Tuesday, January 26, 2010

ஏன் மாறினாள்...

இப்போ.....
அவள் முன்னைப்போலில்லை.
தேவைப்படுகிறது
எப்போதும் அவன் அருகாமை.
கை கோர்த்தபடி சேர்ந்து நடக்கிறாள்.
சிரிக்கிறாள் நிறையக் கதைக்கிறாள்.
மனம் குறுகுகிறேன்
வெறும் கையாலாகாதவனாய் எட்ட நின்றபடி.

கூப்பிடுமுன் எனையறிந்து
பட்டாம்பூச்சியாய் என் பக்கம் அமர்பவள்
இன்று என்னைத் திரும்பிப் பார்க்கவே
அரமணி நேரமாகிறது.
கள்ளி இப்போவெல்லாம்
முன்னைவிட அழகாயிருக்கிறாள்.
அவளைக் கைப்பிடித்த காலங்களில்
அவளால்தான் நான் அழகாயிருந்தேன்.

குளிக்கும் நீர்கூடப் பெருமையடிக்கும்.
கூந்தல் மலரும்
மரத்தில் இருந்ததைவிட மணம் வீசும்.
முகம் பார்க்கும் கண்ணாடியோ கர்வம் கொள்ளும்.
கொள்ளை அழகு இன்னும் மெருகேறி
நடையில்கூட ஒரு நளினம்.
ஆனால் என் இணக்கத்தை மட்டும்
சுனைப்பாய் நினைக்கிறாள்.

அவள் முன்னைப்போலில்லை இப்போ.
மென்மையின் தாயாய்
தெருவில் தடம் பதித்தால் சருகும் சப்திக்காது.
பின்னழகின் கூந்தல் நீளம்,
கீறிவிட்ட கண்ணும் ,மூக்கும்
குழிவிழும் கன்னமும்
செவ்விதழின் விரிப்பில்
அசந்த சிலைகூட வரம் கேட்கும் உயிர்பெற.
இவளால் நான் கொண்ட இறுமாப்பெத்தனை.

என்னவள் இல்லை இப்போ முன்னைப்போல.
இதோ...இதோ வருகிறான்
காவற்காரனாய் வாசலில் நான்
எனக்கொரு வணக்கம் சொல்லக்கூட மனமில்லாமல்
சொல்லி நுழைகிறான் அவள் அறைக்குள்.
மெல்ல அணைக்கின்றான் ஏதோ கொடுக்கிறான்
அன்புநிறை நன்றி சொல்லி முத்தமிடுகின்றாள்.
கரம் தொட்டுக் கட்டியணைத்துக்
கூட்டிப்போகிறான் என் கண்முன்னாலேயே.

மனம் கொதித்து உலையாகி விம்ம
எப்படி இருந்த என்னவள்
ஏன் மாறினாள் இப்படி
வரட்டும் அவள் இன்று
"என்னை விட்டுப் போய்விடுவாயா அன்பே"
கட்டாயமாய்க் கேட்டுவிடுவேன்.
நினைக்கையிலேயே
நெஞ்சு வெடிக்காதா கடவுளே !

அவளுக்கு வயது எழுபத்துமூன்று
வந்தணைப்பவர் அவளது வைத்தியர் !!!

[2003 ல் ஒரு சுவிஸ் தம்பதியரைப் பார்த்த அனுபவம்]
ஹேமா(சுவிஸ்)

59 comments:

  1. me the First

    ரொம்ப பிடிச்சிருக்கு ஹேமா

    வயதானபின் ஒருவருக்கொருவர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத காதல்

    மிக அழகு

    விஜய்

    ReplyDelete
  2. Nice picture and a kavithai for it.Well done Hema.

    ReplyDelete
  3. ஹேமா யாழ்பாணம். ஹேமா சுவிஸ் இரண்டுக்கும் உள்ளே உள்ள இடைவெளியில் இத்தனை அழுத்தம் உள்ளே இருக்குமா? அதுவே தான் இறுதி வரையிலும் தொடருமோ?

    எழுதும் படைப்பே இத்தனை ஆழம் என்றால்-வாழ்க்கையின் சராசரி பார்வையின் வித்யாசங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?

    ReplyDelete
  4. அழகான கவிதை, அழகான படம் ஹேமா

    ReplyDelete
  5. ஆங்.. ரைடுங்க..ஹேமா :) இரண்டுவாட்டி படிச்சேங்க

    ReplyDelete
  6. //கொள்ளை அழகு இன்னும் மெருகேறி
    நடையில்கூட ஒரு நளினம்.
    ஆனால் என் இணக்கத்தை மட்டும்
    சுனைப்பாய் நினைக்கிறாள்.//

    மனதை தொடும் வரிகள்...

    ReplyDelete
  7. ஹேமா,

    படம் சிறப்பான தேர்வு.

    பதிவும் அருமை.

    ReplyDelete
  8. //மனம் கொதித்து உலையாகி விம்ம
    எப்படி இருந்த என்னவள்
    ஏன் மாறினாள் இப்படி
    வரட்டும் அவள் இன்று
    "என்னை விட்டுப் போய்விடுவாயா அன்பே"
    கட்டாயமாய்க் கேட்டுவிடுவேன்.
    நினைக்கையிலேயே
    நெஞ்சு வெடிக்காதா கடவுளே !//

    எத்தனை வயதானாலும் இந்த பொறாமை மட்டும் போகாது உண்மைக் காதலில்.... :))

    ReplyDelete
  9. நெகிழவெச்சிட்டீங்க ஹேமா, சொல்ல வார்த்தையில்லை

    ReplyDelete
  10. அடிப்பாவி...

    கலா வரட்டும் அப்புறமா வாறேன்...!

    ReplyDelete
  11. காதலுக்கு வ்யது தடையே இல்லை

    காதல் எந்த வயதிலும் வருமே ...

    காதல் ஒரு மொழி உணர்வு ...

    அருமையான கவிதை ஹேமா ..

    ReplyDelete
  12. அழகாக உணர்வுகளைப் படம்பிடித்த காவியம்.

    ReplyDelete
  13. //ஆனால் என் இணக்கத்தை மட்டும்
    சுனைப்பாய் நினைக்கிறாள்.///
    என்ன ஹேமா... அழுதிட்னேன்.. முடியல. என்னோட சின்னம்மா வருத்தத்தில் அவதிப்பட்டதைப் பார்த்திட்டு என் அம்மாவைக் கட்டிப்பித்து அழுத போது என்னைச் சமாதான்படுத்த கொம்பியுட்டருக்கு போ எண்டு அம்மா சொன்னதும் உங்க கவிதை சிற்றிவேஷனுக்கு ஏற்றதாய் ஆயிற்று..
    ம்ம்
    அருமை பிடித்த வரிகள் எல்லாமே...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. மனம் கொதித்து உலையாகி விம்ம
    எப்படி இருந்த என்னவள்
    ஏன் மாறினாள் இப்படி
    வரட்டும் அவள் இன்று
    "என்னை விட்டுப் போய்விடுவாயா அன்பே"
    கட்டாயமாய்க் கேட்டுவிடுவேன்.
    நினைக்கையிலேயே
    நெஞ்சு வெடிக்காதா கடவுளே !
    ..........பல உணர்ச்சிகள் இந்த வரிகளில் பொங்கி வருவதை, நன்றாக வடிவம் கொடுத்து எழுதி உள்ளீர்கள்.

    ReplyDelete
  15. வயோதிகக் காதல்.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான காதல். எனது கதிரவன் சொன்ன காதல் கதைகள் எமிலி நிச்சயம் படித்திருப்பீர்கள்.
    அருமையான கவிதை ஹேமா.

    ReplyDelete
  16. நல்ல அனுபவம்...:))

    ReplyDelete
  17. மனம் கொதித்து உலையாகி விம்ம எப்படி இருந்த என்னவள் ஏன் மாறினாள் இப்படி வரட்டும் அவள் இன்று என்னை விட்டுப் போய் விடுவாயா அன்பே” கட்டாயமாய்க் கேட்டு விடுவேன். நினைக்கையிலேயே நெஞ்சு வெடிக்காதா கடவுளே! என்ன தான் வயதானாலும் அன்புக்கு ஏது முதுமை? நானும் இங்கே வயதான ஜேர்மன் தம்பதியரை பார்த்து நிறய தடவை பிரமித்து போகிறேன் ஹேமா... எங்கள் ஊரில் எல்லாம் வயதானாலே தனித் தனியாக போய் ஏனோ தானோ என்று ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் இன்றி வேரு யாரோ போல இருப்பார்கள். ஆனால் எழுபத்துமூன்று வயதான மனைவி மேல் இந்த கணவன் வைத்து இருக்கும் காதல் சொல்ல எனக்கு வார்த்தையே வரவில்லை.... அது தான் நீங்கள் உங்கள் கவி வரியில் அற்புதமாக சொல்லிட்டிங்க. கவிதையும் அழகு, கவிதைக்கு ஏற்ப பாசத்தை வெளிக்காட்டும் தம்பதிகளின் படமும் அருமை வாழ்த்துக்கள் ஹேமா***

    ReplyDelete
  18. ஜெயா மேடம் உணர்வு பூர்வமான பின்னூட்டம்... இப்போதான் எனக்கே இந்த கவிதையோட ஆழம் புரியுது

    ReplyDelete
  19. vasanth தம்பிக்கு

    அத்தைக்கு 45 வயசு ஆகுது அத போயி அடிப்பாவின்னு சொல்லக்கூடாது :)))

    hema paavam

    ReplyDelete
  20. அஷோக் அண்ணா ஹேமா அத்தையில்ல அத்தைக்கு பொறந்தவ...

    ReplyDelete
  21. என்னை என்னவோ செய்து விட்டது கவிதை. நன்றாக இருந்தது ஹேமா.

    ReplyDelete
  22. உள்ளேன் போட்டுகிறேன்.. அப்புறமா வந்து படிக்கிறேன்

    ReplyDelete
  23. அய்யோ சாரி அத்தைக்கு பொறந்தவங்க பெரியவங்க அதாவது அத்தாச்சின்னு சொல்லுவோமே அவங்க ... அதனால கிண்டல் பண்ணாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களே...

    ReplyDelete
  24. வரிகள் போட்டிபொடும் அழகு ஹேமா,... நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. விஜய்...வாங்கோ வாங்கோ இன்றைய பிறந்தநாள் பேபி...மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    இது 2003 ம் ஆண்டு நான் வேலை செய்யும் ஹோட்டலில்
    3 மாதங்கள்வரை தங்கியிருந்த ஒரு தம்பதியினரின் காதல்.

    வைத்தியர் வந்து அழைத்துப்போக கணவர் தனித்தவரய் அவதிப்படுவார்.
    அந்த நேரங்களில் எங்களோடு மனம் விட்டுக் கதைப்பார்.அவர் சொன்னதும்,
    அவரின் ஆதங்கமும்தான் இந்தக் கவிதை.

    ஒரு நாள் "அவள் என்னை விட்டுப் போய்விடுவாளோ" என்று அழுதுவிட்டுச் சொன்னார் அவள் வரட்டும் இன்று நான் கேட்கக்போகிறேன் என்று.

    அதை அன்றே என் மனதில் பட்டதை எழுதினே,அப்படியே இன்றைய என் நடையிலேயோ சுருக்கியோ மாற்றாமல் பதிவில் தந்தேன்.அந்த நேரம் யோசிக்கவில்லை.அவர்கள் பெயரைக் கேட்டு வைக்காமல் விட்டுவிட்டேன்.

    அவர்கள் எங்கிருப்பார்களோ தெரியவில்லை.
    அவர்களின் அன்புக்கு தலை வணங்குகிறேன் இன்றும்.

    :::::::::::::::::::::::::::::::::

    வாங்கோ டாக்டர்.நீங்கள் இப்படி எத்தனை பேரைப் பார்த்திருப்பீர்கள்.ஆனால் எங்கள் வீட்டினரைவிட இவர்கள் வயதானபின் நெருக்கமும் அன்பும் அணைப்பும் கருணையும் கவனிப்பும் அக்கறையும் அதிகமாகவே இருக்கும்.எங்கள் வீடுகளில் வயதாகிவிட்டதா உடம்புக்கு முடியவில்லையா "சரி படுத்திருங்கோ
    ..சாப்பாடு தாறம்...சரி வைத்தியம் அவ்ளோதான்.இங்கு கணவரை மனைவியோ மனைவியைக் கணவரோ தள்ளுகிற சைக்கிளில் வைத்து வெளியில் உலாவி வருவார்கள்.எங்களூரில் ஏன் என் வீட்டில்கூட இந்த அன்னியோன்யம் நான் கண்டதில்லை.

    ReplyDelete
  26. //ஜோதிஜி ... ஹேமா யாழ்பாணம். ஹேமா சுவிஸ் இரண்டுக்கும் உள்ளே உள்ள இடைவெளியில் இத்தனை அழுத்தம் உள்ளே இருக்குமா? அதுவே தான் இறுதி வரையிலும் தொடருமோ?

    எழுதும் படைப்பே இத்தனை ஆழம் என்றால்-வாழ்க்கையின் சராசரி பார்வையின் வித்யாசங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்.//

    வாங்கோ ஜோதிஜி...தேவியர்களும் நீங்களும் எப்படி சுகம்தானே !

    சுவிஸ் ஹேமா கோண்டாவில் ஹேமா எப்பவுமே ஒருத்திதான்.
    மாறாத மாற்றங்களுக்குள் என்னை ஏற்றவை(ர்)களைப் புரிந்துகொண்டு இருக்கிறேன்.என்னில் எப்பவுமே மாற்றமில்லை.இதனாலேயே தனித்த குரலாய் முரண்பாடுகள் நிறைய.

    ReplyDelete
  27. நன்றி.வாங்க நவாஸ்.கவிதையில் அழகைவிட அன்பு காணுவோம்.

    :::::::::::::::::::::::::::::::::::

    ஆங்....அஷோக் என்னாச்சு மருமவனே.இரண்டு தரம் படிச்சும் புரியலயோ !உங்க சித்தப்ஸ் கிட்டச் சொல்லி கண்ணாடி வாங்கித் தரச் சொல்றேன்.ஆனா எனக்கு கிலுகிலுப்பை.

    :::::::::::::::::::::::::::::::::::

    சங்கவி...வாங்க.நேரில் கண்ட உணர்ந்த அனுபவங்கள் எழுத்தில் வரும்போது அதன் வடிவமே தனிதான்.

    ::::::::::::::::::::::::::::::::::

    சத்ரியா...கலரை மாத்தி வச்சுக்கிட்டாவது ஒளிச்சிருங்கப்பா.
    தேடிப்பிடிக்கவாவது வசதியா இருக்கும்ல.இனி லேட்டா வந்தா பெஞ்சில ஏறித்தான் நிக்கணும்.
    ஓம்...சொல்லிப்போட்டன் மவனே

    :::::::::::::::::::::::::::::::::::

    //"என்னை விட்டுப் போய்விடுவாயா அன்பே"//

    ராஜா ..இந்த வரியில் அவர் அழுது சொன்னது பொறாமை இல்லை.அவ தனக்கு முதல் தன்னை விட்டு இறந்துவிடுவாவோ என்று.

    ::::::::::::::::::::::::::::::::::

    ம்ம் ...அபு அந்த நேரத்திலும் நான் அழுதுவிட்டேன்.இன்றும் அந்த முகங்கள் ஞாபகம் இருக்கு.

    :::::::::::::::::::::::::::::::::::

    அடப்பாவி....வசந்து....வரட்டும் கலா.நானும் சொல்லிக் குடுக்கிறேன்.

    ReplyDelete
  28. ”அருகரு கிருவர்; மிக்க அன்புண்டு; செயலே இல்லை! இருவர் களிப்பும் இயம்பு மாறில்லை”

    -பாரதிதாசனின் இந்த வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

    அருமையாச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  29. என்னவோ பண்ணிருச்சு.. அருமை.

    ReplyDelete
  30. காதல் என்பது --- எண்பதிலும் இருப்பது


    அழகா அன்பை படம் பிடிச்சி இருக்கீங்க ஹேமா! நினைவு மீட்டலும் அருமை.

    ReplyDelete
  31. நல்ல அனுபவம். வயதானவர்களுக்கு இன்றைய காலத்தில் வைத்தியர்களே ஆதரவாக இருக்கும் நிலை. :-(

    ReplyDelete
  32. அழகான கவிதை ஹேமா....!!! புகைப்படமும் பொருத்தமாக இருக்கிறது.

    நெஞ்சில் நிற்கும் என்றென்றும் !!

    ReplyDelete
  33. அற்புதமான புனைவு . பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  34. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு அழகு இருக்கும். உங்கள் கவிதையும் ஓர் அழகு

    ReplyDelete
  35. புற அழகு மறைந்து அக அழகு தெரியும் நாட்களில் அன்பை வார்த்தைகளால் வெளிப் படுத்தத் தேவையே இல்லை..ஒரு பார்வை கூட அதிகம்தான். புரிந்து கொள்ளலின் முதிர்ச்சி நிலை அது. கவிதை அழகு ஹேமா. சிறிய விஷயம் கிடைத்தாலே உங்கள் வார்த்தைகளில் மெருகேற்றி விடுவீர்கள். இது பெரிய விஷயம்...கேட்க வேண்டுமா? (ஆமாம், நொடுக்கு என்றால் என்ன? ஆர்வம் தாங்க முடியவில்லை...!)

    ReplyDelete
  36. அடடா....முதுமை மற்றும் ஏக்கம் இரண்டையும் இவ்வளவு அழகாய் சொல்லமுடியுமா.??? அருமை ஹேமா....

    ReplyDelete
  37. வசந்த் நீங்க சின்ன பையன் அது தான் இந்தக் கவிதையின் ஆழம் தாமதமாக புரிந்தது. இல்லையா ஹேமா. நன்றி வசந்த்***

    ReplyDelete
  38. ஸ்ரீராம் நொடுக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை.எங்கள் வீட்டில்
    "எல்லாத்தாக்கும் நொடுக்குச் சொல்லாதே"என்பார்கள்.நான் நினைக்கிறேன்...ஒரு நொடிக்குள் அதன் கருத்தை எதிர்த்தோ, சாதகமாவோ ,நகைச்சுவையாகவோ கோபப்பட்டோ என்னமோ சொல்லாம இருக்ககூடாது என்கிறது மாதிரி பேசறதுன்னுதான் மனசுக்கு வருது.

    யாராச்சும் தெரிஞ்சா சொல்லட்டும்.
    வேலைக்குப் போற அவசரத்திலயும், ஆர்வம் தாளாம தள்ளாடுற ஸ்ரீராமுக்காக எழுதிட்டுப்போறேன்.

    கலாவைக் காணோம்.குழந்தைநிலா வெளிச்சம் குறைஞ்சுபோய்க் கிடக்கு.வந்தா உங்களுக்கும் சரியான பதில் தருவா.

    ReplyDelete
  39. ஜெயா மேடம் நீங்களுமா? அவ்வ்வ் எதிர்கோஷ்டி பலம் ஜாஸ்தியாயிட்டே இருக்கு எனக்கு ஆதரவுக்கு யாருமே இல்லியா?

    நொடுக்கு என்பது குற்றம் குறை சொல்லிக்காட்டிகொண்டே இருப்பது அப்படித்தானே கலா பாட்டி நீங்க வந்து சொல்லுங்க சரியா தப்பான்னு பேத்திக்கு ஒண்ணும் தெரில...

    ReplyDelete
  40. ஹேமா இந்தக் கவிதையை நீங்கள்
    பதிவில் இட்டவுடனேயே படித்த
    முதல் ஆள் நான்தான்!!

    அவசரவேலையாய் போய்விட்டேன்
    பின்னால் வந்து பார்த்தால் நிரம்பி
    விட்டது எல்லோர் கருத்தாலும்!

    இளமையில் துணை இல்லாவிட்டாலும்..
    முதுமையில் ஒரு துணை கட்டாயம்
    தேவை
    நெஞ்ஞைத் தொடும் தம்பதியரின்
    வாழ்வுடன்...நெகிழ்ந்த மங்கையின்..
    மனம், பகிர்ந்த தமிழ் எழுத்தில்...
    மணக்கின்றது மங்கையின்...
    கை வரிசை.


    குழந்தை நிலாவுக்கு...கிச்குச்சு..கிச்சகிச்ச்சு.....மூட்டீ...
    அதோஓஓஓஓஓ சிரித்து விட்டாள்.

    ReplyDelete
  41. ஸ்ரீராம்!!
    நொடுக்கு என்றால்{இது இலங்கையில்
    பேசப்படும் சொல்}

    உ=ம் ஒரு தாயிடம் பெண் எதிர்த்துப்
    பேசினால்..
    தாய் சொல்வார் நொடுக்கு,நொடுக்கு
    என்று பேசாதே என்பார்

    {சிறு குழந்தைகள்}ஒருவருக்கு ஒருவர்
    கிள்ளினால்...
    ஒருவர் முறையிடுவார்.
    இப்படி...
    இங்க பாருங்க இவள் என்னை
    நொடுக்கு,நொடுக்கென்று கிள்ளுகின்றாள்
    என்பார்.

    அதனால்....
    இப்படி எடுத்துக் கொள்ளலாமே!

    “திருப்பத் திருப்ப” என்று வருகிறது

    அந்தச் சந்தர்பங்களில்.. போதுமா?விளக்கம்.

    திரும்பத் திரும்ப பார்த்துப் பார்த்து
    திரும்பத் திரும்பக் கேட்டுக் கேட்டு
    திரும்பத் திரும்ப துளைத்ததாரோ
    உங்களிடம்...!!!???
    இக் கேள்வியை.


    ஹேமா யாரோ ஒரு இலங்கைப் பெண்போலும்..
    ஸ்ரீராமை விட்டுவிடாமல் கண்டுபிடியுங்கள்.!!

    ReplyDelete
  42. இதுபோல் ஒரு கவிதைக்காக வயதானவர்கள் படம் தேடினேன்
    அப்படியே இங்கு வந்துவிட்டேன்

    அழகான வரிகள்

    ReplyDelete
  43. ஜெயா ! வசந்த்,வசந்த்,வசந்த்
    சின்னப்பையன்!!
    ஐய்யய்யோ.....
    தப்பும்மா


    \\\அஷோக் அண்ணா ஹேமா
    அத்தையில்ல அத்தைக்கு
    பொறந்தவ...\\\\
    இப்ப சொல்லுங்கள்..சிறிசா?பெரிசா?

    எனக்குப் வசந்த் பேராண்டி என்று
    எல்லோருக்கும் தெரியும்!அப்படியிருக்கும்
    போது!{ஒன்றைக் கவனித்தீர்களோ}
    ஹேமா என் பேத்தி,பேத்தியென்று அவர்
    வாயால் பல பின்னோட்டம் இட்டிருக்கின்றார்
    அப்படியென்றால்!!!!?????
    சிந்தியுங்கள்,சிந்தியுங்கள்உங்கள் சின்னப்பையனின்
    மூளை வளர்ச்சியை.

    ஹேமா பாவம் ஒன்றுமே தெரியாது
    சாரிடி செல்லம்.
    நொடுக்கு___திருப்பத் திரும்ப_ நொடிக்கு நொடி
    என்றெடுக்கலாம்.

    ReplyDelete
  44. நன்றி கலா...
    வசந்த் வேற குற்றம் குறை சொல்றது என்கிறார்.
    அப்போ ஹேமா...நான் ரொம்ப குறை சொல்றேனோ..?!!

    ReplyDelete
  45. அழகான கவி வரிகள். கண்கள் கண்டதை கற்பனையுடன் மெருகூட்டி ,
    வரிகளை கோர்த்த்விதம் அழகு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  46. நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுக்கு..கண்ணம்மா என் காதலி.பாரதி கவிதை தேடிபடிக்க வைத்த பதிவு.

    ReplyDelete
  47. ஓ ஓ -- வசந்த் சின்னப்பையன் இல்லையா?கலாக்கும் ஹேமாக்கும் பேராண்டி என்றால் ,ஓ - ரொம்பச் சின்னப்பையனோ? எங்கள் ஊரில் நொடுக்கு என்று இல்லை. நொட்டை , தான் பேசுவார்கள். அதாவது அடிக்கடி ஏதாவது குறை கூறுவது.சும்மா எது செய்தாலும் நொட்டை சொல்லாதிங்க, அப்பிடி என்று சொல்லுவோம்..

    ReplyDelete
  48. பொதுவாக வயோதிபம் நெருங்க அன்பும் கூடும்.அப்பொழுதுதான் "எனக்கென நீ உனக்கென நான்"...என இருவரும் இருப்பார்கள்.

    ஒருவருக்கு வருத்தம் என்றாலே மற்றவர் தாங்க மாட்டார் இது எனது பெற்றோரிடம் நான் கண்டது. இப்போது இருவரும் இல்லை. அவர்களை நினைவூட்டியது இந்தக் கவிதை ஹேமா.

    ReplyDelete
  49. வாங்க ஸ்டார்ஜன்...உண்மையான காதல் இறந்தபின்னும் தொடரும்.

    :::::::::::::::::::::::::::::::::::

    வெ.இராதாகிருஷ்ணன்...உங்கள் வரவும் கருத்தும் சந்தோஷமாயிருக்கு.

    ::::::::::::::::::::::::::::::::::

    றமேஸ்...அன்பு பாசத்துக்கு முன்னால் எதுவும் ஈடு இணை இல்லை.கலங்காதீங்க.சின்னம்மா சுகம் வர நாங்களும் சாமி கும்பிடுவோம்.

    ::::::::::::::::::::::::::::::::::

    சித்ரா...நீங்களாயிருந்தால் ஒரு கதையாய் அழகா சிரிக்கச் சிரிக்க எழுதியிருப்பீங்க.என் உணர்வை வெளிப்படுத்த எனக்குத் தெரிஞ்சது இதுதான்.

    :::::::::::::::::::::::::::::::::

    முகிலன்...உண்மை.உங்கள் கதை படிக்கும்போதே எனக்கு இந்தச் சம்பவம் நினைவில் தட்டிப்போனது.

    ::::::::::::::::::::::::::::::::

    வாங்க...பலா.என்றாலும் அனுபவங்களைச் சமூகக் கண்ணோடு பொருத்திப் பார்க்க உங்களுக்கே முடிகிறது.நன்றி.

    ::::::::::::::::::::::::::::::::::

    ஜெயாக்குட்டி...வாங்க.சின்னக்குட்டி ஜெயா எப்பிடி ?

    உண்மைதான் ஜெயா நாங்கள் எங்கள் சமூகம் தாண்டி வெளியே வந்ததால்தான் நிறைய கலாச்சார வித்தியாசங்களையும் அதன் நன்மை தீமைகளையும் உணர்கிறோம்.அதன் வழி நடக்கவும் முயற்சிப்போம் தோழி.

    :::::::::::::::::::::::::::::::::

    வாங்க தமிழ்.நேரில் நீங்க பாத்திருந்தா அழகான ஒரு காவியம் கிடைச்சிருக்கும்.

    ::::::::::::::::::::::::::::::::::

    நசர்...பொய்தானே நேரமில்லன்னு போறது.கும்மியடிக்க இடம் சரில்லன்னு சொல்றதுக்கு.....!

    ::::::::::::::::::::::::::::::::::

    ஞானம்...வாங்க.அன்பை வச்சு ஏன் ...எதற்கு...எப்பிடின்னு ஒரு தேடல் தேடிப் பாருங்களேன்.

    ReplyDelete
  50. வாங்க பெருமாள்.பாரதியார் பாடலோட வந்திருக்கீங்க.எங்க அடிக்கடி காணாமப் போயிடறீங்க நீங்க,சத்திரியன்,அரசு.என்ன சிங்கப்பூர்ல நீங்கல்லாம் எங்களைவிட பிஸியோ !

    ::::::::::::::::::::::::::::::::::

    ரிஷபன்....நான் உங்கள் கவிதைகளையும் ரசிக்கிறேன் எப்போதும்.

    :::::::::::::::::::::::::::::::::

    வாங்க ராதாகிருஷ்ணன்.நன்றி கருத்துக்கு.

    ::::::::::::::::::::::::::::::::::

    ஜமால்....அதுவும் கணவன் மனைவி அன்பு சரியான புரிதலோடு கிடைத்துவிட்டால் அவர்களைப்போல அதிஸ்டசாலிகள் உலகத்தில் வேறு யாருமேயில்லை.எண்பதையும் தாண்டும் அந்தக் காதல்.

    :::::::::::::::::::::::::::::::::

    ரோஸ்விக்....உங்களை அதிசயமாய் இந்தப் பக்கம் பாக்கிறேன்.அடிக்கடி வரலாம்தானே !

    :::::::::::::::::::::::::::::::::

    செய்யது...வாங்க.அந்தப் படமும் யாரோ இயல் தம்பதிகள் போலத்தானிருக்கு.அவர்களின் போட்டோவோ பெயரோ கேட்காமல் விட்டது என் மனக்குறை.என்றாலும் அவர் மனைவியை "செரி"ன்னு கூப்பிடுறதா ஞாபகம்.

    :::::::::::::::::::::::::::::::::

    வாங்க சங்கர்.வரணும்.
    வரவுக்கு நன்றி.

    :::::::::::::::::::::::::::::::::

    வாங்க புலவரே...நீங்கள் சொன்னதுபோல அவவின் அழகையும் அவர் ரசிப்பார்.எங்களிடம் சொல்லுவார்.முன்னைவிட அழகாயிருக்கா,அவவின் நடையே ஒரு அழகு என்பார்.என்ன...நான் ஏதாச்சும் கேட்டாலோ கூப்பிட்டாலோ என்னைப் பார்த்துப் பதில் சொல்ல ரொம்ப நேரமாகுதுன்னு கவலைப்படுவார்.

    ::::::::::::::::::::::::::::::::::

    ஸ்ரீராம்..நீங்க வீட்ல எப்பிடி ?நல்ல அன்பாத்தானே இருக்கீங்க.சமையல் பதிவெல்லாம் அமர்க்களமா இருக்கு.அப்போ நீங்க அன்பான அப்பாதான் !

    எங்க மீனு?அவங்களுக்கு பிடிக்கும் இந்தக் கவிதை.

    ::::::::::::::::::::::::::::::::::

    பாலாஜி....ரொம்ப லேட்.
    என்னாச்சு ? வேலையா ?சரி...சும்மாதான் சொன்னேன்.

    :::::::::::::::::::::::::::::::::

    நன்றி பிரபு.உங்கள் வரவும் சந்தோஷ்மாயிருக்கு.

    :::::::::::::::::::::::::::::::::

    நிலா நில ஓடி வாங்க.
    உங்க கவிதையும் சூப்பர்.ரசிச்சேன்.

    :::::::::::::::::::::::::::::::::

    ஐயா...தாராபுரத்தான் சந்தோஷமாயிருக்கு உங்கள் வரவு.இன்று உங்கள் பக்கம் வந்தேன்.பின்னூட்டம் தர முடியாமலிருந்தது.ஏன் ?

    :::::::::::::::::::::::::::::::::

    வாங்க மாதேவி.எங்க நாட்டில் கூச்சம் கருதியே வயதானவர்கள் தங்கள் அன்பை வெளிக்காட்ட மறுக்கிறார்கள்.
    இது நான் என் வீட்டில் காண்பது !

    ReplyDelete
  51. வாங்கோ வாங்கோ கலா.கவிதை பாத்திட்டா போனீங்க.காணோமேன்னு யோசனையாப்போச்சு.சரி...என்னப்பா சிங்கப்பூர்ல இப்பிடி பிஸியா இருக்கீங்க எல்லாரும் ?

    வசந்து...கலா...ஸ்ரீராம்...ஜெயா அஷோக்.என்னா பண்றது நான் ? உங்களையெல்லாம்.
    சமாளிக்கக் கஸடம்பா.

    நானும் தெரியாமச் சொல்லிட்டேன் ஸ்ரீராம் கிட்ட நொடுக்குன்னு.அது நொடுக்காப் போகுது...போகுது.
    எல்லாரும் சேர்ந்து கோவப்படுத்துறீங்க ஸ்ரீராமை.

    வசந்துக்குத் தமிழ் சரியாப் பேசவே வராது.இதில வேற தமிழுக்குக் கருத்துச் சொல்ல வந்திட்டார்.

    எங்க வீட்ல நொடுக்குன்னா எல்லாத்துக்கும் எதையாவது நொடுநொடுன்னு சொல்றதைத்தான் சொல்ல்லுவாங்கப்பா.நீங்க குத்தம் சொல்றதுன்னு சொல்ல ஸ்ரீராம் ஹேமாக்கு நான் குத்தம் சொல்லிட்டேனான்னு பாவமாக் கேக்கிறார்.அவர் என்னை எப்பவும் உற்சாகப்படுத்தும் ஒருவர்தானே.

    ஜெயா...சின்னப்பையன் அட்டகாசம் பாருங்க.தானே வாயைக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிறான்.

    இதில அஷோக் க்கு கோவம்.
    மருமகனுக்கு வராதா பின்ன அத்தையைப் பார்த்து அடிப்பாவின்னு சொல்லலாமோ !உங்க சித்தப்ஸ் பா.ரா அண்ணா இன்னும் பாக்கல.அண்ணா பாத்தா இன்னும்...!

    அடப்பாவி..வசந்து...எந்த அத்தைக்க்குப் பொறந்தவ நான் !உதை....!

    கலா இதில நான்தான் பாவம்பா.
    நீங்க சொன்னதுபோல எனக்கு ஒண்ணுமே தெரில.ஸ்ரீராமுக்கு ஆறுதல் சொல்லுங்க.அடிக்கடி வந்து என்னைக் காப்பத்தணும் தோழி.

    ReplyDelete
  52. நான்(சிங்கப்பூர்ல இல்லங்க நான்.. நாம அமெரிக்க பிரஜை) வெட்டிதான்... அங்கே(சிங்கப்பூர்) இருக்கவங்க தான் பிஸி.

    ReplyDelete
  53. வசந்துக்குத் தமிழ் சரியாப் பேசவே வராது.இதில வேற தமிழுக்குக் கருத்துச் சொல்ல வந்திட்டார்.//

    யாரைப்பார்த்து என்னா வார்த்தை சொல்லிட்டீங்க அத்தாச்சி... அப்பிடியேமும் பேசிட்டாலும்... ம்க்கும்.....

    எந்த அத்தையா? ம் கோண்டால இருக்குற அத்தைதான்....

    கலா சொல்றதெல்லாம் யாரும் நம்பாதீங்கப்பா ஆத்தாடி சிங்கப்பூர்ல சி ஐ டியா வேலை செய்றாங்கன்னு நினைக்கிறேன்...விட்டா கோண்டா குழந்தைவேலு என்னோட தாத்தான்னு சொல்லுவீங்கபோல....!

    ஜெயாமேடம் கலா பாட்டிக்கு நான் பேரன் ஹேமாவதி பேத்தி
    இன்னொருதடவ சின்னபையன்னு என்னை சொன்னா நான் அழுவேன்ன்ன்.......

    ம்க்கும்.....ம்க்கும்......

    ReplyDelete
  54. என்னத்த சொல்ல ...வழக்கம் போல் கவிதை அருமையா இருக்கு ......


    late yaga vanthatharku sorry

    ReplyDelete
  55. ம்ம்ம்ம்... அருமை ஹேமா
    இப்போதுதான் உள்ளத்தின் தெளிவு
    வெளிப்படுகிறது.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  56. அருமை.அனைத்துமே வைர வரிகள்.

    ReplyDelete
  57. வயதான பிந்தான் அன்பு பெருகி வரும் என்பது மிக உண்மை ஹேமா அருமையான பகிர்வு

    ReplyDelete
  58. We also have couples like them here also Hema,i've seen the spouse dying on the death of the other one. Marietal bonds are nice Hema.

    ReplyDelete