய்.
//
கோலம் போடவா
//
*அன்பும் விஷம்தானடி*
அசரீரி காதில் விழ
அண்ணாந்து பார்க்கிறேன்.
//
சரக்கு கடையிலே அன்பு வச்சா விஷம் தான்
//
விடியும் வானில் சிரித்தபடி
விடிவெள்ளிகள்!!!//
அதை ரசித்த படி கீழ்பாக்கத்தில்
நல்லாருக்கு ஹேமா.
ReplyDeleteநசர், :-))
அருமை ஹேமா.
ReplyDeleteவரிவரியாய் ரசிக்க முடிகிறது.
அபாரம்.
ரசித்து வாசித்த கவிதை.
ReplyDeleteவாசித்து ரசித்த கவிதை.
//உள்வாங்கியபடியே
ReplyDeleteநிரம்ப விரும்பாத//
எப்படிங்க கவியரசி உங்களால மட்டும் இப்படி?...
தொடக்கமே அருமை.
ஓட்டு போட்டு நகர்த்த விரும்புகிறேன்.
ReplyDeleteமயக்கமா ? கலக்கமா
ReplyDeleteவாழ்விலே குழப்பமா ?
விஜய்
கவிதையில் உள்ள புள்ளி (.), வெள்ளி (*), வியப்புக்குறி (!) வரை மயக்கம் சொல்லுது.
ReplyDeleteசின்ன பசங்கள விடுங்க ... சின்ன பொண்ணு வந்து போற இடத்துல,
இப்படி மயக்கம் வார மாதிரியா எழுதுறது.????
நசரேயன், உங்க ஒவ்வொரு எழுத்துக்கும் நானும் ரிபீட் போட்டுக்கறேன்...
ReplyDeleteஇதை எழுதுனவுங்க பேரு கீற்றுவா ???
ReplyDeleteநீங்க சும்மா சைட்டிஷ் தானா.
சொல்லாட்சியின் உச்சம். பிரமாதமாக வந்திருக்கிறது.
ReplyDeleteகவிதை..
ReplyDeleteஅன்புக் கடலில் இருந்து ஏன் நீந்திக் கரை சேர நினைக்க வேண்டும்..? அன்பு விஷமென்றால் ஏன் கிடைக்காத போது அதைத் தராதவர்களை எண்ணி ஏங்க வேண்டும்...? ஊற்ற ஊற்ற நிரம்ப விரும்பாத மதுகோப்பை..... இது சரி.
ReplyDeleteகோபக் கவிதை எழுதினாலும், சோகக் கவிதை எழுதினாலும் இதுதான் நல்லாயிருக்கு என்று சொல்லவைக்கும் அணைத்து வகைக் கவிதைகளும்... அழகிய கவிதை ஹேமா..
//*நீயாய் நீந்தி வா*
ReplyDeleteஎனச்சொல்லி
புள்ளியாய்
போய்க்கொண்டிருக்கிறாய்.//
மிக அருமை. நல்ல கவிதை ஹேமா.
நீண்ட நாட்களாகி விட்டது உங்கள் பக்கம் வந்து..நல்ல ஒரு கவிதை. வாழ்த்துக்கள் ஹேமா
ReplyDeleteஅன்பும் விஷம்தான். ஆனால் வாழவைக்கும் விஷம்.
ReplyDeleteமயக்கம் வரும் கவிதை
ReplyDeleteநல்லாயிருக்குங்க ஹேமா
ReplyDelete//எனை மீட்டும் அன்பும்
அது மீட்கும் உன் நினைவும்
மதுவை விடவும்
மயக்கமாய்//
:)
hema very nice...
ReplyDeletekavithaiyya oru bothai thaan illiya..
hem i invite u for my blog
ReplyDeleteplz visit n comment..
Padipavangalukku mayakkam tharum Kavithai Hema.
ReplyDeleteகாதல் கடலில் நீந்தி முத்த்தேடுத்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் ஹேமா.
ReplyDeleteஅன்பும் விஷம்தானடி//
ReplyDeleteஉண்மை ஹேமா..
அசத்தல் பட்டைய கிளப்புரிங்க எனக்கும்
ReplyDeleteகொஞ்சம் சொல்லி தரலாமே!!!!!!!!
அசத்தல்
//ஊற்ற ஊற்ற
ReplyDeleteஉள்வாங்கியபடியே
நிரம்ப விரும்பாத
மதுக்கோப்பை//
கொஞ்ச(கிறக்க)மாய் ரசித்தேன்
எனை மீட்டும் அன்பும்
ReplyDeleteஅது மீட்கும் உன் நினைவும்
மதுவை விடவும்
மயக்கமாய்.//
இதில் உனக்கு முழு உடன்பாடுதான்..... உங்க கவிதை ... இப்பவெல்லாம் ரெம்ப “கிக்” கா இருக்குங்க.
முழுக்கவிதையும் அசத்தல்.
நேற்று இரவே கவிதையை படிக்க முற்பட்டேன்... இங்கே சமிக்கை பிரச்சனையாகிவிட்டது.
வாழ்த்துக்கள்.
மூச்சுத்திணறுகிறது
ReplyDeleteமூழ்கிக்கொண்டிருக்கிறேன்
உன் அன்பிற்குள்//
அமாம் ஆமாம் உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும் ... நிறைவான வரிகள் பாரட்டுக்கள்.
புது வார்த்தைகளோடு வேறுபட்ட நடையில் இருக்கிறது கவிதை.
ReplyDeleteஉங்கள் படைப்புத்திறன் புது திசையில் செல்வதாக உணர்கிறேன். வாழ்த்துக்கள்!
இர்ஷாத்...அன்புக்கு நன்றி.
ReplyDeleteமுதல் போணி !
கலா....யாருமில்லை எனக்கு விஷம் தர.எனக்கு நானே
விஷமாகிவிட்டேன் போல !
நேசன்...*கவிதாயினி* அழகான புதுப் பெயரா எனக்கு.
நல்லாயிருக்கு நன்றி !
தமிழ் அமுதன்...சரியாகச் சொன்னீர்கள்.மது நிரம்பாத மதுக்கோப்பைபோல எங்கள் ஆசைகள் நிரம்பாத மனக்கோப்பை !
செல்வராஜ் ஜெகதீசன்...முதல் வருகைக்கு நன்றி.
கு
ட்டிப்பையா....நன்றி நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
சுந்தர்ஜி....உங்கள் ரசிப்பு எனக்கு உற்சாகம் தருகிறது.நன்றி.
ஜெயா...மயங்காமல் உப்புமடச் சந்திக்கு வாங்கோ கவிதை எழுத !
கார்த்திக்...உண்மையாய் அனுபவித்தால் உண்மைதானே சொல்லணும் !
வாலு...தெளியறதுக்கு முன்னமே எழுதிட்டேன்.தெளிஞ்சுதுன்னா எழுத வராதுல்ல.உங்களுக்குத் தெரியாததா !
பாலாஜி...உங்களுக்கும் அனுபவமா ?அன்பு...விஷம்ன்னு தெரிஞ்சாலும் குடிக்கிறோம்தானே !
ராஜவம்சம்...
அன்பின் பொங்கல் இது !
ராஜன்...வாலின் வால் அவர்களே வருக வருக.மயக்கமா.
அன்புன்னாலே மயக்கம்தானே !
T.V.ராதாகிருஷ்ணன் ஐயா நன்றி உங்கள் அன்புக்கு.
வேல்கண்ணன்...கீற்று க்கு
இப்போ கவிதைகள் அனுப்பி வருகிறேன்.நன்றி.
சக்தி...நிறைய நாட்களுக்குப் பிறகு இப்போ காண்கிறேன் வேறு சில தளங்களிலும்.நன்றி தோழி.நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.
மீனு....நன்றி நன்றி உங்கள் அன்புக்கு எப்போதும் நன்றி.
ரிஷபன்...உங்கள் வார்தைகள் சந்தோஷம் தருது.இன்னும் எழுத முயற்சிப்பேன்.
செந்தில்...எங்கே போவேன் உங்கள் எல்லோரையும் விட்டுவிட்டு !
கண்ணகி...சொல்லத்துடிக்குது மனசுன்னு சொல்லிட்டு ஒண்ணுமே சொல்லலயே !
ஆறுமுகம்....நன்றி.உங்கள் கவிதைகள் போலில்லாவிட்டாலும் உங்கள் நடுவில் நானும்.அதுவே சந்தோஷம்.
வேலு...அன்பு முழுமையாக உண்மையாகவும் கிடைத்திவிட்டால் அதைவிட அதிஷ்டம் வேறென்ன !
அக்பர்...நன்றி நன்றி அன்புக்கு.
அருணா....ரொம்ப நாளுக்கப்புறம் பூங்கொத்து தந்திட்டீங்க.நன்றி தோழி.
கமல்...இப்பிடி மயங்கினா எப்பிடியப்பு.
இன்னும் நிறைய எழுதக் கிடக்கு !
வழிப்போக்கன்...மயக்கத்துக்கு மருந்தும் அதே அன்புதான் !
நசர்....உங்களை...! இருங்க ஓடர் பண்ணி எடுத்துத் தாறேன் !
பாரா...அண்ணா....பாத்தீங்கதானே நசரை.வரிக்கு வரி கும்மியடிக்கிறார்.அதுவும் எழுதி வச்சாம் கும்மியடிக்கிறது.
இது எப்பிடியிருக்கு !
அம்பிகா...நன்றி தோழி ரசிக்கும் உங்கள் மனசுக்கும்.
தமிழ்...வாசித்த மயக்கமா
ReplyDeleteஇல்லை ரசித்த மயக்கமா !
கொல்லான்...வாவ்...நான் கவியரசி.நன்றி நன்றி.வாங்க உப்புமடச் சந்திக்குக் கவிதை எழுத!
ஜோதிஜி...என்னைப்போலவேன்னு சொல்லுங்க.உங்க பதிவுக்கு வந்து நானும் சொல்லக் கஸ்டமாயிருந்தா ஓட்டு மட்டும்தான் !உப்புமடச் சந்தில உங்க கவிதை ஆஹா ஒஹோ !
வியஜ்...ஏதோ ஒரு பழைய கவலைப் பாட்டு மாதிரி இருக்கு.ஏன் !
இரவீ...யாருங்கப்பா இங்க சின்னப்பசங்க.உங்க பசங்க யாராச்சும் இந்தப் பக்கம் வாறாங்களா ! நீங்க மயங்காம இருந்தாச் சரி.
கும்மியடிக்காமலே கும்மியா நசருக்கு ரிப்பீட் சொல்றீங்க !சைட்டிஸ் எல்லாம் எங்கிட்ட கேக்கலாமோ !
அப்பாதுரை..நன்றி அப்பா.
தாராபுரத்தான்....நிறைய நாளுக்கப்புறம் வாறீங்க நன்றி ஐயா.
ஸ்ரீராம்....நீங்கள் தொடர்ந்து தரும் உற்சாகமாகக் கூட இருக்கலாம் நான் தொடர்ந்து எழுதுவது !
ராமலக்ஷ்மி....சந்தோஷம் லஷ்மி அக்கா அன்பான கருத்துக்கு.
புலவரே...அடிச்சு உதறுறீங்க சமூகத்தை.நல்ல பதிவுகள் உங்கள் பக்கத்திலும் அருமை.
மது....அன்பு வாழவும் வைக்கும் வீழவும் வைக்கும் !
சௌந்தர்...எங்க உப்புமடச் சந்தில கவிதையைக் காணோம் ?
அ
ஷோக்...அப்பாக்கு சுகமில்லை சொன்னீங்க.சுகமாயிடுவார்.
சந்தோஷமாயிருங்க.
பிங்கிரோஸ்....முதல் வருகைக்கு நன்றி தோழி.இனியும் சந்திக்கலாம்.
டாக்டர்...வாங்க.இடைக்கிடை ஹேமாவின் கவிதைகளையும் ரசிக்கிறீங்க.நன்றி.
முகிலன்....முத்து வேணும்ன்னா நீத்தித்தானே ஆகணும் !
தேனக்கா...நன்றி நன்றி அன்புக்கு.
ஜெயமாறன்...சொல்லிக் கொடுக்காமலே வரும் கவிதை.
காதல் வரட்டும் உங்களுக்கும்!
தமிழ்ப்பறவை....அண்ணா பதிவுகள் எழுதி ரொம்ப நாள் ஆச்சு.கிறங்கிப் போயிடாதேங்கோ.எழுதுங்க.
அரசு....கவிதை "கிக்"கா இருக்கா.அதுவும் நல்லதுதானே.
வைன் வாங்கவேணாம்.உங்களுக்கும் தெரியும்தானே அன்பில் திணறி மூச்சுத் திணறுவது !
ஜே...அடிக்கடி தொலைஞ்சு போறீங்க.இனிக் காத்தில தூதுதான் விடணும்.சந்தோஷம் கண்டது !
தோழி மூச்சிமுட்டிப்போச்சி அருமையா இருக்கு..
ReplyDelete//எனை மீட்டும் அன்பும்
ReplyDeleteஅது மீட்கும் உன் நினைவும்
மதுவை விடவும்
மயக்கமாய்.//
சரிதான்.. மயக்கம் மதுவில் மட்டுமல்ல
//மூச்சுத்திணறுகிறது
மூழ்கிக்கொண்டிருக்கிறேன்
உன் அன்பிற்குள்//
அதுதான் அன்புக்கடல் என்பதா..?
//நீந்திக்கரை சேரும்
நிலையில் நானில்லை.
நினைவும் எனதாயில்லை.
கரம் நீட்டிக் கேட்கிறேன்
கரையேற்றி விடும்படி//
ம்ம்ம் கரையேறும் காலம் கடந்தாயிற்று..
நீந்திக்கொண்டே இருக்கிறோம்..
வாழ்த்துக்கள் ஹேமா அக்கா..
அட்டகாசமா இருக்குங்க...
ReplyDeleteஅருமை
ReplyDelete