Monday, December 28, 2009

ஏன் அழைத்தாய்...

நீ என்னை அழைத்த வேளையில்
தொலையும் என்னை
இழுத்து நிறுத்திக்கொண்டிருந்தேன்.

கம்பீரமாய் மயக்கினாலும்
அன்று இரும்புக் குழாய்களுக்குள் சிக்கி
வயலின் இசைத்த நிகழ்வொன்றை
வந்து கலைத்தது உன் குரல்.

மண்ணின் பசளைக்காகவே
பயிரிடப்படுவது போலானது
என் மண்ணில் பலர் வாழ்வு.

இப்போதும் நக இடுக்குகளில்
வழியும் இரத்தமும் சதைக்குவியலும்
அப்படியேதான்.
உன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்
என் இறப்பு இன்றைய நாளிலேயே.

சொல்லிகொள்ளாமலே வருகிறது
என் அறைக்குள்
இரவும் பகலும்
சந்திரனும் சூரியனும்
பெயர் தெரியாத பூவின் வாசனையும்
உன் சுவாசம் கலந்த
சிகரெட்டின் வாசனையும் கூட.

சமயம் கிடைக்கும்போது வா
என்னோடு நீயும் காண !!!

ஹேமா(சுவிஸ்)

61 comments:

  1. நான் தான் தூக்குப்போட்டுக்கிட்டு சாகப்போறேன் ங்கிறமாதிரி எல்லார்கிட்டயும் பேச்சு வாங்கி முடில.அதாலதான் புதுப்பதிவு.உங்க எல்லாருக்கும் உங்க அன்புக்கும் நன்றி.சந்தோஷமாயிருக்கு.

    ReplyDelete
  2. ஹேமா ...எதை தூக்கி போட போறீங்க ???

    உங்களுக்கு வேண்டாமென்றால் எனக்கு அனுப்பிடுங்க ........... ஹி ஹி ஹி ஹி

    ReplyDelete
  3. ஹேமா ...கவிதையை கொஞ்சம் பொறுமையா படிக்கணும் போல் இருக்கு ....... இலக்கிய பிழை இருக்கு இந்த கவிதையில் (எதோ வந்ததற்கு என்னால் முடிந்தது)

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு ஹேமா.. அந்த கூண்டு :)

    ReplyDelete
  5. ஆகா. அருமை அருமை.

    இனி வேனும்னா மிஸ்டு கால் மட்டும் கொடுக்க சொல்றேன் ஹேமா

    ReplyDelete
  6. இப்போதும் நக இடுக்குகளில்
    வழியும் இரத்தமும் சதைக்குவியலும்
    அப்படியேதான்.
    உன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்
    என் இறப்பு இன்றைய நாளிலேயே.

    மிகவும் ரசித்தேன்....ஹேமா..

    ReplyDelete
  7. இப்ப என்னதான் சொல்றீங்க?

    ReplyDelete
  8. இன்னொருவரின் கூட்டுக்குள்
    என் இதயம்
    அதிலும் ...அன்பால் அடைபட்டுக்
    கிடக்கும் போது......
    இருவரின் இதயப் பிரிவால்...
    என் முழு இதயம் கொஞ்சம்,கொஞ்சமாய்...
    செயலிழந்து பாதி கரைந்து விட்ட போது.....தான்!!

    \\\நீ என்னை அழைத்த வேளையில்
    தொலையும் என்னை
    இழுத்து நிறுத்திக்கொண்டிருந்தேன்.\\\\


    இதில் இன்னொரு இதயம் இணைவதா!!??
    நான் ஆம்மென்றால்!
    அன்றே நான் இறந்த நாளாய் இருக்கும்

    உன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்
    என் இறப்பு இன்றை நாளிலேயே\\\\




    நான் அவர் நினைவை என்னில் வர...அனுமதி
    கொடுக்காவிட்டாலும்!!தனாகவே என்னுள்
    வந்து விடுகிறது அதனால்...அவர் நினைவுகளோடு
    வாழ்ந்து கொண்டிருப்பதை.. நேரம் கிடைக்கும்
    போது வந்து பார்




    சமயம் கிடைக்கும்போது வா
    என்னோடு நீயும் காண !!!

    ReplyDelete
  9. சொல்லிக் கொள்ளாமல் வருவது இரவும், பகலும் மட்டும் தானா?
    காதலும் கண்ணீரும் தான் !

    ReplyDelete
  10. //சொல்லிகொள்ளாமலே வருகிறது
    என் அறைக்குள்
    இரவும் பகலும்
    சந்திரனும் சூரியனும்
    பெயர் தெரியாத பூவின் வாசனையும்
    உன் சுவாசம் கலந்த
    சிகரெட்டின் வாசனையும் கூட.//

    நல்ல வரிகள்....ரசித்தேன் கவிதையை....

    ReplyDelete
  11. என்னது.. தூக்கா? ஏன் தோழி மக்களை பயமுறுத்துறீங்க?


    வழக்கம் போலவே கவிதை அருமை..

    ReplyDelete
  12. //நீ என்னை அழைத்த வேளையில்
    தொலையும் என்னை
    இழுத்து நிறுத்திக்கொண்டிருந்தேன்.//

    கால்ல கட்டு போட்டா ?

    //கம்பீரமாய் மயக்கினாலும்
    அன்று இரும்புக் குழாய்களுக்குள் சிக்கி
    வயலின் இசைத்த நிகழ்வொன்றை
    வந்து கலைத்தது உன் குரல்.//

    சலதோஷம் பிடிச்ச மாதிரியா ?

    //மண்ணின் பசளைக்காகவே
    பயிரிடப்படுவது போலானது
    என் மண்ணில் பலர் வாழ்வு.//

    உண்மை


    //இப்போதும் நக இடுக்குகளில்
    வழியும் இரத்தமும் சதைக்குவியலும்
    அப்படியேதான்.
    உன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்
    என் இறப்பு இன்றைய நாளிலேயே.//

    உங்கள் குரல் வளையை கடிச்சிடுவான்களோ?

    //
    சொல்லிகொள்ளாமலே வருகிறது
    என் அறைக்குள்
    இரவும் பகலும்
    சந்திரனும் சூரியனும்
    பெயர் தெரியாத பூவின் வாசனையும்
    உன் சுவாசம் கலந்த
    சிகரெட்டின் வாசனையும் கூட.
    //

    அடுத்த முறை தந்தி அடிச்சிட்டு வரச்சொல்லலாம்

    //சமயம் கிடைக்கும்போது வா
    என்னோடு நீயும் காண !!!
    //
    சீக்கிரம் கிடைக்கும்

    ReplyDelete
  13. //நான் தான் தூக்குப்போட்டுக்கிட்டு சாகப்போறேன் ங்கிறமாதிரி எல்லார்கிட்டயும் பேச்சு வாங்கி முடில.//

    இதெல்லாம் எப்ப நடந்தது ?

    ReplyDelete
  14. கலா முழுதும் தவறாய் புரிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...

    //நீ என்னை அழைத்த வேளையில்
    தொலையும் என்னை
    இழுத்து நிறுத்திக்கொண்டிருந்தேன்.
    //

    அவர்ர்ர்ர்ர் கூப்பிட்ட பொழுது அவரின் குரல் மயக்கத்திலோ இல்லை அன்பிலோ தான் தொலைவதை தானே அறிந்து அதை தடுத்து தனக்குள்ளே தடை போட்டு கொள்கிறார் நாயகி

    //கம்பீரமாய் மயக்கினாலும்
    அன்று இரும்புக் குழாய்களுக்குள் சிக்கி
    வயலின் இசைத்த நிகழ்வொன்றை
    வந்து கலைத்தது உன் குரல்.
    //

    உருவோ இல்லை அவர்ர்ர்ர் குரலோ கம்பீரமா இருந்தாலும் இரும்புக்குழாய்க்குள்ளே வயலின் இசைத்தால் எப்படி எதிரொலிக்குமோ அது போல் நாயகியின் காதை பதம் பார்த்ததாக எடுத்து கொள்ளலாம்

    //மண்ணின் பசளைக்காகவே
    பயிரிடப்படுவது போலானது
    என் மண்ணில் பலர் வாழ்வு.//

    நாயகி நாட்டில் பலர் மண்ணிற்க்கு இடப்படும் உரமாக போய்விட்டனர்

    //இப்போதும் நக இடுக்குகளில்
    வழியும் இரத்தமும் சதைக்குவியலும்
    அப்படியேதான்.
    உன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்
    என் இறப்பு இன்றைய நாளிலேயே.
    //

    நாயகனுக்காக தன் நாட்டை விட்டுக்கொடுக்க முடியாது என்று நாயகி கூறுகிறார் அப்படி வருவதாய் இருந்தால் அன்றே நாயகின் இறந்த நாளாய் இருக்கும்

    //சொல்லிகொள்ளாமலே வருகிறது
    என் அறைக்குள்
    இரவும் பகலும்
    சந்திரனும் சூரியனும்
    பெயர் தெரியாத பூவின் வாசனையும்
    உன் சுவாசம் கலந்த
    சிகரெட்டின் வாசனையும் கூட.

    சமயம் கிடைக்கும்போது வா
    என்னோடு நீயும் காண !!!

    //

    இரவும் பகலும் சந்திரனும் சூரியனும் போலவே நாயகனின் ஞாபகங்கள் நாயகியின் அறைக்குள் எப்பொழுதும் இருக்கின்றன இதை நாயகனுக்கு சமயம் கிடைக்கும் வேளை வந்து பார்க்க அழைப்பு விடுக்கிறார்

    அப்படித்தானே ஹேமா

    இதுல 35 மார்க் வாங்கி பாஸ் ஆயிட்டேன்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  15. ஏன் அழைத்தாய்....நீ என்னை அழைத்த வேளையில் தொலையும் என்னை இழுத்து நிறுத்திக் கொண்டேன்,அழகான வரிகள்.அதற்கேற்ப படமும் அழகாய் உள்ளது ஹேமா, வாழ்த்துக்கள்****

    ReplyDelete
  16. யாருக்கும் மெயில் ஐடி கூட தராமல் வசந்துக்கு மட்டும் போன் நம்பர் தந்த சகோதரி ஹேமாவை வன்மையாக கண்டிக்கிறேன்


    விஜய்

    ReplyDelete
  17. மிகவும் அழகாக இருக்கிறது..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ஏன் அழைத்தாய் என தலைப்பு .... சமயம் கிடைக்கும்போது வா என முடிவு...
    நல்லா சித்தம் குழம்பி போயிருக்கு ... [காதல் வந்தா நடக்குர விஷயம் போல....]
    நமக்கெதுக்கு வம்பு - ஹேமா நல்லா இருக்கு உங்க கவிதை.

    ReplyDelete
  19. Nice Hema,cigarette vaasanai- nallaa illai.

    ReplyDelete
  20. வசந்த் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.(தப்பிச்சேன்டா.)

    ReplyDelete
  21. ஹேமா கவிதை மிக மிக அருமை..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. வழக்கம் போல ஹேமுவின் கலக்கல் கவிதை. சேகமாய் ஆரம்பித்து காதலாய் முடிகின்றது. நன்றி.

    ReplyDelete
  23. உப்பு மட சந்திக்கு வந்தேன் ஹேமா. ஒரு படத்தைக் கொடுத்து எழுத சொல்லியிருக்கிங்க. என்ன எழுதுவதுனு இன்னும் யோசிக்கிறேன். கூடிய சீக்கிரம் எழுதுவேன். நம்புங்க..

    ReplyDelete
  24. இப்போதும் நக இடுக்குகளில்
    வழியும் இரத்தமும் சதைக்குவியலும்
    அப்படியேதான்.
    உன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்
    என் இறப்பு இன்றைய நாளிலேயே.//

    நாட்டிற்காக பசளையாய்
    தலைவனுக்காக பாசமாய்
    அடிபணியும் அன்பின்
    சொற்களும் வாழ்வுமாய்...


    அருமை தோழியே..

    ReplyDelete
  25. என்ன ஹேமா முதல் கமெண்ட் அதுவும் இப்படி டெரர்ரா ...

    கவிதைக்கென்ன ஹேமா வழமை போலவே

    ReplyDelete
  26. அப்பா!வசந்துக்குட்டி!!

    கல் என்கிறார்கள்,சிலை என்கிறார்கள்
    கடவுளென்கிறார்கள்,

    இருக்கென்கிறார்கள்,இல்லையென்கிறார்கள்

    இதேபோல்தான் ஒரு கவிதையின் நோக்கமும்

    {நோக்கும் விதம்}

    நான் எழுதியது என் “கருத்துத்தான்”
    ஒவ்வொன்றும் அவரவர் பார்வை,எண்ணம்
    கருத்து, புரிதல் இவைகளைப் பொறுத்தது

    என் ,உங்களின்,ஹேமாவின் கருத்துகள்
    வேறுபடலாம்....தமிழின் அழகு அப்படி!!

    நன்றாக அந்தப் படத்தை உற்றுப் பாருங்கள்
    அதற்குத்தான் இப்படி எழுதினேன்


    {{இன்னொருவரின் கூட்டுக்குள்
    என் இதயம்
    அதிலும் ...அன்பால் அடைபட்டுக்
    கிடக்கும் போது......
    இருவரின் இதயப் பிரிவால்...
    என் முழு இதயம் கொஞ்சம்,கொஞ்சமாய்...
    செயலிழந்து பாதி கரைந்து விட்ட போது.....தான்!!}}

    அந்த இதயம் முழுவதும் சிவப்பல்ல...இரத்தோட்டம் குறைகிறது!
    எதனால்!!??
    கவிதைக்கு போடும் படமும் சாட்சிதான்.

    உங்களுக்கு நூறு புள்ளிகள் கூடக் கிடைக்கலாம்
    தப்பில்லை உங்கள் நோக்கும் கருத்தும் அப்படி!!

    என் நோக்கும் கருத்தும் நான் எழுதியது
    வசந்து நேரடியாக்க கேட்டதற்கு நன்றி
    எனக்கும் இந்தப் பழக்கம்தான்!!

    அவள் வருவாளா?? பதில் தருவாளா??
    பதில் வரும்!வரும்!! அது வரும் வரை
    கொஞ்சம் பொறும்!பொறும்!!

    ReplyDelete
  27. தவறாக ஏதேனும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்

    விஜய்

    ReplyDelete
  28. \\\\நீ என்னை அழைத்த வேளையில்
    தொலையும் என்னை
    இழுத்து நிறுத்திக் கொண்டிருந்தேன்\\\\

    வசந்தின் கருத்து இது
    அவர்ர்ர்ர்ர் கூப்பிட்ட பொழுது அவரின்
    குரல் மயக்கத்திலோ இல்லை அன்பிலோ தான்
    தொலைவதை தானே அறிந்து அதை தடுத்து
    தனக்குள்ளே தடை போட்டு கொள்கிறார் நாயகி


    என் கருத்து
    நான் ஏதோ ஒரு விதத்தில்...
    {பல காரணங்கள் அடங்கலாம்}
    நான் நானாக இல்லாமல்
    கொஞ்சம் கொஞ்சமாய்....
    நினைவுகளால் ,எண்ணங்களால்.
    {உடலாலல்ல}உள்ளத்தால்
    தொலைந்து கொண்டிருந்த
    வேளையில் தான்!!

    உன் பழக்கம் {சிநேகம்} கிடைத்து
    உன் பேச்சால்.....{பழைய நினைவுகளில்
    இருந்து}விடுபட்டுக் கொள்ள முயச்சிக்
    கிறேன்

    ஒருவருக்கொருவர் கருத்து வேறு
    படுகிறதல்லவா!!
    இதுதான் ஜய்யா! பின்னோட்டம்

    ReplyDelete
  29. கவிதை அருமை.
    இரும்புக் குழாய்க்குள் வயலின் ஒலியா...அது என்ன....பசலையா...பசளையா என்றெல்லாம் சந்தேகம் கேட்க எண்ணியிருந்தபோது கலாவின் விளக்கத்தைப் பார்த்தேன்..பின்னர் வசந்தின் போழிப்புரையைப் பார்த்தேன். என் பார்வை வசந்தோடு ஒத்துப் போகிறது...
    ப்ளீஸ் வசந்த் இனி ஒவ்வொரு கவிதைப் பக்கங்களுக்கும் முதல் ஆளாய் வந்து பொழிப்புரை எழுதி விடவும்...எங்களுக்கு உதவியாய் இருக்கும்.
    கலா..புலவர்களுக்குள் சண்டை இருக்கலாம். பரவாயில்லை...நாங்கள் ரசிக்கிறோம்...
    ஹேமா...இரும்புக் குழாய் வயலின் மட்டும் விளக்கி விடவும்...

    ReplyDelete
  30. கவிதை அருமை.

    ReplyDelete
  31. மிக சிறந்த கவிஞராக உருவெடுத்து வருகிறீர்கள் சகோதிரி.

    ReplyDelete
  32. மேவீ என்ன நக்கீரர்மாதிரி ஏதாச்சும் குத்தம் குறை சொல்லாமப் போகமாட்டிங்களோ ?

    இப்ப என்ன கும்மியடிக்கணுமா ?அதுக்குன்னே ஒரு கவிதை எழுதிட்டு ஒரு நாளைக்கு எல்லாருமாச் சேர்ந்தே கும்மியடிக்கலாம்.
    சரியாடா தம்பி !

    :::::::::::::::::::::::::::::::::::

    அப்பாடி ஒரு வார்த்தை அஷோக்.
    நினைச்சேன்.தூக்குக்கயிறு அடுத்துக் கூண்டுன்னு.அந்தக் கவிதைக்கு அந்தக் கூண்டு பொருத்தமாயிருக்கே !

    ::::::::::::::::::::::::::::::::::

    நவாஸ்....என்ன மிஸ்டு காலா !பாக்கலாம் பாக்கலாம்.அடுத்ததும் திட்டியே எழுதிடுவேன்.

    ::::::::::::::::::::::::::::::::::

    நன்றி ஆரூரன்.வரவுன்னு போட்டுக்கிறேன்.சரியா
    வாறதில்ல.ஆமா !

    :::::::::::::::::::::::::::::::::

    அண்ணாமலையாரே இருங்க இருங்க.ஒண்ணுமே புரியலா ?நல்லதாப்போச்சு !

    ReplyDelete
  33. இதுக்கு முன்னாடி என்ன பிரச்சனை?

    கவிதை நல்லாயிருக்கு.

    (ஹேமா. உங்க டெம்ப்ளேட் கலரை மாற்றினால் படிக்க ஏதுவாக இருக்கும்)

    நன்றி.

    ReplyDelete
  34. என்னருமைத் தோழியே என் சகியே அன்பு கலாவே ,என்னவென்று சொல்வேனடி உன் அறிவையும் உன் தமிழ் ஆர்வத்தையும்.

    என்ன அழகா கருத்துச் சொல்லி சிலசமயம் என்னையே குழப்பியடிக்க உங்களால்தான் முடிகிறது.அவ்வளவு அருமை பொழிப்புரை.

    என்றாலும் என் கரு வேறாய் இருக்கிறது.இருங்கோ இருங்கோ சொல்றன்.

    :::::::::::::::::::::::::::::::::

    தமிழுதயம் சொல்லிக்கொள்ளாமல் சிலசமயம் விருந்தினர்கள்.என் விட்டுக்குள் இப்போ !

    ::::::::::::::::::::::::::::::::

    பாலாஜி...ரசிப்போடு மட்டுமில்லாம ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்க.
    அப்பதான் சரியாத் தூக்கம் வரும்.

    ::::::::::::::::::::::::::::::::

    கார்த்திக்...நம்ம மக்களெல்லாம் இதுக்கெல்லம் பயந்திட்டாலும்...நல்ல கதைதான் !

    :::::::::::::::::::::::::::::::::

    நசர்,நீங்க உங்க அமெரிக்க நேரத்துக்கு வந்திட்டுப் போனா என்ன தெரியும் உங்களுக்கு?பகல்ல எல்லாம் நடந்து முடிஞ்சுபோகும்.அப்புரம் வந்து என்ன - எப்போன்னு கேளுங்க.

    பாருங்க இவ்ளோ பெரிசா ஒரு பின்னூட்டம் கடிக்கிறமாதிரி.இருங்க நான் தந்தியடிக்காமலே ஒரு நாளைக்கு வந்து உங்க குரல்வளையக் கடிச்சு வைக்கிறேன் !

    ReplyDelete
  35. வசந்து....அசத்திட்டீங்க.35 மாக்ஸ் இல்ல.அதையும் தாண்டி 60 தரலாம்ன்னு நினைக்கிறேன்.என் மன எண்ணத்தின் முக்கால்வாசி புரிஞ்சிருக்கிறீங்க.கலா புரிஞ்சுகொண்டது வேறொரு பக்கம்.அது அவரின் கற்பனை.

    //கம்பீரமாய் மயக்கினாலும்
    அன்று இரும்புக் குழாய்களுக்குள் சிக்கி
    வயலின் இசைத்த நிகழ்வொன்றை
    வந்து கலைத்தது உன் குரல்.//

    [உருவோ இல்லை அவர்ர்ர்ர் குரலோ கம்பீரமா இருந்தாலும் இரும்புக்குழாய்க்குள்ளே வயலின் இசைத்தால் எப்படி எதிரொலிக்குமோ அது போல் நாயகியின் காதை பதம் பார்த்ததாக எடுத்து கொள்ளலாம்]

    இது மட்டும் தப்பு.போரின்போது சிலசமயங்களில் பெரிய இரும்புக்குழாய்க்குள்ளும்கூட ஒளிந்திருக்க வரும்.சூழ்நிலையைப் பொறுத்து அப்போதும் பாட்டும் பாடலாம்.வயலினும் வாசிக்கலாம்.
    நாயகனின் குரல் மயக்கினாலும் அந்த நிகழ்வுக்கு அல்லது அந்த இசைக்கு இணையில்லை என்பதுபோல.
    அல்லது அந்தக் கற்பனையைக் கலைக்கிறது நாயகனின் குரல்.

    ReplyDelete
  36. ஜெரி...வாத்தியாரே உங்க வரவே இப்பிடி இருந்திட்டு ஒரு நாளைக்கின்னா உங்ககிட்ட படிக்கிற பசங்க எப்பிடி வருவாங்க.ஒழுங்கா சரியா வந்திடுங்க.இனி உங்களை முட்டுக்காலிலதான் நிப்பாட்டணும்.
    ம்ம்ம் !

    ::::::::::::::::::::::::::::::::::

    அருணா.... எங்கடா அஷோக் ரைட்டு சொல்லலியேன்னு பாத்தேன்.பரவாயில்ல.நீங்க அந்த இடத்தைப் பிடிச்சு நிரப்பிட்டீங்க.
    சந்தோஷம்.பாருங்க அஷோக் என்ன அழகாச் சிரிக்கிறார்ன்னு.

    :::::::::::::::::::::::::::::::::

    ஜெயா முதல்ல நன்றி.உங்க பெயரைத் தமிழில் போட்டிருக்கீங்க.

    உங்களுக்கும் கலாவுக்கும் சொல்லணும்ன்னு இருந்தேன்.
    கலாவும் மாத்திருக்கிறார்.
    சந்தோஷமாயிருக்கு.

    உங்கள் ரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயா.படத்துக்கும் கூட கருத்து.நன்றி ஜெயா.

    :::::::::::::::::::::::::::::::::::

    வாங்க ராதாகிருஷ்ணன்.
    கருத்துக்கு நன்றி.

    ::::::::::::::::::::::::::::::::

    விஜய்...என்னை வீட்ல உங்ககிட்ட எல்லாம் மாட்டிவிடணும்ன்னு வசந்துக்கு ரொம்ப நாளா ஆசை.

    யாரோ என்கிட்ட சேட்டை பண்றாங்கன்னுதான் நினைச்சேன்.
    நீங்கன்னு நினைக்கவேயில்லை.
    கவிதைக(ள்)ன்னு காணோம்.
    அதாலதான் பாத்திட்டு இருந்தேன்.
    இதுக்கெல்லாம் என்ன மன்னிப்பு.

    உண்மையாவே எனக்கு நேரமின்னை காரணத்தாலும் ஏதோ பயம் காரணமாவும் மின்னஞ்சல் முகவரி போன் நம்பர் கொடுக்கிறதில்ல.
    மன்னிச்சுக்கோங்க விஜய்.

    ReplyDelete
  37. வாங்க கமலேஸ்.சின்னதாய் உங்க கருத்துக்கும் நன்றி.

    ::::::::::::::::::::::::::::::::

    ரவி...பதிவில வேணும்ன்னா சொல்லிவிடலாம்.நல்ல அரசமரமா பாத்துத் தருவாங்க யாராச்சும்.சொல்லட்டுமா !

    ::::::::::::::::::::::::::::::::::

    டாக்டர் என்ன செய்ய எனக்கும் சிகரெட் மணம் எனக்கும் முந்திப் பிடிக்காமத்தான் இருந்திச்சு !

    ::::::::::::::::::::::::::::::::::

    கோபி...என்ன வசந்த் சொன்னார்.எங்க தப்பிச்சேன்.
    இருங்க.ஓடாதீங்க.

    நம்பிட்டு இருக்கேன்.கவிதை எழுதிடுங்க.இனி அடிக்கடி இப்பிடி வரும்.கவனிச்சுக்கோங்க.

    ::::::::::::::::::::::::::::::::

    புலவரே மிக்க மிக்க.
    நன்றி தொடர்ந்த கருத்துக்கும்.

    ::::::::::::::::::::::::::::::::

    பித்தரே என் பெயரைச் செல்லமா மாத்திட்டீங்க.பிடிச்சிருக்கு.

    :::::::::::::::::::::::::::::::

    சங்கர் சந்தோஷம்.எங்கே அடிக்கடி காணாமப் போறீங்க.பதிவையும் காணல.

    ::::::::::::::::::::::::::::::::

    ஜமால் முதல் கவிதைல நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன்.அதான் சும்மா ஒரு சாமாளிப்பு.

    ReplyDelete
  38. கலா உங்க பெயர் தமிழ் ல வருது சந்தோஷமாயிருக்கு.நானே சொல்லணும்னு இருந்தேன்.

    {{இன்னொருவரின் கூட்டுக்குள்
    என் இதயம்
    அதிலும் ...அன்பால் அடைபட்டுக்
    கிடக்கும் போது......
    இருவரின் இதயப் பிரிவால்...
    என் முழு இதயம் கொஞ்சம்,கொஞ்சமாய்...
    செயலிழந்து பாதி கரைந்து விட்ட போது.....தான்!!}}

    இது உங்கள் கருத்து கலா.படம் நான் என்ன நினைச்சுப் போட்டேன் என்றால் நாயகிக்குக் காதல் பிடிச்சிருந்தாலும் ஏதோ ஒரு கடமைக்குள்ளோ கட்டாயத்துக்குள்ளோ அகப்பட்டுக் கிடக்கிறபடியால் காதலைக் கூண்டுக்குள் வைக்கிறாள்.

    உங்க ரெண்டு பேருக்குமே புள்ளிகள் கிடையாது.வசந்தின் கருத்து ஓரளவு என்னோடு ஒத்துப் போச்சு.கலா,
    உங்க கருத்தும் வித்தியாசமான கோணம்.அப்போ புத்தாண்டு வாழ்த்து மட்டும் மூணு பேருக்கும் சொல்லிக்கலாம்.

    ReplyDelete
  39. நன்றி ஆனந்த்.உங்கள் வாழ்த்தும் பாராட்டும் என்றும் என்னை எழுதவைக்கும்.

    :::::::::::::::::::::::::::::::::::

    நன்றி வேல்கண்ணன்.என்ன சுருக்கமாவே சொல்லிட்டீங்க.

    :::::::::::::::::::::::::::::::::

    ஸ்ரீராம் பசளைதான் (உரம்).

    நீங்க கவலைப்படாதீங்க வசந்தும் கலாவும் பொழிப்புரை தருவாங்க.
    ஆனா எங்களையே குழப்பிடுவாங்க.
    கவனமா இருக்கோணும்.

    இரும்புக் குழாய்குள் வயலின் இசை.வசந்தின் பின்னூட்டத்தில் விளக்கியிருக்கிறேன்.ஒளிந்திருப்பது அல்லது எமக்கென்ற இருப்பிடமின்றி இருப்பதும் அதன் கடமைகளுமே அங்கு முக்கிய கண்ணோட்டம்.

    ::::::::::::::::::::::::::::::::::

    வாங்க அக்பர்.எனக்கொண்ணும் பிரச்சனை இல்ல்லியே யார் சொன்னா ?

    ஏன் இந்த டெம்ப்லெட் சரில்லையா.புது வருசத்தில கொஞ்சம் மாத்தலாம்ன்னு இருக்கேன்.

    ReplyDelete
  40. கவிதை எழுதுவது ஒரு திறமை என்றால் அதற்கு அருஞ்சொற்பொருள் எழுதுவதும் திறன் தான்.

    திருக்குறளுக்கு பரிமேழகர் முதல் பாப்பையா வரை எத்தனை உரைகள்.

    நாம வாசகனாகவே இருப்போம்.

    ReplyDelete
  41. //மண்ணின் பசளைக்காகவே
    பயிரிடப்படுவது போலானது
    என் மண்ணில் பலர் வாழ்வு//

    உயிரை தொட்டது இந்த வரிகள்..

    அபாரமா எழுதறீங்க ஹேமா...

    ReplyDelete
  42. Hello

    The black back ground is a bit too stark...A light background with dark fonts would be more pleasing and readable.

    Wellwisher

    ReplyDelete
  43. கவிதை ரசிக்கும் வகையில் அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் . வாழ்த்துகள் !!!!

    ReplyDelete
  44. அன்புக் ஹேமாவுக்கு!
    மிகமிக நன்றி.
    இந்த நன்றி உங்கள்{பயந்தாங் கொள்ளித்
    தனத்திலிருந்து வெளிவந்து}
    பதில் கொடுத்ததற்கு!!

    மடியில் கனமிருந்தால்...
    வழியில் பயம் வரும் என்பார்கள்!!

    நாம் எதற்கும் பயப்படக் கூடாது
    தைரியமும், துணிவும்தான் நமக்குப்
    பலம்.இதை கொஞ்சம் கூட நாம்
    இழக்கக் கூடாது


    என் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கும் ,
    அன்புக்கும்........

    மிக்க நன்றி என் சின்னக் குட்டி ஹேமாவுக்கு!!

    ReplyDelete
  45. //உன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்
    என் இறப்பு இன்றைய நாளிலேயே//
     
    அட.. :-)

    ReplyDelete
  46. வாங்க பெருமாள்.நீங்க சுகமான்னு கேட்டது ....விஜய் படங்கள் போட்டு எரிச்சலாயிருக்கீங்க.அதுதான் அப்பிடிக் கேட்டேன்.

    உப்புமடச்சந்தியில கவிதை ஒண்ணு எழுதச் சொல்லியிருகேன்.
    பாருங்க.எழுதலாம்.

    ::::::::::::::::::::::::::::::::

    தமிழரசி...உணர்வுகளின் வெளிப்பாடுதானே வரிகள்.அதைக் கவிதை என்கிறோம்.உங்கள் கவிதைகளும் அப்படியே .

    ::::::::::::::::::::::::::::::::

    Wellwisher ன்னு வந்து என்னை அடிக்கடி உற்சாகப்படுத்தும் தோழருக்கு மிக்க நன்றி.

    ஏன் வயசானவரா நீங்க ?கண்ணு தெரிலயா ?எனக்கு இந்தக் கறுப்புப் பிடிச்சிருக்கே.நிறையப்பேரை இந்த டெம்லேட் பிடிக்க்லன்னு கை தூக்க வையுங்க.புது வருஷத்தில மாத்திக்கிறேன்.அதோட நீங்க யார்ன்னும் சொல்லணும்.சரியா.

    :::::::::::::::::::::::::::::::::

    கவிஞர் சங்கர் வணக்கம்.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.நிறைந்த பதிவாளராய் உங்கள் பதிவில் பார்த்தேன்.ஆனாலும் இன்றுதான் உங்களைக் காண்கிறேன்.
    உங்கள் வாழ்த்துக்கள் மனதிற்குச் சந்தோஷமாய் இருக்கிறது.

    :::::::::::::::::::::::::::::::::

    கலா உங்கள் அன்பிற்கு அளவேயிலை.எனக்குள் பயம் இன்னும் விதம் விதமாய் இருக்கத்தான் இருக்கிறது.

    எந்தப் பயம் இப்போது தெளிந்திருக்கிறது ?உள்ளதை உள்ளபடி சொல்வதா ?அது எப்பவுமே என் சுபாவம்.அதனால்தான் சிலசமயங்களில் பதில் பின்னூடம் தருவதில்லை.தந்தால் உண்மை சொல்லித் திட்டும் வாங்கவேணும்.

    அதுசரி...எங்கே எங்கள் கருப்புத் தங்கம்.சுகமாய் இருக்கிறார்தானே.

    ::::::::::::::::::::::::::::::::::

    நன்றி உழவன்.உங்க கருத்துக்கு அன்போடு நன்றி.

    ReplyDelete
  47. உன் குரலுக்குள் நான் அடங்கிவிட்டால்
    என் இறப்பு இன்றைய நாளிலேயே.
    என்னவோ செய்கிறது .. இந்த வரி.. என்னுள் உட்புகுந்து..

    ReplyDelete
  48. //எங்கே எங்கள் கருப்புத் தங்கம்.?...//

    ஹேமா,

    தேடித்தேடி ரொம்ம்ப க(இ)ளைச்சி போயிட்டீங்க போல...!

    இதோ ஓடோடி வந்துட்டேன்.

    //சமயம் கிடைக்கும்போது வா
    என்னோடு. நீயும் காண !!!//

    இப்படிச் சொல்லிட்டு, தேடிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்?
    சமயம் கிடைக்க வேணாமோ?

    //நீ என்னை அழைத்த வேளையில்..//

    வருஷக் கடைசி...கொஞ்சம் கூடுதலான வேலை.

    //வந்து கலைத்தது உன் குரல்.//

    இல்லை. வந்து கலைத்தது உன் கவிதை.

    ReplyDelete
  49. நீ என்னை அழைத்த வேளையில்
    தொலையும் என்னை
    இழுத்து நிறுத்திக்கொண்டிருந்தேன்.

    ஹேமா,

    இந்தப் பிடிவாதம் தான் எனக்குப் பிடித்திருக்கிறது, கவிதையில்!


    //மண்ணின் பசளைக்காகவே
    பயிரிடப்படுவது போலானது
    என் மண்ணில் பலர் வாழ்வு.//

    எப்போதும் போல் சோகத்தைச் (உண்மையைச்) சுமக்கும் வரிகள்.

    படிக்கையில்...கவிதையுடன் உன்னைப் பின் தொடரும் வாசகன் என் கால்கள்.

    அருமைன்னு சொல்லப் பிடிக்கல. உண்மையையும், வலியையும்..சொல்லிக்கொண்டிருக்கையில் எனக்குள் ரசனை எங்கிருந்து வரும்?

    ReplyDelete
  50. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  51. பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக

    நமது வலிகளும் ரணங்களும் அகண்று

    பலைய சுகங்களும் சொந்தங்களும் கூடவே வர

    வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
  52. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  53. //சொல்லிகொள்ளாமலே வருகிறது
    என் அறைக்குள்
    இரவும் பகலும்
    சந்திரனும் சூரியனும்
    பெயர் தெரியாத பூவின் வாசனையும்
    உன் சுவாசம் கலந்த
    சிகரெட்டின் வாசனையும் கூட.//

    அருமை ஹேமா ரொம்ப சரளமாக இருக்கு இந்த வரிகள் ..யாருக்காகவோ எழுதுனதே இவ்வளவு நல்லா இருக்கே ஹேமா ...

    ReplyDelete
  54. நல்லா இருக்கு ஹேமா...(நன்றி பிரியமுடன் வசந்த்)

    இப்பல்லாம் கமெண்ட் படிச்சப்புறம்தான் கவிதையில் உள் நுழைய முடிகிறது.இருந்தும் மயக்கும் வரிகள்...

    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. நல்லாயிருக்கு ஹேமா.. எல்லா கவிதைகளையும் வர்ணித்தால் அனைத்து கவிதைகளையும் வாசிக்க நேரமிருக்கனும்.

    ReplyDelete