Sunday, August 02, 2009

நட்பும் காதலும்...

Click Here
கண்ணீர் தந்து
மனதின்
ஆழம் தேடும்
காதல்.

கண்ணீர் கண்டு
காயம் துடைத்து
மனதின்
ஆழத்துள் வாழும்
நட்பு.

புன்னகைக்க
பூவும் தந்து
கல்லறைக்கும்
பூ வைக்கும்
காதல்.

பூக்கும் போது
தானும் பூத்து
கல்லறையிலும்
பூவாய்
பூத்திருக்கும்
நட்பு.

ஹேமா(சுவிஸ்)

38 comments:

  1. //பூக்கும் போது
    தானும் பூத்து
    கல்லறையிலும்
    பூவாய்
    பூத்திருக்கும்
    நட்பு.//

    நண்பர்கள் தின வாழ்த்துகள் ஹேமா

    ReplyDelete
  2. நண்பர்கள் தின வாழ்த்துகள்

    அருமையான‌ வரிகள்

    ReplyDelete
  3. கவிதை அருமை. நட்பு உயர்ந்தத‌துதான்...காதலையும் கொஞ்சம் உயர்வாய் சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
  4. நட்பில் நயவஞ்சகர்களும்
    உண்டு.
    காதலில் காமுகர்களும்
    உண்டு
    இரண்டிலும் நல்லவர்கள்
    கிடைத்தால்,நாம் செய்த
    பூர்வீக பலன்.
    ஆமா!ரகசியமா கேட்கிறேன்

    உங்கள் காதலில்.....
    சாதனையா?சோதனையா?
    வேதனையா? இம்புட்டு
    கசக்குது உங்களுக்கு....

    ReplyDelete
  5. நல்ல கவிதை.... நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  6. இனிய நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் ஹேமா

    ReplyDelete
  7. மனதின்
    ஆழத்துள் வாழும்
    நட்பு.

    அருமை

    ReplyDelete
  8. நட்பின் ஆழத்தை அழகா சொல்லிருக்கீங்க ஹேமா

    என்னுடைய வாழ்த்தையும் இங்கே பதிவுசெய்துக்கிறேன்

    ReplyDelete
  9. நட்பையும்,காதலையும் அழகாக வேறுபடுத்தி காட்டியிருயிருக்கிறீர்கள்.

    இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. நண்பர்கள் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  12. Natpum kathalum serthu kalakkal pathivu Hema.

    ReplyDelete
  13. நல்ல கவி வரிகள்...

    ReplyDelete
  14. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. நண்பர்கள் தினத்தன்று நட்பு கவியுடன் மீண்டும் நட்புடன் வந்துள்ளேன் அக்கா

    ReplyDelete
  16. புன்னகைக்க
    பூவும் தந்து
    கல்லறைக்கும்
    பூ வைக்கும்
    காதல்.

    பூக்கும் போது
    தானும் பூத்து
    கல்லறையிலும்
    பூவாய்
    பூத்திருக்கும்
    நட்பு.

    அருமையான வரிகள் சகோதரி
    இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழி

    ReplyDelete
  18. நட்பு நட்புதான்...

    காதல் காதல்தான்...

    இரண்டையும் கம்பேர் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை தோழி...
    (நான் காதலித்து திருமணம் செய்து கொண்டவன்.)

    அனைவருக்கும் நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. // குடந்தை அன்புமணி said...
    நட்பு நட்புதான்...
    காதல் காதல்தான்...

    இரண்டையும் கம்பேர் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை தோழி...//

    வழி மொழிகிறேன்.
    அது வேறு , இது வேறு.

    ReplyDelete
  20. அருமையான வரிகள்

    ReplyDelete
  21. நட்பின் வேர்களில் இருந்து சதா கசியும் உங்கள் பிரியத்திற்கு
    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. ///கண்ணீர் கண்டு
    காயம் துடைத்து
    மனதின்
    ஆழத்துள் வாழும்
    நட்பு.////

    கதிரை போட்டு அமர்ந்து கொண்ட கவி வரி.....

    வாழ்த்துக்கள்...

    அப்படியே என் வலைக்குள்ளும் வந்து பாருங்க.......

    ReplyDelete
  23. //நட்பும் ...காதலும்...//

    ம்ம்ம்...! ஹேமா, ஏம்மா...?

    (அபூர்வமாக )இரண்டுமே ஒரே இடத்தில் வாய்த்தவர்கள்,எப்படி இருவேறாய் பார்க்க முடியும்?

    நல்லாருக்கு.

    ReplyDelete
  24. கடைசி வரிகள் அருமை...................

    ReplyDelete
  25. //பூக்கும் போது
    தானும் பூத்து
    கல்லறையிலும்
    பூவாய்
    பூத்திருக்கும்
    நட்பு.//

    சூப்பர்

    ReplyDelete
  26. //பூக்கும் போது
    தானும் பூத்து
    கல்லறையிலும்
    பூவாய்
    பூத்திருக்கும்
    நட்பு.//

    பூக்களால் உலகமே புனிதப்படுகிறது.வாழ்விலும் சாவிலும் பூ எங்களோடு சேர்ந்தே வருகிறது.

    பாராட்டுக்கள் தோழி.

    சாந்தி

    ReplyDelete
  27. உங்க பிளாக் ல பின்னோட்டம்
    போட முடியல .... அதனால்தான்
    மெயில் லுகிறேன்...

    முதலில் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    பிறகு காதல் மீது ஏன் அவ்வளவு கோவம் ???? நட்பும் காதலும் இரண்டுமே சிறந்தது தானே ????
    உங்க கவிதையில் ஏன் நட்புக்கு மட்டும் importance ???

    ReplyDelete
  28. என் அத்தனை நண்பர்கள்-நண்பிகளுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.எனக்கு இத்தனை நண்பர்களா என்று நினைக்கையில் மனசுக்கு இதமாயிருக்கு.எட்ட இருந்தாலும் எப்போதுமே எட்டிக்கொண்டு கிட்டவாய்த்தான் இருக்கிறோம்.பலதரப்பட்ட முரண்பாடுகளிலும் ஒன்றுபட்டுத்தா அலசுகிறோம்.உறவின் குரல்கள்தான் தூரத்தில்.உணர்வுகள் என்றுமே எம் அருகில்.என்றும் காற்றில் கை கோர்த்திருப்போம்.கை கொடுங்கள்.

    அன்போடு நட்போடு ஹேமா.

    ReplyDelete
  29. //கலா...ஆமா!ரகசியமா கேட்கிறேன்

    உங்கள் காதலில்.....
    சாதனையா?சோதனையா?
    வேதனையா? இம்புட்டு
    கசக்குது உங்களுக்கு....//

    //மேவி...பிறகு காதல் மீது ஏன் அவ்வளவு கோவம் ???? நட்பும் காதலும் இரண்டுமே சிறந்தது தானே ????
    உங்க கவிதையில் ஏன் நட்புக்கு மட்டும் importance ???//

    கலா ,மேவி நான் காதலைக் காதலிப்பவள்.காதலில் வெறுப்போ கோபமோ இல்லை.நண்பர்கள் தினம் ஆதலால் நட்பைக் கொஞ்சம் தூக்கிப் பார்த்தேன்.என்னவரையும் கொஞ்சம் கிள்ளிப் பார்த்தேன்.அவ்வளவுதான்.
    நான்தான் கிள்ளினேனே தவிர அவருக்கு வலிக்கவில்லை!

    ReplyDelete
  30. அருமை..அருமை....அருமை..

    ReplyDelete
  31. நான் விட்டதையே தருப்பி
    எனக்கே!! எனக்கா!!!
    இதுதான் சமாளிப்போ?
    ஹேமா கவிதைகளில் நான்
    அதிகம் விரும்புவதும்,ரசிப்பதும்
    காதல் கவிதைகள்தான்.
    அப்படி இருக்க...வெறுப்பேனா!
    காதல் சுவாசம் என்றால்...
    நட்பு பிராணவாயு சரியா?

    கிள்ளிக்கிள்ளி பார்க்குமளவுக்காஆஆஆஆ??
    என்ன?ஊடலா?
    பாவம் சொரணையே இல்லாதவர்
    கொடுத்து வைத்தவர்.

    காதலுக்கு ஒரு கவிதை
    நட்புக்கு ஒரு கவிதை
    அனுப்புகின்றேன் படித்து
    விட்டு தீர்ப்புச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  32. தூய்மை தோழன்
    சோகத்தில் தோள் கொடுத்தாய்
    துன்பத்தில் துயர் துடைத்தாய்
    கஷ்ரத்தில் கரம் கொடுத்தாய்
    துருப்பிடித்த சிரிப்பை
    துலங்க வைத்தாய_உன்
    பழக்கப்பட்ட அன்பினால்
    பலவீனப்பட்டுப் போனேன்
    பாவையிவள் பண்புடன்
    வணங்குகின்றேன்_உன்
    பண்பான பாசத்துக்கும்
    களங்கமில்லா நட்புக்கும்

    நின்றுபோகும் தூறல் அல்ல_நம்நட்பு
    நிலைத்திருக்கும் நீர்வீழ்ச்சி_நான்
    பஞ்சல்ல பற்றுவதற்கு அஞ்சுகம்
    நீ நெருப்பு{அல்ல}நேர்மையானவன்
    நான் குந்திதேவியும் அல்ல_நீ
    சூரியபகவானும் அல்ல
    பார்த்தவுடன் பாலகன்வர
    நம் நட்பு நட்புத்தான்-அதில்
    மாற்றமில்லை நாற்றமும் இல்லை



    துணைத் தோழன்
    நீ எனக்கு காதலன் அல்ல_காவலன்
    நீ எனக்கு கணவன் அல்ல_என்..கண்..அவன்
    நீ எனக்கு புருஷன் அல்ல_புனிதமானவன்
    நீ எனக்கு பதி அல்ல _பவித்திரமானவன்
    நீ என்னைத் தொட்டவனல்ல_எதிலும்
    துணை நிற்கும் தூய்மைத் தோழன்.

    ReplyDelete
  33. விழியாய் நான்......

    எனக்கு உன்னைப் பிடிக்கும்
    நீ
    தொட்டுத் தொட்டு பார்ப்பது பிடிக்கும்
    மனம்
    துவளாமல் துணிந்து நடப்பது பிடிக்கும்
    வாழ்க்கை இருளிருந்தும்_இதயம்
    வெளிச்சமாய் இருப்பது பிடிக்கும்
    அதனால்........
    உனக்கு வழி காட்டப் பிடிக்கும்
    விழியில் ஒளியாய் இருக்கப் பிடிக்கும்
    உன்
    கைத் தலம் பற்றப் பிடிக்கும்
    உன்னோடு
    வாழ்க்கை வாழப் பிடிக்கும்
    பின் எதற்கு?
    கறுப்புக் கண்ணாடியும்
    கைத் தடியும்.

    ReplyDelete
  34. இரவின் நிழல்கள்

    இரவும் பகலும்
    இருளும் ஒளியும்
    பௌர்ணமியும் அமாவாசையும்
    காட்ச்சியும் கண்ரசிப்பும்
    உன் உள் தொலைந்தாலும்.......

    என்னை உன் உள்
    நான் தொலைத்து
    தினம் தினம்
    நன்பகல் பன்னிரண்டுக்கு_உன்
    காலடிக்குள் கட்டுண்டு
    மனதை தொட்டுவிட நினைக்கின்றேன்

    துளியும் உணராமல்
    உணரமுடியாமல்
    ஒதுக்கி விட்டுப் பயணிக்கின்றாய்
    நீ போகும் பாதையெல்லாம்
    உன் நிழலாய்....நிலவாய்
    நான் தொடர்வேன்.......

    அன்பே!
    உன் இரு {ள்} விழிக்கு
    பௌர்ணமியாய்
    இர {உற}வின் நிழலில் உறவாட...
    அன்பின் பிடியில் தடுமாற...
    உன்
    விழி{யால்} ...இல்லை
    மொழியால்
    ஒரு வழி சொல்.

    ReplyDelete
  35. கலா,மூன்று கவிதைகளுமே முத்துக்கள்.ஏன் நீங்கள் ஒரு பதிவுத் தளம் திறக்காமல் இருக்கிறீர்கள்.
    மூன்று கவிதைகளுமே மூன்று கோணங்களில்.குறிப்பிட்ட வரிகள் சொல்லி ஒன்றையொன்றைக் கூட்டிக் குறைக்க விரும்பவில்லை கலா.அருமை அருமை.

    ReplyDelete
  36. //(இரவீ )...
    அருமை..அருமை....அருமை..//

    ரவி,என்ன எது அருமை.புரியவில்லை.

    எங்கே உங்களை நண்பர்கள் தினத்திலும் காணோம்.சுகம்தானே !

    ReplyDelete