Friday, November 06, 2009

வெட்கச்சிறை...

பூ போல...
பனித்தூவல் போல...
தூவானம் போல...
யாழின் இசை போல...
அணிலின் கொஞ்சல் போல...
அந்தி வானம் போல...
வேப்பம்பூ மணம் போல...
இன்னும்
போல போல...
உன் வெட்கம்.

ஐயோ...
உன்னையே தின்று தொலைக்கும் அது
அப்போதுதான்
பறக்கப பழகும் பட்டாம்பூச்சிக் கூட்டமாய்
எத்தனை வர்ணங்களில்
குழைத்தெடுக்கிறாய் உன் வெட்கத்தை
கன்னக் குவளைக்குள்
ஒவ்வொரு வெட்கமும்
ஒவ்வொரு சொட்டுக் கவிதையாய்.

நான் கேட்க
நீ மறுக்க
தரத் தயங்கி
பின் உன்னைத் தயார்ப்படுத்த !
ம்ம்ம்...

மகரந்தம் தொடும் கரமாய் நான்
வெட்க நிறங்களாய் நீ
உன் வெட்கம் தொட்டுப் பார்க்க
வெறும் வண்ணப் பொடி மட்டுமே
ஒட்டி முகம் மறைக்கிறாய்.

போடா...
உன் (ஆண்) வெட்கம் என்ன
பிறர்காணா
புது மொட்டின் மலர்வோ !
பார்க்கவும்
பறிக்கவும் கடினமாய்.

ப்ரியமானவனே...
உன் வெட்கச் சிறைவிட்டு
சுலபமாய் வெளிவர
ரகசியம் ஒன்று சொல்லவா
என் இதழ் தொட்டு
முத்த ஒப்பமிடு!!!

வெட்கத்தோடு...ஹேமா(சுவிஸ்)

53 comments:

  1. ஹ்ம்ம் ....



    என்னவோ போங்க !
    சொல்றீங்க ... கேட்டுக்கறோம் !

    ReplyDelete
  2. எனக்கு வெக்க வெக்கமா வருதுங்க !

    ReplyDelete
  3. நீண்ட நாட்களுக்கு பிறகு காதல் ரசம் சொட்டும் கவிதையை இப்போதுதான் படிக்கிறேன் தோழி.மிக அருமை...அனுபவமோ?
    poongundran2010.blogspot.com

    ReplyDelete
  4. ஹை..... சூப்பரா இருக்கே

    ReplyDelete
  5. //மகரந்தம் தொடும் கரமாய் நான்
    வெட்க நிறங்களாய் நீ//

    ஹேமா,

    ம்ம்ம்ம்ம்ம்....! இனி கட்டுப்படுத்த முடியாது.காதலை...!

    ReplyDelete
  6. காதல் நிரம்பி வழிகிறது ஹேமா........

    ReplyDelete
  7. நல்லாருக்கு ஹேமா

    அப்பப்போ இந்தமாதிரி அதிர்ச்சி வைத்தியம் தாங்கோ

    விஜய்

    ReplyDelete
  8. //பூ போல...
    பனித்தூவல் போல...
    தூவானம் போல...//

    அடேயப்பா! மழைத்தூறல் நன்றாக உள்ளது!

    ReplyDelete
  9. வெட்கம் என்பது சிறை அல்ல அரண் என்கிறான் என் நண்பன்.

    "பருவத்தில் ஆசையைக் கொடுத்தான்...வரும்
    நாணத்தினால் அதை மறைத்தான்..."

    ReplyDelete
  10. காதலால் கனிந்துருகி
    கசிந்துருகி கவிபாடும் ஹேமா
    கலக்கலோ கலக்கல்..

    ReplyDelete
  11. மகரந்தம் தொடும் கரமாய் நான்
    வெட்க நிறங்களாய் நீ
    உன் வெட்கம் தொட்டுப் பார்த்தேன்.
    வெறும் வண்ணப் பொடி மட்டுமே
    ஒட்டி முகம் மறைக்கிறாய்.

    ///


    அருமை

    ReplyDelete
  12. மிக்க நன்றி...... புரியும்படி எழுதியதிற்கு... நல்லாயிருக்கு.

    ReplyDelete
  13. உணர்வுகள் எழுத்தாகி, எழுத்து கவிதையாகி இருக்கிறது.
    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந்நாடே... போய்
    நம் குழந்தைகள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இவ்வுலகே
    என பாடப்போகிறது..... நன்றி ஹேமா நல்ல கவிதைக்கு.

    ReplyDelete
  14. காதல் ததும்பி ....மனதை ரம்மியமாக்குகிறது ஹேமா.
    இடைக்கிடை இப்பிடியும் கவிதை தாருங்கள்.

    ReplyDelete
  15. ஆங்.. ரைய்ட்டு.....

    ReplyDelete
  16. //பூ போல...
    பனித்தூவல் போல...
    தூவானம் போல...
    யாழின் இசை போல...
    அணிலின் கொஞ்சல் போல...
    அந்தி வானம் போல...
    வேப்பம்பூ மணம் போல...
    இன்னும்
    போல போல...
    உன் வெட்கம்//

    மீண்டும் நீ!

    ReplyDelete
  17. சில வரிகளை சிலரிடம் கேட்கப் பிடிக்கும்

    சிலர் எழுதினால் சாதாரண வரிகள் கூட பேரழகாய் தெரியும்

    சகோதரி ஹேமாவைப் போல

    ReplyDelete
  18. nalla arumaiyana kavithai
    kavi ulagam porrattum.
    bharathimohan
    kalaisolai.blogspot.com

    ReplyDelete
  19. //நான் கேட்க
    நீ மறுக்க
    தரத் தயங்கி
    பின் உன்னைத் தயார்ப்படுத்த !
    ம்ம்ம்...//

    அதுதானே காதல்...

    ReplyDelete
  20. //மகரந்தம் தொடும் கரமாய் நான்
    வெட்க நிறங்களாய் நீ
    உன் வெட்கம் தொட்டுப் பார்த்தேன்.
    வெறும் வண்ணப் பொடி மட்டுமே
    ஒட்டி முகம் மறைக்கிறாய்.//

    ம்ம்..நின் ரசனையோ ரசனை...

    ReplyDelete
  21. //பிறர்காணா
    புது மொட்டின் மலர்வோ !//

    இதுதான் டாப் மோஸ்ட் எனக்கு பிடிச்ச வரிகள்...

    இதுக்கு பேர் கெமிஸ்ட்ரி புக்ல இல்லியா ஹேமா ஹ ஹ ஹா...

    ReplyDelete
  22. //ப்ரியமானவனே...
    ரகசியமாய் ஒன்று சொல்லவா !
    முத்தக் கையெழுத்திடு
    என் இதழில்.
    சுலபமாய்
    உன் வெட்கச் சிறைவிட்டு
    வெளிவர//


    வெட்கச் சிறைவிட்டு
    வெளிவர நல்ல யோசனைதான் ஆனால் என் அருகில் என்னவள் இல்லையே பிரகு நான் ஏன் வெட்க

    ReplyDelete
  23. //ப்ரியமானவனே...
    ரகசியமாய் ஒன்று சொல்லவா !
    முத்தக் கையெழுத்திடு
    என் இதழில்.
    சுலபமாய்
    உன் வெட்கச் சிறைவிட்டு
    வெளிவர !!!//

    உன் வெட்கம் சிறைவிட்டு
    வெளிவர

    இப்படியாவும் இருக்கலாம் இந்த வரிகள்...

    ReplyDelete
  24. இன்னொன்னும் சொல்ல மறந்துட்டேன்..

    படத்துல இருக்குற பையன் அழகா இருக்கான்..கவிதை மாதிரியே...

    ReplyDelete
  25. //வெட்கத்தோடு...ஹேமா(சுவிஸ்//

    உங்கள் வெட்கத்தில் அழகா இருக்கிங்க ஹேமா... நல்ல வரிகள் அழகு!

    ReplyDelete
  26. //நான் கேட்க
    நீ மறுக்க
    தரத் தயங்கி
    பின் உன்னைத் தயார்ப்படுத்த !//

    கடனுக்கு காசு கேட்டா இப்படித்தான்

    ReplyDelete
  27. //முத்தக் கையெழுத்திடு
    என் இதழில்.
    சுலபமாய்
    //

    அது என்ன ரூல்டு நோட்டா இல்லை அன் ரூல்டு நோட்டா ?

    ReplyDelete
  28. //உன் வெட்கச் சிறைவிட்டு
    வெளிவர !!!//

    வந்து மத்திய சிறைக்கு போகனுமா இல்லை திகார் சிறைக்கு போகனுமா ?

    ReplyDelete
  29. ரொம்பவே வெட்கப்பட்டிருக்கீங்க போல..

    SUPERB

    ReplyDelete
  30. நான் கேட்க
    நீ மறுக்க
    தரத் தயங்கி
    பின் உன்னைத் தயார்ப்படுத்த !
    ம்ம்ம்...]]

    அருமை.

    ---------------------

    ஹேமா கன நாட்களுக்கு பிறகு நல்லதொரு வெட்க கவிதை ...

    ReplyDelete
  31. ப்ரியமானவனே...
    ரகசியமாய் ஒன்று சொல்லவா !
    முத்தக் கையெழுத்திடு
    என் இதழில்.
    சுலபமாய்
    உன் வெட்கச் சிறைவிட்டு
    வெளிவர !!!

    ஒன்னும் சொல்றதிக்கில்லை ;)

    ReplyDelete
  32. அற்புதம் ஹேமா

    என் மனதையே திருடி விட்டீர்கள்

    இன்னும் யாரெல்லாம் தொலைந்து போகப்போகிறார்களோ உங்கள் இந்க் கவிதையில்

    ReplyDelete
  33. அந்த முத்தக் கையெழுத்திடு வார்த்தை மிக அருமை தோழியே .........
    நீங்கள் ஒரு பெண் தபு சங்கர்

    ReplyDelete
  34. நல்ல இருக்கு ஹேமா,

    ReplyDelete
  35. //வெட்கத்தோடு...ஹேமா(சுவிஸ்)
    //

    நீண்ட நாட்களுக்குப்பிறகு ரொமான்டிக் கவிதை,


    //முத்தக் கையெழுத்திடு
    என் இதழில்.
    சுலபமாய்
    உன் வெட்கச் சிறைவிட்டு
    வெளிவர !!!//

    முழுதும் ரசித்தேன்

    இது மாதிரி நிறைய நிறைய எதிர்ப்பார்க்கிறேன்

    ReplyDelete
  36. //போடா...
    உன் (ஆண்) வெட்கம் என்ன
    பிறர்காணா
    புது மொட்டின் மலர்வோ !
    பார்க்கவும்
    பறிக்கவும் கடினமாய்.//

    மிக ரசித்த வரிகள். ஆண் வெட்கத்தினை அறியபடுத்திய விதம் ரசிக்கிறேன். இப்படி ரசிப்பவர்கள் பெண்களாய்த்தான் இருப்பார்களோ?

    நல்ல கவிதை...

    ReplyDelete
  37. நான் கேட்க
    நீ மறுக்க
    தரத் தயங்கி
    பின் உன்னைத் தயார்ப்படுத்த \\\\\\\\
    ம்ம்ம்ப்ரியமானவனே...
    ரகசியமாய் ஒன்று சொல்லவா !
    முத்தக் கையெழுத்திடு
    என் இதழில்.
    சுலபமாய்
    உன் வெட்கச் சிறைவிட்டு
    வெளிவர \\\\\\\\\\
    இதையெல்லாம் பெண்களிடம் ஆண்கள்தான்
    சொல்வார்கள் “ ஒரு பெண்”இதற்காத்தான்
    வெட்கச் சிறைவிட்டு.... என்று தலைப்பு
    கொடுத்ததா?அருமை.
    இப்பதான் பாரதி கண்ட புதுமைப் பெண் “ஹேமா”
    நன்றி. இந்தத் தைரீயம் தான் {துணிச்சல்} வேண்டும்
    ஹேமா. ஒர பாடல் ஞாபகம் வருகிறது..
    “கொஞ்சும் மொழிப் பெண்களுக்கு அஞ்ஞா நெஞ்ஞம்
    வேண்டுமடி....................

    ரொம்பத்தான் ஹேமாவின் “காதல்”...கவிதையில்
    வசந்......மனதை பறிகொடுத்து விட்டாரோ!!!

    ReplyDelete
  38. அழகு கவிதை ஹேமா.

    “அழகிய முகம்தனை வெட்கத்தினால்
    கைகொண்டு மறைத்தாய். உன் அழகிய கைகளை எதைக்கொண்டு மறைப்பாய்”

    எங்கேயோ, எப்போதோ படித்ததும் நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  39. ஆண்களின் வெட்கம் அழகிலும் அழகு...ரசித்து எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  40. //ஐயோ...
    உன்னையே தின்று தொலைக்கும் அது
    அப்போதுதான்
    பறக்கப பழகும் பட்டாம்பூச்சிக் கூட்டமாய்.
    எத்தனை வர்ணங்களில்
    குழைத்தெடுக்கிறாய் உன் வெட்கத்தை
    கன்னக் குவளைக்குள்.
    ஒவ்வொரு வெட்கமும்
    ஒவ்வொரு சொட்டுக் கவிதையாய்.//

    நல்ல வரிகள்

    ReplyDelete
  41. //
    ப்ரியமானவனே...
    ரகசியமாய் ஒன்று சொல்லவா !
    முத்தக் கையெழுத்திடு
    என் இதழில்.
    சுலபமாய்
    உன் வெட்கச் சிறைவிட்டு
    வெளிவர !!!//

    ம்ஹூம்..ம்ஹூம்..நடத்துங்க...அழகு கவிதை ஹேமா !!!

    ரசனை !!!

    ReplyDelete
  42. அப்பா இப்பத்தான் ஹேமா கவிதை. மாற்றியிருக்கின்றிர்கள்.

    வெட்கச் சிறை என்பதை வீட வெட்கத்தின் அழகு என்று மாற்றி இருக்கலாம்.

    // ப்ரியமானவனே...
    ரகசியமாய் ஒன்று சொல்லவா !
    என் இதழ் தொட்டு
    முத்த ஒப்பமிடு.
    சுலபமாய் வெளிவர
    உன் வெட்கச் சிறைவிட்டு !!!

    வெட்கத்தோடு...ஹேமா(சுவிஸ்) //
    கவிதையை முடித்த விதம் அருமை. இம்ம் ரங்கமணி கொடுத்து வைத்தவர். என் ஸ்கோதரியின் வெக்கம் அவர் பாக்கியம். சந்தோசமான கவிதைக்கு சந்தோசம். இதழிலும் மனதில் விரியும் புன்னகையுடன் சுதாகர்.

    ReplyDelete
  43. //
    ப்ரியமானவனே...
    ரகசியமாய் ஒன்று சொல்லவா !
    முத்தக் கையெழுத்திடு
    என் இதழில்.
    சுலபமாய்
    உன் வெட்கச் சிறைவிட்டு
    வெளிவர !!!//

    //வெட்கத்துடன் ஹேமா (சுவிஸ்)//

    வெட்கம் தயங்கி தயங்கி
    பக்கம் பக்கமாய் வழிந்த
    காதல் ரசம்..

    ReplyDelete
  44. romba late aa vanthatharku sorry hema

    ReplyDelete
  45. ஹேமா,

    உங்களை தொடர் பதிவிற்க்கு அழைத்துள்ளேன்.

    http://bhrindavanam.blogspot.com/2009/11/10.html

    ReplyDelete
  46. கவித! கவித!
    இல்ல இல்ல
    காதல்! காதல்!

    ReplyDelete