Sunday, February 14, 2010

2010 காதலர் தினத்தில்...

இந்தக் காதலர் தினத்திலும்
பனிப்போருக்குள் குளிர் தணிய
வெப்பமூட்டியபடி
தனித்த தீவுகளில்தான் நாம்.

திடீரென உன் வாசம்
குளிர்ந்த காற்று
சுமந்து வந்திருக்கிறது.

தற்சமயம் நான் கூட
உன் அறையில்
உன் மடியில் இருக்கலாம்.
கதவுடைத்து
என்னைத் தொடும் காற்று
உன்னைத் தொட்ட காற்றாயும்
இருக்கலாம்.

பொழுது கழிய அலுவல்கள் ஆயிரம்.
ஆனாலும்
தூக்கத்திலும்
என் நினைவுகளோடு
நகரும் உன் நிமிடங்கள் போலவே
என்னுடைய நொடிகளும்.

திகதியிடப்படாத எல்லையில்லா
பாவிப்பின் பெறுமதியோடு
தேங்கிக் கிடக்கிறது
உனக்கான அன்பும்
முத்த முத்துக்களும்.
சீக்கிரம் வா
திணறும் பாரம் இறக்கு.

ஓ...
உன்னை எண்ணிய இரவும்
துயில் கலைந்து
விடியலுக்கு
காதலர்தின வாழ்த்துச் சொல்லி
முத்தாடுகிறது.

நான் இன்னும் உன் அணைப்பில்தான்.
கொஞ்சம் விடேன் என்னை.
இனியேனும்
கொஞ்சம் தூங்கலாம் நான் !!!

ஹேமா(சுவிஸ்)

60 comments:

  1. HAPPY VALENTINE"S DAY!
    அருமையான கவிதை.

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரிகளிலும் அழகு காதல்.......

    ReplyDelete
  3. க்கதலர் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. இந்த கவிதையில் மொழி ஆள்கை தேர்ந்த படைப்பாளிகளுக்கு உரிய லாவகத்துடன்...

    ReplyDelete
  5. ஹேமா காதலர் தின வாழ்த்துக்கள் ...தூங்க கூட விடலையா ...ஹிஹிஹி... நல்லா இருக்கு ஹேமா

    ReplyDelete
  6. அழியாத காதலுக்கு அருமையான வரிகளால் அர்ச்சனை

    ReplyDelete
  7. //தூக்கத்திலும் என் நினைவுகளோடு நகரும் உன் நிமிடங்கள் போலவே என்னுடைய நொடிகளும்//
    மிகவும் ரசிக்க வைத்த வரிகள்.

    மன்னியுங்கள் ஹேமா! வசந்த் அவர்களுக்கும் பின்னூட்டம் உங்கள் பதிவிலேயே எழுதுகிறேன்.
    வசந்த், என்னிடம் gmail account இல்லை. அதனால் உங்கள் 'காதல் காதல் சாதல்' இந்த கவிதைக்கு உங்கள் பதிவிலேயே கருத்து சொல்ல வந்து, பின் முடியாமல் போனது. அதனால் இதோ, இந்த பதிவிலேயே:
    ஒவ்வொரு வரியும் காதல் சொல்கிறது. அழகான, அருமையான கவிதை!

    ReplyDelete
  8. காதல் கொஞ்சும் கவிதை.அழகு.

    ReplyDelete
  9. எனக்கு ஒரு ஏக்கம் உண்டு. இம்மாதிரி கவிதைகள் எழுத முடியவில்லையே என்று. கவிதை அழகு. காதலை சொல்லும் விதமோ அதை விட அழகு.

    ReplyDelete
  10. ஒவ்வொரு வரியிலும் காதல் காதல் ..

    காதல் மெல்ல பயணிக்கிறது நம் உணர்வுகளில் ...

    ReplyDelete
  11. எல்லாம் இன்றைக்கு காதல்தாம்..:))

    ReplyDelete
  12. அழகான கவிதை.
    காதலர்தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நல்லா தூங்குங்க அம்மிணி.

    ReplyDelete
  14. ///நான் இன்னும் உன் அணைப்பில்தான்.
    கொஞ்சம் விடேன் என்னை.
    இனியேனும்
    கொஞ்சம் தூங்கலாம் நான் !!!///

    வாழ்த்துக்கள்
    அருமை ஹேமா...
    நானும் இன்னும் உன்
    கவிதையின் அணைப்பில் தான்........

    ReplyDelete
  15. காதலில் தோற்றவர்களுக்கே காதலர் தினம் சுகமான வலி

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  16. ரொம்ப நல்லாருக்குடா ஹேமா!

    ReplyDelete
  17. பிரிவின்வலி,(வலி போன்ற சுகமா?) காதலின் நம்பிக்கை கலந்த கவிதை.
    தனித்த தீவுகளில் பரஸ்பர நினைவில் நாம் என்ற வரிகளில் பிரிவையும் சுகமான சோகமாக்கும் வரிகள்.

    "என் நினைவுகளோடு
    நகரும் உன் நிமிடங்கள் போலவே
    என்னுடைய நொடிகளும்"

    என்ற வரிகளில் காதலின் நம்பிக்கை. இனிய காதல் கவிதை ஹேமா.

    ReplyDelete
  18. திகதியிடப்படாத எல்லையில்லா
    பாவிப்பின் பெறுமதியோடு
    தேங்கிக் கிடக்கிறது
    உனக்கான அன்பும்
    முத்த முத்துக்களும்
    சீக்கிரம் வா
    திணறும் பாரம் இறக்கு.

    ஓ....

    காதல் வலியை சுமந்து நிக்கும்
    அழகான கவிதை வரிகள்.காதலில்
    தோற்றவர்க்கெல்லாம் காதலர் தினம்
    சுகமான வலி தான். வாழ்த்துக்கள் ஹேமா. நாணயம் பாடலும் நன்றாக இருக்கிறது*****

    ReplyDelete
  19. கவிதை நன்று நன்றியம்மா!!

    என் அன்பான அன்பர்தின வாழ்த்துகள்

    ReplyDelete
  20. 2010 காதலர் தினத்தில் பரிமாறப்பட்ட வேலன்டைன் கிஸ்ஸஸ் அட அட நல்லாருக்கே ஹேம்ஸ்...!

    ReplyDelete
  21. //திடீரென உன் வாசம்
    குளிர்ந்த காற்று
    சுமந்து வந்திருக்கிறது.
    //

    இருக்குற மைனஸ் குளிர் பத்தாதுன்னு இது வேறயா?

    ReplyDelete
  22. //திகதியிடப்படாத எல்லையில்லா
    பாவிப்பின் பெறுமதியோடு
    தேங்கிக் கிடக்கிறது
    உனக்கான அன்பும்
    முத்த முத்துக்களும்.
    சீக்கிரம் வா
    திணறும் பாரம் இறக்கு.
    //

    அம்புட்டு வெயிட்டாவா இருக்கு?

    ReplyDelete
  23. //ஓ...
    உன்னை எண்ணிய இரவும்
    துயில் கலைந்து
    விடியலுக்கு
    காதலர்தின வாழ்த்துச் சொல்லி
    முத்தாடுகிறது.
    //

    பின்ன...

    ReplyDelete
  24. நான் இன்னும் உன் அணைப்பில்தான்.
    கொஞ்சம் விடேன் என்னை.
    இனியேனும்
    கொஞ்சம் தூங்கலாம் நான் !!!
    //

    பொய் பொய் 24/7 தூங்குற ஒரே ஆள் நீங்கதான் எனக்கு தெரியும்...

    ReplyDelete
  25. meenakshi said...
    //தூக்கத்திலும் என் நினைவுகளோடு நகரும் உன் நிமிடங்கள் போலவே என்னுடைய நொடிகளும்//
    மிகவும் ரசிக்க வைத்த வரிகள்.

    மன்னியுங்கள் ஹேமா! வசந்த் அவர்களுக்கும் பின்னூட்டம் உங்கள் பதிவிலேயே எழுதுகிறேன்.
    வசந்த், என்னிடம் gmail account இல்லை. அதனால் உங்கள் 'காதல் காதல் சாதல்' இந்த கவிதைக்கு உங்கள் பதிவிலேயே கருத்து சொல்ல வந்து, பின் முடியாமல் போனது. அதனால் இதோ, இந்த பதிவிலேயே:
    ஒவ்வொரு வரியும் காதல் சொல்கிறது. அழகான, அருமையான கவிதை!//

    மீனாட்சி மேடம் நீங்க என்ட ப்ளாக்ல கொமெண்ட் போட்டாலும் ஹேமாவிண்ட ப்ளாக்ல கொமெண்ட்
    போட்டாலும் ரெண்டும் ஒண்ணுதாம்...

    :))))))

    நன்றி மீனாட்சி மேடம் அது அனானி தொல்லையினால கூகுள் அக்கவுண்ட் மட்டும் கமெண்ட் போடறமாதிரி பண்ணிருக்கேன்... பரவாயில்ல நீங்க ஹேமா ப்ளாக்லயே கமெண்ட் போடலாம் அவ ஒண்ணும் சொல்லமாட்டாளாம்...

    ReplyDelete
  26. கலா பாட்டீய்ய்ய்ய்ய்ய்

    என்னாச்சு ரெண்டுவரில கொமெண்ட் ஒரு கண்ணுல வெண்ணெய் ஒருகண்ணுல சுண்ணாம்பு நோ நோ எப்பவும்போல கொமெண்ட் போடுங்க

    ஹேமாமேல நன்றி சொல்லி கமெண்ட் போடலின்னு கோபமா நன்றி சொல்லித்தான் உங்க கொமெண்ட் எதிர்பார்க்கணுமா என்ன? மூன்றாவது விழி நீங்களே இப்படி ஹேமாவோட கவிதைக்கு ஒரு வரி கமெண்ட் போட்டா எப்பிடி அவ உங்க கமெண்ட் படிக்கிறாளா எனக்கு தெரியாது நான் படிக்கிறேன் வேணும்னா நான் நன்றி சொல்லறேனே...சரியா பாட்டீய்ய்...

    இவன்
    எப்பவும் உங்க மேல பாசமுள்ள உறவுகளாகிய
    நாங்கதான்...

    ReplyDelete
  27. The Best kavithai... Hema ... keep it up :) really I mean it...

    ReplyDelete
  28. நன்றாக உறங்கி எழ எல்லாம் வல்ல என் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.. கவிதையில் நீங்கள் வளர்கிறீர்கள்.. வாழ்த்துகள்

    ReplyDelete
  29. தமிழ்ப்பறவை அண்ணாவுக்கு என் முதல் நன்றி.நிறைவான அன்பும் சந்தோஷமும் அண்ணா.

    :::::::::::::::::::::::::::::::::::

    சித்ரா...முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றி.உங்களுக்கும் என் அன்பின் வாழ்த்து தோழி.

    :::::::::::::::::::::::::::::::::::

    அத்திரி அன்பு என்றும் தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்.அப்பிடியே கடையம் ஆனந்த் க்கும் சொல்லிடுங்க.

    :::::::::::::::::::::::::::::::::::

    நேசன்...இனிய காதலர்தின அன்பு வாழ்த்துக்கள்.உங்கள் பாராட்டு சந்தோஷமாயிருக்கு.நன்றி.

    :::::::::::::::::::::::::::::::::::

    தேனு..உங்களுக்கும் அன்பின் வாழ்த்து தோழி.தூங்க விடலையாவா?ம்க்கும் ...நான் தான் தூங்கவிடலைப்பா.

    :::::::::::::::::::::::::::::::::::

    அன்பு ரிஷபனுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

    :::::::::::::::::::::::::::::::::::

    வாங்க ராதாகிருஷ்ணன்.அன்பா ஒரு வார்த்தை அன்பான நாளிலயாச்சும் சொல்லலாமே !
    என் அன்பான வாழ்த்துகள்.

    :::::::::::::::::::::::::::::::::::

    மீனு...உங்க காதலர்தினம் எப்பிடி.
    சந்தோஷம்தானே !
    இனிய வாழ்த்து தோழி.

    வசந்து வாலுக்கு பின்னூட்டம் இங்கயா.அதுக்கென்ன பரவால்ல.
    அவருக்குத்தான் வால்கொஞ்சம் நீளமாயிட்டே போகுது.
    கவனிச்சீங்களா !

    :::::::::::::::::::::::::::::::::::

    மாதேவி....என்ன சமையல் காதலர் தினத்துக்கு ஸ்பெஷல்?
    வாழ்த்துக்கள் தோழி.

    :::::::::::::::::::::::::::::::::::

    நன்றி தமிழ்.இப்பிடி ஒரு ஏக்கமா !இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.
    உங்க பதிவு பாத்திட்டு நானும் இப்பிடித்தான் புலம்பிட்டு வருவேன்.
    அன்பின் வாழ்த்துக்கள் தமிழ்.

    :::::::::::::::::::::::::::::::::::

    வாங்க ஸ்டார்ஜன்.காதல் பயணிச்சிட்டே இருக்குது.அதுதான் சங்கடமே.உங்க காதல் எப்பிடி !
    அன்பு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. வாங்க ஷங்கர்.அன்பின் வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
    என்றுமே அன்பின் தினம்தான்.

    :::::::::::::::::::::::::::::::::::

    நன்றி அம்பிகா.முதல் வருகை அன்போடு அன்பின் நாளில்.சந்தோஷம் தோழி.

    :::::::::::::::::::::::::::::::::::

    ஜெரி...எங்க எப்பிடி !நான் தூங்கினதை எப்பிடிக் கண்டு பிடிச்சீங்க.இதுதான் அன்போ !

    :::::::::::::::::::::::::::::::::::

    நன்றி றமேஸ்.கொஞ்சம் விடுங்க கவிதையும் தூங்கட்டும் கொஞ்சம்.
    என்னைப்போலவே பாவம் அதுவும்.
    அன்பின் வாழ்த்து நட்பே.

    ::::::::::::::::::::::::::::::::::

    விஜய்...என்னாச்சு.உங்களில் ஒரு சோர்வு.சுகம்தானே !சந்தோஷமாயிருப்போம்.அன்பின் கைகளைத் தாங்க.
    அன்பு வாழ்த்துக்கள் சகோதரா.

    :::::::::::::::::::::::::::::::::::

    அண்ணா நிறைவாய் சந்தோஷமாயிருக்கிறேன் உங்களால்.அன்பு வாழ்த்துக்கள்.
    சித்தப்பாவுக்கும் சொல்லுங்க.

    :::::::::::::::::::::::::::::::::::

    ஸ்ரீராம்...காதல்கூட ஒரு நம்பிக்கைதான்.அன்பு காட்டும் யாரையும் எதையும் காதலிப்போம்.
    அது விட்டு விலகும்போதுதான் அந்த அவதியை சொல்லிப் புரிய வைக்க முடியாமல் போகிறது.
    அன்பான வாழ்த்து ஸ்ரீராம்.

    :::::::::::::::::::::::::::::::::::

    ஜெயா...தோழி அன்பின் கை தாங்களேன்.இறுக்கிக் கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள் ஜெயாக்குட்டி.

    :::::::::::::::::::::::::::::::::::

    கலாம்மா....என்ன நடந்தது.ஏதோ சரில்லன்னு மட்டும் புரிகிறது.என்னை விட உங்களைத் தேடுபவர்கள் இங்கு அதிகம்.அதுவும்"வீணாய்ப்போன..."
    கவிதையில் உங்கள் கருத்துக்காக ஒரு தவமே நடந்தது.காணோமே.
    எங்கே நீங்கள்?வந்து பார்த்துப் போனீங்க.கண்டேன்.என்ன ?ஏதாவது தவறென்றால் திருந்த திருத்த முயற்சிப்பேன் தோழி.

    வேலைப்பளு அதிகம்.அலுப்பும் அதிகம்.அதனால் சிலசமயம் பதில் பின்னூட்டங்கள் குறைத்து நண்பர்களில் தளம் போய் வருவேன்.

    என் கைகளைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும்.
    உங்கள் அணைப்பு எனக்குக் கிடைத்த அன்பின் சக்தி.அன்பின் வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும்.

    அரசு,வேல்கண்ணன்,சத்ரியனும் இப்போவெல்லாம் வருவது குறைவு.ஏன் ?

    ReplyDelete
  31. மீனாட்சி மேடம் நீங்க என்ட ப்ளாக்ல
    கொமெண்ட் போட்டாலும்
    ஹேமாவிண்ட ப்ளாக்ல கொமெண்ட்
    போட்டாலும் ரெண்டும் ஒண்ணுதாம்...\\\\\

    வசந்த்து சார் அதைத்தான் நேற்று என் மனசு
    சொல்லிடிச்சு{என் மனம் பளிங்கி போன்றது
    யார் முகமும்
    பார்க்கலாம்}

    அதனால் உங்கள் கவிதைக்கு கொஞ்சம்
    அதிகம் ஹேமாவுக்கு குறைவு!


    \\\\\அவ ஒண்ணும் சொல்லமாட்டாளாம்...\\\\\

    ReplyDelete
  32. கவிதையை விட....அந்தப் பாடல்
    இருவருக்குள்ளும் இருக்கும் காதலை
    வெளியிடும் அழகுவரிகள்..

    என்ன செய்வது.!!
    பாட்டையாவது கேட்டு இருவரின்
    {நடக்கமுடியாத ஒன்றை}மனம்
    சாந்தியடையட்டும்! அடையுமா!!??

    அதிலும் பெண்ணுக்கு இருப்பதுபோலவும்,
    இல்லாதது போலவும்{சில சமயங்களில்}
    காதல் தோன்றினாலும்,,,,,

    காதலை விட.
    ..
    ஆனாலும் அன்பின் வீரத்தை நேசிக்கும்!!

    பாதியில் காணாமல் போனேன்.....

    அடையாளம் இல்லா ஒன்றைத்
    தந்தாய் நெஞ்சின் ஓரம்...

    அப் பெண்ணுக்கே புரியாமல்.....
    இன்னும் புதிராய் இருக்கும் அது???

    காதலா?காட்டும் அன்பா??எதிலும் கையை
    இணைக்கும் {கொடுக்கும் }பாங்கா???
    கோபத்திலும் வரும் குளிர்சியா????
    “விடு” என்றாலும் இறுக்கப் பற்றும் நேசத்திலா?????

    சொல்லிக் கொண்டே போகலாம்.....அந்த மங்கையின்....!!!??

    ReplyDelete
  33. \\\வேலைப்பளு அதிகம்.அலுப்பும்
    அதிகம்.அதனால் சிலசமயம்
    பதில் பின்னூட்டங்கள் குறைத்து
    நண்பர்களில் தளம் போய் வருவேன்\\\\


    ஏன் தோழி இது உங்களுக்கு மட்டும் தானா!!?
    எங்களுக்கு இருக்கக் கூடாதென்று யார்
    சொன்னார்!!??

    ReplyDelete
  34. \\\எனக்கு தெரியாது நான் படிக்கிறேன்
    வேணும்னா நான் நன்றி சொல்லறேனே..
    சரியா பாட்டீய்ய்...\\\\\\

    இந்த நல்ல மனசுக்காகத்தான் “அவக” சுற்றிச்
    சுற்றி வாறாகளோ!!


    இதைத்தான் சும்மா இருந்த சங்கை
    ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பார்கள்

    போட்டு வாங்குகின்றது இதுதானோ!!
    இப்ப ...போதுமா?
    நான் சிவனே என்று இரண்டு வாக்கியம்
    எழுதினால் .....அதற்கு இவ்வளவு
    புகழ் மாலை. {க்கு} நன்றி.
    {ஆமா எவ்வளவு பணம் கொடுத்து
    வாங்கிய மாலை!!}

    வசந்த் நன்றி,நன்றி நன்றி.

    ReplyDelete
  35. கவி நடையில் தேர்ச்சி தெரிகிறது. இன்னும் சிறப்படைய வாழ்த்துக்கள்! காற்றும் கடலுமாய் பெயர் ​தெரியாத பூவுமாய் சந்தோஷமாக!
    காதலர்தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. //கலாம்மா....என்னை விட உங்களைத் தேடுபவர்கள் இங்கு அதிகம்.அதுவும்"வீணாய்ப்போன..."
    கவிதையில் உங்கள் கருத்துக்காக ஒரு தவமே நடந்தது.காணோமே//

    தவம் இருக்கிறாங்களா?? யாரு விசுவாமித்ரரா, அர்ஜுனனா??

    ReplyDelete
  37. வலு நல்லா இருந்தது கவிதை.. பாராட்டுக்கள்.. கட்டாயமா நீங்க யாரையோ லவ் பண்றீங்க எண்டது மட்டும் விளங்குது.. பின்னுங்க.. ஹிஹி..:)

    ReplyDelete
  38. வசந்து....நல்லாவே நேரம் கிடைச்சிருக்குப் போல்.கும்மி பலமா இருக்கு.ம்க்கும் நீங்கதான் காதலர்தின முத்தத்தை அழகா ரசிச்ச மாதிரி...!

    மைனஸ் - 4 ல குளிர்ன்னும் நான் தூங்குற ரகசியம் சொன்னதும் தப்பாப் போச்சுடா.பப்ளிக்ல உடைக்கிறான்.
    இருக்கட்டும் இருக்கட்டும்.

    :::::::::::::::::::::::::::::::::::

    அஷோக் ...நிறைவான நன்றி உங்களுக்கு.நானா.....தூங்கறதா !அன்பின் வாழ்த்துக்கள் அன்பு அஷோக்குக்கு.

    :::::::::::::::::::::::::::::::::::

    கலா...அப்போ கோவம் இருந்திருக்கு.சரி சரி.இப்பிடிக் கோவப்படாதீங்க.சில விஷயங்களைக் கண்ணடியாக் காட்டுறீங்க.அதெப்பிடி !

    வசந்து வாயைக் குடுத்தே....!

    :::::::::::::::::::::::::::::::::::

    ஜே...நன்றியும் சந்தோஷமும் உங்க அன்புக்கு.பெயர் தெரியாத பூவுக்கும் வாசம் இருக்கு.மறந்திடாதீங்க !உங்களுக்கும் அன்பான காதலின் வாழ்த்துக்கள்.

    கலாம்மாவை காணலன்னு தவம் இருந்தவர் ஜெகானந்த சுவாமி அவர்கள்தான்.தெரியாதோ !

    முன்னைய கவிதையில் ஏதோ தப்பு இருக்கு சொல்லிட்டு தப்பைச் சொல்லாமலே போய்ட்டீங்க.
    என்னன்னு சொல்லவேண்டாமோ ஜே !

    :::::::::::::::::::::::::::::::::::

    நன்றி அன்புத்தோழன்.பெயரே ஓர் அழகுதான்.அன்பு வரவுக்கு சந்தோஷம் தோழரே.

    :::::::::::::::::::::::::::::::::::

    புல்லட் வாங்கோ.ம்ம்ம்...என்ர ரகசியம் கண்டுபிடிக்கிறியளோ.
    சொல்லமாட்டேனே !

    :::::::::::::::::::::::::::::::::::

    டாக்டருக்கும் கிண்டல் பாருங்கோ.
    காதலர்தினக் கவிதையோவாம் !
    அன்புக்கு நன்றி டாக்டர்.

    ReplyDelete
  39. \\\\தவம் இருக்கிறாங்களா?? யாரு
    விசுவாமித்ரரா, அர்ஜுனனா??\\\\\\

    \\\\கலாம்மாவை காணலன்னு
    தவம் இருந்தவர் ஜெகானந்த
    சுவாமி அவர்கள்தான்.தெரியாதோ !\\\\

    கலோ..கலோ... இருவருக்கும்...!

    இது நவயுக அல்லிராணி.அதனால்...
    அந்த அஈஜுனர் கூட நெருங்க முடியாதுங்கோஓஓஓ..

    “இந்த” ஜெகத்தை ஆளும் நாதனைத் தவிர...
    எந்த சாமியோ,ஆசாமியோ நுழைய..முடியுமா???

    இது மின்சார வலையம்...
    உத்தரவின்றி உட்பிரவேசித்தால்......

    ReplyDelete
  40. தூரங்களும் துக்கங்களும் இந்த காதலில் மட்டுமே சுகம்...அதை அழகாய் பிரதிபலிக்கும் கண்ணாடியாய் இந்த கவிதை உள்ளத்தை காட்டிய உருவகமாய் ஜொலிக்கிறது ஹேமா....

    ReplyDelete
  41. ரொம்ப நல்லா இருக்கு. ஆரம்ப வரிகளே அருமை.

    ReplyDelete
  42. கவிதை அருமை....

    ReplyDelete
  43. சத்ரியன் இப்போவெல்லாம் வருவது குறைவு.ஏன் ?

    ஹேமா,

    அதற்கான சரியான காரணத்தை நீயே எழுதியிருக்கிறாய். இப்படி...

    //வேலைப்பளு அதிகம்.அலுப்பும் அதிகம்.அதனால் சிலசமயம் பின்னூட்டங்கள் குறைத்து நண்பர்களில் தளம் போய் வருவேன்.//

    இப்ப புரிந்திருக்குமே....!

    ReplyDelete
  44. ஹேமா,

    எங்கடா சத்ரியன் நம்ம பக்கமே காணோமேன்னு தேட வேண்டிய அவசியமே இல்லை. அதுவும் குறிப்பா கலாவிடம் கேக்கவே வேணாம். ஏன்னா...?

    //நான் இன்னும் உன் அணைப்பில்தான்.
    கொஞ்சம் விடேன் என்னை.
    இனியேனும்
    கொஞ்சம் தூங்கலாம் நான் !!!//

    இது போன்ற வரிகளில்
    பின்னூட்டத்திற்கு பதிலாக கவிதைகளே கைப்பிடித்து அழைத்துப் போகையில்....தடுமாறி விழுந்து

    கவிதைக்குள் புதைந்துக் கொண்டிருக்கிறேன்.

    ************
    வாங்க கலா ஆண்ட்டி வம்பளக்க ஆள் தேவைப்படுது.

    ReplyDelete
  45. அய்யோடா ! மறந்தே போயிட்டேன்.

    அன்பர்கள் (காதலர் என்னும் சொல்லுக்கு மாற்றாக) தின வாழ்த்துகள் ஹேமா.

    ReplyDelete
  46. எங்கடா சத்ரியன் நம்ம பக்கமே
    காணோமேன்னு தேட வேண்டிய
    அவசியமே இல்லை. அதுவும் குறிப்பா


    \\\ கலாவிடம் கேக்கவே வேணாம்.
    ஏன்னா...?\\\

    ஏய்...ஏஏய்ய்ய்ய.....சத்ரியா...

    பாவம் நீங்க பண்ணிணதெல்லாம்..
    சொல்லக் கூடாது{காட்டிக் கொடுக்கக்}
    என்று நான் ஹேமாவிடம் மூச்சுக் காட்டாமல்
    எதுவும் தெரியாததுபோல்...இருக்கின்றேன்!!
    சொல்லு,சொல்லு என்று வலிய வம்புக்கு
    வந்த பின் விடுவேனாடா....


    ஹேமா
    {இங்கு 14,15,16 ஆகிய மூன்று நாட்களும்}
    அரசாங்க விடுமுறை{சீனப் புத்தாண்டு}

    மூன்று நாட்களும் செம கொண்டாட்டம்
    {அவர்களுக்கு சத்ரியன்,அரசு}கடற்கரைகளும்,
    பூங்காக்களும் ...ஐயோ..பாவம் பட்ட அவஸ்த்தை
    இருக்கே சொல்ல முடியாது{கேட்டவைகளையும்
    ,பார்த்தவைகளியும்}
    அது யாருகிட்ட சொல்லிஅழும்!!

    நானும் வரலாமா?என்று கேட்டேன்..
    முடியாது,முடியாது என்றுவிட்டு
    போய்விட்டார்கள் ஹேமா!!

    ReplyDelete
  47. \\\வாங்க கலா ஆண்ட்டி வம்பளக்க
    ஆள் தேவைப்படுது.\\\\\

    வாய்யா..வா எனக்கு வேலையே இல்லை
    அதனால்தான் அதிகமாகப் பின்னோட்டம்
    இடுகிறேன் என்று சொல்லாமல் சொல்கிறாயா!?

    பின்னோட்டம் ......
    இதுக்கெல்லாம் கொஞ்சம் ‘அது’’ வேணுமய்யா..
    அது உள்ளவங்க நாங்க...ஏனய்யா இவ்வளவு
    பொறாமை....இல்லாட்டி இல்ல.. என்று ஒத்துக்
    கொள்ள வேண்டும்.
    இப்படி அலட்டிக்கலாமா??

    ReplyDelete
  48. காதல் வரிகளில் கலக்குது கவிதை தோழி சூப்பர்..

    ReplyDelete
  49. வாங்க தமிழரசி.சுகம்தானே.உங்கள் கவிதைகளின் உணர்வுகளில் ஓர் மயக்கம் எனக்கும்.நன்றி தோழி.
    அன்பின் தின வாழ்த்துக்கள்.

    ::::::::::::::::::::::::::::::::::

    வாங்க விக்னேஸ்வரி.கவிதையின் முதல் வரிகள் மனதின் உண்மை.அதுதான் அது அருமையாய் அமைந்துவிட்டதோ !
    அன்பின் வாழ்த்து தோழி.

    :::::::::::::::::::::::::::::::::::

    நன்றி தர்ஷினி.உங்களை என் பக்கம் காண்பது நிறைந்த சதோஷம்.
    அன்பின் வாழ்த்து தோழி.

    ReplyDelete
  50. வரணும் வரணும் (வாடான்னு சொல்லத்தான் வருது.சரி இப்போதைக்கு இருக்கட்டும்) ச...த்...ரி...யா.சுகமா கண்ணழகா.காதல் கலாட்டாவா.

    எப்பிடித்தான் பெஞ்சில ஏத்தினாலும் இப்பிடி அட்டகாசம் பண்ணிக்கிட்டு.
    ஊர் சுத்தறதுக்கும் வேலைப்பளுவுக்கும் வித்தியாசம் இல்லையா(டா).இத்தனை நாளுக்கு அப்புறம் வந்து கவிதைக்குள்ள புதையுறாரம்.

    நிறையக் கோவமா அன்போடதான் இருக்கேன்.அதான் கலா கல கலன்னு உடைச்சிடாளே.அப்புறம் என்ன !

    சாரல் செல்வம் எப்பிடியிருக்கிறாள் ?

    :::::::::::::::::::::::::::::::::::

    கலா..... கருப்புத் தங்கத்தைப் பிடிச்சுக் கொண்டு வந்து தந்துக்கு நன்றியடி தோழி.ஏனோ தொடர்ந்த உரிமையான நண்பர்கள் இல்லாமல் போகும்போது நிறைய வலியும் யோசனையும்.நான் என்ன எங்கு எப்படியான பிழை செய்திருக்கிறேன் என்று என்னையே தேடும் நிலையும் வந்துவிடுகிறது !

    கலா ரகசியம் சொன்னதே சொல்லிட்டு உன்னை விட்டுவிட்டு கண்ணழகன் யார் கூட ஊர் சுத்தினார்ன்னு சொல்லவேயில்லையே !

    :::::::::::::::::::::::::::::::::::

    நன்றி தோழி மல்லிக்கா.உங்கள் வரவும் கருத்தும் அன்போடு சந்தோஷமாயிருக்கிறது தோழி.

    ReplyDelete
  51. //ஹேமா
    {இங்கு 14,15,16 ஆகிய மூன்று நாட்களும்}
    அரசாங்க விடுமுறை{சீனப் புத்தாண்டு}

    மூன்று நாட்களும் செம கொண்டாட்டம்
    {அவர்களுக்கு சத்ரியன்,அரசு}கடற்கரைகளும்,
    பூங்காக்களும் ...ஐயோ..பாவம் பட்ட அவஸ்த்தை
    இருக்கே ..//

    கலா,

    எங்கே நிம்மதி நிம்மதியென்று தேடிப்பார்த்தோம்..... அது பொறுக்கலையா?

    சரி எப்படியோ நண்பர்களுடன்..... மிகவும் மகிழ்வுடன் கழிந்தன்.. அந்த நாட்கள்!

    ReplyDelete
  52. ஆமா கலா,

    அந்த விடுமுறை நாளில் நீங்க நிம்’மதி” தேடலியோ....?

    ReplyDelete
  53. //வரணும் வரணும் (வாடான்னு சொல்லத்தான் வருது.சரி இப்போதைக்கு இருக்கட்டும்) //

    ஹேமா,

    அதான் வாடான்னு சொல்லியாச்சே. அப்புறம் என்ன வருது வேற?

    //ச...த்...ரி...யா.//

    கோவத்துல பல்லை கடிச்சிக்கிட்டு கூப்பிடுறீங்க போல!

    //சுகமா கண்ணழகா.காதல் கலாட்டாவா.//

    இருக்கிறேன் ஆண்டாள்!

    //எப்பிடித்தான் பெஞ்சில ஏத்தினாலும் இப்பிடி அட்டகாசம் பண்ணிக்கிட்டு.//

    பழகிப்போச்சி.

    //ஊர் சுத்தறதுக்கும் வேலைப்பளுவுக்கும் வித்தியாசம் இல்லையா(டா).//

    ஆமாடா! வித்தியாசம் இருக்குது ”டா”!

    //இத்தனை நாளுக்கு அப்புறம் வந்து கவிதைக்குள்ள புதையுறாரம்.//

    நம்பனும்...புரியாதா”டா”?

    //நிறையக் கோவமா அன்போடதான் இருக்கேன்.//

    ஹே.....மா...ச்செல்லம்! அடிக்கிற கை தானே அணைக்கும்னு சொல்லியிருக்காங்க. அதனால கோவப்பட்டாலும் நான் வருத்தப்படல!


    //அதான் கலா கல கலன்னு உடைச்சிடாளே.அப்புறம் என்ன !//

    அந்த ஆண்ட்டி எப்பவும் இப்பிடித்தான். எதையாவது......!


    //சாரல் செல்வம் எப்பிடியிருக்கிறாள் ?//

    எப்பவும் உங்களை கேட்டுக்கிட்டே இருக்கிறாளாம். எப்போ வந்து பக்கப்போறீங்க?

    :::::::::::::::::::::::::::::::::::

    கலா..... கருப்புத் தங்கத்தைப் பிடிச்சுக் கொண்டு வந்து தந்துக்கு நன்றியடி தோழி.ஏனோ தொடர்ந்த உரிமையான நண்பர்கள் இல்லாமல் போகும்போது நிறைய வலியும் யோசனையும்.நான் என்ன எங்கு எப்படியான பிழை செய்திருக்கிறேன் என்று என்னையே தேடும் நிலையும் வந்துவிடுகிறது !

    //கலா ரகசியம் சொன்னதே சொல்லிட்டு உன்னை விட்டுவிட்டு கண்ணழகன் யார் கூட ஊர் சுத்தினார்ன்னு சொல்லவேயில்லையே !//


    நல்லா கிளப்பறாய்ங்க பீதிய!
    இந்த ஆட்டையிலிருந்து நான் ஜூட்! எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்பு!

    ReplyDelete
  54. //ஏனோ தொடர்ந்த உரிமையான நண்பர்கள் இல்லாமல் போகும்போது நிறைய வலியும் யோசனையும்.நான் என்ன எங்கு எப்படியான பிழை செய்திருக்கிறேன் என்று என்னையே தேடும் நிலையும் வந்துவிடுகிறது !//

    ஹேமா,

    வீண் கற்பனைகள் வேண்டாமே!

    நண்பர்கள் எப்போதும் நண்பர்களே. தவறு செய்தால் சுட்டிக்காட்டி மீட்டுக் கொள்ளலாம். கவலை வேண்டாம்.

    ReplyDelete
  55. மிக மிக அருமையான கவிதை....திரும்ப திரும்ப படிக்க சொல்லியது...

    ReplyDelete
  56. ம்ம்ம்ம்ம்.. Feeings கொஞ்சம் அதிகமாகவே தெரியுது. அருமையா இருக்குங்க

    ReplyDelete