Thursday, May 06, 2010

வெட்கம்...

என் வீட்டு மலர்கள்
வாடியதைப் பார்த்தே
என் அந்த மூன்று நாட்களைக்
கணக்கெடுக்கிறாயே !
கள்வனடா நீ.

நடசத்திரங்கள் தூங்குவதற்கும்
நான் முற்றத்தில்
நிலாக் காய்வதற்கும்
சம்பந்தப்படுத்துகிறாய்
சதிகாரா!

உன்னோடு பேசிப்பேசியே
சில பறவைகளின் பாஷைகூட
பரிட்சயமாகிறது.
தூவானத் திரை
முகம் மறைக்க
கலைந்த பொட்டைச் சரிசெய்தபடி
தொங்கிய
பெட்டைக் குருவியின் குசுகுசுப்பை
ரசிக்கிறது மனம்.

கவிதையாய்
உன் பேச்சும்
உன் காதல் குறிப்புக்களும்
எனக்குள் நீ
புதைந்த பொழுதுகள்
உறைந்த நொடிகளின் மயக்கம்
இப்போதும்...
எங்கிருந்தோ ஒட்டிக்கொள்ள
தென்றல் கிச்சுக் கிச்சு மூட்ட
கூசவைக்கிறது வெட்கம்.

பேசுவதும்
கேட்பதும்
கெஞ்சுவதும்
மறுப்பதும்
விலகுவதும்
அணைப்பதுமாய்
எம் நெகிழ்வான விளையாடல்
கனவோடு
நீ நடத்திய
புலவியின் பொழுதுகளை
வெளியில் சொல்லியே
பாடுகிறது அந்தப் பேடு.

அச்சச்சோவென
மனம் அலற
அன்றைய பொழுதை
வெட்கத்தோடு தலையணைக்குள்
ஒளிக்க மறைக்க
முயல்கிறது
என் மன அரங்கம் !!!

ஹேமா(சுவிஸ்)

65 comments:

  1. தோழி!!
    யார் அந்தக் கள்வனடி?
    மாற்றம் தந்து மனதைத் தொட்டு
    மயக்கம் கொடுத்தது யார்?

    ReplyDelete
  2. அன்றைய பொழுதை
    வெட்கத்தோடு தலையணைக்குள்
    ஒளிக்க மறைக்க
    முயல்கிறது
    என் மன அரங்கம் !!!]]

    அழகு ஹேமா!

    மொத்த கவிதையுமே அழகுதான், இதற்கு மேல் இப்போ ஒன்றும் சொல்லவியலாது,

    கூதாகலமாக நிறைய கவிதை தட்டச்சுங்கள் ஹேமா!

    ReplyDelete
  3. //என் வீட்டு மலர்கள்
    வாடியதைப் பார்த்தே
    என் அந்த மூன்று நாட்களைக்
    கணக்கெடுக்கிறாயே !
    கள்வனடா நீ.//

    ஹேமா,

    பயங்கரமான திருடனா இருப்பான் போலிருக்கே....!

    பொறாமையான ஒரு காதல் கவிதை.

    ReplyDelete
  4. கவிதையாய்
    உன் பேச்சும்\\\\\
    ஓஓஓ இப்பதான் இந்த இரகசியத்தை
    வெளியில் விடத் தோன்றியதா?
    உன் எல்லாக் கவிதைகளும் உன் சொந்தக்
    கற்பனையென்றிருந்தேன் ஓஓஓ...அவரிடம்
    கற்றுத்தான் கவிதையாய் வருகிறதா?
    அம்மாடி ரொம்பக் கெட்டிக்காரி!


    உன் காதல் குறிப்புக்களும்\\\
    அழகுக் குறிப்பு,சமையல் குறிப்பு என்றுதான்
    கேள்விப் பட்டிருக்கிறேன்
    அதென்னடிம்மா காதல் குறிப்பு!!!
    சொன்னா எங்களுக்கும் உதவுமில்ல!
    பேஷ்..பேஷ் நடக்கட்டும்..நடக்கட்டும்

    எனக்குள் நீ
    புதைந்த பொழுதுகள்
    உறைந்த நொடிகளின் மயக்கம்
    இப்போதும்...\\\\\\
    வாவ்.... அழகான,ஆழமான வரிகள்

    பசங்களா..!!{சத்ரியனைத் தவிர} உங்களுக்குள் ஒருவராய்க்
    கூட ஒளிந்திருக்கலாம் ஹேமாவின்
    கள்வன்.{ஆறுமது ஆழமில்ல அது சேரும்
    கடலும் ஆழமில்ல...ஆழமெதுதாய்யா
    இந்தக் ஹேமா... ஹேமா மனசுதாய்யா

    ReplyDelete
  5. காதலாய் கணிந்து குவிந்து இருக்கிறது உங்கள் கவிதை ஹேமா.

    பட்ச்சு முடிக்கசொல்லோ.. எனக்கே காதல் தோன்றிவிட்டது... வாழ்க உங்க கள்வர்... ம்ம்ஹும்ம்

    காதலோடு வெட்கத்தை கலந்துயிருப்பது அருமை.

    தேனோடு கலந்த தேள்ளமுது (நன்றி: ஜெமினி)

    என்கிட்ட மட்டும் சொல்லுங்க ரகசியமா.. யாரந்த கள்வர்? யாருக்கிட்டயும் சொல்லமாட்டேன்..promisa :))

    ReplyDelete
  6. ஹேம்ஸ் மிக நல்ல
    காதல் வரிகள் தலைப்புக்கு
    ஏற்ற{வெட்கம்} படம் இல்லை
    ஹேம்ஸ்.......

    ReplyDelete
  7. கள்வனின் காதலி ஹேமாவுக்கு. மிக ரசனையான கவிதைகள் தொடங்கட்டும். தொடரட்டும்.. உங்களின் செல்லமான கள்வனுக்கு எனது வாழ்த்துகள்.
    - கல்யாண்குமார்

    ReplyDelete
  8. காதல் கவிதைகளைவிடவும் உங்களின் ரஹ்மான் கவிதையில் ஒரு ரசிகையின் ரசனை அழகாக வெளிப்பட்டிருந்தது. அவர் குறித்து கவிதைகள் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. இது அவருக்குச் செய்யும் கவிதாயணம்.

    அவரைச் சந்தித்து சமீபத்தில் நான் எழுதிய பேட்டிக் கட்டுரையை வாசிக்க: www.kalyanje.blogspot.com

    ReplyDelete
  9. பேசுவதும்
    கேட்பதும்
    கெஞ்சுவதும்
    மறுப்பதும்
    விலகுவதும்
    அணைப்பதுமாய்


    வெட்கத்தோடு வார்த்தைகளும் விளையாடுகின்றன.

    ReplyDelete
  10. அட அட.. என்ன ரசனை.. கலக்கல்!!

    ReplyDelete
  11. //அச்சச்சோவென
    மனம் அலற
    அன்றைய பொழுதை
    வெட்கத்தோடு தலையணைக்குள்
    ஒளிக்க மறைக்க
    முயல்கிறது
    என் மன அரங்கம் !!!//

    அருமைங்க :)

    ReplyDelete
  12. அழகான காதல், இயல்பாய் ...! காதல் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அருமை!!

    ReplyDelete
  13. அழகான கவிதை! மிகவும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  14. //தூவானத் திரை முகம் மறைக்க
    கலைந்த பொட்டைச் சரிசெய்தபடி
    தொங்கிய
    பெட்டைக் குருவியின் குசுகுசுப்பை
    ரசிக்கிறது மனம்.//

    அருமை...அருமை... என்றும் பரிணாமமோ, பரிமாணமோ கொள்ளாத அதே வெட்கம்......

    ReplyDelete
  15. மெல்லிய உணர்வான வெட்கத்தில், கவிதை, அழகாய் இருக்கிறது. :-)

    ReplyDelete
  16. oru kavithaye vetkapadukirathu.
    Vazga Ungal Kathal.

    ReplyDelete
  17. நல்ல வெளிப்பாடு

    காதலில் வெட்கம் அற்புதமான உணர்வு

    கள்வன் யார் ?

    வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும்

    :)

    ReplyDelete
  18. அழகான கவிதை- நதிபோல் ஓட்டம்!!!

    ReplyDelete
  19. ம்ம்ம் அடடா!பூங்கொத்து!

    ReplyDelete
  20. அருமையான கவிதை. கணவன் மனைவியின் இல்லறத்தில் உள்ள காதலின் மொழியாக உங்கள் கவிதை ஹேமா. ரொம்ப நல்லாருக்கு.. மனைவியின் வெட்கம் இந்த கவிதை வரிகளில் வருடுகிறது.

    ReplyDelete
  21. உங்கள் கவிதை
    மிக வசீகரம் ஹேமா.
    காதலைக் கவிதையாய்
    மொழிபெயர்க்கும்
    வித்தை உங்களுக்குக்
    கைகூடியிருக்கிறது.

    ReplyDelete
  22. காதல்.. வெட்கம்.. குதூகலிக்கிறது ஹேமாவின் கவிதையில்.

    பொறுத்திருந்து பார்ப்போம்....

    ReplyDelete
  23. மென்மையான் உணர்வுகளை வெளிபடுத்தும் அழகான் கவிதை......பாராட்டுக்கள

    ReplyDelete
  24. வெட்கம் பிடுங்கி தின்கிறது

    ReplyDelete
  25. //நடசத்திரங்கள் தூங்குவதற்கும்
    நான் முற்றத்தில்
    நிலாக் காய்வதற்கும்
    சம்பந்தப்படுத்துகிறாய்
    சதிகாரா!//

    விட்டா ஸ்விஸ்ல புள்ளி வச்சி, கோலம் போட்டு, முற்றத்திலே தண்ணி தொளிப்பீங்களோ?

    //
    உன்னோடு பேசிப்பேசியே
    சில பறவைகளின் பாஷைகூட
    பரிட்சயமாகிறது.//

    வாத்து மாதிரி பேக்.. பேக் ன்னு பேசுவீங்களோ?

    //
    தூவானத் திரை முகம் மறைக்க
    கலைந்த பொட்டைச் சரிசெய்தபடி
    தொங்கிய
    பெட்டைக் குருவியின் குசுகுசுப்பை
    ரசிக்கிறது மனம்.//

    குருவி படம் பார்த்தீங்களா ?

    //கவிதையாய்
    உன் பேச்சும்
    உன் காதல் குறிப்புக்களும்
    எனக்குள் நீ//

    கும்மியாக

    //புதைந்த பொழுதுகள்
    உறைந்த நொடிகளின் மயக்கம்
    இப்போதும்...
    //

    மொக்கையாக

    //
    எங்கிருந்தோ ஒட்டிக்கொள்ள
    தென்றல் கிச்சுக் கிச்சு மூட்ட
    கூசவைக்கிறது வெட்கம்.//

    தென்றல் பற்பசையா இல்லை தாள்பசையா

    //
    பேசுவதும்
    கேட்பதும்
    கெஞ்சுவதும்
    மறுப்பதும்
    //

    ம் .. அப்புறம்

    //
    விலகுவதும்
    அணைப்பதுமாய்
    எம் நெகிழ்வான விளையாடல்
    கனவோடு//

    ஒ..கனவா ?

    //
    அச்சச்சோவென
    மனம் அலற//

    படிச்ச நாங்க எல்லாம் எங்களை விட்டுடுங்கன்னு கதற

    //
    அன்றைய பொழுதை
    வெட்கத்தோடு தலையணைக்குள்
    ஒளிக்க மறைக்க
    முயல்கிறது
    என் மன அரங்கம் !!!//

    பார்த்து மூச்சி முட்டப் போகுது

    ReplyDelete
  26. //
    கலா said...
    தோழி!!
    யார் அந்தக் கள்வனடி?
    மாற்றம் தந்து மனதைத் தொட்டு
    மயக்கம் கொடுத்தது யார்?

    06 May, 2010 11:12//

    ஜானி வாக்கரா ?
    சிவாஸ் ரீகல?

    ReplyDelete
  27. அருமை ஹேமா .
    கவிதை வடிவமே வெட்கத்தில் வளைந்து நெளிந்தபடி
    படிக்க படிக்க பேருவகை

    ReplyDelete
  28. சகோ!

    வாழ்க வளமுடன்..:)

    ReplyDelete
  29. கள்வனின் காதலி என்று
    இவளைதான் சொல்வார்களோ!!!

    ReplyDelete
  30. இது வயது வந்தவர்களுக்கான கவிதை போல இருக்கு. சிறுவர்களுக்கு இடமில்லைத் தானே? நான் வாறன்.

    ReplyDelete
  31. கள்வன்... யார் அது ஹேமா அருமை... ரசித்தேன்..:))

    ReplyDelete
  32. :-)

    (வேறென்னத்த பின்னூட்டம் போட அண்ணன்காரன்.மகிழ்ச்சி என குறிப்பது தவிர.)

    ReplyDelete
  33. ஹேமா கவிதை வழக்கம் போல் அழகாய் இருக்கிறது. ஆனா உணர்வுகளை சொல்லிருக்கும் இந்த கவிதையில் கொஞ்சம் ரசிப்பு தன்மையும் சேர்த்து சொல்லிருக்கலாமே ....


    பிறகு "புலவியின் பொழுதுகளை
    வெளியில் சொல்லியே
    பாடுகிறது அந்தப் பேடு"


    இதை கொஞ்சம் POLISHED ஆ எழுதிருக்கலாம்.... பிறகு பேடு என்றால் என்ன அர்த்தம்ன்னு சொல்லுங்க (நான் எடுத்து கொண்ட அர்த்தம் சரி தானா என்று தெரியவில்லை)

    "பேசுவதும்
    கேட்பதும்
    கெஞ்சுவதும்
    மறுப்பதும்
    விலகுவதும்
    அணைப்பதுமாய்"

    இந்த வரிகள் நல்ல தான் இருக்கு. ஆனால் உங்க காதல் கவிதைகளில் பெரும்பாலும் இதே மாதிரி வரிகள் வருகிறதே


    "உன்னோடு பேசிப்பேசியே
    சில பறவைகளின் பாஷைகூட
    பரிட்சயமாகிறது"

    இதுல பறவைகளின் பாஷைன்னு என்று எதை சொல்லுரிங்க ????


    "வெட்கத்தோடு தலையணைக்குள்
    ஒளிக்க மறைக்க
    முயல்கிறது
    என் மன அரங்கம் !!!"

    தலைவி தலையணைக்குள் ஒளிக்க முயன்ற பொழுது தலைவன் என்ன செய்தான் என்று சொல்லிருக்க வேண்டுமே ........ அப்பொழுது தான் இன்னும் சிறப்ப இருக்கும்.


    நல்ல கவிதை ஹேமா......எனக்கு அனுபவம் இல்லாததால் தான் இந்த கவிதையை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையோ ???? (கோழி அப்டேட்ஸ் எழுதி கொண்டு இருந்தால் எப்புடி புரியும்ன்னு நீங்க கேட்க கூடாது)

    ReplyDelete
  34. மலர்கள் வாடுவதைப் பார்த்தே குறிப்பா...
    பறவைகள் பாஷை பரீட்சை ஆகாமல் பரிச்சயமானால் சரி...
    தொங்கிய பெட்டைக் குருவி...பொம்மை?
    நல்ல கவிதை ஹேமா, மனதின் எண்ணங்களை இப்படி அழகான வார்த்தைகளில் வடிக்க இப்படி ஒரு வரம் வேண்டும். வெட்கக் கவிதை படத்துடன் சேர்த்து... வாழ்க்கையின் இன்ப விளையாட்டை வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்..

    அழகு.

    ReplyDelete
  35. அழகான,ஆழமான வரிகள்
    அருமை ஹேமா!

    ReplyDelete
  36. ஜானி வாக்கரா ?
    சிவாஸ் ரீகல\\\\\\\

    ஜய்யா ராசா...நசரேயன்!
    சேச்ச்ச்ச.....இந்தப் பழக்கமெல்லாம்
    என் தோழியிடம் இல்லப்பா!

    அவள் கவிதை மலரில் அற்புதமான
    காதல் தேன் சுட்டுகிறது...
    இதுவும் ஒரு வகை மயக்கம்தான்.
    {தேன் அதிகம் பருகினால் வருமல்லவா?}
    அதற்காக நீங்கள் முயற்சித்துப் பார்க்க
    வேண்டாம் பின் விளைவுகளுக்கு
    நான் பொறுப்பல்ல...


    பிறகு பேடு என்றால்
    என்ன அர்த்தம்ன்னு
    சொல்லுங்க\\\\\

    பேடு : பெண் ,பெட்டை { பறவையைக் குறிக்கும்}
    பேட்டுக் கோழி, {முட்டையிடுவது}ஆண் சேவல்

    குசுகுசுப்பு: இரகசியமாய் இருவர்
    பேசிக் கொள்வது{மிக,மிக மெல்லிய
    தொனியில்}

    ReplyDelete
  37. உன்னோடு பேசிப்பேசியே
    சில பறவைகளின் பாஷைகூட
    பரிட்சயமாகிறது.
    தூவானத் திரை முகம் மறைக்க
    கலைந்த பொட்டைச் சரிசெய்தபடி
    தொங்கிய
    பெட்டைக் குருவியின் குசுகுசுப்பை
    ரசிக்கிறது மனம்....ஆகா....

    அச்சச்சோவென
    மனம் அலற
    அன்றைய பொழுதை
    வெட்கத்தோடு தலையணைக்குள்
    ஒளிக்க மறைக்க
    முயல்கிறது
    என் மன அரங்கம் !!தூள்மா...

    ReplyDelete
  38. கள்வனுக்காக இயம்பிய கவி காதல் ரசம் போதை கூட்ட வெட்கம் கொண்ட வெள்ளி நிலா மேகத்துக்குள் மறைந்தது இதனால் தானா?

    ReplyDelete
  39. அடேங்கப்பா..!!!
    //सुन्‍दर//
    ஹிந்திக்காரங்க கூட பின்னூ போடறாங்களே??

    எளிமையான கவிதை. புரியுது. நல்லாவும் இருக்கு!!!
    இதுக்கு முந்தைய கவிதைதான் தகராறு பண்ணிடுச்சு.
    பின்னூட்டம் அதில் போடறேன். பார்க்கவும் :))

    ReplyDelete
  40. ஐ மீன்..
    "முடிவின் முடிவில்..." கவிதை.

    ReplyDelete
  41. ஹேமா படிக்கும் முகத்தில் வெட்கச்சுருக்கம் ஏற்படுத்திவிட்டீர்... :)

    ReplyDelete
  42. வெட்கம் எனையும் சூழ்கிறது

    வாழ்த்துக்களுடன்

    விஜய்

    ReplyDelete
  43. நன்றி ஹேமா உங்களின் பாராட்டுதலுக்கு. ரஹ்மானின் தீவிர ரசிகையான உங்களுக்கு அவரது பேட்டி பிடித்தமானதாக இருந்திருக்கும். உங்களின் வலைத்தளத்தையும் முழுமையாக பார்வையிட்டேன். ஈழத்து விஜயம் கண்களை ஈரப்படுத்தியது. தொடருங்கள் உங்கள் எழுத்துக்களையும் நட்பையும். நன்றி
    அன்புடன்
    கல்யாண்குமா

    ReplyDelete
  44. சகோதரி!

    மொத்த கவிதையுமே அழகு. ஆரம்பத்தில் அழகோ அழகு! தொடர்ந்து உங்களைப் படித்துதான் வருகிறேன்...

    பிரபாகர்...

    ReplyDelete
  45. கவிதைக்கு வெட்கம் அழகு!

    ReplyDelete
  46. அழகான காதல் கவிதை.அதற்கு பொருத்தமாக படமும் அழகு. வாழ்த்துக்கள் ஹேமா....

    ReplyDelete
  47. அழகான வெட்கமிது... ஆழ்ந்த மௌனம் இது...

    ReplyDelete
  48. உன்னோடு பேசிப்பேசியே
    சில பறவைகளின் பாஷைகூட
    பரிட்சயமாகிறது.
    தூவானத் திரை முகம் மறைக்க
    கலைந்த பொட்டைச் சரிசெய்தபடி
    தொங்கிய
    பெட்டைக் குருவியின் குசுகுசுப்பை
    ரசிக்கிறது மனம்.
    //


    சோ கியூட் !

    ReplyDelete
  49. தென்றலை உணர்ந்து காணமுடியாது போயிற்றோ அதுபோலே உஙகட வெட்கம் தோய்த்த காதலை உணர்ந்து தோய்ந்தேன் ஹேமா!சில கவிதைகள் பெண்களால் வசப்படுகிறது போல.

    ReplyDelete
  50. \\மென்மையான் உணர்வுகளை வெளிபடுத்தும் அழகான் கவிதை.....\\
    :-)))

    ReplyDelete
  51. ஆஹா.. பின்றீங்கம்மா..... நோட் பண்ணுங்கப்பா.. அருமையா இருக்குது..

    தொடர்ந்து கிளப்புங்கள்..

    நன்றி..

    ReplyDelete
  52. கிச்சுக் கிச்சு மூட்டாமலே வெட்கவைக்கிறது கவிதை!
    அருமை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  53. கலா...நானே வெட்கப்பட்டுக் கொண்டிருக்க ஓடி வந்து வெட்கம் கலைத்த தோழியே நீ வாழ்க.

    //ஹேமா ரொம்ப என் லொள்ளுத் தாங்காமஎன்னை...என்ன செய்யப் போகிறாய்????//
    எனக்கென்ன...சிரிச்சுக்கொண்டேயிருப்பேன்.சத்ரியனும் வசந்தும் நசரேயனும்தான் பாவம் !


    ஜமால்...இடைக்கிடை சந்தோஷம் கொண்டாடிடலாம் கவிதைல !


    சத்ரியா....உங்க கண்ணே காட்டிக் குடுக்குதே பொறாமையை !


    அஷோக்...ரொம்பவே ரசிச்சிருக்கீங்க.
    காதல் இப்பத்தானா வந்திருக்கு !கள்ளனைச் சொன்னா சத்திரியனுக்கு இருக்கிற பொறாமைக்கு ....!


    நண்டு சார்...உங்க தொழில் பாஷையா..."ம்".(வழக்கறிஞர்)


    தமிழ்...நீங்கள் தரும் உற்சாகம்தான் இந்தமுறை வெட்கமாய் !


    பிள்ளையாண்டான்...புதுவரவு.
    சந்தோஷம்.


    கதிர்...உங்க ஒரு வார்த்தையை ரஜனி ஸ்டைலா எடுத்துக்கிறேன் !


    சரவணகுமார்...வாங்க.
    எங்க ரொம்பக் காலமா
    பதிவையே காணோம்.


    மீனு....வாங்க வாங்க.
    உங்களுக்காகவே நான் காதல்ல நனையனும் அடிக்கடி.அப்போதான் வருவீங்க இந்தப்பக்கம் !


    பாலாஜி...பரிணாமத்தால் பரிமாணம் கொண்டதோ வெட்கக் கவிதை !இப்பிடியெலாம்
    சொன்னா வெட்கம் வராதோ !


    சித்ரா...பாத்தீங்களா நானும் சந்தோஷமா ஒரு கவிதை எழுதிட்டேன் !


    வடிவேல்...வந்திருக்கார்.அவர் சொன்னதே ஒரு கவிதைதான் !


    மித்ரா...கவிதை புரிஞ்சுபோச்சா !
    அது யாரு இரண்டாமவர்.வாழ்த்துச் சொல்லியிருக்கீங்க அதான் கேட்டேன்.


    தேவா...நன்றி உங்க ஓட்டத்தோடயும் என் பக்கமும்
    ஓடி வந்ததுக்கு !


    அருணா...இப்பத்தான் அழகான பூங்கொத்து உங்ககிட்டயிருந்து கிடைச்சிருக்கு.நன்றி தோழி.


    ஸ்டார்ஜன்...உங்க ரசனையே தனி.மனைவியின் கண்ணோட்டத்தில் கவிதையை ரசிச்சிருக்கிறீங்க.அதுவும் நல்லாத்தானிருக்கு.


    மது...உங்க குட்டிக் குட்டிக் கவிதை எவ்வளவோ விஷயம் சொல்லுமே !உங்க ரசிகை நான்.


    மாதேவி...என்ன பொறுத்திருந்து பாக்கப்போறீங்க ?
    எப்போ சமையல் பதிவுன்னா ?

    நிலா...வாங்கோ.இன்னும் உற்சாகம் காணேல்லையே தோழி.
    சந்தோஷமாயிருக்கவேணும்.


    ஜெரி....இப்பிடிச் சொல்லினா எப்பிடி நான் காதல் கவிதை எழுத !
    வெட்கமாயிருக்கு !

    ReplyDelete
  54. //கல்யாண்குமார்....
    காதல் கவிதைகளைவிடவும் உங்களின் ரஹ்மான் கவிதையில் ஒரு ரசிகையின் ரசனை அழகாக வெளிப்பட்டிருந்தது. அவர் குறித்து கவிதைகள் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. இது அவருக்குச் செய்யும் கவிதாயணம்.

    அவரைச் சந்தித்து சமீபத்தில் நான் எழுதிய பேட்டிக் கட்டுரையை வாசிக்க: www.kalyanje.blogspot.com//

    கல்யாண்...கள்வனுக்கு உங்க வாழ்த்துப் போயாச்சு.அவருக்கும் வெட்கமாம் !

    ரஹ்மான் கவிதைக்கு ஒரு பெரிய பாராட்டையே தந்துவிட்டீர்கள்.நன்றி.

    நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வந்து என்னை உற்சாகப்படுத்திப் போகணும் நீங்க கல்யாண்.

    முடிஞ்சா ரஹ்மான் மின்னஞ்சல் முகவரி தாங்க.

    ReplyDelete
  55. நசர்...கும்மியடிக்க ஆளில்லாம தனியா எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் வருமோ !தண்ணியடிச்ச மயக்கம் உங்களுக்குத்தான்.

    அப்பாடி...ஒவ்வொரு வரிக்கும்
    பொ(ப)ழிப்புரை !ஆண்டவன் தான் காப்பாத்தணும் உங்களை.
    கலாவும் பதில் சொல்லியிருக்கா பாத்துக்கோங்க.


    பத்மா..நன்றி கருத்துக்கு.
    வெட்கப்பட வச்சவருக்குத்தான் நன்றி சொல்லணும் நீங்க !


    ஷங்கர்....வாழ்த்து சகோதரிக்கு பலமாயிருக்கே !நன்றி அண்ணா!


    ராஜவம்சம்...
    "கள்வனின் காதலி".அடுத்த கவிதைக்கு வச்சிடலாம்.


    கமல்...ஆளைப் பாருங்கோ.இவரைக் கண்டால் பிடியுங்கோ யாராச்சும்.
    அவுஸ்திரேலியாவுக்குள்ளதான் உலவுறார்.இவர் சின்னப் பெடியனாம் !


    தேனுவக்கா....உங்கள் வார்தைகள் சந்தோஷம்.
    கள்வன் வருவான் நேரம் பார்த்து !

    பா.ரா அண்ணா...தங்கச்சி சந்தோஷமாயிருந்தா உங்களுக்கும் சந்தோஷம்தானே.
    அதுக்காக....சொல்லமாட்டேன் !


    மேவீ...முடியலப்பா.இதைவிட விளக்கமா எப்பிடி எழுதலாம்ன்னு யோசிக்கிறேன்.இருங்க கடைசியா விளக்கம் சொல்றேன்.


    ஸ்ரீராம்...இதுதான் எனக்கு உங்களை நிறையப் பிடிக்கும்.
    எவ்ளோ ரசனை உங்களுக்கு !


    ராதா ஐயா....தொடரான உற்சாகம் தரும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.


    கண்ணகி....எங்கே பதிவுகளைக் காணோம்.நன்றி வந்து
    வெட்கத்தோட ரசிச்சதுக்கு.


    संजीव तिवारी .. Sanjeeva Tiwari

    //सुन्‍दर//

    ஐயோ....என்ன சொல்லியிருக்கார்னே தெரில.
    சிலநேரம் திட்டியிருக்காரோ !தெரிஞ்சவங்க யாரச்சும் சொல்லித் தந்திருக்கலாம்.எதுக்கும் நன்றியும் என்னோட அன்பையும் சொல்லிக்கிறேன்.Thanks sanjeev.

    தமிழரசி....ம்ம்ம்...கொஞ்சநாள் நிலா மறைஞ்சிருந்த சங்கதியை சொல்றீங்களா !

    ReplyDelete
  56. ஹாய்...ஜே....வாங்க வாங்க.ஹிந்தில என்ன சொல்லியிருக்கார்ன்னு சொல்லியிருக்கலாம்ல.
    முழிக்கிறேன் நான் இங்க.

    தகராறு கவிதை (முடிவின் முடிவில் )புரிஞ்சிடுச்சா ?பின்னுறேன்னு சொன்னீங்க காணோம் !


    சிவாஜி...உங்க காதல் கவிதைகளின் தாக்கத்தை விடவா இந்தக் கவிதை !


    விஜய்...வெட்கத்தால்தான் இவ்ளோ பிந்தி வந்திருக்கீங்கபோல !


    பிரபா...வராம விட்டதுக்கு சமாளிக்கிறீங்களா ?
    அடிக்கடி வாங்க இந்தப் பக்கமும்.


    ரிஷபன்...கவிதைக்கு வெட்கமும் அழகுன்னு சொல்லணும் !


    ஜெயா....நீங்க எப்பவும் படத்தையும் சேர்த்தே கவிதையைக்
    கவனிப்பீங்க.நன்றி ஜெயா.உங்களுக்கு உப்புமடச் சந்தியிலதான் இன்னும் கவனம் கூட.

    நேசனும் ஞாபகப் படுத்தினார்.நிறைய நாளாச்சு சிறுகதைகள் கிறுக்கின்னு.
    கெதியாய் வரும் சிறுகதை சின்னதா.சந்தோஷமா !


    தங்கமணி...ஆழ்ந்த மௌனத்தின்போதுதான் முன்பு நடந்த நிகழ்வுகளின் வெட்கம் எங்களையே வெட்கப்பட வைக்கும்.


    ரசிகன்...வாங்க.உங்க பக்கமும் வந்தேன்.இசையோடு காதலும் கவிதையுமா அழகாயிருக்கு.


    சுந்தர்ஜி...நீங்க வந்ததுக்கும் நன்றி.
    சில உணர்வுகளை அவரவர் மட்டுமே எழுத முடியுமோ என்னமோ !


    டாக்டர் ...வாங்க.நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் என்னை மறக்காம வந்திடுவீங்க.நன்றி டாக்டர்.


    ரஞ்சித்...நன்றியும் சந்தோஷமும்.


    அம்பிகா...என்ன அதிர்ச்சியா...இல்ல சந்தோஷமா !


    பிரகாஷ்...சாமகோடங்கி.நன்றி புதுவருகை.
    கண்டுக்கலாம் இனி அடிக்கடி.

    முயல்மனம்...பதுங்கியிருந்து ரசிக்கிறீங்களோ !நிச்சயமா உங்க மனம் வித்தியாசம்தான்.உங்க மனசுக்கு முன்னால எனக்குத் தோல்விதான் !

    ReplyDelete
  57. அன்பு மேவீக்கு....

    இந்தக் கவிதையில இன்னுமென்ன ரசிப்புத் தன்மை இருக்கணும்?அப்பிடியே புரியக்கூடிய தமிழ்லதானே சொல்லியிருக்கு."புலவி"ன்னா ஊடல்ன்னு அர்த்தம்.

    கவிதையின்படி காதலன் ஒரு கவிஞன்.அவன் கவிதைபோலவே பேசக்கூடியவனும்.அவன் பேச்சையும் பறவைகளின் பேச்சையும் ஒத்துப் பார்க்கிறாள் காதலி.அதனால் பறவைகளின் பேச்சும் புரிகிறதாம் அவளுக்கு.அவள் மழையின் சாரலால் கலைந்த பொட்டைச் சரிசெய்தபடி குசுகுசுன்ன்னு பேசிக்கிட்டிருக்கும் ஒரு பெட்டைக் குருவியைக் கவனிக்கிறாள்.

    அது இவர்களின் ஊடலின்போது நடந்த நிகழ்வுகளை வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறது.பேடு என்றாலும் பெண் பறவயைக் குறிக்கும்.எனவே காதலியின் மனம் வெட்கப்பட்டு அன்றைய நிகழ்வை தலையணைக்குள் மறைக்க முய்ற்சி செய்கிறதாம்.

    இதில எங்க ரசனை இன்னும் மெருகுன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.இதுக்கு அனுபவம் தேவையா ?அப்போ எனக்கு !

    ReplyDelete
  58. தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
    http://blogintamil.blogspot.com
    வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்

    ReplyDelete
  59. This must be one of your best efforts. கருத்தும் நடையும் சொல்லாட்சியும் பிரமாதம். பல முறை படித்து ரசித்தேன்.

    ReplyDelete
  60. //என் வீட்டு மலர்கள்
    வாடியதைப் பார்த்தே
    என் அந்த மூன்று நாட்களைக்
    கணக்கெடுக்கிறாயே !
    கள்வனடா நீ.// கற்பனையில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை..

    ReplyDelete