Saturday, December 26, 2009

முடியாத இரவொன்றில்...


மாட்டிய கயிற்றின் இடைவெளியில்
என் இறுதி மூச்சு.
அதுக்கும் எனக்குமான தூரம்
ஒன்றும் அதிகமில்லை.

முரண்பாடுகளோடுதான்
நேற்றைய கனவும்.
வாதாடிய முகம் நெருக்கமானதாய்
என் கையைப் பிடித்தே
என் குரல்வளை நெரித்தபடி அது.

முன்னைய இரவுகளிலும்
கனவுகள் கலைத்து
நானே என் கனவைக்
கலைத்துக்கொண்டதாய்
குற்றம் சுமத்தியுமிருக்கிறது.

வண்டாய் என் மகிழ்ச்சி குடைந்து
மண்ணுக்குள் புதைத்து,
சிரிப்பைப் பறித்து
திரும்பவும் எனக்கே
சில்லறைக்கு விற்பனை செய்து
சித்திரவதை செய்யும் சனியன் அது.

காற்றுப் புகவும்
கவிதை எழுதவும் கதவடைத்து,
அணிலும் குயிலும் கடித்த மாங்காயை
பறித்துண்ணவும் பழகியிருக்கிறது.

மனம் முட்டி எழுத நினைக்கையில்
எழுதுகோல் ஒழித்து,
கூரை தட்டி மழை தரும் கவிதை
தடுக்கும் பிசாசு.
இனியும்....
நான் இருக்கப் போவதில்லை இதனோடு.

தடுக்கமாட்டீர்கள்
நீங்கள் யாரும் என்னை.
ஏனென்றால்
நீங்களும் கூட்டுத்தானே அதனோடு.

யாரோ ஒரு கை என் கயிறறுத்து
சொல்லட்டும் நாங்களில்லை
அது உன்னோடு உறங்கும்
தாழ்வான எண்ணமென்று.
தொங்கியபின் பின்னால் சொல்வீர்கள்
ஐயோ பாவமென
அதுவும் எனக்குத் தெரியும் !!!

ஹேமா(சுவிஸ்)

44 comments:

  1. ///முன்னைய இரவுகளிலும்
    என் கனவுகள் கலைத்து
    நானே என் கனவைக்
    கலைத்துக்கொண்டதாய்
    குற்றம் சுமத்தியுமிருக்கிறது.///

    இயலாமையின் வெளிப்பாடு நன்றாக வந்திருக்கிறது

    ReplyDelete
  2. ///வண்டாய் என் மகிழ்ச்சி குடைந்து
    மண்ணுக்குள் புதைத்து
    சிரிப்பை பறித்து
    திரும்பவும் எனக்கே
    சில்லறைக்கு விற்பனை செய்து
    சித்திரவதை செய்யும் சனியன் அது.///

    கூல் கூல் ஹேமா.

    ReplyDelete
  3. யாரோ ஒரு கை என் கயிறறுத்து
    சொல்லட்டும் நாங்களில்லை
    அது உன்னோடு உறங்கும்
    தாழ்வான எண்ணமென்று.
    தொங்கியபின் பின்னால் சொல்வீர்கள்
    அதுவும் எனக்குத் தெரியும் !!!
    ஹப்பா.. இந்த சாடல் யாருக்கு.. அதே கயிற்றை உத்திரத்தில்.. வேண்டாம்.. சுழற்றலாம்.. எதிரிகளை நோக்கி.. கயிற்றுக்குப் பதில் கவிதையாய்.. இப்போது சொல்லப் போவதெல்லாம்.. ‘இறங்கி வா.. மனம் மாற்றிக் கொள்..நாங்கள் இருக்கிறோம்..’ மட்டுமே..

    ReplyDelete
  4. //அது உன்னோடு உறங்கும்
    தாழ்வான எண்ணமென்று.//

    அப்படியாயின் அதுதானே உண்மை.

    கவிதை நல்லாருக்கு...கொஞ்சம் புரியவும் மாட்டேங்குது. (என்னை வாத்தியாரே மரமண்டைன்னுதான் சொல்லுவாரு)

    ReplyDelete
  5. முன்னைய இரவுகளிலும்
    கனவுகள் கலைத்து
    நானே என் கனவைக்
    கலைத்துக்கொண்டதாய்
    குற்றம் சுமத்தியுமிருக்கிறது]]

    அருமை ஹேமா!

    ReplyDelete
  6. //சில்லறைக்கு விற்பனை செய்து
    சித்திரவதை செய்யும் சனியன் அது.//
    ஏன் இவ்வளோ விரக்தி..?

    BT கவிதை நல்லா இருக்குங்க :)

    ReplyDelete
  7. யாரோ ஒரு கை என் கயிறறுத்து
    சொல்லட்டும் நாங்களில்லை
    அது உன்னோடு உறங்கும்
    தாழ்வான எண்ணமென்று.
    தொங்கியபின் பின்னால் சொல்வீர்கள்
    அதுவும் எனக்குத் தெரியும் !!!

    உண்மை ஹேமா..அரவணைக்காத அத்தனை கைகளும் வாயும் சொல்லுவது இதை தான்...

    கவிதை என் உணர்வுக்காக படைக்கப்பட்டதை போன்ற ஒரு உணர்வு..பெரும்பாலோர் உணரும் வலி

    ReplyDelete
  8. பெரும்பாலோர் உணரும் வலி”
    ஆமாம்

    ReplyDelete
  9. என்னதிது எங்கு போனாலும் ஒரே சண்டையா இருக்கு...கலகலப்ரியா வேறு அங்க யாரையோ தாளிச்சுக்கிட்டு இருக்கு..இங்க வந்தா நீ கயிறோடு நிற்கிறாய்.என்னவோ போங்கப்பா..

    ஆனால் உணர்வு இறங்கி இருக்கிறது,கவிதையில்!

    அதற்க்கு என் அன்பு!

    ReplyDelete
  10. உணர்வுக் கவி..அருமை ஹேமா..

    ReplyDelete
  11. இயலாமையின் வெளிப்பாடு நன்றாக வந்திருக்கிறது

    ReplyDelete
  12. //வாதாடிய முகம் நெருக்கமானதாய்//

    தெறிப்புகள் அற்புதம்

    ReplyDelete
  13. gud.

    regards,
    ram.
    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  14. பெரும் பாலான மனங்களின் வலி இது, அருமை ஹேமா.

    ReplyDelete
  15. உணர்வுப்பூர்வமாக எழுதுவதில் உங்களை அடித்துக் கொள்ள முடியாது தோழி.. வெறுமையான வாழ்க்கையை கண்முன்னே சித்தரிக்கிறீர்கள்..

    ReplyDelete
  16. அருமைங்க ஹேமா...

    தழ்வுமனப்பான்மையை வெட்டியெறிந்தால்தான் வெல்லமுடியும்..!

    ReplyDelete
  17. எறும்புகளாக இருந்தால் என்ன... மனிதர்களாக இருந்தால் என்ன... கண்கள் உள்ளவரை நிற வேற்றுமை இல்லாமல் போகாது.

    ReplyDelete
  18. //தடுக்கமாட்டீர்கள்
    நீங்கள் யாரும் என்னை.
    ஏனென்றால்
    நீங்களும் கூட்டுத்தானே அதனோடு.//

    ஏனிந்த எண்ணம் ஹேமா....

    //யாரோ ஒரு கை என் கயிறறுத்து
    சொல்லட்டும் நாங்களில்லை
    அது உன்னோடு உறங்கும்
    தாழ்வான எண்ணமென்று.
    தொங்கியபின் பின்னால் சொல்வீர்கள்
    அதுவும் எனக்குத் தெரியும் !!!//

    இதுபோன்ற வேண்டாத பேச்சுகளை இனி எப்போதும் பேசாதீங்கோ....

    ReplyDelete
  19. வித்தியாசமா இருக்கு ஹேமா...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. //யாரோ ஒரு கை என் கயிறறுத்து
    சொல்லட்டும் நாங்களில்லை
    அது உன்னோடு உறங்கும்
    தாழ்வான எண்ணமென்று.//

    நான்கூட ...
    ---

    ஒரு மாறுதலுக்கு அதயோ அல்லது அந்த இரவையோ தொங்கவிடவும்.

    ReplyDelete
  21. நல்லா வந்திருக்கு கவிதை !!!

    ஆனா எனக்கு தான் கொஞ்சம் புரியல..இருந்தாலும் வார்த்தைகளை ரசித்தேன்.
    தொடர்ந்து எழுதுங்கள் ஹேமா !!!

    ReplyDelete
  22. வித்தியாசமாக ஆழமாக இருக்கு ஹேமா. கவிதை முழுக்க உணர்வு கொட்டிக் கிடக்கிறது.
    அது ஏனோ தூக்குக் கயிறைக் கண்டதும் மனம் பதைக்கிறது.

    ReplyDelete
  23. //யாரோ ஒரு கை என் கயிறறுத்து
    சொல்லட்டும் நாங்களில்லை
    அது உன்னோடு உறங்கும்
    தாழ்வான எண்ணமென்று//

    உண்மை ஹேமா அவ்வப்போது இது போல் எண்னங்களால் நாமே நம் கதவை அடைத்துக் கொள்கிறோம் ஹேமா

    ReplyDelete
  24. நல்ல பதிவு

    அன்புடன்
    ராம்

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  25. அத்தனை வரிகளையும் இரசித்தேன் அழகான வரிகள்.

    ReplyDelete
  26. தாழ்வு மனப்பான்மையை
    தாம்பூல தட்டு வைத்து வரவேற்பானேன்
    அலட்ச்சியம் செய்துவிட்டு
    அடுத்த வெற்றிக்கு அஸ்திவாரமிடாமல்...
    நன்றி ஹேமா
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  27. Come out of inferiority complex Hema.

    ReplyDelete
  28. ஆறுதல்களும் நியாயங்களும் அடுத்தவங்களுக்கு மட்டும்தானா?

    தற்கொலை என்பது தற்காலிகப் பிரச்னைகளின் நிரந்தர தீர்வு...

    கவிதையைப் பொறுத்தவரை நடை பிரமாதம்...(ஹேமா எழுத கேட்கணுமா?)

    வரிகளைத் தனியாய்ச் சுட்டினால் பின்னூட்டம் நீளும்.

    ReplyDelete
  29. திரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களா ?

    அடுத்த கவிதை மகிழ்வுடன் தரவும்

    விஜய்

    ReplyDelete
  30. Hema,

    U r one of the very few who deserves all appreciations for the style and content. Keep it up.

    ReplyDelete
  31. வாங்க நவாஸ்.என்னமோ ஒரு மனக் குழப்பம்.அவ்ளோதான்.

    :::::::::::::::::::::::::::::::::::

    வாங்கோ அஷோக்.என்ன சொல்றீங்கன்னே புரியல.அழுகையா சிரிப்பா கோவம அதிர்ச்சியா ?எப்பவும் உங்க பின்னூட்டம் என்னை யோசிக்க வைக்குது.

    ::::::::::::::::::::::::::::::::::

    நன்றி ரிஷபன்.எனக்குன்னு ஒண்ணுமில்ல.பொதுவாத்தான் யோசிச்சேன்.எதுக்கும் உங்க ஆறுதலுக்கு நன்றி.நீங்களெல்லம் இருக்கிறப்போ எப்பிடித் தூக்கில தொங்கமுடியும் !

    :::::::::::::::::::::::::::::::::

    பாலாஜி நீங்க மரமண்டையா !எந்த வாத்தியார் சொன்னார்.அவருக்குத் தெரில உங்களை.அதான் அப்பிடிச் சொல்லிட்டார்.

    ::::::::::::::::::::::::::::::::

    ஜமால் வாங்க.புது வருஷம் சந்தோஷமா பிறக்கட்டும்.

    ::::::::::::::::::::::::::::::

    சிவாஜி ....சும்மாதான்.நடுநடுவில இப்பிடியும்தா.

    ::::::::::::::::::::::::::::::::::

    தமிழரசி கவிதைவரிகள் உங்களுக்கும் மாதிரியா !அப்போ நீங்க என் கட்சி.

    ::::::::::::::::::::::::::::::::::

    அண்ணாமலை...பாத்தீங்களா கவிதை எனக்கு மட்டுமில்ல.
    எல்லாருக்கும்தான்.

    ::::::::::::::::::::::::::::::::

    அண்ணா உங்களைமாதிரி சிரிக்கச் சிரிக்கச் சந்தோஷமா எழுத வரமாட்டுதாமே.என்ன பண்ணலாம் !

    ReplyDelete
  32. புலவருக்கும் நன்றி.உணர்வுகள்தானே எழுத்துக்களாய்.
    எழுதமுடியாவிட்டால் .....?

    ::::::::::::::::::::::::::::::::::

    வாங்க ராதாகிருஷ்ணன்.இயலாமை என்பது எல்லாருக்கும் உள்ளதுதானே.தாங்கும் சக்திதான் வித்தியாசப்படுகிறது.

    :::::::::::::::::::::::::::::::::::

    நேசன் என்னைத் திட்டணும்ன்னு தோணலியா ?

    :::::::::::::::::::::::::::::::::

    நன்றி ராம் உங்கள் முதல் வருகைக்கு.

    :::::::::::::::::::::::::::::::::

    ஜெயா எல்லோர் சார்பிலும்தான் இந்த உணர்வுத் தெறிப்பு.

    ::::::::::::::::::::::::::::::::::

    நன்றி கார்த்திக்.எங்க கணோம்ன்னு தேடிக்கிட்டு இருந்தேன்.அடிக்கடி என் பக்கம் வராம போறீங்க.

    :::::::::::::::::::::::::::::::::

    வசந்து....என்னைப்பத்தித் தெரியாதா ?எனக்கா தாழ்வு மனப்பாண்மை !

    ::::::::::::::::::::::::::::::::

    தமிழ்...சரியா ரொம்ப அழகாச் சொல்லியிருக்கீங்க.கண்தான் கலர் மாத்திக் காட்டுது.

    ::::::::::::::::::::::::::::::::::

    துபாய் ராஜா...ரொம்ப டென்சனா ஆயிட்டீங்களா ?இடைக்கிடை உங்களை இப்பிடி ஆக்கணும்.அதான் இப்பிடியெல்லாம் பேசறேன்.
    கண்டுக்காதீங்கோ.

    ReplyDelete
  33. தமிழ்ப்பறவை அண்ணா நல்லா திட்டுவீங்களோன்னு பாத்திட்டு இருந்தேன்.வித்தியாசமாயிருக்குன்னு வாழ்த்தும் வேற.அப்பாடி...!

    :::::::::::::::::::::::::::::::::::

    ரவி...எனக்கு பதிலா வேற யாரையாச்சும் தூக்கில தொங்கவிடணுமா !
    சரி தூக்கிடுவோம்.

    ::::::::::::::::::::::::::::::::::

    என்ன செய்யது.புரியலயா !
    அட போங்க.நான் திட்டு வாங்கிட்டு இருக்கேன்.ரசிச்சு இன்னும் எழுதுங்கன்னும் சொல்லியிருக்கீங்க.
    எனக்கு வாறதெல்லாம் நீங்க வாங்கிக்கிறேன் சொல்லுங்க.

    அதானே போட்டிக் கவிதை இன்னும் பதிவில போடல.அதுவும் இப்பிடி ஒண்ணுதான்.பயத்தில இருக்கேன்.பயந்தா ஆகுமா !

    ::::::::::::::::::::::::::::::::

    ஜெஸி,உங்களைப்போல பயந்தாங்கோழிதான் வசந்தும்.
    படத்தை மாத்தணுமாம்.
    ஏன் வாழ்க்கைன்னா இப்படியும் - இதுவும் இருக்கலாம்தானே.

    :::::::::::::::::::::::::::::::::

    தேனு...வாங்க.கதவுகளை நாங்களே அடைத்துக்கொள்கிறோம்.சிலநேரம் அடைக்கப்படுகிறோம்.அதனால்தான் இப்படியான எண்ணங்கள்.

    ::::::::::::::::::::::::::::::::::

    சந்ரு சுகமா?வானொலியோடு இணையத்துக்குள்ளும் இடைக்கிடை வந்து போகிறீர்கள்.நன்றி.

    ReplyDelete
  34. மணி...இதெல்லாம் சும்மாதான்.நான் நல்ல சந்தோஷமா இருக்கேன்.அடி மனதின் சில வலிகள் அல்லது அடுத்தவர்களின் வலி உணர்வுகள் படமாய் இங்கே.

    :::::::::::::::::::::::::::::::::

    வாங்க டாக்டர்.அப்பிடியொண்ணும் தாழ்வு மனப்பாண்மை இல்ல எனக்கு.யாரைப் பாத்தும் பொறாமைப்படாம எனக்குண்டானது எனக்குன்னு போய்க்கிட்டே இருக்கிற மனசு எனக்கு.கவிதைன்னா பொய்யும் எழுதணுமாம் !

    :::::::::::::::::::::::::::::::::::

    ஸ்ரீராம்,சும்மா....சும்மா....
    கண்டுக்காதீங்க.நான் நல்ல துணிச்சலான பொண்ணுன்னு சொல்லியிருக்கீங்க.அப்புறம் என்ன !

    ::::::::::::::::::::::::::::::::

    விஜய்...இடைக்கிடை இப்பிடியும் எழுதணும்.மனசு இலேசாகுது.
    சொல்ல நினைக்கிறதைச் சிலசமயம் சொல்லிட்டா பெரிசா ஒரு மூச்சு.
    அப்புறம் இப்பிடியெல்லாம்
    எழுத வராது.

    ReplyDelete
  35. ஆகா எப்படி இப்படி எல்லாம். வேணாம் ஹேமு கயிற்றுக்கு வலிக்கும், அறுந்து விடும். அப்புறம் எண்பது கிலோ எடை இந்த சின்னக் கயிற்றில் தொங்கினால் அறுகாமல் எப்படி இருக்கும். ஹா ஹா.

    இது மாதிரி கேணா மாணா வேலை எல்லாம் கற்பனைக் கூட பண்ணாதீர்கள் ஹேமூ. அப்புறம் நாங்க கவலையாகி விடுவேம். நன்றி.

    ReplyDelete
  36. //மனம் முட்டி எழுத நினைக்கையில்
    எழுதுகோல் ஒழித்து,
    கூரை தட்டி மழை தரும் கவிதை
    தடுக்கும் பிசாசு.
    இனியும்....
    நான் இருக்கப் போவதில்லை இதனோடு.//

    மனதில் நிற்கும் வரிகள்........

    ReplyDelete
  37. அட விடுங்க ஹேமா ....... திருவள்ளுவர் சொல்லி, இயேசு சொல்லி, காந்தி சொல்லி, அஜித் சொல்லி திருந்தாதவங்க ...யார் சொல்லியும் திருந்த மாட்டாங்க..

    பிறகு ஹேமா நீங்க எப்புடி இருக்கீங்க ???? வேலை கொஞ்சம் ஜாஸ்தி ஆகிருச்சு ..அதான் கொஞ்சம் LATE

    ReplyDelete
  38. "Your comment has been saved and will be visible after blog owner approval."


    why ???

    ennal kummi adikka mudiyala ....


    இது அமெரிக்க நாட்டின் சதி........

    தனி ஒருவனுக்கு கும்மி அடிக்கும் உரிமை இல்லையென்றால் ....BLOGSPOT யை அழிப்போம்

    ReplyDelete
  39. மேல் மனப்பான்மை பிடிச்சவங்க எல்லாம் இப்படி தான்

    ReplyDelete
  40. //மாட்டிய கயிற்றின் இடைவெளியில்
    என் இறுதி மூச்சு.
    மாட்டிய கயிற்றுக்கும்
    எனக்குமான தூரம் ஒன்றும் அதிகமில்லை.//

    உங்க கவுஜை படிகிறவங்களுக்கு பரிசா ?

    ReplyDelete
  41. //அது உன்னோடு உறங்கும்
    தாழ்வான எண்ணமென்று.//

    அப்படியாயின் அதுதானே உண்மை.

    கவிதை நல்லாருக்கு...கொஞ்சம் புரியவும் மாட்டேங்குது. (என்னை வாத்தியாரே மரமண்டைன்னுதான் சொல்லுவாரு)//

    அதுதான் என் கருத்தும்....என்னையும் வாத்தியாரு அப்படித்தான் சொல்லுவாருங்க

    ReplyDelete
  42. வாங்க பித்தரே.கல்யாண ஏற்பாடெல்லாம் எப்படியிருக்கு ?இதெல்லாம் சும்மா.யாராச்சும் சொல்லிட்டு செய்வாங்களா !

    :::::::::::::::::::::::::::::::::::

    வாங்க சங்கவி.நீங்கதான் கவிதையா ரசிச்சிருக்கீங்க.நன்றி.

    ::::::::::::::::::::::::::::::::::

    டேய்....டம்பி எப்பவும் லேட்.என்ன அப்பிடி வெட்டிக் கிளிக்கிற வேலை.இனி உதை.கும்மி வேறயா ?அதானே வில்லன் ஒருத்தன் பாத்திட்டு இருக்கான் !முதல்ல உங்க அம்மா போன் நம்பர் தாங்க.
    அவங்ககிட்ட சொல்லிட்டு கும்மி அடிக்கலாம்.

    :::::::::::::::::::::::::::::::::

    நசர் மன்னிச்சுக்கோங்க.ஏன் அப்பிடி நினைச்சிட்டீங்க.சும்மா ..பகிடி !

    :::::::::::::::::::::::::::::::::::

    அரசு,யாருக்கு, மரமண்டை இல்ல.கவிதையே அப்பிடித்தான்.
    ஒவ்வொருதருக்கு ஒவ்வொரு கருத்தாய் தெரியும்.எதுக்கும் உண்மை சொல்லி எனக்குப் பேச்சு விழவேணாம்.இவ்வளவும் போதும்.

    எங்க எங்கட கருப்புத் தங்கம் ?காணல.

    ReplyDelete
  43. அனனியாய் வந்து என்னை உற்சாகப்படுத்தும் என் நண்பருக்கு என் நன்றி.ஏன் பெயர் சொல்லலாமே !

    ReplyDelete
  44. யாரோ ஒரு கை என் கயிறறுத்து
    சொல்லட்டும் நாங்களில்லை
    அது உன்னோடு உறங்கும்
    தாழ்வான எண்ணமென்று.
    தொங்கியபின் பின்னால் சொல்வீர்கள்
    அதுவும் எனக்குத் தெரியும் !!!

    ReplyDelete