Friday, February 19, 2010

தொலைத்த பதிவுகள்...

இருட்டியது
இருள் முட்டியது
வீடு அடங்கியது
சன்னமாய் ஒரு குரல்.
அலமாரிக்குள்
மிக...மிக
மிகவும் தெளிவாய்.

மனதோடு உரசி
அழுது சிரித்து
பக்கமிருந்து
தலை தடவி
குட்டியா என்றழைக்கும்
இளமையில் கேட்ட குரலாய்
நெகிழ்வோடு
அது....அது அப்பா !

அம்மாவின்
சமையல் சரியில்லை
தொடங்கி...
பக்கத்துவீட்டு
தங்கமணி அக்காவின்
குழந்தை நடக்கிறாள்
என்பது வரை...
உறவுகளின்
ஒரு பெரும்
சரித்திரச் செய்திகளோடு அவர்.

குறைந்தது பேசிக் கட்டணங்கள்.
குறைந்தது
அசைபோடும் நினைவுகளும்தான்.
பிறந்த நாள் வாழ்த்துக்கூட
தொலைபேசியிலாகி
தொலைந்து போனது
கையின் பதிவுகள்
அழகு கையெழுத்துக்கள்.

மீண்டும்....மீண்டும்
படிக்க
பார்க்க
சந்தோசிக்க
சேமித்த ரகசியங்களோடு
காத்திருக்கும்
கடிதங்கள் இன்னும்
என்னிடம்
நினைவுகளை மீட்கும்
உணர்வுகளோடு !!!

ஹேமா(சுவிஸ்)

49 comments:

  1. கடிதங்கள் - அழகிய பதிவுகள்

    நெகிழ்வாய் ...

    ReplyDelete
  2. //இருட்டியது
    இருள் முட்டியது
    வீடு அடங்கியது
    சன்னமாய் ஒரு குரல்.
    அலமாரிக்குள்
    மிக...மிக
    மிகவும் தெளிவாய்.
    //

    ஹேமா இந்த வரிகளின் கற்பனை நினைத்தால் அம்மாடி....சூப்பர்D..

    //குட்டியா //

    நல்லாருக்கே...இந்த பேரு...

    //பிறந்த நாள் வாழ்த்துக்கூட
    தொலைபேசியிலாகி
    தொலைந்து போனது
    கையின் பதிவுகள்
    அழகு கையெழுத்துக்கள்.//

    நிஜம் :(

    உங்க கவிதைகளிலே இது பெஸ்ட் ... வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. மீண்டும்....மீண்டும்
    படிக்க
    பார்க்க
    சந்தோசிக்க
    சேமித்த ரகசியங்களோடு
    காத்திருக்கும்
    கடிதங்கள் இன்னும்
    என்னிட{ம்}...மும்
    நினைவுகளை மீட்கும்
    உணர்வுகளோடு !!!\\\\\\\\\

    ReplyDelete
  4. கவிதை அழகு
    கடிதங்கள் காலம் கடந்தும்
    இனிய நினைவுகளை நினைவூட்டும்

    ReplyDelete
  5. என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்கக்கூட கடிதத்தை உபயோகப்படுத்தியிருக்கிறேன். இப்போது சாத்தியமா எனவே தெரியவில்லை. எழுதுவது கூட கணனியில் தான். ஆம், தொலைத்துத்தான் இருக்கிறோம்... அருமை ஹேமா!

    பிரபாகர்.

    ReplyDelete
  6. உடனே ஒரு பாராட்டு கடிதம் எழுத மனசு துடிக்குது
    கையோ கணினியின் கீ போர்டில்
    அநிச்சையாக செயல்படுகிறது
    அருமை ஹேமா என்று

    ReplyDelete
  7. //மீண்டும்....மீண்டும்
    படிக்க
    பார்க்க
    சந்தோசிக்க
    சேமித்த ரகசியங்களோடு
    காத்திருக்கும்
    கடிதங்கள் இன்னும்
    என்னிடம்
    நினைவுகளை மீட்கும்
    உணர்வுகளோடு !!!

    அருமை

    ReplyDelete
  8. சித்தப்ஸ்கிட்ட சொல்லி லெட்டர் போடசொல்றேன்... எனக்கெல்லாம் மணியாடர் அனும்ச்சாதான் பிடிக்கும்

    பதிவு..சூப்பரு... சாரி.. கவித கூப்பரு..சூப்பருங்க..

    ReplyDelete
  9. சில பதிவுகள் மனதை தொழும் சில அழுத்தும்.. அத்தகையதில் ஒன்றுதான் இது..
    இப்போதெல்லாம் கடிதம் எழுதுவது சென்டிமென்ட் என்று சரியான வெட்கம்.. எழுதினால் அம்மாவே சிரிப்பா என்னப்பன் நடந்ததெண்டு? நானும் என் அப்பா அனுப்பின தீபாவளிக்காட்டை எத்தியோ வருசமா வச்சிருக்கன்.. அதில அவற்ற எழுத்துதான் அழிஞ்சு வருது :(

    வாழ்த்துக்கள் ஓட்டும் குத்தியாச்சு..:)

    ReplyDelete
  10. குட்டியா?

    குட்டியானை எண்டதாத்தான் சுருக்கமா செல்லமா கூப்பிட்டவரோ ? :P

    ReplyDelete
  11. //கடிதங்கள் இன்னும்
    என்னிடம்
    நினைவுகளை மீட்கும்
    உணர்வுகளோடு !!!//

    நல்ல கவிதைங்க... இழப்புகளை நினைத்து மனம் ஏங்கத்தான் செய்கிறது. ஆயினும் திரும்பப்பெறவியலா இவைகள் சுவடுகளாய்...கவிதையாய்....கட்டுறையாய்....

    ReplyDelete
  12. நிஜம் சொல்லும் அழகான கவிதை, என் அலமாரியில் கூட என் குரல்கள் கேட்கிறது....

    ReplyDelete
  13. கடிதங்கள் எல்லாம் உண்மையிலேயே பொக்கிஷங்கள்தான் ஹேமா என்னவரின் கடிதங்கள் என்னிடம் இன்னுமிருக்கின்றன

    ReplyDelete
  14. //சேமித்த ரகசியங்களோடு
    காத்திருக்கும்
    கடிதங்கள் இன்னும்
    என்னிடம்
    நினைவுகளை மீட்கும்
    உணர்வுகளோடு !!!//

    எங்கிங்டேயும் இருக்குங்க...

    ReplyDelete
  15. இயல்பாய்,அழகாய் வந்திருக்கு ஹேமா.அதுசரி..

    அந்த கடிதங்கள் புகைப் படங்கள் எங்கிருந்து எடுத்தது?அதில் அப்பா,அம்மா எழுதிய கடிதங்கள் இருக்குமோ என நினைசிக்கிற பிடிச்சிருக்குடா பயலே..

    ReplyDelete
  16. ஹேமா, இது பொக்கிஷம் படத்தை ஞாபகப் படுத்துது..பதிவுகளும் பொக்கிஷம் தானே..

    ReplyDelete
  17. அருமை, அருமையான உணர்வு கவிதை..... வாழ்த்துக்கள் ஹேமா.

    ReplyDelete
  18. அழகிய மகிழ்வான
    நெகிழ்வான பதிவு

    ReplyDelete
  19. இது ஒரு பொக்கிஷப் பதிவு.

    ReplyDelete
  20. தொலைந்த பதிவுகள் தங்களிடம் தொலையாமல்..... கவிதை அருமை... பாராட்டுக்கள் ஹேமாவதி!

    ReplyDelete
  21. //சேமித்த ரகசியங்களோடு
    காத்திருக்கும்
    கடிதங்கள் இன்னும்
    என்னிடம்
    நினைவுகளை மீட்கும்
    உணர்வுகளோடு !!!//
    மிக நெகிழ்வான பதிவு. நானும் கூட நிறைய சேர்த்து வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  22. கால மாற்றம். ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும். நாமே யாருக்காவது கடிதம் எழுதுகிறோமா. ஆனால் கடிதம் பற்றி கவிதை எழுதுகிறோம்.

    ReplyDelete
  23. வரவர ரொம்ப உணர்ச்சி வசப்பட வைக்கிறீங்க ஹேமா.

    அருமை.

    ReplyDelete
  24. அழகான பொக்கிசம்.. வாழ்த்துக்கள் ஹேமா***

    ReplyDelete
  25. நான் எதோ பதிவு தான் தொலைந்து போச்சோன்னு நினைச்சேன்

    ReplyDelete
  26. ஜமால்...வாங்க வாங்க.ரொம்பக் காலத்துக்கு அப்புறம் முதன் முதலா ஓடி வந்திட்டீங்க.சந்தோஷம்.

    சாதாரணமாகவே கடிதங்கள் கதை சொல்லும்.அதுவும் என் அப்பா
    பக்கம் இருந்து கதைப்பது
    போலவே எழுதுவார்.
    அதன் தாக்கம் இன்னும் அதிகம்.

    ***********************************

    வசந்து....ம்ம்ம் பிடிச்சிருக்கா கவிதை ! சந்தோஷம்.பழைய கடிதக்கட்டு கண்ணில் தட்டுப்படும் போதெல்லாம் அவைகள் எம்மோடு பேசுவதுபோலத்தான் !

    நேற்றுக் கடிதக் கட்டுக் கிளறும்போது 1995 ல் என்பெரியப்பா எழுதிய கடிதம் தட்டுப்பட்டது.அவர் இப்போ எம்மோடு இல்லை.என்றாலும் அவர் பேசிய உணர்வு அந்தக் கடிதத்தில்.

    ***********************************

    கலா...கடிதம் எங்கள் வீட்டில் பெரும் பங்கை வைத்திருந்தது என்றே சொல்லலாம்.

    அப்பா வேலை காரணமாக எப்பவும் எங்களை விட்டுத் தூரமாகத்தான் இருந்தார்.கடிதம் 3 நாளைக்கு ஒரு தரம் வந்துகொண்டேயிருக்கும்.
    சிலநேரம் நடுவில் ஒரு கடிதம் வரப்பிந்தினால் அம்மாவின் கை வாய்க்குள் நல்லா நாங்கள்தான் கிடைப்போம்.வாங்கிக் கட்டிக்கொள்வோம்.கடிதம் வராததுக்கு நாங்கதான் என்ன செய்றது.திட்டு வாங்குவோம்.அப்பா கிண்டலாகச் சொல்லுவார் "நீ சுகமா..நான் சுகம்ன்னு டைப் பண்ணி வச்சுக்கொண்டு ஒவ்வொருநாளும் போஸ்ட் பண்றேன்"ன்னு.

    ***********************************

    வாங்க நி.கே.ரொம்பக் காலமாக் காணோம்.ஊருக்குப் போயிருந்தீங்களா.
    சுகம்தானே.நன்றி அன்புக்கு.

    ***********************************

    வாங்க பிரபா...இனி அப்படி ஒரு சந்தர்ப்பம் கொண்டு வருமா காலம் !இல்லையென்றுதான் பதிலாயிருக்கும்.நாகரீகக் கண்டுபிடிப்புக்களால் இயல்புகளை இழக்கிறோம்.

    ***********************************

    அட என்ன T.V.ராதாகிருஷ்ணன் ஐயா.உங்களிடமிருந்து ஒரு பாராட்டுக் கடிதம் வந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவேன்.என்றாலும் பரவாயில்லை.இதுவும் ஒரு உங்கள் பாராட்டுப் பதிவுதானே.சந்தோஷம்.

    ReplyDelete
  27. வாங்க ரசிதா...அன்போட வந்து எண்ணங்களைப் பகிர்ந்ததில் சந்தோஷம்.சந்திப்போம் மீண்டும்.

    ***********************************

    அஷோக்....அதென்ன நீங்க தபால்காரரா நடுவில.நான் அண்ணாகிட்ட நானே கடிதம் கேட்டு வாங்கிப்பேன்.மணிஆடர் அனுப்பலாமான்னு நானும் அண்ணாகிட்ட கேட்டுப் பாக்கிறேன்.

    ***********************************

    அப்பன் புல்லட்....என்னவா ஒரு கண்டுபிடிப்பு.குட்டியாவுக்கும் குட்டியானைக்கும் முடிச்சுப் போட்டு ! இருங்கோ உங்களுக்கு சுவிஸ்ல இருந்து ஒரு நுளம்பு அனுப்புறன் !

    **********************************

    பாலாஜி..உண்மைதான் அந்த இயல்பானா ஏக்கமான காலங்கள் இனி எழுத்துக்களில் மட்டும்தான்.அதுவும் இன்றைய தலைமுறைகளுக்காக அல்ல.எங்களுக்காகவே !

    ***********************************

    வாங்க இனியாள்....அழகான பெயர்.முதல் வருகைக்கும் பெயருக்கும் வாழ்த்தும் பாராட்டும்.
    அலமாரிக் கடிதங்களை எப்போவாவது எடுத்துப் பாருங்கள்.நிறையக் கதைகள் சொல்லும்.

    ***********************************

    தேனு..உங்களவரின் கடிதங்களா !அது இன்னும் இனிமையான காலங்களைக் கொண்டு வருமே !

    ***********************************

    நன்றி அண்ணாமலை.உங்கள் பதிவின் பக்கம் வந்தேன்.ஒரே கூட்டம்.ஓட்டு மட்டும் போட்டுத் திரும்பிவிட்டேன்.

    ***********************************

    சங்கவி...சிலரைப் பார்த்திருக்கிறேன்.
    புகைப்படம்போல சில கடிதங்களை சட்டம் போட்டு சுவரில் தொங்கவிட்டிருக்கிறார்கள்.அத்தனை பெருமை அந்தக் கடிதங்களுக்கு.

    ReplyDelete
  28. அண்ணா வாங்க.இப்பல்லாம் அடிக்கடி காணாமப் போறீங்க.அண்ணா அஷோக் என்ன கேட்டிருக்கார் பாத்தீங்களா.சொல்லிடுங்க நீங்களே.

    ஆமாம் அண்ணா அது அப்பாவின் கடிதங்கள்தான்.

    **********************************

    கோபி...இன்னும் கவிதை எழுதலியா !ஆனா உங்களைப் போல விமர்சனங்கள் எழுத எனக்கு வரலியே.பாருங்க பின்னூட்டம்கூட சரியா விமர்சிச்சு எழுத வராது.நீங்க சொன்னமாதிரி யார் யாருக்கு என்னென்ன வருதோ அதைச் சரியாச் செய்திட்டு இருப்போம்.
    என்ன சரிதானே !

    ***********************************

    வாங்க வரணும் ஏஞ்சல்.
    அன்புக்கு நன்றி.

    ***********************************

    தியா....வாங்க.சுகம்தானே.உங்கள் கவிதைகளிலும் உறவுகள் ஏக்கங்கள் காண்கிறேன்.

    ***********************************

    வாங்க சித்ரா.எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட எதுவுமே பொக்கிஷங்கள்தான்.
    தொலைபேசியால் அந்த எழுத்துக்கள் மறைந்துவிட்டனவே.
    அதுதான் கவலை.

    ***********************************

    வரணும் அரசு.என் பெயர் ஹேமாவதி இல்ல.ஹேமவதி ன்னு சொல்லணுமாம்.அது ஒரு இராகத்தின் பெயராம்.நன்றி வந்ததுக்கு.

    ***********************************

    நன்றி அம்பிகா.சேர்த்து வைத்த பொக்கிஷங்களுக்கு காலம் போகப் போகத்தான் மதிப்பும் மரியாதையும்.
    பத்திரமாக வைத்திருங்கள்.அடுத்த தலைமுறைகூடச் சந்தோஷப்படலாம்.

    ReplyDelete
  29. ஆமா ஹேமா ....இப்பெல்லாம் அந்த கடிதம் முலம் கிடைக்கிற சந்தோசம் ரொம்ப மிஸ் பண்ணுறோம் ல ....

    எனக்கு சின்ன வயசு ல கடிதங்களை எல்லாம் இன்னும் வைத்து இருக்கிறேன் ...எப்பவாச்சு எடுத்து படிப்பேன் ...

    வழக்கம் போல் கவிதை நல்ல இருக்கு ...எனக்கு எல்லா வரிகளுமே பிடிச்சு இருக்கு .... கடிதத்தில் இருக்கும் கையெழுத்து எழுதியவரின் அன்பை நமக்கு காட்டும்..அந்த உணர்வு ஈமெயில் ல கிடைப்பது இல்லை

    ReplyDelete
  30. hema ....naan eluthina kavithai gnabagam irukkaaa



    காற்றில் எனது பதிவுகள்

    http://mayvee.blogspot.com/2009/11/blog-post_09.html

    ReplyDelete
  31. "குறைந்தது பேசிக் கட்டணங்கள்.
    குறைந்தது
    அசைபோடும் நினைவுகளும்தான்."


    cell phone yai thane solluringa????

    ReplyDelete
  32. "இருட்டியது
    இருள் முட்டியது
    வீடு அடங்கியது
    சன்னமாய் ஒரு குரல்.
    அலமாரிக்குள்
    மிக...மிக
    மிகவும் தெளிவாய்"


    intha varigalai innum nalla eluthi irukkalam ...nalla vanthu irukkum

    ReplyDelete
  33. "பக்கமிருந்து
    தலை தடவி
    குட்டியா என்றழைக்கும்"


    "தலைத் தடவி " ன்னு வர வேண்டும்

    (நாங்களும் இலக்கியவாதி ஆகிட்டோம் ல ...அப்பரும் எழுத்து பிழை பற்றி சொல்லாட்டி எப்புடி ????)

    ReplyDelete
  34. "உறவுகளின்
    ஒரு பெரும்
    சரித்திரச் செய்திகளோடு அவர்."


    உறவுகளின்
    ஒரு பெரும்
    சரித்திர நிகழ்வுகளோடு அவர்.....

    (இது நல்ல இருக்கு ல )

    ReplyDelete
  35. தொலைபேசியிலாகி
    தொலைந்து போனது
    கையின் பதிவுகள்
    அழகு கையெழுத்துக்கள்.

    ஏக்கம் எல்லோர் மனசிலும் உண்டு.. கடிதங்கள் என்கிற அழகைத் தொலைத்து விட்ட பெருமூச்சுடன்..

    ReplyDelete
  36. கடிதங்களை படிப்பதில் இருந்த மகிழ்ச்சி தொலைந்து போய் இருக்கிறது..

    ReplyDelete
  37. //இருட்டியது
    இருள் முட்டியது
    வீடு அடங்கியது
    சன்னமாய் ஒரு குரல்.
    அலமாரிக்குள்
    மிக...மிக
    மிகவும் தெளிவாய்

    இக் கவிவரிகளின் கற்பனை பிடிச்சிருக்கு.
    நன்று... நன்று....
    செம்பகம்

    ReplyDelete
  38. நியூசி வந்த புதிதில் வீட்டுக்கு கடிதம் எழுதினேன். பிறகு எல்லாம் போனும் ஈமெயிலும்தான். நிச்சயம் கடிதங்களை தொலைத்துவிட்டோம்.

    ReplyDelete
  39. காலங்கள் கடந்தபின்னும் கதை சொல்லும் கடிதங்கள் ஒரு அழகிய புதையல்..

    ReplyDelete
  40. நிறைய நினைவுகளுக்கு அடித்தளமிட்ட இந்த கவிதை.....

    ReplyDelete
  41. ஹேமா,

    உயிர் எழுத்துக்கள்....!
    கவிதையின் நடையை விடவும்
    உணர்வின் வெளிப்பாடு அருமை. “இருட்டியது...எனத் தொடங்கி ”

    ReplyDelete
  42. அருமையான நினைவுகள். பெரியப்பாவா..முத்து முத்தாக மிக அழகிய கையெழுத்து...இப்போதெல்லாம் தபால்காரரைப் பார்த்தே நாள் ஆகிறது...என்னிடமும் பல உறவுகளின் கடிதங்களும், கையெழுத்தும் பொக்கிஷமாய்...

    ReplyDelete
  43. தொலைத்தது கடிதங்கள் மட்டுமல்ல, அழகான கையெழுத்துக்கள், உணர்ச்சிக் குவியல்கள், இன்னும் எத்துனை எத்துனையோ

    ReplyDelete
  44. தமிழ் ...சரியாகச் சொன்னீர்கள்.
    கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு கடிதம் பற்றிய கவிதை எழுதுகிறோம்.
    காலமாற்றங்களில் வடிவம்தான் இது.ஆனாலும் நினைச்சுப் பாத்தா சங்கடமாயிருக்கு.

    **********************************

    அக்பர்...சில வாழ்வியல் சம்பவங்கள் எப்போதுமே உணர்வோடுதான்.
    ஏனெனில் அதன் சக்தி அப்படி !

    ***********************************

    ஜெயா....எப்போதுமே கடிதங்கள் பொக்கிஷங்கள்தான்.ஆனால் இனி அது எமக்குக் கிடைக்காத ஒன்று.எனவேதான் கிடைத்தவைகள் மிக மிகப் பொக்கிஷங்கள்.நான் அன்று கிளறும்போது கண்ணில் நீர் வரவைத்தும் விட்டன சில கடிதங்கள்.
    எம் வாழ்வில் இழந்தவைகளில் இதுவும் ஒன்று.தொலைபேசியால் தொலைந்துவிட்ட கடிதங்கள்.காற்றில் கரையவைக்கிறோம் எம் நினைவுகளை.

    ***********************************

    நசர்....எப்பிடித்தான் நக்கல் பண்ணினாலும் கடிதம் வாழ்வின் மிக முக்கியமான பதிவுகள்தான்.
    தொலைந்ததும் உண்மைதான்.ஒரு துண்டுக் கடிதத்தில் ஆயிரம் நினைவுகளைத் தூண்டும் விஷயங்கள்.

    ReplyDelete
  45. அட த(ட)ம்பி நக்கீரா....கவிதைல இரண்டு தப்பு.முதல் பந்தியே சரில்ல.சரி அடுத்த கவிதைல திருத்திக்கிறேன்.அதுக்கு ஏத்த மாதிரி பரிசு தந்தீங்கன்னா போதும்.

    நக்கீரரே..."தலைத் தடவி "ன்னு வராதுன்னு நினைக்கிறேன்.யாராவது இந்தச் சந்தேகத்தித் தீர்த்து வையுங்க தயவு செய்து.கார்த்திகிட்டயும் கேட்டுப் பாருங்க.தப்புன்னா எனக்கும் சொல்லுங்க.

    தொலைபேசியைஅத்தான் பேசின்னு மட்டும் சொல்லியிருக்கேன்.கண்டு பிடிச்சிட்டீங்க.

    டம்பி...வந்தா என்னாச்சும் சொலறதுக்கின்னே வருவீங்கபோல !

    ***********************************

    ரிஷபன்...அதுவும் சில உறவுகளை ரொம்பக் காலம் காணாமலே இழந்துவிட்டேன்.அவர்களது கடிதங்களில் அவர்களது பாசம் இப்போ இன்னும் மனசைக் கனக்க வைக்கிறது.

    ***********************************

    நன்றி செண்பகம்.முதன் முதலாக என் பக்கம்.இனி அடிக்கடி கண்டுகொள்வோம்.

    ***********************************

    வாங்க அம்மிணி...இந்தத் தூரங்கள்தான் உறவுகளை இன்னும் நினைக்க வைக்கிறது.

    ***********************************

    கண்ணகி...அழகான வார்த்தை சொன்னீர்கள்.கடிதம் = புதையல்.

    ***********************************

    தமிழரசி...நன்றி தோழி.அநேகமாக இந்தக் கவிதை எல்லோரையுமே நினைவுகளால் நிறைத்த்திருக்கும்.

    ***********************************

    சத்திரியா...நன்றி.பழைய கடிதங்கள் கண்டபோது வந்த வரிகள்தான் இவைகள்.இனி கடிதம் எழுதும் சந்தர்ப்பங்கள் இல்லையென்றே நினைக்கிறேன்.

    போனவாரம் கூட அப்பா ஒரு பத்திரம் அனுப்பியிருந்தார்.ஆனால் அதில் ஒரு துண்டுச் செய்திகூட இல்லை.
    தொலைபேசியில்தான் விஷயத்தைச் சொல்கிறார்.இழந்தேவிட்டோம்.

    ***********************************

    ஸ்ரீராம்...போன் பில்கூட தபால்காரர் கொண்டு வந்து தர வாறதில்லையா ?

    படத்தில இருக்கிறது அப்பாவின் பழைய கடிதங்கள்.

    ***********************************

    நன்றி வாங்க கும்மாச்சி.எங்கள் குடும்பத்தில் எப்போதுமே யாரோ ஒருவர் தூரவே இருந்துகொண்டு இருப்போம்.அதனால் கடிதங்களின் நெருக்கம் அதிகம்.அதை இழந்ததின் வருத்தமும் அதிகம்.

    ReplyDelete
  46. மாட்டுவண்டிகளின் பருண்மையில் நெகிழ்ந்த மண்தடம் போல மனம் அப்பாவின் கையெழுத்தைப் பற்றிக் கொண்டு நினைவுகளைப் பிரட்டிப் போடுகிறது...

    இதுதான் நான் என் பதிவில் சொல்ல விழைந்தது. இங்கு கவிதை வடிவில் கண்டு மகிழ்கிறேன்! வாழ்த்துக்கள் ஹேமா!

    ReplyDelete
  47. அழகா சொன்னீங்க.. குண்டு, ஒல்லி, கோழிக்கிண்டல் என விதவிதமான கையெழுத்துக்கள் மின்னஞ்சலிலும், எஸ்எம்எஸ் லும் எப்படி இருக்கும்.

    ReplyDelete
  48. ம்...பத்திரமாக வைத்திருக்கிறேன் எங்கப்பா எனக்கு எழுதிய கடிதங்களையும்...ஞாபகப்படுத்திவிட்டீர்கள்...ஊருக்கு போகணும்...

    ReplyDelete