Monday, February 22, 2010

உயிர்த்தளம்...

இது என் மண்.
இந்த மண்
என்னைத் தாங்கும்
வெறும் நிலம் அல்ல.
என் மூச்சுக் கிடக்கும்
காற்று அடைத்த மண்டலம்.

இது என் கிராமம்.
இது என் குடிசை.
கிரவல் மண் தாங்கி நிற்கும்
ஒரு திடல் அல்ல
என் வாழ்வு
என் உயிர்த்தளம்.

என்னை வளர்த்த அன்னை பூமி.
என் பாட்டன் பூட்டன் பாதுகாத்த பரம்பரை
பாரம்பரியம் பண்பாடு.
கூட்டுப்புழுக்களாய் புரண்டு உழுது
பிணைந்து கிடந்த கூட்டு வாழ்க்கை.

இன்று....
விழுது விட்டு கிளை பரப்பி
வேர் பதித்த என் மண்ணை விட்டு
வேறு வேறாய்.

ஒரு குடிசைதான்
என் அழகிய வீடு
என்றாலும்
என் பெற்றோரின்
இரத்தம் தாங்கும் இதயம்.

இப்போ..... இது
தன் நினைவுகளை....சுவடுகளை
மட்டுமே வைத்துக்கொண்டு
புல்லிடமும் பூண்டிடமும்
தன் பழைய வரலாறு சொல்லியபடி
கண்ணீர் துடைக்கக்கூட கைகள் அற்று
பாம்புகளுக்கும் பூச்சிகளுக்கும்
படுக்க இடம் கொடுக்கும்
கறையான் அரித்து
இற்றுக்கிடக்கும் நினைவுச் சின்னமாய்.

வீட்டைச் சுற்றிச்சுற்றி
வலம் வருகிறேன் கோவில் போல.
அக்கா பொத்திப் பொத்திப்
பாதுகாத்த சினிமாப் புகைப்படங்களை
எடுத்தோடி
வீட்டைச் சுற்றி ஓட ஓட
அடிவாங்கிய நினைவு.

தடுக்கி விழுத்திய
அதே பலா வேர்
இப்போதும் என்னைத் தடுத்து முட்டி
நலமா என்கிறது.
எனக்காகவே தனை உயர்த்தி
எத்தனை தடிகள் கொடுத்திருக்கும்
இந்தப் பூவரசு.
இப்போதும் பரிதாபமாய்ப் பார்க்கிறது.
வயதின் முதிர்வைப் பார்த்தா
இல்லை பயந்து ஓடிய
கோழைத்தனத்தை நினத்தா.
அப்பப்பா வளர்த்த பனை
தாத்தா நட்ட தென்னை
என்னை மட்டுமே நெருங்க விடும் அருநெல்லி.
இப்போதும்....
காய்கள் ஆய்வதற்கு ஆருமே இல்லாமல்
இருந்த ஒரேஒரு அறையின் நடுவில்
பெரிதாய் உயரமாய் நிறைந்த
காய்களோடு ஒரு பப்பாமரம்.
முளைத்துக் கிளம்பியிருக்கலாம்.
காக்கா போட்ட எச்சத்திலிருந்து

அம்மிக்காக போட்ட சிறு மேடை
சிதைந்து ஞாபகச் சின்னமாய்
ஓ...ஒரு மண்ணெணெய் விளக்குக்கூட
புல் போல வளைந்து ஆடியபடி
நின்ற வேப்பமரம் பெருவிருட்சமாய்
பல கிளைகள் விட்டு
இடம் பெயராமல் அப்படியே.

பேசமுடியா அத்தனையும் தமக்குள்ளேயே
போராடி நகர்வில்லாமல்
தன் மண்ணில் நிலைத்து நிற்கும்போது
நியாயங்கள் பேசி
தீர்ப்புக்கள் எடுக்கக்கூடிய
நாம் மட்டும்
நாடு விட்டு நாடு
அலைவது ஏன் ????

போட்டி !
பொறாமை !
பேராசை !
பெரு நினைவு !
சொல்லலாமா !!!

ஹேமா(சுவிஸ்)

80 comments:

  1. //பேசமுடியா அத்தனையும் தமக்குள்ளேயே
    போராடி நகர்வில்லாமல்
    தன் மண்ணில் நிலைத்து நிற்கும்போது
    நியாயங்கள் பேசி
    தீர்ப்புக்கள் எடுக்கக்கூடிய
    நாம் மட்டும்
    நாடு விட்டு நாடு
    அலைவது ஏன் ????//


    இதுதான் ஹேமா இந்த கவிதையோட ஹைலைட்டட் வரிகள்...

    மரம் போன்ற அஃறிணைகளுக்கு தண்ணீர் மட்டும் போதும் மனிதனுக்கு மனிதன் தேவைப்படுகிறது ஜீவிக்க...

    ReplyDelete
  2. ///தடுக்கி விழுத்திய
    அதே பலா வேர்
    இப்போதும் என்னைத் தடுத்து முட்டி
    நலமா என்கிறது.///


    :-)

    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. //மரம் போன்ற அஃறிணைகளுக்கு தண்ணீர் மட்டும் போதும் மனிதனுக்கு மனிதன் தேவைப்படுகிறது ஜீவிக்க...//

    யப்பா அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் ! இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா !

    தலைவா உனக்கு பிரைட் பியூச்சர் இருக்கு !

    ReplyDelete
  4. அந்த குட்டி பொண்ணபார்த்தா பெரிய ஹேமா மாதிரியே இருக்கு...

    ReplyDelete
  5. // ராஜன் said...
    //மரம் போன்ற அஃறிணைகளுக்கு தண்ணீர் மட்டும் போதும் மனிதனுக்கு மனிதன் தேவைப்படுகிறது ஜீவிக்க...//

    யப்பா அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் ! இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா !

    தலைவா உனக்கு பிரைட் பியூச்சர் இருக்கு !//

    இப்போதான் தெரியுமா ராஜன் என்னோட பெயர் பார்த்துமா இப்பிடி ஒரு டவுட் உங்களுக்கு?

    ReplyDelete
  6. "உயிர்த்தளம்..."

    :(

    ReplyDelete
  7. வியந்து போய் பேச்சு மூச்சற்று நிற்கின்றேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. //இப்போதான் தெரியுமா ராஜன் என்னோட பெயர் பார்த்துமா இப்பிடி ஒரு டவுட் உங்களுக்கு? //

    ஹா ஹா ஹா ! உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா வருவீங்க தம்பி !
    ஒரு ஆட்டக் காரங்கற மொறைல சொல்றேன் ... உங்க ஆட்டத்தைப் பார்க்கும் போது எனக்கு அப்பிடியே கரகாட்டக் காரன் செகண்ட் ஷோ பாத்தா மாதிரியே இருக்குதுங்க ! நீங்க நிச்சயம் ஒருநாள் வந்து நம்ம ஊட்ல காபித் தண்ணி குடிச்சிட்டுபோவனும்

    ReplyDelete
  9. //ஹா ஹா ஹா ! உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா வருவீங்க தம்பி !
    ஒரு ஆட்டக் காரங்கற மொறைல சொல்றேன் ... உங்க ஆட்டத்தைப் பார்க்கும் போது எனக்கு அப்பிடியே கரகாட்டக் காரன் செகண்ட் ஷோ பாத்தா மாதிரியே இருக்குதுங்க ! நீங்க நிச்சயம் ஒருநாள் வந்து நம்ம ஊட்ல காபித் தண்ணி குடிச்சிட்டுபோவனும்
    //

    அடப்பாவி...காபிதண்ணி மட்டும்தானா?

    ReplyDelete
  10. //அடப்பாவி...காபிதண்ணி மட்டும்தானா?//

    மார்பியச்னு ஒரு சரக்கு நேத்து தான் அடிச்சேன் பிசுறு தட்டுது ! வாங்கி வெச்சுரவா

    ReplyDelete
  11. //ஒரு குடிசைதான்
    என் அழகிய வீடு
    என்றாலும்
    என் பெற்றோரின்
    இரத்தம் தாங்கும் இதயம்.//

    ஹேமா,

    குடிசை என்றாலும் கோயில்கள்.

    மாதமொருமுறையேனும் ஊரை நினைவு படுத்திவிடுகிறாய்....!

    ReplyDelete
  12. அக்கா பொத்திப் பொத்திப்
    பாதுகாத்த சினிமாப் புகைப்படங்களை
    எடுத்தோடி
    வீட்டைச் சுற்றி ஓட ஓட
    அடிவாங்கிய நினைவு.

    சின்ன சின்ன விஷயங்களைக் கூட விட்டு விடாமல் ஞாபகம் சேகரித்து முடிவில் கனமாய் அழுத்தி வைத்த கவிதை..

    ReplyDelete
  13. அருமையான கவிதை. உணர்வு ரீதியாக கவிதையை வாசித்ததும் எழும் மனவெழுச்சியே இக்கவிதையின் சிறப்பு.

    //என் மூச்சுக் கிடக்கும்
    காற்று அடைத்த மண்டலம்//

    ஆமாம் உண்மைதான்..

    //கூட்டுப்புளுக்களாய்//

    ‘கூட்டுப்புழுக்களாய்‘ என்று வரவேண்டுமே.

    ReplyDelete
  14. நகரத்தில் இருந்தாலும் பிறந்த மண்ணை ரசிப்பது தெரிகிறது ஹேமா, இது மாதிரி எத்தனிபேர் இருக்காங்க இன்னும் அதே பற்றுடன்

    ReplyDelete
  15. //நாடு விட்டு நாடு
    அலைவது ஏன் ????

    போட்டி !
    பொறாமை !
    பேராசை !//


    சத்தியமான வார்த்தை.

    ReplyDelete
  16. மனிதம் செத்துபோச்சுங்க செத்துபோச்சு...

    ReplyDelete
  17. //ஒரு குடிசைதான்
    என் அழகிய வீடு
    என்றாலும்
    என் பெற்றோரின்
    இரத்தம் தாங்கும் இதயம்.//

    ப்ச்ச்...கலக்கம்...

    கலங்க வைக்கும் கவிதைகள்...

    ReplyDelete
  18. சற்றே பெரிய கவிதையானாலும்,வலி உணர்த்தும் கவிதை.உயர்ந்து நிற்கிறது

    ReplyDelete
  19. \\வீட்டைச் சுற்றிச்சுற்றி
    வலம் வருகிறேன் கோவில் போல.\\
    கோயிலே தான் ஹேமா. உயிர் துடிப்புள்ள வரிகள். அழ வைக்கிறது.

    ReplyDelete
  20. //பேசமுடியா அத்தனையும் தமக்குள்ளேயே
    போராடி நகர்வில்லாமல்
    தன் மண்ணில் நிலைத்து நிற்கும்போது
    நியாயங்கள் பேசி
    தீர்ப்புக்கள் எடுக்கக்கூடிய
    நாம் மட்டும்
    நாடு விட்டு நாடு
    அலைவது ஏன் ????//

    சரியாச் சொன்னீங்க தோழி.. அருமை..

    ReplyDelete
  21. //அடப்பாவி...காபிதண்ணி மட்டும்தானா?//

    மார்பியச்னு ஒரு சரக்கு நேத்து தான் அடிச்சேன் பிசுறு தட்டுது ! வாங்கி வெச்சுரவா//

    இது வேறயா?

    ReplyDelete
  22. இன்று....
    விழுது விட்டு கிளை பரப்பி
    வேர் பதித்த என் மண்ணை விட்டு
    வேறு வேறாய்.


    ................. மனதில் ஒரு வலி!

    ReplyDelete
  23. கவிதையில் வலி நிரம்பி வழிகிறது. தேற்ற நினைக்கிற எமக்கும் வலிக்கிறது.

    ReplyDelete
  24. வலிமையான வார்த்தைகளோடு வலி நிறைந்த கவிதை...

    நன்று சகோதரி!

    பிரபாகர்.

    ReplyDelete
  25. தடுக்கி விழுத்திய
    அதே பலா வேர்
    இப்போதும் என்னைத் தடுத்து முட்டி
    நலமா என்கிறது.
    எனக்காகவே தனை உயர்த்தி
    எத்தனை தடிகள் கொடுத்திருக்கும்
    இந்தப் பூவரசு.
    இப்போதும் பரிதாபமாய்ப் பார்க்கிறது
    வயதின் முதிர்வைப் பார்த்தா
    இல்லை பயந்து ஓடிய
    கோழைத்தனத்தை நினைத்தா....

    கவிதையின் ஒவ்வொரு வரியும் அருமை ஹேமா.படித்து முடிக்கும் போது கண் கலங்கிப் போனேன்.
    எல்லாமே இன்று எமக்கு ஞாபகச்சின்னம் தான்.
    தெரிவு செய்து போட்டுள்ள படங்களும் அழகு.அதிலும் மருட்சியான பார்வையோடு குட்டிப்பொண்ணு நல்ல வடிவு.
    வாழ்த்துக்கள் ஹேமா*****

    ReplyDelete
  26. தடுக்கி விழுத்திய
    அதே பலா வேர்
    இப்போதும் என்னைத் தடுத்து முட்டி
    நலமா என்கிறது.
    எனக்காகவே தனை உயர்த்தி
    எத்தனை தடிகள் கொடுத்திருக்கும்
    இந்தப் பூவரசு.
    இப்போதும் பரிதாபமாய்ப் பார்க்கிறது
    வயதின் முதிர்வைப் பார்த்தா
    இல்லை பயந்து ஓடிய
    கோழைத்தனத்தை நினைத்தா.... //


    கலக்கிட்டீங்க.. கலங்க வச்சிட்டிங்க.. :(

    ReplyDelete
  27. வசந்து...க்குக் கவிதை பிடிச்சுப்போச்சு.அதான் முதலா ஓடி வந்திட்டார்.நன்றி வசந்து.

    ரொம்ப அழகா இருக்கிற அந்தக் குட்டிப்பொண்ணு என்னப் போலவா இருக்கிறா ! என்ன கிண்டலா !

    தன் இனத்தைத் தானே அழித்துக்கொள்பவம் மனிதன் தானே !

    ***********************************

    ராதா...ராஜன்.சுகமா.ரொம்ப நாளுக்கு அப்புறம் இந்தப் பக்கம் பாக்கிறேன்.சந்தோஷம்.
    கும்மி ஸ்டார்ட்ன்னு பாத்திட்டே இருந்தேன்.நல்லதாப்போச்சு.
    முடிச்சுக்கிட்டிங்க !

    ***********************************

    வாங்க ஷங்கர்.ஏதாச்சும் சொல்லியிருக்கலாம் !

    ***********************************

    வாங்கோ ஜோதிஜி...உங்களுக்காகவே இப்படியான கவிதைகள் எப்பாச்சும் இருந்திட்டு எழுதணும்.அப்பத்தான் வருவீங்க.சந்தோஷம் ஜோதிஜி.
    சுகம்தானே நீங்களும் தேவியர்களும் !

    ***********************************

    அஷோக்...பிறந்த வீட்டைப் பிரிந்த உங்களுக்கு ஓரளவு என் உணர்வு புரிந்திருக்கும்.அதென்ன..ம்ம்ம் !

    ***********************************

    சத்ரியா....மறக்கக்கூடிய நினவுகளா அவைகள்.மனதை அரித்துத் தின்றுகொண்டிருக்கும் கரையானாய்த்தானே அந்த நினைவுகள்.எப்படித்தான் சந்தோஷம்போல நடித்துக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் கோறையாய்தானே மனமும் உடம்பும் !

    ***********************************

    வாங்க ரிஷபன்....மனதை அழுத்திக்கொண்டிருக்கும் விட்டு வந்தாலும் விடாத நினைவுகள் அல்லவா அவைகள் !

    ReplyDelete
  28. வாசு அண்ணா....உங்க கவனத்துக்கும் இந்தக் கவிதை வந்திருக்கு.சந்தோஷமாயிருக்கு.
    எழுத்துப்பிழை திருத்திட்டேன் உடனேயே.நன்றி.

    ***********************************

    அபு...உங்களையும் ரொம்ப நாளாக் காணோம்.சுகம்தானே.

    பட்டணத்தில் வாழ்ந்தாலும் பணம் நிரம்பினாலும் அந்த வாழ்க்கை,அந்த மண் என்பது ஏக்கமாகவே இருக்குது எப்பவும் !

    ஊருக்குப் போகப்போகிறேன் விடுமுறைக்கு.அதுதானோ என்னவோ பழைய ஞாபகங்கள் திரட்டியாய் வந்துகொண்டேயிருக்கு !

    ***********************************

    பெருமாள்....சில உண்மைகள் சொன்னாலும் பிடிக்காது எல்லாருக்கும்.கவனம்.

    ***********************************

    அண்ணாமலை...மனிதம் செத்ததால்தான் மனச்சாட்சியே இல்லாத வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

    ***********************************

    பாலாஜி...என்ன கலங்கி என்ன செய்ய !எல்லாம் ஆகிப்போச்சு.
    எழுதியாவது வச்சிச்சிட்டு அடுத்த தலைமுறைக்கு விட்டுப் போவோம் !

    ***********************************

    ஜெரி....கவிதையின் முழு உணர்வையும் கொண்டு வர நினைத்து எழுதிவிட்டேன்.
    நீளமாகிவிட்டது கவிதை.சுருக்க நினச்சேன்.முடியவில்லை.
    சுருக்கினால் உணர்வு சுருங்குகிறது !

    ***********************************

    அம்பிகா...இன்னும் எழுத நிறைய இருக்கு.வார்த்தைகள் அடைச்சுக்கிடக்கு.சில சமயம் மனம் முட்டி எழுத முடிவதில்லை !

    ***********************************

    வாங்க திவ்யா....சரி தப்பு இவைகளைத் தாண்டி எம் வாழ்வு அநாதையாகிக் கிடக்கிறதே.யார் பொறுப்பு இதுக்கெல்லாம் !

    திவ்யா...கவனிச்சுக்கோங்க.இந்தப் பொடியன்கள் என்னெல்லாம் செய்றானுகள்ன்னு.என்னமோ பேர் எல்லாம் சொல்லி சொல்லி பிசிறடிக்கிறாங்களாம் !

    ReplyDelete
  29. உள்ளேன் .. உள்ளேன்.. உள்ளேன்..

    ReplyDelete
  30. \\கூட்டுப்புழுக்களாய் புரண்டு உழுது
    பிணைந்து கிடந்த கூட்டு வாழ்க்கை\\\

    உடைத்துத், தகர்த்து ஒட்டமுடியாமல்....தனியாக
    உலகமெல்லாம் “வாழ்க்கை” வாழப் பிச்சை
    கேட்டு அனலில் இட்ட புழுக்களாய்.....காலம்!!










    கறையான் அரித்து
    இற்றுக்கிடக்கும் நினைவுச்
    சின்னமாய்\\\\\\


    கறையான் அழிப்பது அஃறிணைகளை
    மட்டுந்தான்! காதகன்கள் நினைவுகளையே
    சூறையாடி{ட}...பைத்தியங்களாய் அலைகின்றோம்
    இதிலேது நினைவுச் சின்ன ஞாபகங்கள்!!??


    \\\போட்டி !
    பொறாமை !
    பேராசை !
    பெரு நினைவு !
    சொல்லலாமா\\\\\

    இது வேற சந்தேகமா ஹேமா?
    நூற்றுக்கு நூறு வீதம் உண்மை
    இதனால்....தான் இன்று நாமெல்லாம்..
    அனைவரையும்,அனைத்தையும் இழந்து
    அநாதைகளாய்.....அலைகின்றோம்

    ReplyDelete
  31. //இன்று....
    விழுது விட்டு கிளை பரப்பி
    வேர் பதித்த என் மண்ணை விட்டு
    வேறு வேறாய்.//

    ம்....வலி வரிகள் ஹேமா

    ReplyDelete
  32. வலியினுடே நினைவுகள்.. மண்ணின் மகிமை என இதை தான் சொல்வர்கள் போல...

    ReplyDelete
  33. ..சுவடுகளை
    மட்டுமே வைத்துக்கொண்டு
    புல்லிடமும் பூண்டிடமும்
    தன் பழைய வரலாறு சொல்லியபடி
    கண்ணீர் துடைக்கக்கூட கைகள் அற்று...

    சுடுகிறது....

    ReplyDelete
  34. மனித குலத்தின் அறியாமை.

    ReplyDelete
  35. \\\போட்டி !
    பொறாமை !
    பேராசை !
    பெரு நினைவு !
    சொல்லலாமா\\\\\
    சொல்லலாம் அதன் அடியாழத்தில் இருப்பது அறியாமை.

    ReplyDelete
  36. கண்ணில் ஒரு துளி நீர் எட்டிப்பார்த்தது.. அருமை ஹேமா

    ReplyDelete
  37. என் மூச்சுக் கிடக்கும்
    காற்று அடைத்த மண்டலம்///

    கவிதை அசத்தலுங்க!!

    ReplyDelete
  38. ஹேமா ,
    உணர்வு ரீதியான இந்த கவிதைக்கு
    ஆயிரம் பூச்செண்டு கொடுக்கலாம்

    ReplyDelete
  39. \\கூட்டுப்புழுக்களாய் புரண்டு உழுது
    பிணைந்து கிடந்த கூட்டு வாழ்க்கை\\\
    அசை மீட்கத்தான் முடியும்.

    ReplyDelete
  40. துள்ளித் திரிந்த காலங்களைப் பற்றி 'வலி'ய கவிதை.

    ReplyDelete
  41. சித்ரா...நாடு நாடாய் எங்கள் விருப்பமில்லாமல் துரத்தப்பட்ட எங்களிடம் மிஞ்சிக்கிடப்பது வலி மட்டும்தானே !

    ***********************************

    தமிழ்...வலிகள் சாகும்வரை எங்களோடு.அதைக் கொஞ்சம் மறக்கத்தானே அதை இதையென்று கிறுக்கிக்கொண்டிருக்கிறேன் !

    ***********************************

    பிரபா வாங்க...மனதில் கிடப்பவை எழுத்துக்களாகி கொஞ்சம் பாரம் குறைக்கிறது !

    ***********************************

    ஜெயா...நாங்கள் பட்ட...படும் வலிகளைச் சொல்ல வார்த்தைகள் இவ்வளவுதானா தோழி !

    ***********************************

    புல்லட்....எங்கள் வாழ்வு...நீங்கள் எத்தனை நகைச்சுவையாகப் பரிமாறிக்கொண்டிருந்தாலும் அடி மன ஏக்கங்கள் எவ்வளவு ?என் கிராமம், என் வீடு, என் சொந்தங்கள், நான் ஊஞ்சல் கட்டி ஆடிய மரம் என்று....எத்தனை எத்தனை.
    காண்போமா ? கண்டாலும் அந்தக் காலம் மீண்டும வருமா !

    ReplyDelete
  42. நசர்....ஓ...வந்திட்டீங்களா !கும்மியடிக்காம இருக்கிறீங்களே
    நல்ல பிள்ளையா !சந்தோஷம்.

    ***********************************

    கலா....நான் என் பாரம் குறைக்கவென்று கிறுக்க உங்கள் மனங்களைக் கிளறுகிறேன்.என்றாலும் பரவாயில்லை.இப்படி நாங்கள் அரற்றிக் கொண்டிருப்பதால்தான் இன்னும் மனநிலை குழம்பாமல் வாழ்கிறோம் தோழி.

    கலா நான் 4ம் திகதி ஒரு மாத விடுமுறையில் ஊர் போகிறேன்.
    அதனால் ஊர் ஞாபகமும் வேதனையும்
    அதிகமாயிருக்கிறதோ என்னவோ !

    ***********************************

    நன்ற் புலவரே....கை கோர்த்துக் கொண்டமைக்கு.

    ***********************************

    தமிழரசி...விரும்பித் தொழிலுக்காக மண்ணைப் பிரிவதன் உணர்வு வேறு.
    எங்களை துரத்தியல்லாவா விட்டிருக்கிறார்கள் !

    ***********************************

    கண்ணகி...இதேபோல பதின்மம் கொஞ்சம் தயார்படுத்துகிறேன்.
    விடுமுறைக்கு முன்னம் பதிவிடலாமென்று இருக்கிறேன்.

    ***********************************

    மணி....வாங்கோ வாங்கோ.கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறீங்கள்.ஆனா வாறதில்ல.சரி சரி சுகம்தானே.

    நீங்கள் சொல்லும் அறியாமை எம் அரசியலுக்குப் பொருத்தமாயிருக்குமா தெரியவில்லை.ஆனால் பெரிதாக ஆசைப்படாமல் அடுத்தவர்கள் சொல்பேச்சுக்கேட்டு விட்டுக்கொடுத்தல் என்றெல்லாம் இருந்திருக்கலாமோ என்றிருக்கிறது.எவ்வளவு இழப்புக்கள் பயனற்றுப் போயிற்று.எல்லாமே சேர்ந்தது அறியாமைதானோ !

    ReplyDelete
  43. நன்றி கவிதைக் காதலரே...எம்மோடு கை கோர்த்துக் கலங்குகிறீர்கள்.
    என்ன சொல்ல நான் !

    ***********************************

    வாங்க தேவா....ஊசி போட்டுக்கிட்டே இருங்க.இங்கயெல்லா வர நேரமில்ல உங்களுக்கு.சரி நேரமிருக்கிறப்போ வாங்க.
    ஆனா எனக்கு ஊசி வேணாம் !

    ***********************************

    மாதேவி....அசை போட்டுக்கிட்டே செத்துப்போயிடுவோம் அடுத்தவன் நாட்டில !

    ***********************************

    நன்றி ஸ்ரீராம்.அது சரி...உங்க பேருக்கு ஏன் இன்னும் நம்பர் சாத்திரம் சொல்லல.அந்த S ல போட்டிருக்கிறது உங்களுக்குப் பொருத்தமாயில்லையே !

    ReplyDelete
  44. ஹேமா மிக்க மகிழ்ச்சி நீங்கள்
    ஊர் போய் வருவது

    ஆனால் ஒருவருக்குத்தான் திண்டாட்டம்
    சண்டை போட ஆளில்லை என்ன!
    வசந்த் சரிதானே?

    வரும் வழியிலோ போகும் போதோ
    எங்களையும் பார்த்துப் போனால்
    மகிழ்ச்சி முடிந்தால் சொல்லுங்கள்
    விமான நிலையம் வருகிறேன்.

    {உங்கள் கறுப்புத் தங்கம்,கண்ணழகரைப்
    பார்க்க மட்டும் தடை}

    உங்கள் தனிமை,வெறுமை,துக்கம் எல்லாவற்றுக்கும்
    விடை கொடுத்து மகிழ்ச்சியாய் விடுமுறை கழிய..
    வாழ்த்துகள் ஹேமா!!

    ஆசையில் அளவுக்கதிகமாய் சாப்பிடாமல்
    போகும் நிறையுடன் திருப்புங்கள்
    குண்டாகினால்....
    குண்டுக் ஹேம்ஸ் என்று வேறு பட்டம் வரும்
    தோழி நல்லவைகளே அமையட்டும்!!

    ReplyDelete
  45. என் அன்பு கலா நன்றி.போகுமுன் பதிவு ஒன்று போடுவேன் என்றே நம்புகிறேன்.

    நான் டுபாய் குவைத் வழியாகவே பிரயாணம் செய்கிறேன்.சிங்கப்பூர் வர இப்போதைக்கு இல்லை.ஏன் என்னாச்சு எங்கள் கண்ணழகனுக்கு.

    வசந்து முந்திப்போல் இல்லையே.
    அவருக்கும் ஊர் ஞாபகம்.எப்போதும் தூராமாகவே இருக்கிறார்.சண்டை போட நான் சரிவாறனில்லையாம்.
    ம்ம்ம்...இப்பவே என்னை குண்டுன்னுதான் சொல்றான்.

    இதுக்கு நான் எதைவும் அவாப்பட்டு சாப்பிடுறதில்ல.அளவோட என்ன இருக்கோ அதைச் சாப்பிடும் ஒரு பிறவி நான் !

    நன்றி கலா.நிச்சயம் சந்திப்போம்
    ஒரு நாள்.

    ReplyDelete
  46. ஏது செய்ய ?எல்லாம் கனவாகிப் போயிற்று.
    ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  47. பிராட்பேண்ட் இணைப்பு அறுந்து போனதால் சரியாக வரமுடியவில்லை.

    உயிர்த்தளத்தில் உயிர்த்து போனேன்

    சொந்தமண்ணிற்கு செல்வதற்கு வாழ்த்துக்கள்

    மற்றபடி எல்லா விளக்கமும் "பின்னூட்ட சுனாமி" கலா சொல்லிட்டாங்க

    விஜய்

    ReplyDelete
  48. ஹேமா ஊருக்கு போவதாக சொல்லி இருக்கிறிங்க.பயணம் நல்ல படியே அமைய வாழ்த்துக்கள் சகோதரி. நீங்கள் திரும்ப வந்து போடும் பதிவு பார்த்து எங்கள் ஊரையும் பற்றி தெரிந்து கொள்வோம்.ஏனென்றால் உங்கள் ஊருக்கு பக்கம் தான் எங்கள் ஊரும் இருக்கிறது. நலமாக சென்று வந்து பதிவைப் போடுங்கள் .. வாழ்த்துக்களுடன்****

    ReplyDelete
  49. 'உயிர்தளம்' இந்த தலைப்பே மனதை தொடுகிறது ஹேமா.
    இளமையில் ஆடி, பாடி மகிழ்ந்த வீடு, இன்று பாழடைந்து இருப்பதை பார்ப்பது, நினைவே இல்லாமல் படுக்கையில் கிடக்கும் ஒரு தாயை பார்ப்பது போல் கொடுமையானது. மனதை கனமாக்கி விட்டது கவிதை வரிகள்.

    உங்கள் பயணமும், ஊரில் இருக்கும் நாட்களும் இனிதாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    வசந்த்,
    //இரு வார்த்தை கதைகள்// ரொம்ப வித்யாசமா சிந்திச்சு, அழகா எழுதி இருக்கீங்க.
    சிகிரெட் ஒரு உயிர்கொல்லிதான் சந்தேகமே இல்லாமல். ஆனால் எல்லா பெண்களும் உயிர் கொல்லிகள் இல்லை வசந்த். அன்புக்கும், காதலுக்கும், தாய்மைக்கும் உயிரையே கொடுக்கும் பெண்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவரவர் வாழ்வு அவரவர் கைகளில் இருக்கும்பொழுது, அதை சிறப்பானதாக அமைத்துக் கொள்வதில்தான் இருக்கிறது அவர்களுடைய புத்திசாலித்தனம்.

    ReplyDelete
  50. //வீட்டைச் சுற்றிச்சுற்றி
    வலம் வருகிறேன் கோவில் போல.//

    இது ரொம்ப அருமை ஹேமா

    ReplyDelete
  51. \\\ஏன் என்னாச்சு எங்கள்
    கண்ணழகனுக்கு.\\\\\

    ஹேமா இந்தப் பின்னோட்டத்தை
    மீட்டவும்
    இருக்கிறேன் ஆண்டாள்!

    //எப்பிடித்தான் பெஞ்சில ஏத்தினாலும் இப்பிடி அட்டகாசம் பண்ணிக்கிட்டு.//

    பழகிப்போச்சி.

    //ஊர் சுத்தறதுக்கும் வேலைப்பளுவுக்கும் வித்தியாசம் இல்லையா(டா).//

    ஆமாடா! வித்தியாசம் இருக்குது ”டா”!

    //இத்தனை நாளுக்கு அப்புறம் வந்து கவிதைக்குள்ள புதையுறாரம்.//

    நம்பனும்...புரியாதா”டா”?

    //நிறையக் கோவமா அன்போடதான் இருக்கேன்.//

    ஹே.....மா...ச்செல்லம்! அடிக்கிற கை தானே அணைக்கும்னு சொல்லியிருக்காங்க. அதனால கோவப்பட்டாலும் நான் வருத்தப்படல!\\\\\\\

    அம்மம்மாஆஆஆ....என்ன கொஞ்சல்
    பின்னோட்டத்திலே இப்படியென்றால்!!
    உங்களை நேரில் பார்த்தால் கொஞ்சல்
    நேராகவே கிடைத்துவிடும் என்ற ஒரு
    பயந்தான் காரணம் அதனால் ஒரு
    முன்னேற்பாடாய்...தடை போட்டேன்
    அப்புறம்..நான் எத்தனை பேருக்கு
    பதில் சொல்ல வேண்டும்!!??
    வசந்த் சரியா? என் துணைக்கு
    வரவேமாட்டீர்களா??கண்ணழகர்
    கதாநாயகர் ஆகப்பார்கிறார்!!

    விஜய்...!!நன்றி
    ஆனால் ஒரு பின்னோட்டப் புயல்{சிங்கம்}
    இருக்கின்றார் அவர் “என்னை”ஏற்றுக் கொண்டால்...
    ஹ்ஹஹ்ஹ்ஹஹஹ்ஹா....
    {பட்டத்தைச்} சொன்னேன் சரிதான்!!
    விஜய் எனக்குப் பட்டமெல்லாம்
    வேண்டாம்....நன்றி

    ReplyDelete
  52. //அம்மம்மாஆஆஆ....என்ன கொஞ்சல்
    பின்னோட்டத்திலே இப்படியென்றால்!!
    உங்களை நேரில் பார்த்தால் கொஞ்சல்
    நேராகவே கிடைத்துவிடும் என்ற ஒரு
    பயந்தான் காரணம் அதனால் ஒரு
    முன்னேற்பாடாய்...தடை போட்டேன்
    அப்புறம்..நான் எத்தனை பேருக்கு
    பதில் சொல்ல வேண்டும்!!??

    வசந்த் சரியா? என் துணைக்கு
    வரவேமாட்டீர்களா??
    கண்ணழகர்
    கதாநாயகர் ஆகப்பார்க்கிறார்!!//

    கலா,

    இதென்ன புது கூத்து?
    எண்ட மகள் சாரலுக்கு தெரிஞ்சது... சங்கைப் அறுத்து காக்காவுக்கு போட்டுருவா.

    கதா நாயகன் ரோல் எனக்கு வேணாம் தாயீ.

    1.பறந்துப் பறந்து ”சண்டை”ப் போடனும்.
    2.நாயகிய காப்பாத்தனும்.
    3.மரத்தைச் சுத்தி வந்து “டூயட்” பாடனும்....

    எத்தனைச் சிரமம்...?

    ReplyDelete
  53. அருமை. அற்புதம் மண்ணாய்ப்பொன மண் விழுதுகள் எங்கு வேர்விட்டாலும் அதன் உயிர்த்தளம் நம்ம மண்ணில்தான்.... கண்ணீர்த்துளிகள் இதயத்தின் ஓரங்களில்

    ReplyDelete
  54. //கதா நாயகன் ரோல் எனக்கு வேணாம் தாயீ///

    இவரு....

    [எனக்கு நானே]...
    பெருமாள், வாயப் பொத்திக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டியா?

    ReplyDelete
  55. நல்ல நினைவுகள். வீட்டை சுத்தி அடி வாங்கி, அடாடா பார்க்க நான் இல்லாது போனேன்.
    வலி தரும் நினைவுகள் என்றாலும் அதிலும் ஒரு சோக சுமைதான் இன்பம். நன்றி ஹேமு.

    ReplyDelete
  56. எத்தனை தடிகள் தந்து இருக்கும். அத்தனை குறும்பா நீங்கள்?.

    ReplyDelete
  57. //கிரவல் மண் //

    கிரவல் மண் என்றால்?

    ReplyDelete
  58. நல்ல கேள்விகளும் சிந்தனைகளும் கவிதையில் உள்ளன.

    ReplyDelete
  59. நன்றி செண்பகம் உங்க அன்பான வருகைக்கு.

    ***********************************

    விஜய்....எங்க போய்ட்டீங்க.
    இப்பிடியா அமைதியா இருப்பீங்க.கண்டதில நிறையச் சந்தோஷம் விஜய்.

    ***********************************

    ஜெயா..நான் கோண்டாவில் போகிறேனோ தெரியவில்லை.
    போக்குவரத்து வசதிகளும் கெடுபிடிகளும் பார்த்துத்தான் போவேன்.அப்பா அம்மா திருகோணமலையில்தான் இருக்கிறார்கள்.

    நீங்க எந்த இடம் என்று சொல்லவேயில்லையே ஜெயா !

    ***********************************

    மீனு...நிறைந்த நன்றி உங்கள் மனக்கருத்துக்கு.பெற்ற தாயைப் பிரிவதும் பிறந்த மண்ணைப் பிரிவதும் ஒன்றுதான் தோழி.

    மீனு ...வசந்து.....ரொம்ப பிஸி.
    முடிஞ்சா பதில் சொல்லுவார் உங்களுக்கு !

    ***********************************

    தேனு...பிறந்து தவழ்ந்த வீடு கோவிலுக்குச் சமன்தான்.அது கை விட்டுப்போகும்போதுதான் அதன் அருமை புரிகிறது.

    ***********************************

    கலா...கலா எந்தக் கதாநாயகனும் வேணாம் தோழி.ஆளை விடுங்க.
    எனக்கு நான்தான் நிரந்தரம்.எல்லாம் சும்மா பொய்.அதுவும் இந்த ஆண் ஜென்மங்கள் சுத்தப் பொய்.(யாருக்கெல்லாம் கோவம் வருமோ வரட்டும் !)

    ***********************************

    வாங்கோ வாங்கோ றமேஸ்.
    அடிக்கடி வரலாமே !

    ***********************************

    பெருமாள்...சத்ரியன் பாவம் விடுங்க.
    அவரே கலாக்கிட்ட மாட்டிக்கிட்டு படுற அவஸ்தை போதாதா !நீங்க வேறயா.

    நானே பெஞ்சில ஏத்துவேன்னு பயம் காட்டி அவரை இங்க வரவச்சுக்கிட்டு இருக்கேன் !நான் சும்மாதன் வெருட்டுறேன்னு சொல்லி குடுக்காதீங்க.கண்ணழகன் உஷாராயிடுவார் !

    ***********************************

    வாங்க வாங்க சுதானந்த சுவாமிகளே.
    எங்க அடிக்கடி காணாமப் போயிடறீங்க.ஒரே தெய்வ தேவியர் தரிசனமோ !

    அந்தப் பூவரசே அழும்.அவ்ளோ அடி விழுமாக்கும் ஹேமுவுக்கு.நான் அடி வாங்க எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க பாத்துச் சந்தோஷப்பட !உதை...!

    ***********************************

    நன்றி குட்டிப்பிசாசு.என்ன இப்பிடி ஒரு பேர் வச்சிருக்கீங்க.ஆனால் உங்க பதிவுகள் அசத்தல் அதுவும் குறும்படம் God ரசித்தேன்.

    "கிரவல் மண்" என்றால் சரியாகச் சொல்லத் தெரியாவிட்டாலும் சொல்கிறேன்.ஒருவேளை வேற்றுமொழிச் சொல் எங்கள் கொச்சைத் தமிழோடு கலந்து கிரவல் என்றானதோ தெரியவில்லை.
    சாதாரண மண்ணைவிடச் சின்னக் கற்கள் கலந்து கரடுமுரடாக மஞ்சள் கலராகவும் இருக்கும்.தார் போடப்படாத சின்ன ஒழுங்கைகளுக்குள் இந்தக் கிரவல் மண்ணாலேயே பாதையை அமைத்திருப்பார்கள்.வீடு கட்டுவதற்கும் பாவிப்பார்கள்.
    ஒருவேளை மற்றைய மண்ணைவிட மலிவானதாயும் இருக்கலாம்.

    ***********************************

    நன்றி அரசு.
    உங்கள் கருத்துக்குச் சந்தோஷம்.

    ***********************************

    வாங்க உழவரே.எப்பாச்சும் மறக்காம வந்து உற்சாகப்படுத்துறீங்க.
    நன்றி நன்றி.

    ReplyDelete
  60. ஆழ்ந்த வலியை வடுவை, சொல்லிப்போகிறது கவிதை.

    ReplyDelete
  61. ஆழ்ந்த வலியை வடுவை, சொல்லிப்போகிறது கவிதை.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  62. ////கதா நாயகன் ரோல் எனக்கு வேணாம் தாயீ///

    இவரு....

    [எனக்கு நானே]...
    பெருமாள், வாயப் பொத்திக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டியா?//

    வாங்க மச்சான்,

    எங்கடா ஆளையே காணமேன்னு பாத்தேன்.

    ஹூம்ம்ம்ம்..! இப்பிடியெல்லாம் , உசுப்பேத்தி மாமன் உடம்ப ரணகளமா பாக்கனும்னு ரொம்ப நாள் வேண்டுதலோ?....

    ReplyDelete
  63. //கலா...கலா எந்தக் கதாநாயகனும் வேணாம் தோழி.ஆளை விடுங்க.
    எனக்கு நான்தான் நிரந்தரம்.எல்லாம் சும்மா பொய்.அதுவும் இந்த ஆண் ஜென்மங்கள் சுத்தப் பொய்.(யாருக்கெல்லாம் கோவம் வருமோ வரட்டும் !)//

    நிஜமாவா?

    கருப்பி,

    நாங்கெல்லாம் சோத்துக்கு சரிநிகரா உப்பு போட்டு சாப்பிடறவய்ங்க... எங்களை மீறி கோவம் வந்துரும்னு நெனைக்கிறீங்க..?

    ReplyDelete
  64. //கலா...கலா எந்தக் கதாநாயகனும்
    வேணாம்\\\\\\\
    இந்த ஆண் ஜென்மங்கள்
    சுத்தப் பொய்.\\\\\

    கருப்பி,

    நாங்கெல்லாம் சோத்துக்கு
    சரிநிகரா உப்பு போட்டு
    சாப்பிடறவய்ங்க... எங்களை
    மீறி கோவம் வந்துரும்னு
    நெனைக்கிறீங்க..\\\\\
    ஹேமா நீங்க சொன்னது முற்றிலும் உண்மை
    ஆண்களே வேண்டாம் என்றவுடன்...
    டா ,டீ, செல்லமெல்லாம்
    கறுப்பியாக...மாறிவிட்டது பாத்தாயா ஹேமா?
    வேணும் போது தாங்கிறதும்..இல்லையென்றால்
    ஓங்கிறதும்..இவர்கள்தானடி!!

    ReplyDelete
  65. ஏமாற்றத்தால்...வந்த கோபமா?
    இதுதான் மனசுக்குள்ள பூட்டி வைக்கபடாது
    என்று சொல்லுறது, தானாக உடைத்து
    வெளி வந்து விட்டது இதற்கு என்ன பதில்??
    தலைவா!!

    இது உங்க மகள் சாரலுக்கு தெரிஞ்சது...
    சங்கைப் அறுத்து காக்காவுக்கு
    போட்டுருவா.... கவனம்!!

    ReplyDelete
  66. //ஹேமா நீங்க சொன்னது முற்றிலும் உண்மை
    ஆண்களே வேண்டாம் என்றவுடன்...
    டா ,டீ, செல்லமெல்லாம்
    கருப்பியாக...மாறிவிட்டது பாத்தாயா ஹேமா?
    வேணும் போது தாங்கிறதும்.. இல்லையென்றால்
    ஓங்கிறதும்.. இவர்கள்தானடி!!//


    லக்கலக்கலக்கலா,

    “டா”,”டீ”.... இவைகளை விடவும் அதிக ”கிறக்கம்” தரும் செல்லப்பெயர் “ கருப்பி” என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் என்ன செய்ய?

    ReplyDelete
  67. ///நியாயங்கள் பேசி
    தீர்ப்புக்கள் எடுக்கக்கூடிய
    நாம் மட்டும்
    நாடு விட்டு நாடு
    அலைவது ஏன் ????///

    நிறைய யோசிக்க வேண்டிய கேள்வி.

    ReplyDelete
  68. //பேசமுடியா அத்தனையும் தமக்குள்ளேயே
    போராடி நகர்வில்லாமல்
    தன் மண்ணில் நிலைத்து நிற்கும்போது
    நியாயங்கள் பேசி
    தீர்ப்புக்கள் எடுக்கக்கூடிய
    நாம் மட்டும்
    நாடு விட்டு நாடு
    அலைவது ஏன் ????//


    கவி அருமை . வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  69. தாமதத்துக்கு மன்னிக்கவும் ஹேமா. எனது கணினி வைரஸ் பிடித்ததால் எவர் பதிவும் படிக்கவில்லை. பயணம் சேமமே இருக்க வேண்டுகிறேன்.
    //போட்டி !
    பொறாமை !
    பேராசை !//
    இது உண்மை.

    ReplyDelete
  70. புலம் பெயர்ந்தோரின் வலிகள், எண்ணங்கள், கண்ணீரை சொல்லாமல் சொல்லும் கவிதை. பின்னோக்கி பயணிக்கிறது என் எண்ணங்கள். உங்களுக்கு மட்டுமல்ல, நாடு விட்டு வந்த எங்களுக்கும் எங்கள் வீடுகளின் நினைவுகள், துக்கம் அடைக்கிறது தொண்டையை.

    ReplyDelete
  71. வார்த்தைகளுக்குள் ஒளிந்துகிடக்கு
    வாழ்ந்த வாழ்க்கை. மிக அழகிய சொல்லாடல்..

    ReplyDelete
  72. அன்பு ஹேமா,

    ரொம்ப அழகான கவிதை...படித்தவுடன் மனசுக்கு கஷ்டமா இருந்தது... இது போன்ற எந்தவித நிஜவலி ஏதும் அறியாத பிறரின் வலியை உணர்ந்ததாய் எழுதிக் கொண்டு இருக்கும் எனக்கு, இது போன்ற கவிதை உச்சானி...

    அழத்தோனுச்சு ஹேமா...

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  73. நல்லாருக்கு
    வாழ்த்துகள் ஹேமா

    ReplyDelete
  74. தமிழ்மணம் பரிந்துரையில் தான் பார்த்தேன். இத்தனை நாள் கவனிக்கவில்லையே என்று மினி வருத்தம்.

    வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  75. மீண்டும் உள்ளே வந்தேன்.

    வார்த்தைகளில் இருந்து மீண்டு வந்தேன்.

    நிச்சயம் இந்த தலைப்பு ஜெயிக்கும்ஹேமா.

    ReplyDelete
  76. தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  77. பேசமுடியா அத்தனையும் தமக்குள்ளேயே
    போராடி நகர்வில்லாமல்
    தன் மண்ணில் நிலைத்து நிற்கும்போது
    நியாயங்கள் பேசி
    தீர்ப்புக்கள் எடுக்கக்கூடிய
    நாம் மட்டும்
    நாடு விட்டு நாடு
    அலைவது ஏன் ????//:(

    ReplyDelete
  78. //அப்பப்பா வளர்த்த பனை
    தாத்தா நட்ட தென்னை
    என்னை மட்டுமே நெருங்க விடும் அருநெல்லி.
    இப்போதும்....
    காய்கள் ஆய்வதற்கு ஆருமே இல்லாமல்
    இருந்த ஒரேஒரு அறையின் நடுவில்
    பெரிதாய் உயரமாய் நிறைந்த
    காய்களோடு ஒரு பப்பாமரம்.// வீட்டைப்பற்றிய எத்தனை நினைவுகள். வாசிக்கும்போதே வீட்டின்மீது ஒரு ஆசையும் அதைப்பிரிந்த உங்களின் ஏக்கமும் கொஞ்சம் தடுமாற வைக்கிறது என்னை..

    ReplyDelete