Saturday, May 01, 2010

கருப்பை இரவல்...

கரிசல் நிலமாய்
காய்ந்த வயிறோடு
முற்றாய் தளர்ந்த மனதோடு
கனவில்....அம்மா...

"அம்மா"
திறந்த கதவோடு
இளமையை வறுமை தின்ன
வேலை கேட்டு ஒருத்தி.

அவளுக்கு உணவளிக்க
தைரியம் எனக்கு வர
வேலை எதுவும் இல்லை
என்றாலும் இருக்கிறது
குழந்தை பெறும் வேலை ஒன்று.

அவள் முகத்தைத் திருத்தித் தெய்வமாய் !

சிந்தித்துச் சிரித்தபடி
இரண்டு குஞ்சுகள் வீட்டில்
நொய்கூட இல்லை கஞ்சிக்கு
காயஞ்ச வயிறுகள் பிஞ்ச பாயில்.

வருந்திச் சிரித்தபடி
என்னதான் இருக்கிறது என்னிடம்
கருப்பையே இல்லை.

பண்டமாற்றாய்
உதவியாய்
வேலையாய்
இதில் ஏதோ ஒன்று...

தோள் சுமக்க
பெற்றுத் தா பூவொன்று
உன் சுமைகள் சுமக்கும்
தோளாய் நான்.

வேலை கொடுத்த திருப்தியும்
வேலை கிடைத்த திருப்தியும்!!!

ஹேமா(சுவிஸ்)

43 comments:

  1. தலைப்பிலிருந்தே தொடங்கும் வலி வரிகள்!!

    ReplyDelete
  2. வறுமையும் துயரம் தான். குழந்தையின்மையும் துயரம் தான். துயரத்தை ருசித்தவர் தானே,
    பிறர் துயரத்தை துடைக்க முடியும். மனதை தொட்டது கவிதை "கரு".

    ReplyDelete
  3. கவிதையின் ‘கரு’ நன்று...

    வார்த்தைகளை இன்னும் செதுக்கியிருக்கலாமோ..??

    ReplyDelete
  4. வலிக்கும் கவிதை....

    ReplyDelete
  5. \\வேலை கொடுத்த திருப்தியும்
    வேலை கிடைத்த திருப்தியும்!!!\\
    வறுமையும், வலியும்..

    ReplyDelete
  6. இரவல் தாய்மையில் வலி யாருக்கு அதிகம் இருக்கும்...? சுமந்தவளுக்கா? தாய் என பெயர் கொள்ளப் போகிறவளுக்கா? இல்லை இந்த நாடகத்தில் முக்கியப் பாத்திரமான அந்தக் குழந்தைக்கா? என்னதான் சொல்லும் எதிர்காலம்..?

    ஆமாம் எங்கிருந்து பிடிக்கிறீர்கள் படத்தை எல்லாம்..?

    ReplyDelete
  7. //சுமக்க பூவொன்றை பெற்றுத் தா
    உன் சுமைகள்
    சுமக்கும் தோளாய் நானிருப்பேன்.
    //arumai. vaalththukkal. super.

    ReplyDelete
  8. வலியையும் கவிதையாக்க
    உங்களால் முடிந்திருக்கிறது.
    கவிதையில் ஒரு
    நாவலுக்குரியக்
    கருவைச் சொல்லியிருக்கிறீர்கள்
    ஹேமா. கதையும் எழுதுவீர்களா?

    ReplyDelete
  9. கவிதையின் கருப்பொருள்....

    பாராட்டுக்கள்

    உங்களுக்கு மய் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அழகான கவிதைக்கரு. இன்னும் சற்று திருத்தினால் மிக நன்றாய் வந்திருக்கும்

    ReplyDelete
  11. சுமக்க பூவொன்றை பெற்றுத் தா
    உன் சுமைகள்
    சுமக்கும் தோளாய் நானிருப்பேன்.


    ..... கவிதை நல்லா இருக்குங்க - ஒரு மெல்லிய சோகமும் இழையோடுது.

    ReplyDelete
  12. \\வேலை கொடுத்த திருப்தியும்
    வேலை கிடைத்த திருப்தியும்!!!\\

    கவிதையின் ‘கரு’ நன்று.மனதை தொட்டது.

    ReplyDelete
  13. யப்பா. எப்படி இந்த மாதிரி எல்லாம் எழுத முடியுது ஹேமா

    ReplyDelete
  14. முதல புரியல ஹேமா ...பிறகு நீங்க சொன்ன விளக்கத்துடன் படித்தப் பொழுது நல்லாவே புரிந்தது.


    சாட் ல விவாதித்து விட்டேன்..அதனால் சொல்வதற்கு ஒன்றுமில்லை,

    கவிதை நன்று.... வார்த்தைகளை இன்னும் செதுக்கி இருக்கலாம்

    ReplyDelete
  15. வலிக்கும் கவிதை....
    நன்று

    ReplyDelete
  16. உணர்வுகளின் வெளிப்பாடு உணர்ந்து வந்திருக்கிறது.. வரிகளில்..

    ReplyDelete
  17. கரு கதையாகவும்
    கருப்பை கவிதையாகவும்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  18. கரு கவிதை

    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  19. //இளமையை வறுமை தின்ன
    வேலை கேட்டு ஒருத்தி//

    என்ன வரி இது ஹேமா.... கைத்தட்டி பாராட்டலாம் உங்களை.. Realy Super..b

    ReplyDelete
  20. So dark.. like the web page background..

    ReplyDelete
  21. சிந்தித்துச் சிரித்தபடி
    இரண்டு குஞ்சுகள் வீட்டில்
    நொய்கூட இல்லை கஞ்சிக்கு
    காயஞ்ச வயிறுகள் பிஞ்ச பாயில்.

    வருந்திச் சிரித்தபடி
    என்னதான் இருக்கிறது என்னிடம்
    கருப்பையே இல்லை\\\\\\\\\

    வறுமை,பெண்மை,தாய்மை
    இவைகளின் போராட்ட வாழ்க்கைக்
    கரு இது!

    கவிப் “பெண்”ணல்லவோ பெற்றெடுத்தாள்
    இதை ஆதலால்....
    வலியறிந்து வந்து விழுந்த கவியால்..
    கனக்கிறது என் கருப்பையும்!!

    ஹேம்ஸு....நலமா?
    இதற்கு முதல் கவிதை படிக்க நேரமில்லை
    இப்போதுதான் படித்தேன்
    அந்தப் படத்துக்கே திட்டித் தீர்திருப்பேன்
    தப்பிவிட்டாயடி...

    ReplyDelete
  22. ஹேமா,

    இந்தக் கவிதையில் “உண்மை”ச் சம்பவம் ஒளி(ர்)ந்திருப்பதாய் உணர்கிறேன். சரியா?

    இருப்பும்,இல்லாமையும் போட்டிபோட்டுக் கொண்டு நெகிழ்த்தும் சொல்லாடல் அருமை.

    ReplyDelete
  23. தோள் சுமக்க
    பெற்றுத் தா பூவொன்று
    உன் சுமைகள் சுமக்கும்
    தோளாய் நான்.]]

    வரிகளில் தெரியும் தோழமை.

    ReplyDelete
  24. அறிவியலின் வளர்ச்சி

    ReplyDelete
  25. கனமான வரிகள்... ஆழ்ந்த கருத்து... அழகான கோர்வை.... சிந்திக்க வைத்த நிதர்சனம்.... மொத்தத்தில் அருமை ஹேமா

    ReplyDelete
  26. துய்ச்ர் சுமந்த கவிதை... வாழ்வின் யதார்த்தத்தையும் பிடிமானமற்ற பெண்மையின் வாழ்வின் போராட்டத்தையும் சுட்டுகிறது. கருப்பை இரவல் கண்ணீர் சுமந்த பல பெண்களின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடு.

    ReplyDelete
  27. மிகவும் வழியான கவிதை...நல்ல தலைப்பு....

    ReplyDelete
  28. உங்களைப்பற்றிதான் ஹேமா நேற்று உங்க ஊர் கவிக்காவியத்திடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.நல்ல கவிதைகளைதரும்தோழின்னு.

    வடித்த வார்த்தைகளால் வலிக்கிறது மனசு.

    ReplyDelete
  29. ஹேமா கூறியது...

    சுந்தர்ஜி...சரியாகச் சொன்னீர்கள்.
    அதுதான் எனக்கு அந்த வரிகளின் வலி புரிந்தது.


    இந்த பின்னூட்டம் சுதந்திரம் பற்றிய மதுமிதாவின் கவிதையில் பார்த்தேன் சோதரி. பார்த்த நிமிடம் முதல் என் மனக்குமுறலை நிறுத்த இயலவில்லை. என்னால் ஏதும் செய்ய இயலாவிட்டாலும் நட்புடம் உம் கரம் பற்ற அனுமதியுங்கள் .கொஞ்சமேனும் உங்கள் வலியை நான் பெற்றுக்கொள்ள இயலுமென்றால் அது கடவுள் எனக்கு தரும் கொடை..வேறேதும் வார்த்தை வராது கைலாகாதனத்துடன் திரை வெறித்து அமர்ந்திருக்கிறேன் .

    இங்கு வந்தால் மேலும் மனச்சுமை கூடிவிட்டது

    ReplyDelete
  30. உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
    http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html

    ReplyDelete
  31. ஹேமா மனதை ரொம்ப பாதித்த கவிதை...

    ReplyDelete
  32. நன்றி என் நட்புக்களுக்கு.

    தொழிலாளர் தினம் என்று நினைத்துத்தான் கவிதையைத் தொட்டேன்.குழந்தை இல்லாதவர்களுக்குக் கரு கடன் கொடுப்பதும்,கருப்பை கடன் கொடுப்பதும் வறுமைக்காகவும், பணத்திற்காகவும் தொழிலாய் ஆகிவிட்டதே இப்போதெல்லாம்.

    சரியாக சொன்னேனா என்பதுதான் சந்தேகம்.பின்னூட்டங்கள் ஓரளவு திருப்தியாய் இருக்கிறது.அதாவது சொன்ன விஷயம் புரிந்திருக்கிறது என்றே நம்புகிறேன்.சொல்லப்பட்ட விஷயமும் சரிதானே !

    ReplyDelete
  33. ஷங்கர் நன்றியும் சந்தோஷமும் உடனடியான உங்கள் கருத்துக்கும் கூட.


    நன்றி தமிழ் தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு.


    நன்றி அக்பர் கருத்துக்கும் அன்புக்கும்.


    வாங்கோ அஷோக்.உண்மைதான் கவிதை எனக்கும் திருப்தியில்லை.
    இன்னும் அழகாக்கியிருக்கலாம்.
    சொன்ன விஷயத்தில் திருப்தி.
    போதும்.


    றமேஸ் வாங்கோ.அப்பா எப்பிடி இருக்கிறார்.சுகம்தானே.மனம் சலிப்பாய் இருக்கையிலும் வந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி றமேஸ்.


    அம்பிகா மிக்க மிக்க
    சந்தோஷம் சகோதரி.

    ஸ்ரீராம் நீங்க கேட்டிருக்கிறது சிக்கலான கேள்விதான்.ஆனாலும் வறுமை தீருகிறது.குழந்தை கிடைக்கிறது.

    குழந்தை பற்றிச் சொன்னால்....அவளது கணவனின் குழந்தைதான் அதுவாக இருக்கிறது.
    இன்னொருத்தியின் கர்ப்பப்பை மட்டுமே கடனாய்.நான் சரியாகச் சொல்கிறேனா ?பிழையென்றால் சுட்டிக்காட்டுங்க.

    படங்கள் கொஞ்சம் நேரமெடுத்து கூகிளில்தான் எடுத்துக்கொள்கிறேன் ஸ்ரீராம்.

    ReplyDelete
  34. வாங்க சரவணன்.உங்கள் வாழ்த்துகள் நிச்சயம் என்னோடு.


    மதுமிதா வாங்க.ம்ம்ம்...இந்தக் கவிதை ஒரு கதைபோலத்தான் ஆகிவிட்டது.என் உப்புமடச் சந்தி வந்து பாருங்களேன்.
    கொஞ்சம் கிறுக்குவேன்.


    அரசு வாங்கோ வாங்கோ.இப்பல்லாம் சரியான குறைவு நீங்கள் வாறது.
    மனசில நிறையக் குறையிருக்கு.
    நேரம் கிடைக்கேக்க எல்லாம் வாங்கோ.


    வாங்கோ நிலா.இன்றைய காலத்தின் ஒரு மாற்றம் என்றும் சொல்லலாம்.
    உதவியாகவும் தேவையாகவும் இருக்கிறது சிலருக்கு.நன்மையா சிக்கலா தெரியவில்லையே.


    சித்ரா நிச்சயமாய் அடுத்த கவிதை சந்தோஷமாய் பதிவில்.சரியா !


    ஜெஸி என்னை நிறைய நாளாய் இந்தக் கரு விஷயம் மனசில உளற்றினபடிதான்.


    அம்மிணிக்கு கவிதையும் சொன்ன விஷயமும் பிடிச்சிருக்கு.சந்தோஷம்.


    மேவீ புரிந்துகொண்டமைக்கு நன்றியும் சந்தோஷமும்.
    ம்ம்..வரிகள் அழகில்லைதான்.


    ராதாகிருஷ்ணன் ஐயாவுக்கு மிக்க நன்றி.நிறைவான தொடர் அன்புக்கு.


    ரிஷபன் உங்கள் கவிதைகளோடு ஒப்பிட்டால் மதிப்பெண் உங்களுக்குத்தான்.நன்றி.

    ReplyDelete
  35. விஜய் உங்கள் அன்பு கண்டு பெருமிதம் கொள்கிறேன் நன்றி அன்போடு.


    சிவாஜி உங்கள் கருத்து என்னை இன்னும் சந்தோஷப்படுத்துகிறது.
    உங்களின் கவிதைகளின் ரசிகை நான்.


    இர்ஷாத் நன்றி நன்றி பாராட்டுக்கு.எங்கே உங்கள் அடுத்த பதிவு.காணோமே இன்னும் !


    பிரசன்னா பிடிக்கலையா கறுப்பு ?எனக்குப் பிடிக்கும்.சரி பரவால்லன்னு மாத்தலாம்ன்னா வேற நிறத்தில டெம்லேட் மாத்தினா அத்தனை கவிதைகளின் எழுத்துக்களின் நிறத்தையும் மாற்றவேண்டி வரும்.பெரிய வேலையாயிருக்கும்.
    யோசிக்கிறேன்.அதுக்காக வராம விடாதீங்க.வரணும்.


    கலா கலகல கலா தப்பிட்டேன்.
    எப்பவும் வசந்தை ஹேம்ஸ் சொல்லி ஞாபகப் படுத்துறீங்கள்.நன்றி.

    நன்றி நன்றி உங்கள் விரிவான கருத்துக்கு.என் கவிதையை விட உங்கள் கருத்துக்கு கனபேர் காத்திருக்கினம்.தெரியுமோ !


    சத்ரியன் இப்படியும் நடக்கிறதுதானே !அதைத்தான் சொல்லக் கனகாலம் யோசித்திருந்தேன்.சொல்லியாச்சு.
    இனித் தீர்ப்பு உங்கள் கையில் !


    ஜமால் உங்கள் வருகையைக் காணும்போதெல்லம் சந்தோஷம்.
    சாதாரணமாக எல்லோர் பதிவிலும் காணும் பலபேர் ஏனோ என் பக்கம் வருவதில்லை.காரணம் தெரியாது.
    மனதின் குறை எனக்கு அது.
    அப்படியிருக்க ஆரம்பக் காலமிருந்து எனக்குத் தோள் தரும் தோழன் நீங்கள் அன்புக்கு என்றும் நன்றி ஜமால்.தோழமை உற்சாகம் தரும்.


    தலைவன் குழுமத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  36. வாங்க உழவன்.நான் நாகரீக வளர்ச்சி என்கிறேன்.நீங்கள் அறிவியல் வளர்ச்சி என்கிறீர்கள்.இரண்டும் ஒன்றுதானே !


    தங்கமணி.உங்கள் பெயர் சொல்லும்போதே கண் கலங்கும் எனக்கு.உங்கள் பெயரில் என் பக்கத்துவீட்டு நெருங்கிய தோழி.
    சில கவிதைகளில்கூடச் பெயர் சேர்த்திருக்கிறேன்.

    முதல் வருகைக்கும் நிறைவான கருத்துக்கும் நன்றி தங்கமணி.


    நன்றி கமல்.இன்றைய யதார்த்தம்தான் நிகழ்வு.சரியா பிழையா இதனால் ஏற்படும் சிக்கல்களும் ஏராளம்.


    கமலேஸ் மீண்டும் உங்களைப் பார்க்கிறதில எவ்வளவு சந்தோஷம்.
    சுகமாய் இருக்க வேண்டிக்கொள்கிறேன்.
    பத்திரம் கமலேஸ்.நன்றி வருகைக்கு.


    மல்லிக்கா உங்கள் ஊரிலும் என்னைப் பற்றிப் பேசுகிறீர்களா.அதுதான் நிறையத் தும்மல்.மிகவும் மிகவும் சந்தோஷம் தோழி.
    நிறைவாயிருக்கிறது மல்லிக்கா.


    வாங்க பத்மா.முதல் வருகையே அசத்தல்.மதுமிதா பதிவில் சுந்தர்ஜி க்குப் போட்ட பின்னூட்டத்தைக் காவி வந்து இங்கு அப்பி அதற்குக் கருத்துச் சொல்லி மனதை உங்களோடு இணைத்துக்கொண்டீர்கள்.சந்தோஷம் தோழி.அடிக்கடி சந்திப்போம்.


    ஓம்சைக்கிள் நல்ல செய்தியோடுதான் உலவுகிறீர்கள்.நன்றிதான் சொல்வேன்.


    தேனுவக்கா(உங்களை அக்காவாக்கிக் கொண்டேன்)நன்றி நன்றி.உங்கள் கருத்துக்கள் என்னை உற்சாகப்படுத்தும்.

    ReplyDelete
  37. வார்த்தைகளிலும் வலி உண்டு என்பதை அறிந்துகொண்டேன் உங்களின் கவிதையில் . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  38. இடுகைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று. தமிழ்மணம் விருதுகள் குறித்து வந்த மின்னஞ்சலைப் பார்த்தீர்களா?

    ReplyDelete
  39. கவிதைகளின் வார்த்தை வித்தைகள் எனக்கு பிடிபடுவதில்லை.அதன் காரணம் கொண்டே கவிதைகளை வேடிக்கை பார்ப்பதோடு சரி:)

    பின்னூட்டம் வந்ததற்கு செல்வராஜ் சார் என்னமோ நல்ல காலம் பிறக்குதுங்கிற மாதிரி குடுகுடுப்பை.

    பனித்துளி சங்கர்கிட்ட சொல்லிப் பார்த்துட்டேன்.கருப்பு பின்புலத்துக்கு ஆரஞ்சு கலர் எழுத்துல டாலடிக்க வைக்காதீங்கன்னு.இந்த நீலக்கலர் கவிதைக்கு அழகு கூட்டுகிறது.

    ReplyDelete
  40. நலமே விழைவு.

    எங்கேயோ சுற்றி எதற்குள்ளே நுழைந்து தமிழ் உதயம் பின்னூட்டத்தில் உங்கள் ஆச்சரிய விசாரிப்பு.

    கவிதைகளை கொண்டாடியதும், எழுதி கிழித்த காகிதங்களும் என்று போன காலம் உண்டு.

    எத்தனை முறை சொன்னாலும் அதென்னவோ இந்த கருப்பில் இத்தனை ஈர்ப்பாய் நீங்கள் இருப்பதன் காரணம் தெரியவில்லை.

    மனம் சோர்வடைகிறது.

    முதல் பதிவில் சண்டைக்கு சரிசமாய் நின்ற ஊக்கம் இடையில் தொடர்கின்றேன் என்றோடு எட்டி நின்று பார்த்து படித்து ஒதுங்கிய காரணம் புரியவில்லை?????


    நான் வலையை விட புத்தகங்களை அதிகம் நேசிப்பவன். பயணிப்பது உங்கள் அளவுக்கு வலையில் உலா வருவது இல்லை. மன்னிக்க.

    எந்த எழுத்தும் நோக்கம் இல்லாமல் வெறுமனே எழுத பக்கங்கள் நிரப்ப விருப்பம் இல்லை. வேலைப்பளு ஒரு பக்கம்.

    ஏதோ ஒரு தாக்கமோ உள்ளார்ந்த நோக்கமோ வெளியிடுடாமல் உங்கள் கவிதை மறைபொருள் போல் வைத்துருக்கும் அந்த விமர்சனம் எனக்குத் தேவை ஹேமா?

    ReplyDelete
  41. ஜோதிஜி...என் தேடலின் சத்தம் கேட்டதா தமிழின் பக்கமாக.

    பதிவு பார்க்க வருவேன்.புதுப் பதிவுகள் இல்லை இப்போதைக்கு.
    சில முரண்பாடுகள் அல்லது சொல்லமுடியாத கருத்துக்கள் இருந்தாலும் உங்கள் எழுத்துக்களை ரசிப்பேன்.அங்கு உண்மையும் நடுநிலையும் காண்கின்றேன்.அதோடு நடந்த சில சம்பவங்கள் எனக்கும் தெரியாதவற்றை அறிந்துகொள்கிறேன்.

    நன்றி ஜோதிஜி உங்கள் அன்புக்கு.

    ReplyDelete
  42. நன்றி ரவி...தமிழ்மண அறிவிப்பை உடன் தந்தீர்கள்.மிக்க மகிழ்ச்சி !

    ReplyDelete