Wednesday, June 30, 2010

அறியாவயசு...

தப்பான
தப்பின் தாளத்துக்கும் ஆடுகிறது !

தரை விழுந்து இறந்த பூக்களை
தலையில் சூடிச் சிரிக்கிறது !

சொந்தங்களைக் கண்டதால்
புன்னகைத்து வைக்கிறது !

தான் பாடமாக்கிய
தேவாரமும் திருவாசகமும் என
தானும் சேர்ந்தே ஒப்புவிக்கிறது !

தகப்பன் தூக்கும் தீச்சட்டியை
தான் தூக்க அடம் பிடிக்கிறது !

ஓட்டை போட்ட பானையில்
நீர் பிடித்து
குடிக்கவும் ஓடுகிறது !

தன் தாய்
இறந்ததை அறியா
அந்தக் குழந்தை!!!


ஹேமா(சுவிஸ்)

60 comments:

  1. //தன் தாய்
    இறந்ததை அறியாக் குழந்தை!!!//

    arumai

    ReplyDelete
  2. அறியா குழந்தை சிரிக்கும்.
    அறிகின்ற குழந்தை அழும்.
    அழுவதும், சிரிப்பதும் வயது
    நடத்தும் பாடத்தின் விளைவோ.

    ReplyDelete
  3. அழகான ஓவியமான கவிதை. மனதை வருடிச்செல்கிறது.

    ReplyDelete
  4. அறியா வயசு... சுட்டுப்போட்டு
    நல்லா இருக்கு
    கடைசி ஒத்தவரியில் உயிரெடுக்குது

    ReplyDelete
  5. சோகத்தை உணராத குழந்தை அதைவிட மிகுந்த சோகத்தையே உருவாக்குகிறது

    கவிதை அருமை

    ReplyDelete
  6. சோகமான கவிதை ஹேமா

    ReplyDelete
  7. நெஞ்சை உருகிடுச்சு

    ReplyDelete
  8. கவிதை சோகம்..... நடை அழகு...
    இப்படியே எழுதுங்க.

    ReplyDelete
  9. மனதை பிசையும் கவிதை ...

    ReplyDelete
  10. அறியா வயசு
    தெரியா மனசு

    வலி

    விஜய்

    ReplyDelete
  11. கடைசி வரி இல்லை என்றாலும் இது ஒரு நல்ல கவிதைதான்.. ஆனால் கடைசி வரிக்காகத்தான் இந்த கவிதை அல்லவா..
    அது சரி, வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம் இரண்டும் தானே..

    ReplyDelete
  12. தன் தாய்
    இறந்ததை அறியாக் குழந்தை!!!//


    இந்த வார்த்தைகளுக்குள் எத்தனை விதமான சோடணைகளை உள்ளடக்கி கவிதையைத் தந்துள்ளீர்கள். கவிதை அருமை என்று ஒரு வரியில் எப்படிச் சொல்ல முடியும்?

    ஒரு குழந்தையின் மன நிலையை அருமையாக, ஆழமாக, அர்த்தமாக கவிதையாக்கியுள்ளீர்கள்.

    பிஞ்சு வயசு.. கள்ளமில்லா உள்ளம் கொண்ட மனசு..

    ReplyDelete
  13. தன் தாய்
    இறந்ததை அறியாக் குழந்தை!!!
    எப்படிம்மா புகழறது.. மனசு வலிக்கும் போது.. வெறும் கவிதையாய் பார்க்க சக்தி இல்லை.

    ReplyDelete
  14. ரொம்ப நல்லாயிருக்கு ஹேமா.

    ReplyDelete
  15. உசிருள்ள ஒருமனதின் கடைசிநேர வலிபோல யாவும் இந்த கவிதைக்கு... அருமைங்க ஹேமா...

    ReplyDelete
  16. முதல் இரண்டு வரிகளைப் படிக்கும் போது புன்னகைக்கும் மனம், அடுத்தடுத்த வரிகளில் அதிர்கிறது. கடைசி வரி உச்ச கட்ட சோகம்.

    ReplyDelete
  17. //தன் தாய்
    இறந்ததை அறியாக் குழந்தை!!!//


    ம்ம்ம்ம் கொடுமைதான்...

    ReplyDelete
  18. மிக அருமையான கவிதை ஹேமா அக்கா..
    மனதோடு ஒட்டிக்கொண்டது வார்த்தைகள்..

    ReplyDelete
  19. //எனக்கு முன்னால் நடக்காதே.உன்னைத் தொடர முடியாமல் போகலாம். எனக்குப் பின்னால் நடக்காதே.நான் உன்னைப் பார்க்கவும், வழிநடத்தவும் முடியாமல் போகலாம்.என் கூட இணையாக நட.நண்பனாக இருக்கலாம்.//

    உங்கள் பிளாக்கில் மேலே வலம் வரும் வாசகம் இது அழகு..

    ReplyDelete
  20. அறியாத குழந்தைக்கு புரிய வைத்தமைக்குஅழகு.மனசை தொட்டு செல்கிறது.

    ReplyDelete
  21. அருமையான கவிதை முடிவில் இந்த கவலை கலங்க வைத்தது
    நன்றி தோழி

    ReplyDelete
  22. என்னோட சின்ன வயசு படம் எப்படி கிடைச்சது உங்களுக்கு ?

    ReplyDelete
  23. அழகான படம்.
    ஆனால், அழ வைக்கிறது கவிதை.

    ReplyDelete
  24. அழகான படம்
    அழ வைக்கும் கவிதை.....

    ReplyDelete
  25. அறியா நிலை...
    அறியவைக்கும் கவிதை...

    ReplyDelete
  26. அனைவரையும் அழவச்சு பார்ப்பதில்
    அப்படி ஒரு சந்தோசம் - ஹேமாவின் கவிதைக்கு.

    ReplyDelete
  27. அப்பா!

    பயங்கர வலி ஹேமா.

    ReplyDelete
  28. வாசிச்சிக்கிட்டே வரும்போது ஒட்டிக்கிட்ட புன்னகை கடைசிவரியில் உதிர்ந்துபோச்சு ஹேமா.. வலியான கவிதை.

    ReplyDelete
  29. கடும் வலி... கடைசி வரியில்

    ReplyDelete
  30. பெற்றவர் இல்லாத குழந்தை பருவம் கொடுமை. உங்கள் கவிதை வரிகளில் அந்த வேதனை மனதை தைக்கிறது ஹேமா.

    ReplyDelete
  31. மனதை கலங்க அடிக்கிறது, கவிதை வரிகள்...

    ReplyDelete
  32. தன் தாய்
    இறந்ததை அறியாக் குழந்தை!!!

    சோகத்தை உணராத குழந்தை நல்ல கவிதை

    ReplyDelete
  33. கள்ளம் கபடம்,போட்டி பொறாமை
    வஞ்சகம் சூது தெரியாமல்...
    இருப்பதுதான் குழந்தை

    அதற்கு எல்லாமே,எல்லோரும்தான்
    உலகம் பிரித்துப் பார்க்க தெரியாத
    நல்ல மனம்..

    அப்புறம் வளர்ந்து விட்டால்..மனமொரு
    குரங்காகிவிடும்

    நானும் சில வேளைகளில் இன்னும்
    குழந்தையாய் இருந்திருக்கலாமே என
    அடிக்கடி யோசிப்பதுண்டு
    ம்ம்ம்ம.....

    குழந்தை நிலாவில்
    குழந்தையாகி
    குழந்தையையெண்ணி
    குழைத்த க{வி}ளி
    குழியில் சிக்கி
    குளற வைத்துவிட்டது
    “குழந்தை” உள்ளங்களை

    நன்றி
    சின்னப் பொண்ணு

    ReplyDelete
  34. Even though a touching one,nalla varihal Hema.

    ReplyDelete
  35. அறியா வயசின் கொடுமை.

    ReplyDelete
  36. மிகவும் பாதித்தது.

    http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

    ReplyDelete
  37. hema ungalukku onnu theriyuma?!
    valihala puranthalla oru super way intha ariyamai than....
    neraya time intha mathiri than.... pch but hema life is God`s wonderful gift jeyikka than poranthennu ovvoru murai thorkum pothum sirichutae solran antha ariya kulanthai mathiri..

    but nice hema......

    ReplyDelete
  38. Meera Veadarethinam04 July, 2010 12:27

    no w0rds to write down....

    eppoluthu oliumoo aragam...

    ReplyDelete
  39. வித்தியாசமான வலியுடன் கூடிய கவிதை அருமை ஹேமா

    ReplyDelete
  40. ஒரு குழந்தை உருட்டும் மிக பெரிய சோகம்...கடைசி வரியில் மனது கனமாகி விடுகிறது

    ReplyDelete
  41. மனதை கனக்கச் செய்கிறது.

    ReplyDelete
  42. சுட்ட கவிதை!
    மனதை!
    :(

    ReplyDelete
  43. அழக்குழந்தையின் போட்டோவும் அதற்கு நேர்மாறாய் கவிதையும் அருமை தோழி
    இதுவலியின் வலி..

    ReplyDelete
  44. இறுக்கமான, சுமையான வரிகள்;சுவையானவையும் கூட

    ReplyDelete
  45. அருமை அருமை அறியா வயசை நினைக்க முடிந்தது வரிகளில்

    ReplyDelete
  46. மனதை நிலை தடுமாற வைத்து விட்டது. உங்கள் கவிதை.

    ReplyDelete
  47. கடைசி வரி கலங்க வைத்தது ஹேமா

    ReplyDelete
  48. உலுக்கி விட்டீர்களே ஹேமா:(!

    ReplyDelete
  49. வேலை மிக அதிகமோ?

    ஆளை காணலையே?

    ReplyDelete
  50. //தன் தாய்
    இறந்ததை அறியாக் குழந்தை!!!//

    மிகவும் பிடித்த வரிகள்.

    ReplyDelete
  51. சோகத்தை உணராத குழந்தை நம்மிடம் சோகத்தை தான் கொண்டு வருகிறது.நல்ல கவிதை சகோதரி

    ReplyDelete
  52. ஹேமா !
    ஏம்மா !
    ஒரு கணத்தில் என்னை
    உருக்கிவிட்டீர்களே !
    ஏன் இக்கவிதை !!
    சொல்லம்மா ....

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  53. சொல்ல இயலா வலி
    கடைசி வரியைப் படிக்கையில்

    ReplyDelete
  54. நெஞ்சைக் குத்திக் கிழிக்கும் கடைசி வரிகள்...பிரமாதம்

    ReplyDelete