Monday, March 01, 2010

ஒற்றை வார்த்தைக்கு...

உன் தூண்டிலில் சிக்கிக்கொண்ட
என் ஒற்றை வார்த்தைக்குத்தான்
உன் அகராதிக்குள்
எத்தனை அர்த்தங்கள்.

அடம்
கர்வம்
றாங்கி
பிடிவாதம்
செருக்கு

ஒவ்வொரு வார்த்தையையும்
தூண்டில் முள்
காயப்படுத்துவதை அறிந்தும்
பிடிபட்ட மீனுக்கு
உணவளிப்பதாய் சொல்கிறாய்.

வட்டமாயோ சதுரமாயோ
ஒரு தொட்டித் தண்ணீருக்குள்
என் வார்த்தைகளைச் சேமிக்காமல்
ஒரு நதியோ
ஆறோ பார்த்துச் சேர்த்துவிடு.

அங்கே....
கடவுள்
அன்பு
ஆதாரம்
தேவை
எதிர்பார்ப்பு
ஆதங்கம்
ஆறுதல்

ஏன்
^
^
^
^
^
^
^
காதல்

என்றுகூட... !!!

ஒரு மாத விடுமுறை.குழந்தை நிலாவுக்குச் சற்று ஓய்வு.
மீண்டும் சந்திக்கலாம் உறவுகளே.

ஹேமா(சுவிஸ்)

52 comments:

  1. கவிதை மிக நல்லாயிருக்கு

    சென்று வாருங்கோ.... காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. பூங்கொத்து!வாங்க!வாங்க!

    ReplyDelete
  3. //வட்டமாயோ சதுரமாயோ
    ஒரு தொட்டித் தண்ணீருக்குள்
    என் வார்த்தைகளைச் சேமிக்காமல்
    ஒரு நதியோ
    ஆறோ பார்த்துச் சேர்த்துவிடு.//

    ஹேமா,

    நல்லாத்தான் இருக்கு..!

    நிலாவுக்கு ஓய்வா?
    அப்படின்னா ஒரு மாசத்துக்கு இருட்டுலதான் .....! சரி சரி.

    ReplyDelete
  4. ஹேமா,

    பயணம் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மகிழ்ச்சியான விடுமுறைக்கு வாழ்த்துகள், ஹேமா

    ReplyDelete
  6. சந்தோஷமா போயிட்டு வாங்க.... ஹேமா

    ReplyDelete
  7. //காதல்

    என்றுகூட... !!!//

    காதல் உட்பட..!!! என்றும் முடித்திருக்கலாம், நல்லாவந்திருக்குங்க.... ரொம்ப நாள் கழித்து நிறைவாய், Keep it up

    ஒரு மாதம்தானே சடுதியில் ஓடிவிடும் :), take care & have a nice journey

    ReplyDelete
  8. அழகான கவிதை
    உங்கள் விடுமுறை சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வார்த்தைகள் விளையாடுகிறது உன் கைகளில் ஹேமா..happy holidays..

    ReplyDelete
  10. மகிழ்வுடன் போய்வாருங்கள் ஹேமா.

    ReplyDelete
  11. கவிதை நன்று... பயணம் இனிதாகுக..

    ReplyDelete
  12. கவிதை நன்று தோழி
    பயணமும் நாட்களும் சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  13. மகிழ்ச்சியான விடுமுறைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  14. நல் வாழ்த்துகள் ஹேமா!

    வந்த பின் கவி வரிகளில் நிலாவோட சந்தோஷ நாட்கள் இருக்கட்டும்.

    ReplyDelete
  15. அடம்
    கர்வம்
    றாங்கி
    பிடிவாதம்
    செருக்கு\\\\\

    ஒரு ஆணுக்கு காதலியாகவோ,
    மனைவியாகவோ ஆகிவிட்டால்...
    அதுவும் படித்த,அறிவுடன் பேசக்கூடிய
    விளக்கங்கள் சொல்லும் பெண்ணாயும்
    இருந்துவிட்டால்....{சில}ஆண்கள்
    கொடுக்கும் பட்டந்தான் மேல்
    இருப்பவைகள்.

    ஓர் ஆணிடம் ஓர் பெண் மாட்டித் தவிப்பதை
    எளிமையாய்....எழுதிவிட்டார் எங்கள் ஹேமா

    அது நீங்களாயும் இருக்கலாமல்லவா!!??

    ReplyDelete
  16. புதிய உற்சாகத்துடன் வாங்க..

    ReplyDelete
  17. வாழ்த்துகள் ஹேமா.

    விடுமுறையை இனிதாக கழியுங்கள்.

    ReplyDelete
  18. அய்யயோ இனிமே ஒரு மாதத்துக்கு ஹேமாவின் அழகான கவிதையை காணமுடியாதே !!

    பயணம் இனிதாய் வெற்றியாய் அமைய வாழ்த்துகள் ஹேமா.

    ReplyDelete
  19. //வட்டமாயோ சதுரமாயோ
    ஒரு தொட்டித் தண்ணீருக்குள்
    என் வார்த்தைகளைச் சேமிக்காமல்
    ஒரு நதியோ
    ஆறோ பார்த்துச் சேர்த்துவிடு.//

    போகும்போது தூவிவிட்ட இறையா இது.... அருமை...

    ReplyDelete
  20. அசத்தல் வரிகள்,அசந்து போனேன்

    ReplyDelete
  21. விடுமுறை + பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துகள் ஹேமா!

    ReplyDelete
  22. நல்ல வரிகள். விடுமுறைக்குப் பிறகு புத்துணர்சியுடன் வந்து புதுமையாய் எழுதுங்கள்.

    ReplyDelete
  23. நல்ல வரிகள் நிறைந்த கவிதை.....
    பிடிச்சிருக்கு............
    சென்று வாருங்கள்...........

    ReplyDelete
  24. ஒற்றை வார்த்தை.....

    எத்தனையோ சொல்கிறது.சென்றுவாருங்கள்...காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  25. //
    உன் தூண்டிலில் சிக்கிக்கொண்ட
    என் ஒற்றை வார்த்தைக்குத்தான்
    உன் அகராதிக்குள்
    எத்தனை அர்த்தங்கள்.
    அடம்
    கர்வம்
    றாங்கி
    பிடிவாதம்
    செருக்கு
    //

    எதுக்கு இப்படி திட்டுறீங்க

    //
    ஒவ்வொரு வார்த்தையையும்
    தூண்டில் முள்
    காயப்படுத்துவதை அறிந்தும்
    பிடிபட்ட மீனுக்கு
    உணவளிப்பதாய் சொல்கிறாய்.//

    அது என்ன மீன் சால மீனா

    //வட்டமாயோ சதுரமாயோ
    ஒரு தொட்டித் தண்ணீருக்குள்
    என் வார்த்தைகளைச் சேமிக்காமல்
    ஒரு நதியோ
    ஆறோ பார்த்துச் சேர்த்துவிடு.
    //


    தொட்டி செவ்வகமா இருந்தா கடலா ?



    //
    அங்கே....
    கடவுள்
    அன்பு
    ஆதாரம்
    தேவை
    எதிர்பார்ப்பு
    ஆதங்கம்
    ஆறுதல்
    //

    ஆனா இங்கே கும்மி மட்டும்

    //

    ஒரு மாத விடுமுறை.குழந்தை நிலாவுக்குச் சற்று ஓய்வு.மீண்டும் சந்திக்கலாம் உறவுகளே.
    //

    வன்மையாக கண்டிக்கிறேன் கும்மி பதிவர் சங்கம் சார்பாக

    ReplyDelete
  26. விடுதலை! ரொம்ப பெரிய விஷயம் ஹேமா. அவ்வளவு எளிதில் கிடைத்து விடுமா, என்ன??
    சோகமான கவிதை! ஊருக்கு போகும்முன் ஒரு சந்தோஷமான கவிதை எழுதிட்டு போக கூடாதா?

    நல்லபடியா, சந்தோஷமா ஊருக்கு போயிட்டு வாங்க!

    ReplyDelete
  27. நல்லாருந்ததுடா.

    பத்ரமா போய்ட்டு வா.

    ReplyDelete
  28. சேர்த்திடலாம் ஹேமா டோண்ட்வொர்ரி....

    பத்திரமா போயிட்டு வாங்க அடுத்த மாசம் நானும் ஊருக்கு போறேனே..
    வவ்வவவவே....

    கலா என்ன மெயில் அனுப்பிட்டாங்களா ஹேமா?

    என்ன கேட்கணும்?

    ReplyDelete
  29. தெரியாமல் விட்ட ஒற்றை வார்த்தை தூண்டிலாகி விடுவது உண்மைதான் ஹேமா ஹாலிடேயை என்ஜாய் பண்ணிட்டு வாங்க

    ReplyDelete
  30. வார்த்தை - மீன் என்ற உருவகங்களில் ஆச்சரியம் இருக்கிறது. ​ஒரு சீரான நடையில் இருந்திருந்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும்.

    மிக நேரடியான கவிதைகள் (உம்: சின்ன உராய்தலின் கிளர்ச்சியும்
    அழுந்தும் கைகளின் தயக்கமும்
    திருட்டு முத்த முயற்சிகளும்
    ஒளிந்து நின்று வேடிக்கை பார்க்கின்றன.... ) அனைவருக்கும் பொதுவான காட்சிகளைத் தருகிறது. அதன் தாக்கமும் அழுத்தமானது. ​

    ReplyDelete
  31. //தேவை
    எதிர்பார்ப்பு
    ஆதங்கம்
    ஆறுதல்//

    இவை அத்தனையும் கலந்த கலவைக்கு காதல் என்று பெயர்.

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. நல்ல கவிதை. ஒரு மாத ஓய்வை அனுபவியுங்கள்..மீண்டும் வாருங்கள்

    ReplyDelete
  33. நல்ல வரிகள்

    சந்தோஷமாக கொண்டாடுங்கள்

    ReplyDelete
  34. கவிதை அருமை.
    விடுமுறை சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. கவிதை அருமை ஹேமா...
    விடுமுறையை இனிமையாகக் கொண்டாடுங்கள்...

    ReplyDelete
  36. கவிதை அழகு வலி

    பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  37. கவிதைக்குச் சித்திரம் அழகா? சித்திரத்துக்கு கவிதை அழகா?

    (உங்கள் கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பை ஊர் சுற்றலில் இழந்தேன். விட்டதையெல்லாம் பிடிக்க வேண்டும்.)
    -அப்பாதுரை

    ReplyDelete
  38. நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்

    ReplyDelete
  39. விடுமுறையை நல்லா களியுங்கள். ஆனா எங்களை மறந்து விடாதீர்கள். அப்ப அப்ப நம்ம பிளாக் பக்கமும் வந்து சிரிச்சுட்டுப் போங்க.

    ReplyDelete
  40. Nice Hema,have a fantastic holiday.

    ReplyDelete
  41. வற்றவில்லை உங்கள் சிந்தை வளம் ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. ஹெமு கவிதை இல்லாமல் போரடிக்குது. இன்னமும் ஒரு மாசம் முடியவில்லையா? சீக்கிரம் வாங்க.

    ReplyDelete
  43. அப்ப இனி ஏப்ரல் தான் வருவீங்களோ? அக்கா எப்படிச் சுகம்??

    ReplyDelete
  44. தோழியே அருமை கவிதை..

    சென்றுவாருங்கள் நலமோடு வளமாக..

    ReplyDelete
  45. Hema When will u come...?

    plz come soon pa ...

    missing U...

    Thenu...

    ReplyDelete
  46. அன்றைய ஓற்றை வார்த்தை இந்தநீண்ட பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. தேர்ந்தெடுத்த வார்த்தைகள் என்ன பொருத்தம்?

    ReplyDelete
  47. என்னை போலவே எழுதாமல்
    நீட்டிக்கிரீர்களோ.
    வாழ்க வளமுடன்.
    அன்போடு வி.என்.தங்கமணி.

    ReplyDelete
  48. கவிதை அருமை..!

    -
    DREAMER

    ReplyDelete
  49. அருமையா இருக்கு உங்களுடைய ஒவ்வொரு கவிதைகளும்

    ReplyDelete
  50. பிரமாதமாய் இருக்குங்க...

    ReplyDelete
  51. ஒற்றை வார்த்தையில் உள்ளம் கொள்ளை போகுது...

    ReplyDelete