புத்தகங்களோடு புரண்டபடி
குண்டுச் சட்டிக்குள்
குதிரையோடிக் கொண்டிருக்கும் வரை
வாழ்வின் வறட்சி புரிவதில்லை.
அலுவலக அறைக்குள்
பூம்...பூம் மாடாய் ஆமாம் போட்டு
அன்னிய மொழியில் அளவாய் அறுத்து
பொய்யாய்ச் சிரித்து வரவேற்று
அந்தி சாய
நெரிசல் குறைந்த
பேரூந்துக்காய் காத்திருந்து ஏறி
வீட்டு வாசல் வரும்வரை
சொல்லிவிட்ட சாமான்கள்
ஞாபகத்திற்கு வரவேயில்லை.
ஜோனிவாக்கர்
கோலா கலந்து குடிக்கிற வரை
முன்னம் இருந்த
கறுப்பன் வெள்ளையன்
சாதி பேதம்
போன இடம் புரியவில்லை.
அறியா நண்பனிடம்
தீப்பெட்டி உரசப் போய்
தொத்திக் கொண்ட உறவாய்
கல்லறைத் தொழிலாளி
பேதம் தெரியவில்லை.
வாழ்வு என்னமோ
என்னை சுற்றி என்கிற மாதிரி.
வாழ்வின் வட்டம் கடந்து
மாயை உலகம்
மயக்க வாழ்வு பற்றிப் பேசும் வரை
சுமை போன இடம் புரியவில்லை.
எல்லாம் முடித்து வீடு வர
முதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!
ஹேமா(சுவிஸ்)
அட.. பின்றீங்கள ஹேமா.. ம்ம்ம்..அப்டிதான் பின்னுங்க..
ReplyDeleteவாழ்க்கை என்பது நமக்கு வாய்த்தது இல்லை... வாய்த்ததை நாம் வாழ்வதில்தான் இருக்கிறது. சரியா ஹேமா?
ReplyDeleteகவிதை மிக அருமை ஹேமா
ReplyDelete//பேரூந்துக்காய் காத்திருந்து ஏறி
ReplyDeleteவீட்டு வாசல் வரும்வரை
சொல்லிவிட்ட சாமான்கள்
ஞாபகத்திற்கு வரவேயில்லை.//
சரியான வரிகள். பலமுறை மறந்துபோன ஞாபகம் வருகிறது.
//எல்லாம் முடித்து வீடு வர
முதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!//
உண்மைதான். உணரும் காலம் வரும்போது அவனும் இருளின் மயக்கத்தில் இருக்கலாம் நம்மைப்போலவே. அவனாவது வெளிச்ச சந்தங்களில் சந்தோசம் காண வாழ்த்துவோம்.
நல்ல கவிதை தோழியே....
அஷோக் சுகம்தானே !உங்க முதல் பின்னூட்டம் சந்தோஷமாயிருக்கு.ஏன் ரொம்ப நாளா பதிவு ஒண்ணும் போடல ?
ReplyDelete:::::::::::::::::::::::::::::::::
//ஸ்ரீராம்....
வாழ்க்கை என்பது நமக்கு வாய்த்தது இல்லை... வாய்த்ததை நாம் வாழ்வதில்தான் இருக்கிறது.சரியா ஹேமா?//
உண்மைதான் ஸ்ரீராம்.அதுவும் புலம் பெயர்ந்த எம்மைப்பொறுத்தவரை கிடைத்த வாழ்வு வசதியைத்தான் வாழவேண்டியிருக்கிறது !அதுக்காக மனம் அலுத்துப்போவதில்லை.
கிடைத்ததை அழகாகுக்கிறோம்.
நன்றி நவாஸ்.இண்ணைக்கு உங்க முதன் பின்னூட்டம் அஷோக் எடுத்திட்டார்.உங்க அன்பான வருகைக்கு நிறைந்த நன்றி.ஏன் நீங்களும் ரொம்ப நாள் பதிவு ஒண்ணும் போடல ?
ReplyDelete:::::::::::::::::::::::::::::::::
//பாலாசி...உண்மைதான். உணரும் காலம் வரும்போது அவனும் இருளின் மயக்கத்தில் இருக்கலாம் நம்மைப்போலவே. அவனாவது வெளிச்ச சந்தங்களில் சந்தோசம் காண வாழ்த்துவோம்.
நல்ல கவிதை தோழியே....//
பாலாஜி,இது என் அண்ணா வீட்டில் கண்ட அனுபவம்.2- 3 வருடங்களுக்கு முன் எழுதினது.
கவிதையின் கரு நல்லாயிருக்குன்னு அதைச் சரியாக்கிப் பதிவாக்கினேன்.
கவிதையின் நடை ஏனோ கொஞ்சம் எனக்கே பிடிக்காமல் இருக்கிறது.
நிகழ்காலம் தெரிகிறது ஹேமா.
ReplyDeleteஎப்பவும் போல் ஹேமா ப்ராண்ட் கவிதை
ReplyDeleteநிதர்சன வலி
விஜய்
Nice Hema.
ReplyDelete//எல்லாம் முடித்து வீடு வர
ReplyDeleteமுதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!//
அருமையான வரிகள் ஹேமா........கலக்கல்
ஒரு சில நேரத்துக்குப் பிறகு நாம் கிடைப்பதை கொண்டு வாழப்பழகி விடுகிறோம்.. அதுதான் நிதர்சனமும் கூட.. இல்லையா தோழி?
ReplyDelete//கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
ReplyDeleteஅவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!//
அருமையான வரிகள் ஹேமா
உங்க மேல எந்த கோபமும் இல்லீங்க. வேலை அதிகமாக இருக்கின்றது. எதைப் படித்தோம், எதை விட்டோம் எனத் தெரிவதில்லை. அதான்.
ReplyDeleteஇந்த பாட்டுப் பொட்டி வேற சமய சந்தர்ப்பம் தெரியாமல் அலறிடுதுங்க. அதனால அலுவலகத்தில் திறக்கவும் தயக்கமா இருக்கு. அதான் விசயம் வேற ஒன்னுமில்ல.
என் மேல கோச்சுகிடாதீங்க. உங்க கவிதைகளுக்கு நான் ஒரு வாசகன்.
// புத்தகங்களோடு புரண்டபடி
ReplyDeleteகுண்டுச் சட்டிக்குள்
குதிரையோடிக் கொண்டிருக்கும் வரை
வாழ்வின் வறட்சி புரிவதில்லை. //
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பணே... நண்பணே பாட்டு ஞாபகத்து வருதுங்க..
// அலுவலக அறைக்குள்
ReplyDeleteபூம்...பூம் மாடாய் ஆமாம் போட்டு //
எல்லா இடத்திலேயும் அப்படித்தானா?
// வீட்டு வாசல் வரும்வரை
ReplyDeleteசொல்லிவிட்ட சாமான்கள்
ஞாபகத்திற்கு வரவேயில்லை. //
சில சமயங்களில் ஞாபக மறதியும் ஒரு வரம்தானுங்களே... இல்லாட்டி மனிதன் தூங்கவே முடியாதுங்களே..
// ஜோனிவாக்கர்
ReplyDeleteகோலா கலந்து குடிக்கிற வரை //
தப்பு... தப்பு.. ஜோனிவாக்கரை தண்ணி கலந்துதான் குடிக்கணும்... இல்லாட்டி ஹார்லிக்ஸ் விளம்பரம் மாதிரி அப்படியே சாப்பிடுணும்...
// முன்னம் இருந்த
ReplyDeleteகறுப்பன் வெள்ளையன்
சாதி பேதம்
போன இடம் புரியவில்லை. //
கவியரசு அவர்கள் சொன்னது - சாராயம் உள்ள போனா எல்லாம் மறந்து போகும் - என்பது சரிதானோ?
// வாழ்வு என்னமோ
ReplyDeleteஎன்னை சுற்றி என்கிற மாதிரி.
வாழ்வின் வட்டம் கடந்து
மாயை உலகம்
மயக்க வாழ்வு பற்றிப் பேசும் வரை
சுமை போன இடம் புரியவில்லை. //
நச் வரிகள்..
அற்புதம் ஹேமா..யதார்த்தம்.நீங்கள் எழுதியவற்றில் இது எனக்கு மிகவும் பிடித்தது.(அன்புக்கு நன்றி.உடலும்,உள்ளமும் நலம்)
ReplyDelete// எல்லாம் முடித்து வீடு வர
ReplyDeleteமுதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!//
சத்தியமான வார்த்தைகள்
இருளும் ஒளியும்...
ReplyDeleteபுத்தகங்களோடு புரண்டபடி
குண்டுச் சட்டிக்குள்
குதிரையோடிக் கொண்டிருக்கும் வரை
வாழ்வின் வறட்சி புரிவதில்லை.
அலுவலக அறைக்குள்
பூம்...பூம் மாடாய் ஆமாம் போட்டு
அன்னிய மொழியில் அளவாய் அறுத்து
பொய்யாய்ச் சிரித்து வரவேற்று
அந்தி சாய
நெரிசல் குறைந்த
பேரூந்துக்காய் காத்திருந்து ஏறி
வீட்டு வாசல் வரும்வரை
சொல்லிவிட்ட சாமான்கள்
ஞாபகத்திற்கு வரவேயில்லை.
ஜோனிவாக்கர்
கோலா கலந்து குடிக்கிற வரை
முன்னம் இருந்த
கறுப்பன் வெள்ளையன்
சாதி பேதம்
போன இடம் புரியவில்லை.
அறியா நண்பனிடம்
தீப்பெட்டி உரசப் போய்
தொத்திக் கொண்ட உறவாய்
கல்லறைத் தொழிலாளி
பேதம் தெரியவில்லை.
வாழ்வு என்னமோ
என்னை சுற்றி என்கிற மாதிரி.
வாழ்வின் வட்டம் கடந்து
மாயை உலகம்
மயக்க வாழ்வு பற்றிப் பேசும் வரை
சுமை போன இடம் புரியவில்லை.
எல்லாம் முடித்து வீடு வர
முதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!
ஹேமா(சுவிஸ்) தமிழ்மணம் பரிந்துரை : 7/7
எந்த வரியை விட
எங்கயோ போய்கிட்டு இருக்கீஙகன்னு தோணுது
நல்ல கவிதை தோழி
ReplyDeleteஎப்பொழுதுபோல் அருமை
ReplyDeleteவெகு அருமை.
ReplyDelete//வாழ்வு என்னமோ
ReplyDeleteஎன்னை சுற்றி என்கிற மாதிரி.
வாழ்வின் வட்டம் கடந்து
மாயை உலகம்
மயக்க வாழ்வு பற்றிப் பேசும் வரை
சுமை போன இடம் புரியவில்லை//
மிக அருமை ஹேமா..
//அறியா நண்பனிடம்
ReplyDeleteதீப்பெட்டி உரசப் போய்
தொத்திக் கொண்ட உறவாய்
கல்லறைத் தொழிலாளி
பேதம் தெரியவில்லை.//
எளிய உவமை..
இதைத்தான் ஒரு ரசிகனாய் எதிர்பார்க்கிறேன் தங்களை போன்ற சிறந்த கவிஞர்களிடம் ... வாழ்த்துக்கள் ஹேமா...(சின்ன பையன் நீ சொல்றியான்னு நீங்க சொல்றதும் கேக்குது...)
எல்லாம் முடித்து வீடு வர
ReplyDeleteமுதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!
ஹேமா;
இந்தத்தலைமுறைக்குப் புரியாத விடயங்களே நிறைய இருக்க அடுத்த தலைமுறையான அவனிடம் சுமையை தாங்கவிடாமல் அவனுக்குப் புரிவிக்க வேண்டும் இருளற்ற உலகை.
சாந்தி
நல்லா இருக்குடா,ஹேமா.
ReplyDelete[[புத்தகங்களோடு புரண்டபடி
ReplyDeleteகுண்டுச் சட்டிக்குள்
குதிரையோடிக் கொண்டிருக்கும் வரை
வாழ்வின் வறட்சி புரிவதில்லை.]]
உண்மைதான் ஹேமா...
//முகம் சுழிக்கும் அவனுக்கு
ReplyDeleteகணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!//
ஆகா.... உண்மைகளை இப்படி புட்டு வச்சிபுட்டீங்க ஹேமா,...
அத்தனையும் எதார்த்தத்தின் உண்மைகள். சூப்பர் ஹேமா
ReplyDelete"குண்டுச் சட்டிக்குள்
ReplyDeleteகுதிரையோடிக் கொண்டிருக்கும் வரை
வாழ்வின் வறட்சி புரிவதில்லை"
கவிதை அருமை.
//எல்லாம் முடித்து வீடு வர
ReplyDeleteமுதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!//
///
உங்களிடம் கவிதை பயிலவேண்டும் மாஸ்டர்
மானிட வாழ்கையே இருளும் ஒளியும்
ReplyDeleteஒளியும் இருளுந்தான்.
ஒன்றிருக்கும் போது மற்றொன்று
இருப்பதில்லை நாம்தான் ஏற்று வாழக்
கற்றுக் கொள்ள வேண்டும் ஹேமா.
உ=ம் {நம்ம பொண்ணு ஹேமாவேதான்}
கூட்டில் இருக்கும்
வரைதான் குஞ்சு இறக்கை முளைத்து
விட்டால் எல்லாமே புரிந்துவிடும். இது
காலத்தின் நியதி.
வாழ்வின் சுழட்சியை வடிவமைத்த கவி
நன்றி.
//அலுவலக அறைக்குள்
ReplyDeleteபூம்...பூம் மாடாய் ஆமாம் போட்டு
அன்னிய மொழியில் அளவாய் அறுத்து
பொய்யாய்ச் சிரித்து வரவேற்று//
அப்பட்டமான உண்மை ஹேமா........அருமை என் அலுவலகமும்..........
வித்தியாசமான கோணம்.
ReplyDeleteவேறுபட்ட பார்வை.
நல்லாயிருக்கு ஹேமா..
//ஜோனிவாக்கர்
ReplyDeleteகோலா கலந்து குடிக்கிற வரை
முன்னம் இருந்த
கறுப்பன் வெள்ளையன்
சாதி பேதம்
போன இடம் புரியவில்லை//
ஹேமா உங்களுக்கு ஹியுமரஸும் நல்ல வருது ஹேமா
//எல்லாம் முடித்து வீடு வர
ReplyDeleteமுதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!//
கசப்பு மாத்திரையில்
இனிப்பு முலாம் பூசியதுபோல்தான்
வாழ்வு,
ஒவ்வொருவரும் எதிர்நோக்கவேண்டியதுதான்..
அனுபவங்கள் கற்று தரப்படுவதைவிட
கற்று கொள்வதில்தான் தெளியமுடியும்
அதற்கு உங்கள் அன்பு பக்கபலமாய் இருந்தால்போதும்.
நன்றி ஹேமா..
ஒரு நாளின் நிகழ்வுகளிலேயே வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் சுவாசித்துக்காட்டுகிறீர்களே... அருமையான கவிதை ஹேமா.
ReplyDeleteவி.என்.தங்கமணி www.vnthangamani.blogspot.com
அன்றாட நிகழ்வில் சலித்து விடாமல்
ReplyDeleteகவிதை தனித்து நிற்கிறது ஹேமா
நல்ல கவிதை ஹேமா, உங்களுக்கு எப்படி இப்படி சிந்தனைகள் வருகின்றது என்று தெரியவில்லை.
ReplyDeleteஅப்புறம் ரொம்ப பிஸியா. எங்க பிளாக் பக்கம் வருவது இல்லை போல உள்ளது. அப்ப அப்ப வந்து எதாது சொல்லுங்க அப்பத்தான் ஒரு உற்சாகம் எழுத இருக்கும். நன்றி.
அட !
ReplyDeleteலேட்டா வந்துட்டேன் போல ....!
மன்னிச்சிடுங்க !
கவிதை சூப்பர் !
//எல்லாம் முடித்து வீடு வர
ReplyDeleteமுதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!///
ஹேமா, கடைசி பத்திக்காக மட்டும் உம்பேச்சு... க்க்கா...போ!
(அதுக்கு முந்திய வரிகளுக்காக உம்பேச்சு ...ப்பழம்..!)
En Iniya Thozhi Hema...Nalamaa...Neenda naal kazhiththu palathooram payanithu neernilai vandhadaintha paravaiyaai Kuzhanthainilavirku vandhullen...Thaagam Thaagam...Ingulla ungal kavidhaigalai parugum Thaagam....Innum Thaniyavillai....Ungal anbukkaaga oodi vandhullen en Thozhiyee...
ReplyDeleteஅருமையான கவிதை. வாழ்வின் இருளும் மயக்கமும் புரிந்தவனாய் நான் இருக்கிறேன்:)
ReplyDeleteஅலுவலக அறைக்குள்
ReplyDeleteபூம்...பூம் மாடாய் ஆமாம் போட்டு
அன்னிய மொழியில் அளவாய் அறுத்து
பொய்யாய்ச் சிரித்து வரவேற்று
அந்தி சாய
நெரிசல் குறைந்த
பேரூந்துக்காய் காத்திருந்து ஏறி
வீட்டு வாசல் வரும்வரை
சொல்லிவிட்ட சாமான்கள்
ஞாபகத்திற்கு வரவேயில்லை.
//
அற்புதம் ஹேமா நன்றாய் உள்ளது கவிதை
ஹேமா, நல்ல வரிகள். எப்பொழுது எனக்கு கவிதை எழுத சொல்லித்தர போகிறீர்கள்?.
ReplyDeleteநல்லாயிருக்குங்க!
ReplyDelete//ஜோனிவாக்கர்
கோலா கலந்து குடிக்கிற வரை
முன்னம் இருந்த
கறுப்பன் வெள்ளையன்
சாதி பேதம்
போன இடம் புரியவில்லை//
ச்சீயர்ஸ்!!!!
//புத்தகங்களோடு புரண்டபடி
ReplyDeleteகுண்டுச் சட்டிக்குள்
குதிரையோடிக் கொண்டிருக்கும் வரை
வாழ்வின் வறட்சி புரிவதில்லை.//
ஆமா.. ஆமா.. அதனாலேதானே பதிவு எழுத வந்து இருக்கோம்
உங்கள் முதல் பின்னோட்டம் பார்த்த பிறகு வெளியிடாமல் இன்று வெற்றிகரமாக உங்கள் தளத்தில் அதிகாலை என்ற காரணமான எளிதில் புக முடிந்தது.
ReplyDeleteஇராகவன் நைஜீரியா பாட்டுப்பொட்டி பிரச்சனை பல விதங்களிலும் படுத்துகிறது.
ஏற்கனவே நண்பர் இடுகையில் சொன்னது போல்.
நான் பார்த்தவரையில் கவிதை என்பது ஒரு கிலுகிலுப்பை போல் இங்க பார்த்ததுக்கும் உங்களின் இந்த கவிதையை படித்ததுக்கும் உள்ள வித்யாசம் உண்ர்ந்தது என்ன தெரியுமா?
உணர்வு உள்ளே இருந்து, வலி அதிகமாக இருந்து, வழி தெரியாமல் வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் வார்த்தைகளின் வீர்யம் அதிகம்.
படிப்பவனுக்கு பரவசம் கிடைக்காது. ஆனால் பல மணி நேரம் அடிப்படை கடமைகள் மறந்து போகும்.
ஆனால் இந்த சிந்தனைகளுக்கு சொந்தக்காரர் வார்த்தைகள் சரித்திரம் என்பது ஒரு பக்க நியாயங்கள் என்பதன் எதிர்பார்ப்பு அத்தனை ஆச்சரியமாக இருக்கிறது.
மேலும் இந்த வார்த்தையின் மரியாதை மொத்தத்தையும் மாற்றியது.
போடுகிறானே !
வார்த்தைகள் என்பது நாம் ஆள்வதா? நம்மை ஆள்வதா?
texlords@gmail.com